படைத் தளபதிகளின், துணைக் குழுவான கூட்டு மின்காந்த வாரியத்தின் வருடாந்திரக் கூட்டம் நவம்பர் 20 அன்று புதுதில்லியில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைகளின் (செயல்பாடுகள்) துணைத் தலைவர் ஏர் மார்ஷல் ராகேஷ் சின்ஹா தலைமையில் நடைபெற்றது. முப்படைகளின் கூட்டு நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்பு எட்டப்படுவதை ஒரே நோக்கமாகக் கொண்டு, இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், அலைக்கற்றை மேலாண்மை ஆகிய துறைகளில் கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல …
Read More »பிராந்திய டிஜிட்டல் சுகாதார உச்சிமாநாடு 2025-ல், பரிமாற்றத்தக்க, தரநிலைகள் சார்ந்த சுகாதாரச் சூழல் அமைப்புகளுடன் முன்னெடுத்துச் செல்ல நாடுகள் முடிவு
புதுதில்லியில் நடைபெற்ற பிராந்திய திறந்தநிலை டிஜிட்டல் சுகாதார உச்சி மாநாடு 2025-ன் இரண்டாம் நாளில், தென்கிழக்கு ஆசிய பிராந்தியம் முழுவதிலுமிருந்து வந்த சுகாதாரத்துறை பிரதிநிதிகள் வெளிப்படையான தரநிலைகள் மற்றும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய மூல தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய, அளவிடக்கூடிய டிஜிட்டல் சுகாதார கட்டமைப்புகளை உருவாக்குவது பற்றிய செயல்விளக்கங்களை செய்து காட்டினர். இதனைத் தொடர்ந்து, விரிவான தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, கிழக்கு …
Read More »சத்தீஷ்கர் மாநிலம் அம்பிகாபூரில் நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ தினக் கொண்டாட்டத்தில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு
சத்தீஷ்கர் மாநில அரசின் சார்பில் அம்பிகாபூரில் இன்று (20.11.2025) நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் சுதந்திரத்திற்காக பெரும் பங்களித்துள்ள பழங்குடியினர் சமுதாயம் குறித்த அத்தியாயம் இந்திய வரலாற்றில் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். பஸ்தரில் நடத்தப்பட்ட மக்கள் நாடாளுமன்ற நிகழ்ச்சி பழங்குடியினரின் பாரம்பரியத்தையும் அவர்களது தொன்மையான கலாச்சாரத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந:துள்ளது என்று கூறினார். பழங்குடியினரின் பாரம்பரியம், …
Read More »கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ல் விவசாயிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்
கோயம்புத்தூரில் நேற்று நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-இல் கலந்துகொண்டபோது, பிரதமர் திரு நரேந்திர மோடி விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைப் பாராட்டிய திரு மோடி, வாழைப்பழ கழிவுகளின் பயன்பாடு பற்றி கேட்டறிந்தார். மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் வாழைப்பழ கழிவுகளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள் என்று விவசாயி விளக்கம் அளித்தார். இத்தகைய தயாரிப்புகள் இந்தியா முழுவதும் இணையம் வழியாக விற்பனை செய்யப்படுவதை விவசாயி உறுதிப்படுத்தினார். …
Read More »வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 11 லட்சம் படிவங்கள் விநியோகம்
தேர்தல் ஆணையம் நடத்தி வரும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில், தமிழ்நாட்டில் இதுவரை 6,11,61,947 படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது 95.39% சதவீதம் ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இதில் இன்று (20.11.2025) மாலை 3 மணி வரை 6,11,61,947 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 68,467 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் 2,38,853 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அதிக …
Read More »மின்னணு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 26 முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் சுய தணிக்கை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்
நுகர்வோர் நலனைப் பாதுகாக்கும் வகையில் மின்னணு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 26 முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து இணக்க நடைமுறைகளும், முறையாக பின்பற்றப் படுவதை உறுதி செய்வதற்கான சுய தணிக்கை உறுதி மொழிக் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இது போன்ற நடவடிக்கைகள், ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் நுகர்வோருக்கு தவறான தகவல்களை அளிப்பதிலிருந்தும், …
Read More »பாதுகாப்பு ஆராய்ச்சிக்கான தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் இந்தியா – பிரான்ஸ் நாடுகள் கையெழுத்து
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பிரான்சின் ஆயுதப் பிரிவு தலைமை இயக்குநரகம் இடையே தொழில்நுட்ப அடிப்படையிலான ஆராய்ச்சிக் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது . புதுதில்லியில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் இன்று (20.11.2025) நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சமீர் வி காமத் மற்றும் பிரான்சின் தேசிய ஆயுதப் பிரிவு இயக்குநர் …
Read More »குடியரசுத் தலைவர் நவம்பர் 20 முதல் 22 வரை சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பயணம்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2025 நவம்பர் 20 முதல் 22 வரை சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். நவம்பர் 20-ம் தேதி, சத்தீஸ்கர் அரசு அம்பிகாபூரில் ஏற்பாடு செய்துள்ள பழங்குடியினர் கௌரவ தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார். நவம்பர் 21 ஆம் தேதி, செக்கந்தராபாத்தின் போலாரம் பகுதியில் உள்ள குடியரசுத் தலைவர் நிலையத்தில் நடைபெறும் பாரதிய …
Read More »குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு டெல்லி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் 5-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (19.11.2025) புது தில்லியில் நடைபெற்ற டெல்லி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் ஐந்தாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் உரையாற்றிய அவர், குறுகிய காலத்திலேயே தேசிய அளவில் சிறப்பாகத் திகழும் நிறுவனம் என டெல்லி தேசிய தொழில்நுட்பக் கழகத்தை பாராட்டினார். நவீன உள்கட்டமைப்பு, கல்வித் திறன் மேம்பாடு, பல்துறைகளில் கல்வி, ஆராய்ச்சி, புதுமைத்திறன் வளர்ப்பு, தொழில் நிறுவனங்களுடன் இணைப்பு போன்ற அம்சங்கள் மூலம் …
Read More »கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைத்து உரையாற்றினார்
கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.11.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கோயம்புத்தூரை கலாச்சாரம், கனிவு மற்றும் படைப்பாற்றலின் நகரம் என்று குறிப்பிட்டு, தென்னிந்தியாவின் தொழில்முனைவோரின் ஆற்றல் சக்தியாக விளங்குகிறது என்று கூறினார். இந்த நகரத்தின் ஜவுளித்துறை, தேசிய பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். கோயம்புத்தூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் …
Read More »
Matribhumi Samachar Tamil