Thursday, December 26 2024 | 10:47:00 PM
Breaking News

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை தலைமையகத்திற்குச் சென்றார்

Connect us on:

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாபுதுதில்லியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) தலைமையகத்திற்குச் சென்றார். உள்துறை அமைச்சர் படையின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்துசிஆர்பிஎஃப்-பின் செயல்பாடுகள்நிர்வாக செயல்திறன் குறித்து விரிவான ஆய்வு செய்தார். மத்திய உள்துறை செயலாளர் உட்பட உள்துறை அமைச்சகத்தின் பல மூத்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் போதுமத்திய ரிசர்வ் காவல் படையின் தலைமை இயக்குநர் திரு அனிஷ் தயாள் சிங்மத்திய ரிசர்வ் காவல் படையில் கருணை அடிப்படையில் பணி நியமனங்கள் உட்பட பாதுகாப்புப் படையில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து உள்துறை அமைச்சரிடம் விளக்கினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புஅமைதியை உறுதி செய்வதில் மத்திய ரிசர்வ் காவல் படை முக்கிய பங்காற்றி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். நக்சலிஸத்தை சமாளிப்பதிலும்வடகிழக்கு மாநிலங்கள்ஜம்மு-காஷ்மீரில் அமைதிஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதிலும் சிஆர்பிஎஃப் பாராட்டத்தக்க பணியைச் செய்துள்ளது என்று திரு அமித் ஷா கூறினார்.

வீரர்களின் சிறந்த ஆரோக்கியத்திற்காக சிறுதானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மத்திய உள்துறை அமைச்சரின் இந்த ஊக்கமளிக்கும் விஜயம்தேசிய பாதுகாப்புக்கான மத்திய ரிசர்வ் காவல் படையின் உறுதிப்பாட்டையும்தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அதன் பன்முக பங்களிப்பையும் அரசு அங்கீகரித்திருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

About Matribhumi Samachar

Check Also

நுகர்வோர் விவகாரங்கள் துறையின் 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்

நுகர்வோர் விவகாரங்கள் துறையானது தனது விலை கண்காணிப்பு பிரிவு மூலம் 38 உணவுப் பொருட்களின் விலையை கண்காணித்து வருகிறது .பொருட்களின் விலையை கட்டுப்படுத்த …