Friday, December 05 2025 | 08:28:53 PM
Breaking News

Matribhumi Samachar

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சுமார் ரூ.2,200 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்

திரு.நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டினார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, புனிதமான சாவான் மாதத்தில் வாரணாசியைச் சேர்ந்த குடும்பங்களைச் சந்தித்தது குறித்த மன நிறைவை வெளிப்படுத்தினார். வாரணாசி மக்களுடனான தமது ஆழமான உணர்ச்சிபூர்வமான தொடர்பை எடுத்துரைத்த திரு மோடி, நகரத்தின் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் தமது மரியாதைக்குரிய வாழ்த்துகளைத் தெரிவித்தார். புனிதமான சாவான் மாதத்தில் காணொலி மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் இணைவதில் திரு …

Read More »

மேற்கு வங்கத்தில் மத்திய மீன்வள அமைச்சக திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் – மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங்

மீன்பிடித் திட்டங்களை செயல்படுத்துவதில் மேற்கு வங்கத்தின் இடைவெளிகளைக் குறைப்பதற்கான அவசியத்தை, குறிப்பாக தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தில் மீன் விவசாயிகளின் பதிவு குறைவாக இருப்பதை, மத்திய மீன்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் எடுத்துரைத்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற மீன்வளத் துறையின் பிராந்திய ஆய்வுக் கூட்டத்தில், மத்திய அமைச்சர் பங்கேற்றார். மாநிலத்தின் 32 லட்சம் மீன் விவசாயிகளில் ஒரு பகுதியினர் மட்டுமே தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும், இது பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் மத்திய அரசின் சலுகைகளைப் பெறுவதில் தடை ஏற்படுத்துகிறது என்றும் சுட்டிக்காட்டினார். மாநிலத்தில் உள்நாட்டு மீன்வளத்தின் பயன்படுத்தப்படாத திறனை அமைச்சர் குறிப்பிட்டதோடு, பாரம்பரிய நீர்நிலைகளை சிறப்பாகப் பயன்படுத்துதல், மீனவர்களுக்கான கூட்டுறவு கட்டமைப்புகளை உருவாக்குதல் வலுவான செயலாக்க சூழல் அமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்தார். உள்ளூர் வேலைவாய்ப்பையும் மீன் ஏற்றுமதியை அதிகரிக்க மேற்கு வங்கத்தில் ஒரு மேம்பட்ட உலர் மீன் அமைப்பை நிறுவுவதற்கான திட்டத்தையும் அவர் எடுத்துரைத்தார். புதிய தொழில்நுட்பங்களை பின்பற்ற வலியுறுத்திய அவர், சிறந்த பயிற்சி முறைகளை உருவாக்குதல் நிலையான வளர்ச்சிக்கு அவசியம் என்றார். மீன் உற்பத்தியில் 104% வளர்ச்சியைக் கண்டுள்ள இந்தியா தற்போது உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தியாளராக இருப்பதாக அவர் கூறினார். கடந்த பத்து ஆண்டுகளில் உள்நாட்டு மீன் உற்பத்தி 142% அதிகரித்துள்ளதாகவும், மீன் ஏற்றுமதியில் இந்த துறையின் பங்கை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன், மத்திய மீன்வளத் துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மீன்வளம் தொடர்பான திட்டங்களுக்கு நிறுவன ஆதரவு, மத்திய-மாநில ஒருங்கிணைப்பு, திறமையான விநியோக வழிமுறைகளின் முக்கியத்துவத்தை இருவரும் வலியுறுத்தினர். மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய நான்கு கிழக்கு மாநிலங்களில் முதன்மை மீன்வளத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிராந்திய ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் மீன்வளத் துறை அதிகாரிகள், பங்கேற்கும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் விளக்கங்களை வழங்கினர். பிரதமரின்  மீன் வள மேம்பாட்டுத் திட்டம், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம், கிசான் கடன் அட்டை உள்ளிட்ட திட்ட செயல்பாடுகளை மதிப்பிடுவதும், பிராந்தியத்தில் மேம்பட்ட விளைவுகளுக்கான திட்டத்தை வகுப்பதும் இக்கூட்டத்தின் நோக்கம் ஆகும்.

Read More »

15-வது இந்திய உறுப்பு தான தின விழாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா உரையாற்றினார்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், மத்திய அரசு தொடர்ந்து உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பன வழிமுறைகள நெறிப்படுத்தி, அனைவருக்கும் அவை கிடைக்கும் வகையில் செய்து வருகிறது எனவும் இதனால் மக்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா கூறியுள்ளார். மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் கீழ் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) ஏற்பாடு செய்த 15-வது இந்திய உறுப்பு தான தின நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு நட்டா கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் பொறுப்பு செயலாளர் திருமதி நிவேதிதா சுக்லா வர்மா மற்றும் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் டாக்டர் சுனிதா சர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் உறுப்பு மற்றும் திசு தானத்தை ஊக்குவிக்கும் நோக்கில் , ஓராண்டு காலமாக நடைபெற்று வரும் ” அங்தானம்- ஜீவன் சஞ்சீவனி இயக்கம் ” என்ற தேசிய இயக்கத்தின் கீழ், 15-வது இந்திய உறுப்பு தான தினம் கொண்டாடப்பட்டது . இந்த இயக்கம், பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் அவசியத்தையும், கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்களை நீக்குவதையும், மக்கள் உறுப்பு தானத்திற்கு உறுதியளிக்க ஊக்குவிப்பதையும் வலியுறுத்துகிறது. உறுப்பு தானத்தின் …

Read More »

புதுவைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அரசின் திறன் மேம்பாட்டு ஆணையம் இனைந்து “கர்மயோகி திட்டம்” மூன்று நாள் முதன்மை பயிற்சியாளர் பயிலரங்கை வெற்றிகரமாக நடத்தியது

இந்திய அரசின் திறன் மேம்பாட்டு ஆணையம் மற்றும் புதுவைப் பல்கலைக்கழகம் இணைந்து, ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2, 2025 வரை, மூன்று நாள் முதன்மை பயிற்சியாளர் பயிலரங்கத்தை வெற்றிகரமாக நடத்தியது. இந்த பயிலரங்கு, “கர்மயோகி திட்டம்” என்ற தேசிய அளவிலான திறன் மேம்பாட்டு திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், இந்திய நெறிமுறைகளில் வேரூன்றிய, திறமையான மற்றும் பொறுப்பான பொது நிர்வாக சேவையை உருவாக்குதல் …

Read More »

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

உள்துறை அமைச்சகத்தின் 22.07.2025 தேதியிட்ட அறிவிப்பின்படி குடியரசு துணைத் தலைவர் இடம் காலியாக உள்ளது. 1952 ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் சட்டத்தின் பிரிவு 4 இன் துணைப் பிரிவு (1) மற்றும் துணைப் பிரிவு (4) விதிகளின்படி, அவ்வாறு ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப  குடியரசுத் துணைத் த லைவர்தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை அந்த காலியிடம் ஏற்பட்டவுடன் விரைவில் வெளியிட வேண்டும். இதையடுத்து, 17வது  …

Read More »

தென்கிழக்கு ஆசியாவில் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், பிலிப்பைன்ஸின் மணிலாவுக்கு இந்திய கடற்படை கப்பல்கள் வருகை

தென்கிழக்கு ஆசியாவில் இந்திய கடற்படையின் தொடர்ச்சியான செயல்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக, கிழக்கு கடற்படையின் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் சுஷீல் மேனனின் தலைமையில், கிழக்கு கடற்படையின் இந்திய கடற்படை கப்பல்களான ஐஎன்எஸ் டெல்லி, சக்தி மற்றும் கில்டன் ஆகியவை பிலிப்பைன்ஸின் மணிலாவை வந்தடைந்தன. இந்தியாவிற்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான வலுவான மற்றும் வளர்ந்து வரும் கடல்சார் உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், பிலிப்பைன்ஸ் கடற்படை வீரர்களால் இந்திய கப்பல்களுக்கு அன்பான …

Read More »

தேசிய மனநலத் திட்டத்தின் மாவட்ட மனநலத் திட்டக் கூறு 767 மாவட்டங்களில் செயல்படுத்த அனுமதி

தேசிய மனநலத் திட்டத்தை அரசு நாட்டில் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மாவட்ட மனநலத் திட்டம் 767 மாவட்டங்களில் செயல்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேசிய சுகாதார மிஷன் மூலம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது. சமூக சுகாதார மையம் மற்றும் ஆரம்ப சுகாதார மைய அளவிலான மட்டங்களில் மாவட்ட மனநலத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் வசதிகளில், வெளிநோயாளிகள் சேவைகள், மதிப்பீடு, ஆலோசனை/உளவியல்-சமூக தலையீடுகள், கடுமையான மனநல கோளாறுகள் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியான …

Read More »

பிஎஸ்என்எல் சுதந்திர தின சலுகை – ரூ.1 ப்ளான்

இந்தியாவின் நம்பகமான பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ‘சுதந்திர தின திட்டத்தை’ ஆகஸ்ட் 1, 2025 அன்று அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவைகளை ஒரு மாதத்திற்கு இலவசமாக சோதித்துப் பார்க்க, வரையறுக்கப்பட்ட காலத்திற்கு ரூ.1 விலையில் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்த முயற்சி, இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட …

Read More »

உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் (ஆகஸ்ட் 1 -7, 2025)

ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தாய்ப்பால் விழிப்புணர்வு வாரத்தின் கருப்பொருளாக “தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னுரிமை அளிப்போம் – தாய்ப்பால் கொடுப்பதற்கு நிலையான ஆதரவு அமைப்புகளை உருவாக்குவோம் என்பதாகும். ஜிப்மர் மருத்துவமனையின் செவிலியர் துறை, செவிலியர் கல்லூரி, குழந்தைகள் நலத்துறை, பச்சிளம் குழந்தைகள் நலத்துறை, மற்றும் மகப்பேறு மருத்துவம் ஆகிய துறைகளைச் சார்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும் இணைந்து இந்த தாய்ப்பால் விழிப்புணர்வு …

Read More »

திறனுடன் இணைக்கப்பட்ட, அனைவரையும் உள்ளடக்கிய கல்விக்கான மாற்றுத் திட்டம் பிஆர்எஸ் (தேசிய மதிப்பீட்டு ஆய்வு) 2024 குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இந்தியா தனது கல்வி முறையை மாணவர் சேர்க்கைக்கு அப்பால் என மறுவரையறை செய்து உண்மையான கற்றலில் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். கட்டுரை ஒன்றைப் பகிர்ந்துள்ள திரு மோடி,  மாணவர் முன்னேற்றம் குறித்து அறிவியல் பார்வையை வழங்குகின்ற,  அனைவரையும் உள்ளடக்கிய, திறனுடன் இணைக்கப்பட்ட கல்விச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு  சான்றாதார அடிப்படையில், மாவட்ட அளவிலான நடவடிக்கைக்குரிய திட்டத்தை வழங்கும் பிஆர்எஸ் (தேசிய மதிப்பீட்டு ஆய்வு) …

Read More »