Monday, December 22 2025 | 11:34:05 PM
Breaking News

குடிமைப் பணி பயிற்சி அதிகாரிகளுடன் குடியரசுத் துணைத்தலைவர் கலந்துரையாடல்

Connect us on:

குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், இன்று (14.12.2025) புது தில்லியில் உள்ள குடியரசுத் துணைத்தலைவர் இல்லத்தில் இந்திய காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வனப் பணி (ஐஎஃப்ஓஎஸ்) பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்த அதிகாரிகள் ஹரியானா பொது நிர்வாக நிறுவனத்தில் (எச்ஐபிஏ) சிறப்பு அடித்தள பாடத் திட்டத்தைப் பயின்று வருகின்றனர்.

“இந்தியாவின் இரும்பு மனிதர்” என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலை நினைவு கூர்ந்த குடியரசுத் துணைத்தலைவர், சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பதிலும், அகில இந்திய சேவைகளை நிறுவுவதிலும் அவரது முக்கியப் பங்கை எடுத்துரைத்தார். ஓட்டோ வான் பிஸ்மார்க் ஜெர்மனியை ஒன்றிணைத்தார் என கூறிய அவர், அங்கு மக்கள் ஒரு பொதுவான மொழியைப் பேசினர் எனவும் ஒரே கலாச்சாரம் இருந்தது எனவும் குடியரசுத் துணைத்தலைவர் தெரிவித்தார். ஆனால் பல மொழிகளுடன், கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை ஒருங்கிணைக்கும் மிகவும் சிக்கலான பணியை சர்தார் வல்லபாய் படேல் மேற்கொண்டார் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த அசாதாரண சாதனை உலகின் வேறு எந்த முயற்சிகளையும் விட சிறப்பானது என்று அவர் கூறினார்.

திறமையான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதில் மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆற்றும் பங்கை அவர் பாராட்டினார். பொது சேவையில் பொறுப்புணர்வு மிக்க நடவடிக்கைகளை வலியுறுத்திய குடியரசுத் துணைத்தலைவர், செயல்திறனையும் சேவை வழங்கலையும் மேம்படுத்த தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பொது வாழ்வில் பொறுமையின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பேசினார். திறமையான, மனிதாபிமான நிர்வாகத்திற்கு பொறுமையும், கவனத்துடன் பிரச்சனைகளைக் கேட்பதும் அத்தியாவசியம் என்று அவர் எடுத்துரைத்தார். பொதுமக்களின் குறைகளைக் கேட்பது பெரும்பாலும் பிரச்சனையின் பெரும்பகுதியைத் தீர்க்கிறது என்று அவர் கூறினார்.

இந்த கலந்துரையாடல் இளம் அதிகாரிகளுக்கு தலைமைத்துவம், நிர்வாகம், நெறிமுறை சார்ந்த பொது சேவை ஆகியவை தொடர்பான மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கியது.

‘गांधी जी की राजनीतिक यात्रा के कुछ पन्ने’ पुस्तक के बारे में जानने के लिए लिंक पर क्लिक करें :

https://matribhumisamachar.com/2025/12/10/86283/

आप इस ई-बुक को पढ़ने के लिए निम्न लिंक पर भी क्लिक कर सकते हैं:

https://www.amazon.in/dp/B0FTMKHGV6

यह भी पढ़ें : 1857 का स्वातंत्र्य समर : कारण से परिणाम तक

About Matribhumi Samachar

Check Also

புலிகள் மற்றும் யானை பாதுகாப்பு தொடர்பான கூட்டங்கள் – மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை வகித்து புலிகள் மற்றும் யானைகள் பாதுகாப்புக்கான உத்திகளை ஆய்வு செய்தார்

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் 28-வது கூட்டமும், யானைகள் திட்டத்தின் 22-வது வழிகாட்டுதல் குழு கூட்டமும் இன்று (டிசம்பர் 21, …