Thursday, December 19 2024 | 11:44:59 AM
Breaking News

நாட்டு நலப்பணித் திட்டத்தின் 80வது சுற்றுக்கான அகில

Connect us on:

மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் , 2024 டிசம்பர் 10 & 11 தேதிகளில் புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் அதன் சமூக-பொருளாதார கணக்கெடுப்பின் என்எஸ்எஸ் 80-வது சுற்றுக்கான அகில இந்திய பயிற்சியாளர்களின் பயிலரங்கை ஏற்பாடு செய்தது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் திரு கல் சிங் 10 டிசம்பர் 2024 அன்று பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். அவர் தமது தொடக்க உரையில், தேசிய சுகாதார கணக்குகள் தொகுப்பில் சுகாதார கணக்கெடுப்பு தரவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சவுரப் கார்க் நிறைவு விழாவுக்கு தலைமை தாங்கினார். அவர் தமது உரையில், ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தில் ஆய்வுகளின் முக்கியப் பங்கை வலியுறுத்தினார். உயர்தர மற்றும் சரியான நேரத்தில் தரவுகளின் அவசியத்தை எடுத்துரைத்த அவர், தரவு சேகரிப்பு மற்றும் செயலாக்கத்தில் கடுமையான தரங்களை உறுதி செய்யுமாறு பங்கேற்பாளர்களை வலியுறுத்தினார். கணக்கெடுப்புகளை தடையின்றி செயல்படுத்துவதை எளிதாக்குவதற்கு மட்டுமல்லாமல், அமைச்சகத்தின் வரம்பின் கீழ் உள்ள பிற முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் மாநில அதிகாரிகளுடன் செயலூக்கமான தொடர்புகளின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

தேசிய புள்ளியியல் தலைமை இயக்குநர் திருமதி கீதா சிங் ரத்தோர், தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள், கள செயல்பாட்டுப் பிரிவின் அனைத்து பிராந்திய அலுவலகங்களின் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்கள் / துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை மாநில இயக்குநரகங்களின் பிரதிநிதிகள் இந்த பயிலரங்கில் பங்கேற்றனர். 2025 ஜனவரி 1 முதல் கணக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்பு, கள அலுவலகங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கள அதிகாரிகளுக்கு மேலும் பயிற்சி அளிப்பார்கள்.

சுகாதாரம் குறித்த கணக்கெடுப்பு சுகாதாரத் துறை குறித்த அடிப்படை அளவு தகவல்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதன்மையாக, நோயுற்ற விகிதம், மருத்துவமனையில் சேர்க்கப்படும் விகிதம், பொது மற்றும் தனியார் சுகாதார நிறுவனங்களின் பயன்பாடு, மருத்துவமனை பிரசவ விகிதம் போன்றவற்றின் குறியீடுகள் இந்த ஆய்வு புள்ளி விவரங்களிலிருந்து பெறுவதற்கு முயற்சி செய்யப்படும்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள கிராமங்களைத் தவிர இந்தியா முழுவதையும் இந்த ஆய்வு உள்ளடக்கும்.

About Matribhumi Samachar

Check Also

தேசிய அளவில் பல மாநில கூட்டுறவு சங்கங்கள்

மத்திய கூட்டுறவு அமைச்சகம் ஏற்றுமதி, இயற்கை விளைபொருள் மற்றும் தரமான விதைகளுக்கு தலா ஒன்று வீதம் மூன்று தேசிய அளவிலான பல …