Saturday, December 06 2025 | 08:29:30 PM
Breaking News

Matribhumi Samachar

இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல பயிற்சி மையங்கள் சார்பாக பசுமை பராமரிப்பை அதிகரிக்கும் வகையில் இன்று 10.07.2025, புதுச்சேரியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. புதுச்சேரி, லாஸ்பேட், இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தின் துணை இயக்குநர் திருமதி சுவேதா விஸ்வநாதன், பளுதூக்கு பயிற்சியாளர் திரு ராஜேஷ், கையுந்து பந்து பயிற்சியாளர் திரு பழனி, கோகோ பயிற்சியாளர் திரு மனோகரா, அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.   भारत : …

Read More »

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு

பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் 4-வது கட்டமாக பிரேசில் தலைநகர் பிரசிலியா சென்றடைந்தார். அங்குள்ள அல்வோராடா அரண்மனையில் அந்நாட்டு அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை சந்தித்துப் பேசினார். முன்னதாக பிரதமர் திரு நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் திரு லூலா பாரம்பரிய முறைப்படி அன்புடன் வரவேற்றார். இரு நாட்டுத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள்  நிலையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் இரு …

Read More »

இந்தியா – பிரேசில் – உயரிய நோக்கங்களைக் கொண்ட இரண்டு பெரிய நாடுகளின் கூட்டறிக்கை

பிரேசில் குடியரசின் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஜூலை 8 அன்று, பிரேசில் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். இதையடுத்து வரவிருக்கும் தசாப்தங்களில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்ட உத்திசார்ந்த திட்டத்தை வகுக்க இருதலைவர்களும் முடிவு செய்துள்ளனர். 1. பாதுகாப்பு: கூட்டு ராணுவப் பயிற்சி, உயர்நிலை பாதுகாப்பு தூதுக் குழுக்களின் பரிமாற்றம் …

Read More »

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்

மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா அவர்களே, இருநாடுகளின் பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே, வணக்கம். “போவா டார்டே”. ரியோவிலும் பிரேசிலியாவிலும் அன்பான வரவேற்பு அளித்ததற்காக எனது நண்பர் அதிபர் லூலாவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமேசான் அழகிலும் உங்களின் அன்பிலும் உண்மையிலேயே நாங்கள் மனம் நெகிழ்ந்துள்ளோம். பிரேசில் அதிபரால் பிரேசிலின் மிக உயரிய தேசிய விருது வழங்கி இன்று கௌரவிக்கப்பட்டிருக்கும் தருணமானது எனக்கு மட்டும் பெருமிதமும், …

Read More »

தேசிய மீன் விவசாயிகள் தினம் 2025 முன்னோட்டம்

இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் மீன் உணவு சார்ந்த புரதத்திற்கு அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதிலும், கிராமப்புற வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் மீன் விவசாயிகளின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு மரியாதை அளிக்கும் வகையில் தேசிய மீன் விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது. அவர்களின் முயற்சிகள் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்வாதாரங்களை நிலைநிறுத்துவது மட்டுமல்லாமல், நிலையான மீன்வளர்ப்பு மற்றும் செழிப்பான நீலப் பொருளாதாரம் என்ற நாட்டின் தொலைநோக்குப் பார்வைக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன. 1957-ம் ஆண்டு …

Read More »

பருத்தி உற்பத்தி குறித்த சிறப்பு கூட்டம் கோவையில் ஜூலை 11 இல் நடைபெறும்: மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் காணொளி செய்தியில் அறிவிப்பு

பருத்தி உற்பத்தி, முக்கிய பயிர் வகைகள் குறித்த விவாதங்களின் ஒரு பகுதியாக, ஜூலை 11-ம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற உள்ள சிறப்பு கூட்டம் பற்றிய அறிவிப்பை  காணொலி செய்தி மூலம் மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் இன்று வெளியிட்டார். இது தொடர்பாக விவசாயிகள் தங்களது ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் வெளியிட்டுள்ள காணொலி செய்தியில் கூறியிருப்பதாவது: “பருத்தி …

Read More »

ஒலிபரப்பு உள்கட்டமைப்பு மற்றும் வலையமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் உஜ்ஜயினியில் ஆகாஷ்வாணி மையத்தை மத்திய அரசு நிறுவ உள்ளது

மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, மத்தியப் பிரதேசத்தில் நடந்து வரும் மற்றும் எதிர்கால வளர்ச்சி முயற்சிகள் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டது. ஊடக தொடர்பு, பொதுத் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் மத்திய அரசுக்கும் மாநிலத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான …

Read More »

“கலாசேது” என்ற நாடு தழுவிய முன்முயற்சியை வேவெக்ஸ் புத்தொழில் தொடங்கியுள்ளது; நிகழ்நேர பன்மொழி, பல் ஊடக உள்ளடக்க உருவாக்க தீர்வுடன் போட்டியில் பங்கேற்க இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு முன்னணி புத்தொழில் நிறுவனங்களுக்கு அது அழைப்பு விடுத்துள்ளது

அனைவரையும் உள்ளடக்கிய, தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்ற தகவல் தொடர்பில் இந்தியாவின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு  அடிப்படையிலான தீர்வுகளுக்கு வலுவான உத்வேகம் ஏற்பட்டுள்ளது. இது மொழி அடிப்படையிலான பிளவுகளை இணைத்து நாடு முழுவதும் தொலைதூரப்பகுதிக்கும் தகவல் கொண்டுசெல்லப்படுவதை உறுதிசெய்கிறது. கலாசேது: இந்தியாவுக்கான நிகழ்நேர மொழி சார்ந்த தொழில்நுட்பம் அனைவரையும் உள்ளடக்கிய தகவல் தொடர்புக்கு செயற்கை நுண்ணறிவு ஆற்றலை பயன்படுத்துவது என்ற உறுதிப்பாட்டுக்கு ஏற்ப மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூலமான வேவெக்ஸ் …

Read More »

ஃபரிதாபாத்-நொய்டா சர்வதேச விமான நிலைய வழித்தடத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மரக்கன்றுகளை நடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது

சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவிக்கவும் ‘அன்னையின் பெயரில் ஒரு மரக்கன்று 2.0’ பிரச்சாரத்தை நினைவுகூரும் விதமாகவும் ஃபரிதாபாத்-நொய்டா சர்வதேச விமான நிலைய வழித்தடத்தில் சுமார் 17,000 மரக்கன்றுகளை நடுவதற்கான ஒரு இயக்கத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உத்தரபிரதேசத்தின் கவுதம் புத் நகர் மாவட்டத்தில் உள்ள ஃபரிதாபாத்-நொய்டா சர்வதேச விமான நிலைய சாலையில் உள்ள யமுனா விரைவுச்சாலை சந்திப்புப் பகுதியில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்  அமைச்சர் திரு …

Read More »

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேளாண் தொழில்நுட்ப புத்தாக்க மையத்தை மத்திய அமைச்சர்கள் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் திரு ஜெயந்த் சவுத்ரி திறந்து வைத்தனர்

இந்திய வேளாண் சூழலில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு) கல்வித்துறை இணையமைச்சருமான திரு ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் இன்று மீரட்டில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘வேளாண் தொழில்நுட்ப புத்தாக்க மையத்தைத்’ திறந்து வைத்தனர். உத்தரப்பிரதேச அரசின் வேளாண் அமைச்சர் திரு சூர்யா …

Read More »