குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (23.11.2025) ஆந்திரப் பிரதேசத்தின் பாலசமுத்திரத்தில் உள்ள தேசிய சுங்கம், மறைமுக வரிகள், போதைப்பொருள் தடுப்பு அகாடமியான என்ஏசிஐஎன்-னில் (NACIN) பல்வேறு குடிமைப் பணிகளைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றினார். 2024-ம் ஆண்டு பாலசமுத்திரத்தில் புதிதாக கட்டப்பட்ட என்ஏசிஐஎன் வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்ததை நினைவு கூர்ந்த குடியரசுத் துணைத்தலைவர், இந்தியாவின் சுங்க வரி, சரக்கு – சேவை வரி (ஜிஎஸ்டி) நிர்வாகத்தில் திறன் மேம்பாட்டிற்கு முக்கிய மையமாக இந்த நிறுவனம் உருவெடுத்துள்ளது என்று குறிப்பிட்டார். அகில இந்திய குடிமைப் பணி சேவைகளின் தந்தை சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த ஆண்டை நாடு, இந்த ஆண்டு …
Read More »தெலுங்கு கங்கைக் கால்வாயைப் புத்துயிர் பெறச் செய்து, சென்னைக்கு குடிநீர் கிடைக்கச் செய்ததில் ஸ்ரீ சத்ய சாய்பாபா முக்கியப் பங்காற்றினார் : குடியரசுத் துணைத்தலைவர்
ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் ஹில் வியூ ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (23.11.2025) கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சத்ய சாய் பாபாவை கடவுளின் சிறந்த தூதர் என்றும் அமைதி, அன்பு, தன்னலமற்ற சேவை ஆகியவற்றின் அடையாளம் என்றும் கூறினார். அவரது போதனைகள் சாதி, மதம், வர்க்கம் என அனைத்து தடைகளையும் தாண்டியது என்று குடியரசுத் துணைத்தலைவர் தெரிவித்தார். அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய் என்பதே பாபாவின் கொள்கை என்று அவர் கூறினார். திருவள்ளுவரின் ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டிய, குடியரசுத் துணைத்தலைவர், ஸ்ரீ சத்ய சாய்பாபா, தமது முழு வாழ்க்கையையும் மனிதகுலத்தை நேசிப்பதற்கும் சேவை செய்வதற்கும் அர்ப்பணித்து காலத்தால் அழியாத நிலையை அடைந்துள்ளதாக குறிப்பிட்டார். உண்மை, நீதி, அமைதி, அன்பு, அகிம்சை ஆகியவற்றில் வேரூன்றிய பாபாவின் போதனைகளை எடுத்துரைத்த குடியரசுத் துணைத்தலைவர், சிறந்த, முற்போக்கான சமுதாயத்தை உருவாக்குவதற்கு இந்த மதிப்புகள் அவசியமானவை என்று கூறினார். முரண்பாட்டை நல்லிணக்கத்தாலும், சுயநலத்தை தியாகத்தாலும் மாற்ற வேண்டும் என்ற பாபாவின் அறிவுரையை அவர் சுட்டிக் காட்டினார். ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளையின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்த அவர், சுகாதாரம், கல்வி, சமூக நலன் ஆகியவற்றில் அதன் விரிவான முயற்சிகளைப் பாராட்டினார். தொலைதூர சமூகங்களுக்கு முக்கியமான உயிர்நாடியாக இந்த அறக்கட்டளையின் நடமாடும் கிராமப்புற சுகாதார சேவைகள் உள்ளன என்று அவர் பாராட்டினார். உலகத்தரம் வாய்ந்த, கல்வியை கட்டணமில்லாமல் வழங்குவதற்காக அறக்கட்டளையின் கல்வி நிறுவனங்களையும் அவர் பாராட்டினார். சென்னைக்கு குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் தெலுங்கு கங்கை கால்வாயை புத்துயிர் பெறச் செய்த ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் முக்கிய பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார். இது தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்கக் கூடிய சிறந்த சேவை என்று அவர் குறிப்பிட்டார். பாபாவின் அனைத்து பக்தர்களும் மக்களும் அவரது மரபை, தங்கள் செயல்பாடுகள் மூலம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதா கிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். இந்த விழாவின் ஒரு பகுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளையும் குடியரசுத் துணைக்தலைவர் கண்டுகளித்தார். ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு, திரிபுரா ஆளுநர் திரு என். இந்திரசேனா ரெட்டி, தெலங்கானா முதலமைச்சர் திரு ஏ. ரேவந்த் ரெட்டி, ஆந்திரப் பிரதேச அரசின் மின்னணுவியல் துறை அமைச்சர் திரு நாரா லோகேஷ், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு சேகர் பாபு, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு ஆர்.ஜே. ரத்னாகர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Read More »சிந்தி சமூகத்தினரின் அர்ப்பணிப்பு அவர்களை நாட்டின் சமூக, பொருளாதார வலிமையின் தூணாக மாற்றியுள்ளது: மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா
தொழில்முனைவு, கலாச்சாரம், சேவை உள்ளிட்டவற்றில் சிந்தி சமூகத்தினரின் அர்ப்பணிப்பு அவர்களை நாட்டின் சமூக, பொருளாதார வலிமையின் தூணாக மாற்றியுள்ளது என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா கூறியுள்ளார். புதுதில்லி விஞ்ஞான் பவனில் விஸ்வ சிந்தி இந்து சங்கங்களின் அறக்கட்டளை இன்று (23.11.2025) ஏற்பாடு செய்திருந்த ” வலுவான சமூகம் – வளமான இந்தியா” (சஷக்த் சமாஜ் – சம்ரித் பாரத்) என்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுப் பேசினார். சிந்தி சமூகத்தினரின் சேவைக்கான உறுதியான அர்ப்பணிப்பையும், ஆழமான கலாச்சார பாரம்பரியத்தையும் அவர் எடுத்துரைத்தார். இந்த குணங்கள் இந்தியாவின் சமூக, பொருளாதார, கலாச்சார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த சமூகத்தின் வலிமையையும், மீட்சித் தன்மையையும் பாராட்டிய திரு ஓம் பிர்லா, வலுவான இந்தியாவின் அடித்தளத்தை உருவாக்கும் கொள்கைகளை இந்த சமூகம் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். வணிகம், தொழில், வங்கி, சேவைகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் இந்த சமூகம் தொடர்ந்து சிறந்து விளங்கி வருவதாகவும், இதன் மூலம் பல லட்சக் கணக்கானவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கி வருவதாகவும் அவர் கூறினார். இந்த சமூகத்தினரின் வெற்றி பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், நம்பிக்கை, ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஆழமான மதிப்புகளிலும் வேரூன்றியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த மதிப்புகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பங்களிக்கின்றன என அவர் கூறினார். தேசப் பிரிவினையின் போது சிந்தி சமூகத்தினர் சந்தித்த சோதனைகள், இந்த சமூகத்தை மேலும் வலுப்படுத்தியதாக மக்களவைத் தலைவர் தெரிவித்தார். பொருள் இழப்பு உள்ளிட்ட பல இழப்புகள் இருந்தபோதிலும், சிந்தி சமூகத்தினர் தங்கள் மதம், மரபுகள், பழக்கவழக்கங்கள், கலாச்சார அடையாளத்தை கடுமையாக பின்பற்றுவதாக அவர் கூறினார். அசாதாரண உறுதியுடன் அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பியதாகவும் துன்பங்களை வாய்ப்பாக மாற்றியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சமூகத்தினரின் மீட்சித் தன்மைக்கும் கலாச்சார பெருமைக்கும் ஒரு ஆழமான எடுத்துக்காட்டாக உள்ளது என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Read More »‘அனைவருக்கும் நியாயமான, நிலையான எதிர்காலம்’ என்ற தலைப்பில் ஜி20 அமர்வில் பிரதமர் உரையாற்றினார்
‘அனைவருக்கும் நியாயமான, நிலையான எதிர்காலம்’ – முக்கிய கனிமங்கள்; சிறந்த வேலை; செயற்கை நுண்ணறிவு” என்ற தலைப்பில் இன்று (23.11.2025) நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் மூன்றாவது அமர்வில் பிரதமர் உரையாற்றினார். முக்கியமான தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படும் விதத்தில் அடிப்படை மாற்றம் வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். அத்தகைய தொழில்நுட்ப பயன்பாடுகள் நிதியை மையமாக கொண்டு இல்லாமல் ‘மனிதத்தை மையமாக கொண்டும், குறிப்பிட்ட நாட்டை மையமாகக் கொண்டு அல்லாமல் உலகளாவிய வகையிலும் …
Read More »ஐநா பருவநிலை மாற்ற செயல்திட்டக் குழுக் கூட்டத்தின் முக்கிய முடிவுகளுக்கு இந்தியா வரவேற்பு
பிரேசிலின் பெலெமில் 2025 நவம்பர் 22 அன்று நடைபெற்ற ஐநா பருவநிலை மாற்ற செயல்திட்டக் குழுவின் உறுப்பு நாடுகள் பங்கேற்ற 30-வது மாநாட்டின் (UNFCCC CoP30) நிறைவு அமர்வில், ஏற்றுக்கொள்ளப்பட்ட பல குறிப்பிடத்தக்க முடிவுகளை இந்தியா வரவேற்றுள்ளது. மேலும், இந்த மாநாட்டின் பிரேசிலின் தலைமைத்துவத்திற்கு இந்தியா வலுவான ஆதரவைத் தெரிவித்தது. வளர்ந்த நாடுகள் பருவநிலை நிதி வழங்குவது தொடர்பான நீண்டகால கடமைகளை இந்தியா வலியுறுத்தியது . நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பிரிவு …
Read More »ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா சிறப்பு அமர்வில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்
ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் இன்று (நவம்பர் 22, 2025) நடைபெற்ற ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் சிறப்பு அமர்வில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இதில் குடியரசுத் தலைவர் பேசியதாவது: பண்டைக் காலங்களிலிருந்து, நமது துறவிகளும் முனிவர்களும் தங்கள் செயல்கள் மற்றும் வார்த்தைகள் மூலம் சமூகத்தை வழிநடத்தி வருகின்றனர். இந்த மாமனிதர்கள் சமூகத்தின் நலனுக்காக ஏராளமான பணிகளைச் செய்துள்ளனர். அத்தகைய சிறந்த …
Read More »இஸ்ரேலுடன் உத்திசார் ஒத்துழைப்பை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் முன்னெடுத்துள்ளார்
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இஸ்ரேலுக்கான தனது அதிகாரப்பூர்வ பயணத்தின் போது விவசாயம், தொழில்நுட்பம், புதுமை, வர்த்தகம் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு முடிவுகளை மேற்கொண்டார். நவம்பர் 21 அன்று நடந்த கூட்டங்களின் போது, விவசாயத் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த விரிவான கலந்துரையாடலுக்காக திரு பியூஷ் கோயல், இஸ்ரேலிய வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் திரு. அவி டிச்சரை சந்தித்தார். இஸ்ரேலின் 25 ஆண்டுகால உணவுப் பாதுகாப்புத் திட்டம், அதன் மேம்பட்ட விதை மேம்பாட்டு உத்திகள் மற்றும் விவசாயத்திற்கான நீர் மறுபயன்பாட்டு தொழில்நுட்பங்களில் நாட்டின் உலகளாவிய தலைமைத்துவம் குறித்து அமைச்சர் டிச்சர், திரு கோயலுக்கு விளக்கினார். பின்னர் திரு கோயல், பெரெஸ் அமைதி மற்றும் கண்டுபிடிப்பு மையத்தைப் பார்வையிட்டார், அங்கு இஸ்ரேலின் முன்னோடி தொழில்நுட்ப சூழல் அமைப்பு குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. சொட்டு நீர்ப் பாசன அமைப்புகள், ஸ்டென்ட் தொழில்நுட்பங்கள் மற்றும் அயர்ன் டோம் அமைப்பு உள்ளிட்ட பல முக்கிய கண்டுபிடிப்புகள், வளர்ந்து வரும் எதிர்காலத் தொழில்நுட்பங்கள் மற்றும் அதிவேக தீர்வுகள் பற்றிய விளக்கங்களுடன் அவருக்குக் விளக்கப்பட்டன. பெரெஸ் மையத்தை இஸ்ரேலின் படைப்பாற்றல், புதுமை மற்றும் சமூக தாக்கத்தின் பயணத்தை பிரதிபலிக்கும் ஒரு ஊக்கமளிக்கும் நிறுவனம் என்று அவர் விவரித்தார். முன்னதாக, நவம்பர் 20 அன்று, திரு பியூஷ் கோயல் இஸ்ரேலின் பொருளாதார அமைச்சர் திரு. நிர் பர்கட் அவர்களை சந்தித்தார். இரு தலைவர்களும் இருதரப்பு வர்த்தகத்தின் தற்போதைய பாதையை ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து இந்தியா-இஸ்ரேல் வணிக மன்றம் நடைபெற்றது, இதில் இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் மூத்த தொழில்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மன்றத்தில் தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெற்றன, அவை தொழில்நுட்பம், புதுமை, …
Read More »தேசிய போர் நினைவுச்சின்னத்தில் என்சிசி-ன் 78-வது நிறுவன தின நிகழ்ச்சிகளை பாதுகாப்புத்துறை செயலாளர் தொடங்கிவைத்தார்
தேசிய மாணவர் படை (என்சிசி), அதன் 78-வது நிறுவன தினத்தை நவம்பர் 23, அன்று நாடு முழுவதும் கொண்டாடவுள்ளது. கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, நவம்பர் 22 அன்று புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் ஒரு புனிதமான மலர்வளையம் வைக்கும் விழா நடைபெற்றது, இதில் பாதுகாப்புத் துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் மற்றும் என்சிசி தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் ஆகியோர் முழு அமைப்பின் சார்பாகவும் வீரமரணம் அடைந்த …
Read More »காசி தமிழ் சங்கமம் 4.0, மத்திய கல்வி அமைச்சகம் டிசம்பர் 2 முதல் நடத்தவுள்ளது
தமிழ்நாட்டிதிற்கும் காசிக்கும் இடையிலான ஆழமான நாகரிக தொடர்புகளைக் கொண்டாடுவதற்காக காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது பதிப்பை டிசம்பர் 2 முதல், மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்ட இந்த முயற்சி, இரு பகுதிகளுக்கும் இடையிலான நாகரிகம், கலாச்சாரம், மொழியியல் மற்றும் மக்களிடையேயான தொடர்புகளை தொடர்ந்து அதிகரிக்கிறது, இது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வைப் பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தை …
Read More »புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற ஆசிய- பசிபிக் பேரிடர் தகவல் மேலாண்மை மேம்பாட்டு மையத்தின் 10-வது அமர்வு
உள்ளடக்கிய பேரிடர் அபாய தரவு நிர்வாகம் குறித்த ஆசிய-பசிபிக் பேரிடர் தகவல் மேலாண்மை மேம்பாட்டு மையத்தின் 10-வது அமர்வு புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இந்தியக் குழுவிற்கு உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தலைமை தாங்கினார். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினரும் துறைத் தலைவருமான திரு ராஜேந்திர சிங் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலாளர் திரு மணீஷ் பரத்வாஜ் ஆகியோரும் இந்தக் …
Read More »
Matribhumi Samachar Tamil