மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில்,தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (இஎஸ்ஐசி )தனது மருத்துவ சேவைகள், பிற விநியோக வழிமுறைகள், தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் ஆகியவற்றை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றி வருகிறது. தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான முன்னேற்றங்களை மத்திய அமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
தன்வந்தரி மருத்துவமனை தகவல் அமைப்பு இப்போது இஎஸ்ஐசி மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
இஎஸ்ஐசி-ன் தன்வந்தரி பிரிவு மருத்துவமனைகள், மருந்தகங்கள் ஆகியவற்றுக்கு நோயாளிகளின் நோய் குறித்த விவரங்களை சிறந்த முறையில் இது கிடைக்கச் செய்கிறது. இதனால் நோயாளிகள் மற்றும் சிகிச்சை குறித்த சிறந்த பராமரிப்பு உறுதி செய்யப்படுகிறது.
வன்பொருள், மென்பொருள், கட்டமைப்பு அமைப்புகள் உள்ளிட்ட அதன் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளையும் இஎஸ்ஐசி மேம்படுத்தியுள்ளது. இந்த அமைப்பை விரைவாகவும், மிகவும் பாதுகாப்பாகவும், அனைத்து இஎஸ்ஐசி வசதிகளிலும் சம்பந்தப்பட்ட தரப்பினர் இதனைப் பயன்படுத்துவது எளிதாக உள்ளது.