புது தில்லியின் செங்கோட்டையில் அருவ கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் 20-வது அமர்வு தொடங்குகிறது. வெளியுறவு அமைச்சர் திரு எஸ் ஜெய்சங்கர், மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா ஆகியோர் இந்த வரலாற்று நிகழ்வில் கலந்து கொண்டனர். யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர் டாக்டர் கலீத் எல்-எனானி உள்ளிட்ட மூத்த பிரமுகர்கள், யுனெஸ்கோவிற்கான இந்தியாவின் …
Read More »ஆபரேசன் சாகர் பந்து – இலங்கைக்கு 1000 டன் நிவாரணப் பொருட்களை வழங்க இந்திய கடற்படை மேலும் நான்கு போர்க்கப்பல்களை அனுப்புகிறது
இலங்கைக்கு தேடல் மற்றும் மீட்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவிகளை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட ஆபரேசன் சாகர் பந்து நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதநேய உதவிகளை வழங்குவதற்காக இந்திய கடற்படை ஐஎன்எஸ் கரியல், எல்சியு 54, எல்சியு 51, எல்சியு 57 ஆகிய நான்கு கப்பல்களை அனுப்பியுள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் சுகன்யா ஆகியவை முன்னர் நிவாரண உதவி …
Read More »குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Read More »ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு ஆயுதப்படைகளுக்குப் பிரதமர் நன்றி
ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு, ஆயுதப்படைகளில் பணிபுரியும் துணிச்சல் மிக்க, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.12.2025) தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். ஆயுதப்படை வீரர்களின் ஒழுக்கம், மன உறுதி, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது நாட்டைப் பாதுகாக்கிறது என்றும் மக்களை பலப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களது அர்ப்பணிப்பு மனப்பான்மையானது, கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப் படைகளின் வீரத்தையும் சேவையையும் போற்றும் வகையில், ஆயுதப் படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அசைக்க முடியாத வீரத்துடன் நமது தேசத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆயுதப்படை கொடி தினத்தன்று நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஒழுக்கம், உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது மக்களைப் பாதுகாத்து, நமது நாட்டை பலப்படுத்துகிறது. அவர்களின் அர்ப்பணிப்பானது, நமது கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஆயுதப்படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்குவோம்.”
Read More »கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்க வேண்டும் – பொது மக்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்
ஆயுதப்படைகளின் தியாகங்களையும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 07 அன்று நாடு முழுவதும் ஆயுதப்படைகள் கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டைப் பாதுகாக்கும் துணிச்சலான வீரர்களுக்கு இந்த நாளில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், ஆயுதப்படைகளின் கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ஆயுதப்படை கொடி நாளன்று, நமது ஆயுதப்படைகளின் வீரத்துக்கும் தியாகங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். அவர்களின் துணிச்சல் நமது நாட்டைப் பாதுகாக்கிறது. அவர்களின் தன்னலமற்ற சேவை நாம் ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாத கடனாகும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு தாராளமாக பங்களிக்குமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவு அவர்களின் அர்ப்பணிப்பை மதிப்பதாக அமையும் என்பதுடன் நம்மைப் பாதுகாப்பவர்களை பலப்படுத்தும்.” என்று திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஆயுதப் படைகளின் முக்கிய பங்கை சுட்டிக்காட்டியுள்ளார். மனிதாபிமான நடவடிக்கைகளிலும் அவர்களின் அசாதாரண அர்ப்பணிப்பை திரு சஞ்சய் சேத் எடுத்துரைத்துள்ளார். முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான், பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி – மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத், முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை செயலாளர் திருமதி சுக்ரிதி லிக்கி ஆகியோரும் ஆயுதப்படை வீரர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். கொடிநாள் நிதிக்கான பங்களிப்புகளுக்கு, வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 80ஜி (5)(vi)-ன் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. பங்களிப்புகளை பின்வரும் வங்கிக் கணக்குகளில் காசோலை/வரைவோலை/நெஃப்ட்/ஆர்டிஜிஎஸ் மூலம் செலுத்தலாம்: 1) பஞ்சாப் நேஷனல் வங்கி, சேவா பவன், ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 3083000100179875 ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் – PUNB0308300 2) பாரத ஸ்டேட் வங்கி ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 34420400623 ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் – SBIN0001076 3) ஐசிஐசிஐ வங்கி ஐடிஏ ஹவுஸ், செக்டர்-4,ஆர்கே புரம் புது தில்லி-110022. கணக்கு எண் – 182401001380 ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் – ICIC0001824 affdf@icici என்ற யுபிஐ ஐடி மூலமாகவும் மக்கள் கொடிநாள் நிதிக்கு பங்களிப்புகளை வழங்கலாம்.
Read More »நிதியுதவியுடன் கூடிய சிறந்த வழிகாட்டுதல்தான் அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக புத்தொழில் நிறுவனங்கள் திகழும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பஞ்ச்குலாவில் இன்று (07.12.2025) இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் தொழில்முனைவோர், மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடிய அமைச்சர், நிதியுதவி மட்டும் அல்லாமல், அத்துடன் சிறந்த வழிகாட்டுதலே அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும் என்று கூறினார். நாட்டில் அறிவியல் கல்விக்கான வாய்ப்புகள் பெருகி இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், சிறிய நகரங்களில் சாதாரண பின்னணிகளைச் சேர்ந்தவர்களும் சிறந்த தொழில்முனைவோராகும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். வெறும் கொள்கை உருவாக்கம் என்ற நிலையோடு அல்லாமல், புதிய முயற்சிகளை சந்தைகளுடன் இணைக்கும் சூழலை அரசு உருவாக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார். நமது புத்தொழில் நிறுவனங்கள் உலக அளவில் போட்டியிட வேண்டுமானால், ஆராய்ச்சியிலும் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தி, துணிச்சலாக புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அறிவியல் முன்னேற்றங்கள் இந்தியாவில் மக்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளன என்பதை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்திய சர்வதேச அறிவியல் விழா போன்ற நிகழ்வுகள், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ஆகியோரை ஒரு பொதுவான தளத்தில் இணைப்பதாக திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
Read More »தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மண்டல சுற்றுச்சூழல் மாநாடு 2025 நிறைவடைந்தது
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள்/ குழுக்கள் ஏற்பாடு செய்திருந்த சுற்றுச்சூழல் குறித்த மண்டல மாநாடு 2025, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நிறைவடைந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டின் நிறைவு விழாவில், நிறுவன ஒருமைப்பாடு, கொள்கை முதல் செயல் வரையிலான அமலாக்கம் மற்றும் எதிர்வினையிலிருந்து தடுப்பு சுற்றுச்சூழல் நிர்வாகத்திற்கு மாறுதல் முதலியவற்றின் வலிமையான முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய உச்சநீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தொழில்நுட்ப நிர்பந்தம் மட்டுமல்ல, இது ஒரு அரசியலமைப்பு உத்தரவாதம் என்று கூறினார். ஒழுங்குமுறை கட்டமைப்புகள் அவ்வப்போது தோல்வியடைவதற்கு போதுமான சட்டங்கள் இல்லாதது காரணம் அல்ல, மாறாக நிறுவனங்கள் சட்டங்களை செயல்படுத்த தயங்குவது தான் காரணம் என்று அவர் வலியுறுத்தினார். நிறுவன வலிமைப்படுத்தல், ஒருங்கிணைந்த நிர்வாக கட்டமைப்பு, ஆதாரங்களின் அடிப்படையிலான அமலாக்கம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் குடிமக்களின் பங்கேற்பு/ நடத்தை மாற்றம் ஆகிய ஐந்து தூண்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் நம்பகமான முன்னோக்கிய பாதையை நீதிபதி மகாதேவன் சுட்டிக்காட்டினார். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திரு ஏ.ஆர்.எல். சுந்தரேசன் தனது உரையில், சுற்றுச்சூழல் நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் எந்த ஒத்திவைப்பும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தி, இணக்கத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, மாநாட்டில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அடிமட்ட அளவில் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே நேர்மறையான விளைவுகள் கிடைக்கும் என்று கூறினார். நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹூ, கொள்கையையும் செயலையும் ஒன்றாக இணைப்பதே இன்றைய பிரதான சவாலாக உள்ளது என்று கூறினார்.
Read More »குஜராத்தின் ஏக்தா நகரில் தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (6.12.2025) குஜராத்தின் ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமை சிலையில் சர்தார் @150 ஒற்றுமை அணிவகுப்பு – தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், இந்த வரலாற்று சிறப்புமிக்க தேசிய பாதயாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகுந்த கவுரமானது என்று கூறினார். நவம்பர் 26-ம் தேதி அரசியல் சாசன தினத்தன்று தொடங்கிய பாதயாத்திரையின் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார். 1,300- க்கும் மேற்பட்ட பாதயாத்திரைகளில் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பது சர்தார் வல்லபாய் படேல் ஏற்றிய நீடித்த ஒற்றுமையின் சுடரை நிரூபித்தது என்று அவர் குறிப்பிட்டார். 560-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பதில் சர்தார் படேலின் வரலாற்று சாதனையை அவர் நினைவுகூர்ந்தார். “அகண்ட பாரதத்தின் வலுவான அடித்தளத்தை ஒன்றிணைத்து அமைத்ததற்காக இந்தியாவின் இரும்பு …
Read More »மகாபரிநிர்வாண தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரதமர் மரியாதை
மகாபரிநிர்வாண தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார். நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் சாசனம் மீதான டாக்டர் அம்பேத்கரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இந்தியாவின் தேசியப் பயணத்தை தொடர்ந்து வழிநடத்துகிறது என்று பிரதமர் கூறியுள்ளார். மனிதத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதிலும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துவதிலும் டாக்டர் அம்பேத்கரின் அர்ப்பணிப்பிலிருந்து நமது தலைமுறைகள் உத்வேகம் பெற்றுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வளர்ச்சியடைந்த பாரதத்தைக் கட்டியெழுப்ப நாடு பாடுபடும் போது டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்கள் நாட்டின் பாதையைத் தொடர்ந்து ஒளிரச் செய்யும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது; “மகாபரிநிர்வான் தினத்தன்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை நினைவு கூர்கிறேன். அவரது தொலைநோக்குத் தலைமைத்துவமும், நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் சாசனம் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நமது தேசியப் பயணத்தைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன. மனிதத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தவும் அவர் நமது தலைமுறைகளுக்கு ஊக்கமளித்துள்ளார். ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்ப நாம் பாடுபடும் போது அவரது லட்சியங்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும்.”
Read More »வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தமிழ்நாட்டில் இதுவரை 99.86 சதவீத படிவங்கள் விநியோகம்
தேர்தல் ஆணையம் நடத்தி வரும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில், தமிழ்நாட்டில் இதுவரை 6,40,24,854 படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது 99.86 சதவீதம் ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு இன்று (06.12.2025) மாலை 3 மணி வரை 6,40,24,854 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 68,470 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் 2,46,069 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். …
Read More »
Matribhumi Samachar Tamil