சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) நிறுவிய நவீன தானியங்கி உபகரண ஆராய்ச்சிக்கான சீர்மிகு மையமும் அக்செஞ்சர் நிறுவனமும் சிறப்புத் திறன்மிகு திட்டங்களை வழங்க இணைந்து செயல்படுகின்றன. அக்செஞ்சரின் மென்பொருள் சார்ந்த வாகன அகாடமியான லேர்ன்வான்டேஜ் மூலம் இந்த திறன்மிகு திட்டங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த முயற்சி, மென்பொருள்-சார்ந்த வாகனங்களை உருவாக்குவதற்கான திறமையை வளர்க்க விரும்பும் ஆட்டோமோடிவ் ஒரிஜினல் உபகரண உற்பத்தியாளர்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளது. திறமையான நிபுணர்களுக்கான வளர்ந்துவரும் தேவையை பூர்த்தி செய்வதையும், மேம்பட்ட ஓட்டுநர் உதவி …
Read More »மத்திய அமைச்சர்கள் டாக்டர் மன்சுக் மண்டவியா, திரு அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில், டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனுடன் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகமானது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனுடன் புதுதில்லியில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகள் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மற்றும் மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. …
Read More »மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2025 ஜூன் 30 முதல் ஜூலை 5 வரை ஸ்பெயின், போர்ச்சுகல், பிரேசில் நாடுகளுக்கு பயணம்
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2025 ஜூன் 30 முதல் ஜூலை 5 வரை ஸ்பெயின், போர்ச்சுகல், பிரேசில் நாடுகளுக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொள்கிறார். அவரது தலைமையில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையைச் சேர்ந்த இந்தியக் குழுவும் பயணம் மேற்கொள்கிறது. தனது பயணத்தின் ஒரு பகுதியாக, ஸ்பெயினில் உள்ள செவில்லி நகரில், ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4-வது சர்வதேச மேம்பாட்டு நிதி மாநாட்டில் கலந்து கொள்ளும் மத்திய நிதியமைச்சர், இந்தியா சார்பில் அறிக்கையை சமர்ப்பிக்கிறார் …
Read More »பீகார் சிறப்பு திருத்தம்: 2003 வாக்காளர் பட்டியல்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம்
இந்திய தேர்தல் ஆணையம் 4.96 கோடி வாக்காளர்களின் விவரங்களைக் கொண்ட 2003 பீகார் வாக்காளர் பட்டியலை, தேர்தல் ஆணைய இணையதளமான https://voters.eci.gov.in இல் பதிவேற்றம் செய்துள்ளது. 2025 ஜூன் 24 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, 01.01.2003 தேதியை தகுதித் தேதியாக கொண்ட வாக்காளர் பட்டியலை, அனைத்து வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகளுக்கு அச்சிடப்பட்ட நகலிலும், அவர்களின் இணையதளத்தில் ஆன்லைனிலும் இலவசமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பதிவு அதிகாரி ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தங்கள் கணக்கெடுப்புப் படிவத்தைச் சமர்ப்பிப்போர் அதை ஆவணச் …
Read More »பாலிதானாவில் நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சி- மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார் – நாடு முழுவதும் 6,000 இடங்களில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன
மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுகள் அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா, குஜராத்தின் பாலிதானாவில் இன்று (29.06.2025) காலை நடைபெற்ற உடல் திறன் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்வுக்குத் தலைமை வகித்தார். பல்வேறு குழுக்கள், குறிப்பாக ‘ஸ்வச்தா சேனானிஸ்’ எனப்படும் தூய்மைக் காவலர்கள் பங்கேற்ற இந்த மிதிவண்டி ஓட்டும் நிகழ்வை அவர் வழிநடத்தினார். நாடு முழுவதும் 6,000 இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்த மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்வில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி நிறுவனங்களின் பணியாளர்கள் பங்கேற்றனர். இது டிசம்பர் 2024-ல் நாடு தழுவிய அளவில் தொடங்கப்பட்டு தற்போது 29-வது வாரமாக இன்று நடைபெற்றது. ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ எனப்படும் உடல்திறன் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்வை பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் உரை நிகழ்ச்சியில் பாராட்டியுள்ளார். இது இந்தியாவின் முதன்மையான சுகாதார மற்றும் நல்வாழ்வு இயக்கங்களில் ஒன்றாகும். பாலிதானாவில் நடைபெற்ற நிகழ்வில், பாவ்நகர் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு சைக்கிள் ஓட்டுதல் சங்கங்கள் இணைந்தன. தமது சொந்த ஊரான பாலிதானாவில் இந்த இயக்கம் இப்போது பெரிய இயக்கமாக மாறியுள்ளது என்று திரு மன்சுக் மாண்டவியா கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட உடல் திறன் இயக்கத்தின் ஒரு பகுதியாக தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்வு சிறந்த முறையில் நடத்தப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார். ஸ்வச்தா சேனானிகள் எனப்படும் தூய்மைப் பணியாளர்கள் இன்றைய நிகழ்வில் பெரிய அளவில் பங்கேற்றுள்ளதாகவும், உடல் திறனும் தூய்மையும் கைகோர்த்துச் செல்வதாகவும் அவர் கூறினார். தற்போதைய நவீன தலைமுறையினரிடையே சைக்கிள் ஓட்டுதலை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும் என திரு மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டார். தேசிய தலைநகர் தில்லியில், ராஹ்கிரி அறக்கட்டளையும் புது தில்லி மாநகர கவுன்சிலும் (என்டிஎம்சி) இணைந்து நடத்திய இந்த நிகழ்வில், கிட்டத்தட்ட 1,000 மிதிவண்டி ஓட்டுநர்கள் பங்கேற்றனர். பத்மஸ்ரீ விருது பெற்றவரும், காமன்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றவருமான பபிதா போகத் இதில் பங்கேற்று இந்த முயற்சியைப் பாராட்டினார். டிசம்பர் 2024-ல் தொடங்கப்பட்ட உடல்திறன் இந்தியா ஞாயிற்றுக் கிழமைகளில் சைக்கிள் ஓட்டுதல் இயக்கம் நாடு முழுவதும் 11,000 க்கும் மேற்பட்ட இடங்களில் இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தனிநபர்களின் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது. இந்த மிதிவண்டி ஓட்டுதல் பயணங்கள் நாடு முழுவதும் உள்ள பல கேலோ இந்தியா மையங்கள், கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள், இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையங்கள், கேலோ இந்தியா அங்கீகாரம் பெற்ற அகாடமிகள், பிராந்திய மையங்கள், பல்வேறு தேசிய சிறப்பு மையங்கள் போன்றவற்றால் நடத்தப்படுகின்றன.
Read More »19-வது புள்ளியியல் தினத்தை முன்னிட்டு (ஜூன் 29, 2025) நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த பிரசுரங்கள் வெளியீடு
19-வது புள்ளியியல் தினத்தை முன்னிட்டு, இன்று (ஜூன் 29, 2025) புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) குறித்த தகவல்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது. தேசிய முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில், நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) செயல்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், தொடர்புடைய அமைச்சகங்கள்/துறைகள், ஐநா நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினருடன் கலந்தாலோசித்து, நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான தேசிய குறியீட்டுக் கட்டமைப்பை (NIF) உருவாக்கியுள்ளது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் புள்ளியியல் தினத்தன்று (அதாவது, ஜூன் 29 அன்று), புள்ளியியல் அமைச்சகம் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த முன்னேற்ற அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இதில் இந்த 2025-ம் ஆண்டு புள்ளியியல் தினத்தை முன்னிட்டு, இன்று (ஜூன் 29, 2025) புள்ளியியல் அமைச்சகம் அது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. நிலையான வளர்ச்சி இலக்குகள் தேசிய குறியீட்டுக் கட்டமைப்பு முன்னேற்ற அறிக்கை -2025 என்ற இது 17 நிலையான வளர்ச்சி இலக்குகளில் தேசிய அளவிலான முன்னேற்றத்தைக் கண்காணிப்பதில் ஒரு முக்கிய கருவியாக இருக்கும். நிலையான வளர்ச்சி இலக்குகள் பற்றிய இந்த அறிக்கைகள் பொதுமக்கள் எளிதாக அணுகக்கூடியவை. www.mospi.gov.in என்ற புள்ளியியல் அமைச்சகத்தின் இணையதளத்தில் இவை இடம்பெற்றுள்ளன.
Read More »சுகாதார – தொழில்நுட்பப் புரட்சியின் திருப்புமுனையாக இந்தியா உள்ளது: இ.டி. மருத்துவர்கள் தின மாநாட்டில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
எக்கனாமிக் டைம்ஸ் (இ.டி.) டைம்ஸ் நவ் ஏற்பாடு செய்திருந்த மருத்துவர் தின மாநாட்டில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் முக்கிய உரையாற்றினார். திரு ஜிதேந்திர சிங் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவரும் மருத்துவ பேராசிரியரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா சுகாதார-தொழில்நுட்ப புரட்சியின் திருப்புமுனையாக உள்ளது என நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறினார். பொருளாதாரத்தில் உலக அளவில் 10-வது இடத்திலிருந்து 4-வது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ளது எனவும் இந்த ஏற்றம் தொடர்கிறது என்றும் அவர் கூறினார். இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலையப் பயணம், உள்நாட்டு உயிரி அறிவியல் கருவிகளை சுமந்து சென்றிருப்பதாக அவர் தெரிவித்தார். விரைவில் ஒரு புதிய மருத்துவத் துறையான விண்வெளி மருத்துவத்திற்கு வழிவகுக்கும் ஒரு மைல்கல் இது என்று அமைச்சர் குறிப்பிட்டார். விரைவில், மருத்துவக் கல்வியில் விண்வெளி மருத்துவர்கள் என்ற ஒரு பிரத்யேகப் பிரிவு உருவாகலாம் எனவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இந்தியாவில் 70% க்கும் அதிகமானோர் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றாலும், வயதான மக்களின் எண்ணிக்கையும் வேகமாக வளர்ந்து வருகின்றது என அவர் தெரிவித்தார். 1947-ம் ஆண்டில், சராசரி ஆயுட்காலம் 50-55 வயதாக இருந்தது எனவும் இப்போது அது 80-ஐ நெருங்குகிறது எனவும் அவர் கூறினார். இந்தியாவின் சமீபத்திய உலகளாவிய சாதனைகளை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், நோய்த் தடுப்பு மற்றும் துல்லியமான சுகாதாரப் பராமரிப்பில் இந்தியா உலக அளவில் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். கோவிட்-19-க்கான உலகின் முதல் மரபணு தடுப்பூசியையும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும் ஹெச்பிவி தடுப்பூசியையும் இந்தியா உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டார். மேலும், ஹீமோபிலியாவிற்கான முதல் மரபணு சிகிச்சை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது எனவும் இதன் முடிவுகள் மதிப்புமிக்க நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். தனியார் துறையுடனான முதல் கட்ட ஒத்துழைப்பே இந்த வெற்றிகளுக்குக் காரணம் என்றும் அவர் கூறினார். பொது மற்றும் தனியார் துறைகளின் தடையற்ற ஒருங்கிணைப்பு காரணமாக இந்த சாதனைகள் சாத்தியமானது என்று அவர் குறிப்பிட்டார். கல்வித்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறையினர் ஆகியோருக்கும் அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். அறிவியல் மற்றும் மருத்துவத்தின் ஆன்மா இரண்டையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
Read More »வேளாண் காடுகள் துறையில் வணிகம் செய்வதை எளிதாக்க மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மாதிரி விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள், வேளாண் காடுகள் தொடர்பான ஒழுங்குமுறை கட்டமைப்புகளை எளிமைப்படுத்துவதற்கும் வேளாண் காடுகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரவளிக்கும் நோக்கத்துடன், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ‘விவசாய நிலங்களில் மரங்களை வெட்டுவதற்கான மாதிரி விதிகளை’ வெளியிட்டுள்ளது. கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மண் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல், மரங்களின் பரப்பை அதிகரித்தல், நீர் பாதுகாப்பு, பருவநிலை மீள்தன்மைக்கு பங்களித்தல், இயற்கைக் காடுகள் மீதான அழுத்தத்தைக் குறைத்தல் உள்ளிட்ட பல நன்மைகளை வேளாண் காடுகள் வழங்குகின்றன. வேளாண் காடுகள் தொடர்பான நிலங்களைப் பதிவு செய்வதற்கும், மரங்களை வெட்டுதல், போக்குவரத்தை நிர்வகித்தல் ஆகியவற்றுக்கு எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளை வழங்குவதன் மூலம் நெறிப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பை நிறுவுவதே மாதிரி விதிகளின் நோக்கமாகும். இந்த முயற்சி விவசாயிகள் மற்றும் பிற தரப்பினர் வேளாண் காடுகள் தொடர்பான நடைமுறைகளை பின்பற்றுவதை ஊக்குவிக்கும் என்றும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மரம் சார்ந்த விவசாய முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் மாதிரி விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வேளாண் காடுகளின் மூலம் உள்நாட்டு மர உற்பத்தியை ஊக்குவிக்கும் அணுகுமுறை தேவை-விநியோக இடைவெளியை குறைக்கும். உள்ளூர் மூலப்பொருட்களைக் கொண்டு மர அடிப்படையிலான தொழில்களை மேம்படுத்துவதற்கும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் இது உதவும். மரம் சார்ந்த தொழில்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள்- 2016-ன் கீழ் நிறுவப்பட்ட மாநில அளவிலான குழு இந்த மாதிரி விதிகளை செயல்படுத்துவதற்குப் பொறுப்பான அமைப்பாகும். மரம் வெட்டுதல் மற்றும் மர போக்குவரத்து தொடர்பான விதிமுறைகளை தளர்த்துவதன் மூலம், வணிக ரீதியாக மதிப்புமிக்க மர வகைகளின் உற்பத்தியை விவசாய நிலங்களில் மேம்படுத்துவதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டுவதே இதன் பங்காகும். மாதிரி விதிகளின்படி, விண்ணப்பதாரர்கள் தங்கள் தோட்டங்களை தேசிய மர மேலாண்மை அமைப்பான என்டிஎம்எஸ்-ன் (NTMS) போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். இந்த போர்ட்டல் உருவாக்கப்பட்டு வருகிறது. நில உரிமைத் தகவல், பண்ணையின் இருப்பிடம், இனங்கள், தோட்ட காலம் போன்ற அடிப்படை தோட்டத் தரவைச் சமர்ப்பிப்பது இதில் அடங்கும். விண்ணப்பதாரர்கள் தோட்டத் தகவலை அவ்வப்போது புதுப்பித்து அதன் தன்மையை உறுதிசெய்ய தோட்டத்தின் புவிசார் அம்சங்கள் கொண்ட புகைப்படங்களைப் பதிவேற்றலாம். பதிவுசெய்யப்பட்ட தோட்டங்களிலிருந்து மரங்களை வெட்ட விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேசிய மர மேலாண்மை அமைப்பு மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சரிபார்ப்பு நிறுவனங்கள் கள ஆய்வுகளை மேற்கொள்ளும். அவர்களின் சரிபார்ப்பு அறிக்கைகளின் அடிப்படையில், விவசாய நிலங்களில் மரம் வெட்ட அனுமதிகள் வழங்கப்படும். பிரதேச வன அதிகாரிகள் இந்த நிறுவனங்களின் செயல்திறனை அவ்வப்போது மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு மூலம் ஆய்வு செய்வார்கள். வேளாண் காடுகள் துறையில் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும், தேவையற்ற நடைமுறை தடைகளில் இருந்து விவசாயிகளைக் காக்கவும் இந்த மாதிரி விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாதிரி விதிகளை ஆராய்ந்து அவற்றை ஏற்றுக்கொள்வதைப் பரிசீலிக்குமாறு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
Read More »மனதின் குரல் நிகழ்ச்சியின் 123-வது அத்தியாயத்தில், 29.06.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
நாட்டுமக்களே! வணக்கம். மனதின் குரலில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன், நல்வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் யோகக்கலையின் ஆற்றல், சர்வதேச யோகக்கலை தினத்தின் நினைவலைகளால் நிரம்பியிருப்பீர்கள்!! இந்த முறையும் ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று நாடெங்கிலும், உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் சர்வதேச யோகக்கலை தினத்தின் அங்கமாக ஆனார்கள். பத்தாண்டுகள் முன்பாக இந்த தினம் தொடங்கப்பட்டதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இப்போது பத்தாண்டுகளாகத் தொடரும் இந்த நிகழ்ச்சி, ஒவ்வோர் ஆண்டும் முந்தையதை விட மேலும் …
Read More »அவசரநிலைக் காலத்தின் போது அரசியல் சாசன முகவுரையில் சில வார்த்தைகள் சேர்க்கப்பட்டன – முகவுரை அரசியலமைப்பின் ஆன்மா, அதில் மாற்றம் செய்யாமல் மதிக்க வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்
கர்நாடகாவைச் சேர்ந்த எழுத்தாளரும் அம்மாநில சட்டமன்றத்தின் முன்னாள் மேலவை உறுப்பினருமான திரு டி.எஸ். வீரய்யா தொகுத்த ‘அம்பேத்கரின் செய்திகள்’ என்ற நூலை புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர் இன்று (28.06.2025) வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், எந்தவொரு அரசியலமைப்பின் முகவுரையும் அதன் ஆன்மா எனவும் இந்திய அரசியலமைப்பின் முகவுரை தனித்துவமானது என்றும் கூறினார். பாரதத்தைத் தவிர வேறு எந்த நாட்டின் அரசியலமைப்பின் முகவுரையும் …
Read More »
Matribhumi Samachar Tamil