Friday, December 05 2025 | 11:07:50 PM
Breaking News

இந்தியாவுக்கான பயணத்தை ஐ.என்.எஸ். துஷில் தொடங்கியது

Connect us on:

அண்மையில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்ட  பன்னோக்கு  ஏவுகணை போர்க்கப்பலான ஐ.என்.எஸ் துஷில், ரஷ்யாவின் கலினின்கிராடில் இருந்து இந்தியாவுக்கு 2024 டிசம்பர் 17 அன்று தனது பயணத்தைத் தொடங்கியது.

இந்தப் போர்க் கப்பல் ரஷ்யாவில் கட்டப்பட்டு, 2024 டிசம்பர் 9-ம் தேதி அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் முன்னிலையில் இயக்கி வைக்கப்பட்டது.

இந்தப் போர்க்கப்பல் பால்டிக், வடகடல், அட்லாண்டிக் பெருங்கடல், வழியாக பயணம் செய்து இந்தியப் பெருங்கடலைக் கடந்து,  பல்வேறு நட்பு நாடுகளின் துறைமுகங்கள் வழியாக இந்தியா வந்து சேரும்.

ஐ.என்.எஸ் துஷில் போர்க்கப்பல் இந்தியக் கடற்படையின் ராஜதந்திரமிக்க நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக உள்ளது.

இந்தப் போர்க்கப்பல் கடற்கொள்ளைகளைத் தடுப்பது,  முக்கிய கடற்பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுவது, கடல்சார் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வது ஆகிய பணிகளில் ஈடுபடுத்தப்படும்.

About Matribhumi Samachar

Check Also

ரஷ்ய அதிபரைப் பிரதமர் வரவேற்றார்

இந்தியாவுக்கு வந்துள்ள ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடினை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். இன்று மாலையும் நாளையும் …