Saturday, January 31 2026 | 02:17:32 AM
Breaking News

ஓமனில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் உரையாற்றினார்

Connect us on:

ஓமன் நாட்டின் மஸ்கட்டில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். பல்வேறு இந்திய பள்ளிகளை சேர்ந்த 700-க்கும் அதிகமான மாணவர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ஓமன் நாட்டில் இந்திய பள்ளிகள் தொடங்கப்பட்டு இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடுவது அப்பள்ளிகளுக்கு  சிறப்பு அம்சமாகும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியாவில் உள்ள குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வாழ்த்துக்களை இந்திய சமூகத்தினருக்கு தெரிவித்துக்கொள்வதாக கூறினார். அவர்களுடைய அன்பான, உற்சாகமான வரவேற்பிற்கு அவர் நன்றி தெரிவித்தார். ஓமன் நாட்டில் தங்கியிருக்கும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களை காண்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார். பன்முகத்தன்மையே இந்தியப் பண்பாட்டின் அடித்தளம் என்று கூறிய அவர், இந்த மாண்பு அவர்கள் ஒரு பகுதியாக இருக்கும் எந்தவொரு சமூகத்திலும் ஒருங்கிணைவதற்கு உதவுவதாக குறிப்பிட்டார். ஓமனில் இந்திய சமூகத்தினர் எவ்வளவு சிறப்பாக மதிக்கப்படுகிறனர் என்பது குறித்து குறிப்பிட்ட அவர், சகவாழ்வும், ஒத்துழைப்புமே இந்திய வம்சாவளியினரின் தனிச்சிறப்பாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டினார்.

இந்தியாவும் ஓமனும் மாண்டவி முதல் மஸ்கட் வரை பழமையான தொடர்புகளை கொண்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் தற்போது கடின உழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் வம்சாவளியினரால் மேலும் வளர்கிறது என்று தெரிவித்தார். இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் என்ற விநாடி வினா நிகழ்ச்சியில் பெருமளவில் பங்கேற்றதற்காக இந்திய வம்சாவளியிரை அவர் பாராட்டினார். ஓமன் நாட்டில் இந்திய பள்ளிகள் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அவர் வாழ்த்து தெரிவித்தார். இந்திய சமூகத்தினரின் நலனுக்காக ஆதரவாக இருக்கும் மன்னர் ஹைதம் பின் தாரிக்கிற்கும், பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இந்தியாவின் மாற்றத்தக்க வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து பேசிய பிரதமர், கடந்த காலாண்டில் 8 சதவீதத்திற்கும் மேலான வளர்ச்சியை பிரதிபலித்தது, அதன் பொருளாதாரத்தின் வலிமை என்று கூறினார். கடந்த 11 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அரசின் சாதனைகள் குறித்து எடுத்துரைத்த அவர், உள்கட்டமைப்பு வளர்ச்சி, உற்பத்தி, சுகாதார நலன், பசுமை வளர்ச்சி, மகளிருக்கு அதிகாரமளித்தல் ஆகிய துறைகளில் நாடு மாற்றத்தை கண்டுள்ளதாக கூறினார். உலகத்தரம் வாய்ந்த புதுமை கண்டுபிடிப்புகள், புத்தொழில் நிறுவனங்கள், மின்னணு பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றை ஏற்படுத்துவது மூலம் இந்தியா 21-ம் நூற்றாண்டிற்காக தயாரானதாக அவர் மேலும் கூறினார்.

இந்திய வம்சாவளியினரின் நலனில் மத்திய அரசின் ஆழ்ந்த உறுதிப்பாட்டை எடுத்துரைத்த பிரதமர், எப்பொழுதெல்லாம், எங்கேயெல்லாம் தமது மக்களுக்கு உதவி தேவைப்படுகிறதோ, அப்பொழுது அரசு அவர்களின் கைகளைப்பற்றி இருக்கும் என்று குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு, டிஜிட்டல் கற்றல், புதுமை கண்டுப்பிடிப்பு கூட்டாண்மை, தொழில் முனைவு பரிமாற்றம் ஆகியவை மூலம் இந்தியாவும் ஓமனும் எதிர்காலத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன என்று பிரதமர் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

கிம்பர்லி செயல்முறையின் மதிப்புமிக்க தலைமைப் பொறுப்பை 2026 ஜனவரி 1 முதல் இந்தியா ஏற்கிறது

கிம்பர்லி செயல்முறை அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில், அதன் தலைமைப் பதவிக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கிம்பர்லி செயல்முறையின் தலைவராக …