Sunday, December 28 2025 | 07:23:47 AM
Breaking News

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பாப்கார்ன் மீதான ஜி.எஸ்.டி விகிதம்

Connect us on:

கேள்வி 1. பாப்கார்ன் மீதான ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டுள்ளதா?

பதில்: சமீபத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பாப்கார்ன் மீதான ஜி.எஸ்.டி விகிதம் உயர்த்தப்படவில்லை. உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் கலந்த பாப்கார்னுக்கான ஜி.எஸ்.டி விகிதத்தை தெளிவுபடுத்துமாறு உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து கோரிக்கை பெறப்பட்டது. இந்த விவகாரம் 55-வது ஜி.எஸ்.டி கவுன்சிளின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, அதை தெளிவுபடுத்த கவுன்சில் பரிந்துரைத்தது.

கேள்வி 2பல்வேறு வகையான பாப்கார்னின் மாறுபட்ட வகைகளுக்கு என்ன அடிப்படை?

பதில்: உணவுப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களும் உலக சுங்க அமைப்பால் உருவாக்கப்பட்ட பல்நோக்கு சர்வதேச பொருட்களின் பெயரிடப்பட்ட ஹார்மோனைஸ்ட் சிஸ்டம் (ஹெச்.எஸ்) வகைப்பாட்டின்படி ஜி.எஸ்.டியின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன.   சர்வதேச வர்த்தகத்தில் 98% க்கும் அதிகமானவற்றை உள்ளடக்கிய இந்த அமைப்புமுறை, 200 க்கும் மேற்பட்ட நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது. மாறுபட்ட ஜி.எஸ்டி விகிதங்கள் ஹெச்.எஸ் அமைப்புமுறையின் வெவ்வேறு அத்தியாயங்களின் கீழ் பொருட்களின் வகைப்பாட்டின் விளைவாகும்.

ஹெச்.எஸ் வகைப்பாட்டின் படி, இனிப்பு மிட்டாய், அத்தியாயம் 17 இல் ஹெச்.எஸ் 1704 இன் கீழ் இடம்பெற்றுள்ளது. சில குறிப்பிட்ட பொருட்களைத் தவிர அனைத்து இனிப்பு மிட்டாய்களுக்கும் 18% ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. இந்தியாவில், நம்கீன் வகை தின்பண்டங்கள் ஹெச்.எஸ் 2106 90 99 இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. முன் தொகுக்கப்பட்ட மற்றும் பெயர் பொறிக்கப்பட்ட வடிவத்தைத் தவிர வேறு வடிவத்தில் விற்கப்படும்போது 5% ஜி.எஸ்.டியும், முன் தொகுக்கப்பட்ட மற்றும் பெயர் பொறிக்கப்பட்ட வடிவத்தில் விற்கப்படும்போது 12% ஜி.எஸ்.டியும் நம்கீன்களுக்கு விதிக்கப்படும்.

கேள்வி 3. விளக்கத்தை வெளியிட்டதன் நோக்கம் என்ன?

பதில்: உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் கலந்து, சாப்பிடத் தயாராக இருக்கும் பாப்கார்ன் குறித்த வகைப்பாடு சர்ச்சைகளுக்குத் தீர்வு காண விளக்கம் அளிக்குமாறு  கவுன்சில் பரிந்துரைத்தது.

கேள்வி 4. திரையரங்குகளில் பாப்கார்ன் விற்பனை அதிகரிக்குமா?

பதில்: பொதுவாக, திரையரங்குகளில் வாடிக்கையாளர்களுக்கு தளர்வான முறையில் பாப்கார்ன் வழங்கப்படுகிறது, எனவே திரைப்பட காட்சிப்படுத்துதல் சேவையிலிருந்து சுயாதீனமாக வழங்கப்படும் வரை ‘உணவக சேவைக்கு’ பொருந்தக்கூடிய 5% தொடர்ந்து அமலில் இருக்கும் .

About Matribhumi Samachar

Check Also

தேசிய நுகர்வோர் உதவி எண் மூலமான புகார்களின் அடிப்படையில், 8 மாதங்களில் 45 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டது

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறையின் முதன்மை முயற்சியான தேசிய நுகர்வோர் உதவி எண், நாடு முழுவதும் நுகர்வோர் குறைகளை திறம்பட, சரியான நேரத்தில் தீர்வு காண்பதில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. 2025 ஏப்ரல் 25 முதல் டிசம்பர் 26 வரையிலான எட்டு மாத காலத்தில், இந்த உதவி எண், மூலம் 31 துறைகளில் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான 67,265 நுகர்வோர் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 45 கோடி ரூபாய் பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது . நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படுவதற்கு முந்தைய கட்டத்தில் செயல்படும் இந்த உதவி எண்ணில் புகார் அளிக்கும்போது, சிக்கல்களை விரைவாகவும், இணக்கமாகவும் தீர்க்க முடிகிறது. நுகர்வோர் ஆணையங்களின் சுமையையும் குறைக்கிறது. கடந்த 8 மாதங்களில் மின் வணிகத் துறையில் அதிகபட்சமாக 39,965 குறைகள் பதிவு செய்யப்பட்டு, அதன் மூலம் 32 கோடி ரூபாய் நுகர்வோருக்கு திரும்ப வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பயணம், சுற்றுலாத் துறையில் 4,050 குறைகள் பதிவு செய்யப்பட்டு 3.5 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், முக்கிய பெருநகரங்கள் முதல் தொலைதூர பகுதிகள் வரை, மின் வணிக பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான குறைகள் அதிகம் பெறப்பட்டன. இது தேசிய நுகர்வோர் உதவி எண்ணின் நாடு தழுவிய செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது. நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் வழக்குத் தொடரும் முன் குறைகளைத் தீர்க்க தங்கள் குறைகளை 1915 என்ற கட்டணமில்லா எண் மூலம் 17 மொழிகளில் பதிவு செய்யலாம் . ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் வழிமுறையான இன்கிராம் தளம் மூலமாகவும் குறைகளைச் சமர்ப்பிக்கலாம். நுகர்வோர் உதவி தொடர்பான இணையதளம்: www.consumerhelpline.gov.in நுகர்வோர் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும், பிரச்சனைகளுக்குச் சரியான நேரத்தில் தீர்வு காணவும் உதவி எண்ணை அதிக அளவில் பயன்படுத்துமாறு நுகர்வோர் விவகாரங்கள் துறை கேட்டுக்கொள்கிறது.