ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை, ஓய்வூதியக் கொள்கையில் பல முற்போக்கான நடவடிக்கைகளையும், ஓய்வூதியம் தொடர்பான செயல்முறைகளின் டிஜிட்டல்மயமாக்கலையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பணியாளர், பொதுக் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறையால் ஏற்பாடு செய்யப்படும் 58-வது ஓய்வுக்கு …
Read More »இந்தியாவின் அடுத்த தொழில்நுட்ப பாய்ச்சலுக்கு ஊக்கம் அளிக்கும் அரிய புவி நிரந்தர காந்தங்கள் உற்பத்தி
7,280 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஆர்இபிஎம் எனப்படும் அரிய புவி நிரந்தர காந்தங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் இந்தியாவில் ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் ஒருங்கிணைந்த ஆர்இபிஎம் உற்பத்தி திறனை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டதாகும். உள்நாட்டில் இதன் ஒருங்கிணைந்த உற்பத்திச் சூழல் அமைப்பை உருவாக்குவதன் மூலம், மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகள், மின்னணுவியல் சாதனங்கள், விண்வெளிப் பயன்பாடுகள், பாதுகாப்புத் துறை சாதனங்கள் ஆகியவற்றிற்குத் தேவையான இந்த வகை காந்தங்களின் உற்பத்தியில் தற்சார்பு அதிகரிக்கும். அரசின் இந்த நடவடிக்கை உலகளாவிய ஆர்இபிஎம் சந்தையில் இந்தியாவை ஒரு முக்கிய நாடாக நிலைநிறுத்தும். அரிய புவி நிரந்தர காந்தம் (ஆர்இபிஎம்) என்பது வலிமையான காந்த வகைகளில் ஒன்றாகும். அவை சிறிய சாதனங்களில், ஆனால் உயர் செயல்திறன் கொண்ட காந்த சக்திகள் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன . அவற்றின் உயர் காந்த வலிமையும் நிலைத்தன்மையும் பெரிய பயன்களை கொடுக்கின்றன. இந்தியாவில் கணிசமான அளவு அரிய புவி தாதுக்கள் உள்ளன. குறிப்பாக பல கடலோர பகுதிகளிலும் உள்நாட்டுப் பகுதிகளிலும் உள்ள மோனசைட் படிவுகளில் சுமார் 13.15 மில்லியன் டன் மோனசைட் உள்ளது. இதில் 7.23 மில்லியன் டன் அரிய புவி ஆக்சைடுகள் உள்ளன. ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள கடற்கரை மணல், டெரி/சிவப்பு மணல் …
Read More »இந்தியா பாரம்பரியத்தை நவீனத்துவத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
இந்தியா பாரம்பரியத்தை நவீனத்துவத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். திருப்பதியில் நடைபெறும் இந்திய அறிவியல் மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய அவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா தற்போது உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்றார். கடந்த 10 ஆண்டுகளில் விண்வெளி, பாதுகாப்பு, புதுமை கண்டுபிடிப்பு ஆகியவற்றில் உலகளாவிய சாதனைகளை இந்தியா நிகழ்த்தியுள்ளது என்று அவர் கூறினார். …
Read More »பிரதமரின் உரையை தமிழில் மொழிபெயர்க்க பாஷினி செயற்கை நுண்ணறிவுத் தளத்தைப் பயன்படுத்தும் புதுச்சேரி
புதுச்சேரி யூனியன் பிரதேசம் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டின் மூலம் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. பன்மொழி அணுகுலை ஊக்குவிக்கும் வகையில், பிரதமரின் உரையை தமிழில் மொழிப்பெயர்க்க பாஷினி செயற்கை நுண்ணறிவுத் தளத்தைப் புதுச்சேரி பயன்படுத்தியுள்ளது. 2025 டிசம்பர் 26 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, வீரச் சிறார் தின நிகழ்சியில் ஆற்றிய உரை, புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி அரங்கில் நேரலையாக ஒலிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் என் …
Read More »தேசிய வீரச் சிறார் விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பிரதமரின் தேசிய வீரச் சிறார் விருதுகளை புதுதில்லியில் இன்று (26.12.2025) வழங்கினார். சமூக சேவை, கலை, கலாச்சாரம், வீர தீர சாகசங்கள் உள்ளிட்டவற்றில் சாதனை புரிந்த சிறார்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. விளையாட்டுப் போட்டியில் சாதனை புரிந்த 7 வயது சிறுமி வாகாலட்சுமி, பிரக்னிக்கா ஆபத்தான சூழலில் பிறரது உயிரைக் காப்பாற்றிய அஜய் ராஜ் மற்றும் முகமது சிதன், ஆபரேஷன் சிந்தூர் கால கட்டத்தில் …
Read More »புதுதில்லியில் நடைபெற்ற வீரச் சிறார் தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
புதுதில்லியில் இன்று (26.12.2025) நடைபெற்ற வீரச் சிறார் தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நாள் குரு கோவிந்த் சிங்கின் புதல்வர்களான சாஹிப்சாதாக்களின் வீரத்தை நினைவுகூரும் நாள் என குறிப்பிட்டார். அச்சிறார்களின் வாழ்க்கை இளைய தலைமுறையினருக்கு ஊக்கம் அளிக்கும் என்றார். கடந்த 4 ஆண்டுகளாக இந்தத் தினம் கடைபிடிக்கப்படுவதை எடுத்துரைத்த அவர், இந்த நாளில் வீரச் சிறார் விருதுகள் வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். இந்த ஆண்டு நாடு …
Read More »2025-ம் ஆண்டு இறுதி ஆய்வறிக்கை: பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் ஆய்வு மற்றும் உற்பத்தி, பெட்ரோலியப் பொருட்களின் சுத்திகரிப்பு, விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல், அவற்றின் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்குப் பொறுப்பாகும். இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்ந்து முக்கிய உள்ளீடுகளாக உள்ளன. 2025-ம் ஆண்டில், மலிவு விலையில் எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்தல், உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், தூய்மையான எரிபொருட்களை ஊக்குவித்தல் மற்றும் தேசிய எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை உறுதி …
Read More »இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை சந்தாலி மொழியில் குடியரசுத்தலைவர் வெளியிட்டார்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சந்தாலி மொழியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (டிசம்பர் 25, 2025) வெளியிட்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய அரசியலமைப்புச் சட்டம் தற்போது ஓல் சிக்கி எழுத்துருவில் எழுதப்பட்டு சந்தாலி மொழியில் கிடைப்பது, அம்மொழியைப் பேசும் அனைத்து மக்களுக்கும் பெருமையையும், மகிழ்ச்சியையும் அளித்திடும் என்று கூறினார். இது அவர்கள் தங்களது …
Read More »பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மாளவியாவின் கல்வி குறித்த தொலைநோக்குப் பார்வைக்கு சான்றாகத் திகழ்கிறது: குடியரசு துணைத்தலைவர்
மாமனிதர் பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் தொகுக்கப்பட்ட படைப்புகளின் இறுதித் தொடரான “மகாமானா வங்மய்” நூலை குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் புதுதில்லியில் இன்று வெளியிட்டார். பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மாமனிதர் மாளவியா ஒரு தலைசிறந்த தேசபக்தர், பத்திரிகையாளர், சமூக சீர்திருத்தவாதி, வழக்கறிஞர், அரசியல்வாதி, கல்வியாளர் மற்றும் பண்டைய இந்தியப் பண்பாட்டின் புகழ்பெற்ற அறிஞர் என்று வர்ணித்தார். இந்தியாவின் எதிர்காலம் அதன் கடந்த …
Read More »டிசம்பர் 26 அன்று நடைபெறும் ‘வீர பாலகர் தினம் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் 2025 டிசம்பர் 26 அன்று, நண்பகல் 12:15 மணியளவில் நடைபெறும் ‘வீர பாலகர் தினம்’ தேசிய நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். வீர பாலகர் தினத்தைக் குறிக்கும் வகையில், சாஹிப்சாதாக்களின் அசாதாரண துணிச்சல் மற்றும் உன்னத தியாகம் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் நோக்குடனும், இந்திய வரலாற்றின் இளம் வீரர்களின் உறுதியான துணிச்சல், தியாகம் மற்றும் வீரத்தைப் போற்றி நினைவுகூரும் …
Read More »
Matribhumi Samachar Tamil