Thursday, December 19 2024 | 12:19:10 PM
Breaking News

2024-25-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் அந்நிய நேரடி முதலீடு 26% அதிகரித்து $42.1 பில்லியனாக உள்ளது

Connect us on:

ஏப்ரல் 2000 முதல் மொத்த அந்நிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) 1 டிரில்லியன் டாலரை எட்டியதன் மூலம் இந்தியா தனது பொருளாதார பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், அந்நிய நேரடி முதலீடு சுமார் 26% அதிகரித்து 42.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கணிசமான கடன் அல்லாத நிதி ஆதாரங்களை வழங்குவதன் மூலமும், தொழில்நுட்ப பரிமாற்றங்களை ஊக்குவிப்பதன் மூலமும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் இந்தியாவின் வளர்ச்சியில் அந்நிய நேரடி முதலீடு மாற்றத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. “இந்தியாவில் தயாரியுங்கள்”, தாராளமயமாக்கப்பட்ட துறைசார் கொள்கைகள் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) போன்ற முன்முயற்சிகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளன, அதே நேரத்தில் போட்டி தொழிலாளர் செலவுகள் மற்றும் உத்திசார்ந்த  ஊக்கத்தொகைகள் பன்னாட்டு நிறுவனங்களை தொடர்ந்து ஈர்க்கின்றன.

கடந்த பத்தாண்டில் (ஏப்ரல் 2014 முதல் செப்டம்பர் 2024 வரை), மொத்த அந்நிய நேரடி முதலீடு 709.84 பில்லியன் டாலராக இருந்தது. இது கடந்த 24 ஆண்டுகளில் ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 68.69% ஆகும். இந்த வலுவான முதலீடுகளின் வருகை, உலகப் பொருளாதார நிலையை வடிவமைப்பதில் இந்தியாவின் முக்கிய பங்கை சுட்டிக் காட்டுகிறது.

உலக போட்டிக் குறியீடு 2024-ல் இந்தியாவின் தரவரிசை 2021-ல் 43 வது இடத்தில் இருந்து மூன்று இடங்கள் முன்னேறி 40 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கூடுதலாக, முதல் 50 நாடுகளில் 48 வது மிகவும் புதுமையான நாடாக இந்தியா பெயரிடப்பட்டது, உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு 2023-ல் 132 பொருளாதாரங்களில் 40 வது இடத்தைப் பிடித்தது. இது 2015-ல் அதன் 81 வது இடத்திலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

About Matribhumi Samachar

Check Also

நகரக் கூட்டுறவு வங்கிகளின் ஒருங்கிணைந்த அமைப்பு

நகரக் கூட்டுறவு வங்கிகள் சந்தித்து வரும் இடர்ப்பாடுகளைக் களைவதற்கு  ஓர் அமைப்பை நிறுவ வேண்டிய அவசியம் உணரப்பட்டது. நகரக் கூட்டுறவு …