Friday, December 05 2025 | 04:26:53 PM
Breaking News

Matribhumi Samachar

கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படையின் துணிச்சல்மிக்க வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படையின்  துணிச்சல்மிக்க வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளத்தை உறுதி செய்யும் அவர்களின் அர்ப்பணிப்புக்காக அவர்களைப் பாராட்டினார். சமூக ஊடக எக்ஸ் தள  பதிவில் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது: “கடற்படை தினத்தை முன்னிட்டு, ஈடு இணையற்ற தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் நமது கடல்களைப் பாதுகாக்கும் இந்திய கடற்படையின் துணிச்சல்மிக்க வீரர்களுக்கு நாம் வணக்கம் செலுத்துவோம். …

Read More »

ஸ்குவாஷ் விளையாட்டு ஜாம்பவான் ராஜ் மன்சந்தா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

முன்னணி ஸ்குவாஷ் வீரர் ராஜ் மன்சந்தா மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்புக்கும் சிறப்புக்கும் பெயர் பெற்றவர் மன்சந்தா என பிரதமர் கூறியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ்  தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அர்ப்பணிப்புக்கும், சிறப்புக்கும் பெயர் பெற்ற இந்திய ஸ்குவாஷின் ஜாம்பவான் ராஜ் மன்சந்தா அவர்கள் மறைவால் வேதனை அடைந்தேன். அவர் வென்ற விருதுகள், விளையாட்டின் மீதான அவரது ஆர்வம், தலைமுறைகளை ஊக்குவிக்கும்  திறன் ஆகியவை அவரை தனிச்சிறப்புடையவராக ஆக்கின. ஸ்குவாஷ் மைதானத்திற்கு அப்பால்,  அவரது சேவை ராணுவத்திலும் தொடர்ந்தது. அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி: பிரதமர் நரேந்திர மோடி (@narendramodi)”

Read More »

ஆர்.வெங்கட்ராமன் பிறந்த தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மலரஞ்சலி செலுத்தினார்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர் வெங்கட்ராமனின் பிறந்த நாளையொட்டி இன்று (2024 டிசம்பர் 4) புவனேஸ்வரில் உள்ள ராஜ் பவனில் அவரது திருவுருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மலர் அஞ்சலி செலுத்தினார்.

Read More »

பூரி கோபபந்து ஆயுர்வேத மகாவித்யாலயாவின் 75-வது ஆண்டு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

ஒடிசா மாநிலம் பூரியில் இன்று (டிசம்பர் 4, 2024) நடைபெற்ற கோபபந்து ஆயுர்வேத மகாவித்யாலயாவின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் தருணம் இது என்று குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், முப்பரிமாண அச்சு போன்ற தொழில்நுட்பங்கள் ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு  உதவுகின்றன. நாம் தற்போதைய தேவைகளைக் கருத்தில் கொண்டு  எதிர்காலத்திற்குத் தேவையான நடைமுறைகளை …

Read More »