முன்னோட்டக் காலகட்டத்தின் இரண்டாவது சுற்று தொடங்கியுள்ள நிலையில் பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதலாவது சுற்றில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இரண்டாவது சுற்றில் நாட்டின் 730-க்கும் அதிகமான மாவட்டங்களில் உள்ள முதன்மை நிறுவனங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான உள்ளகப் பயிற்சி இடங்கள் கிடைக்கும். எண்ணெய், எரிவாயு, எரிசக்தி, வங்கி மற்றும் நிதிச்சேவைகள், சுற்றுப்பயணம், விருந்தோம்பல், மோட்டார் வாகனத் தொழிற்சாலை, உலோகங்கள் மற்றும் சுரங்கத் தொழில்கள், வெகு வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட 300-க்கும் அதிகமான முதன்மை நிறுவனங்களும், மற்றவையும் இந்திய …
Read More »தில்லி யஷோ பூமியில் 6-வது சர்வதேச தோல்பொருள் கண்காட்சி தொடங்கியது
தோல்பொருள் ஏற்றுமதிக் குழுமம் ஏற்பாடு செய்துள்ள 6-வது சர்வதேச தோல்பொருள் கண்காட்சி புதுதில்லியில் உள்ள யஷோ பூமியில் இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சி, தோல்பொருள் மற்றும் காலணி உற்பத்தித் துறையில் உலக அளவில் இந்தியாவின் வலுவான நிலையை எடுத்துக் காட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8,000 சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி அரங்கில் 225 இந்தியக் கண்காட்சியாளர்கள் தங்களது பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர். இதில் நவீன …
Read More »ஐஐசிஏ- நிறுவனத்தில் கட்டுமான தொழிலுக்கான திட்டங்களை மறுசீரமைப்பது குறித்த மாநாடு
இந்திய பெருநிறுவனங்கள் விவகார கல்வி நிறுவனத்தின் முதுநிலை திவால் நடைமுறை பிரிவு மானேசரில் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து திவால் நடைமுறைச் சட்டத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள், சட்ட வல்லுநர்கள், சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் திரு அனுஜ் ஜெயின், திரு பல்லவ் மொஹாபத்ரா, திரு ஹரி ஹரா மிஸ்ரா, மற்றும் இந்திய பெருநிறுவனங்கள் விவகாரத்துறையின் திவால் நடைமுறை சட்ட …
Read More »நிலக்கரித் துறை மற்றும் வணிக நிலக்கரி சுரங்க ஏலங்களில் உள்ள வாய்ப்புகள் குறித்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நிலக்கரி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது
நிலக்கரி அமைச்சகம் கொல்கத்தாவில் இன்று ‘நிலக்கரித் துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் வர்த்தக நிலக்கரி சுரங்க ஏலம்’ குறித்த மக்கள் சந்திப்பு நிகழ்வுக்கு (ரோட் ஷோ)ஏற்பாடு செய்திருந்தது. நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு விக்ரம் தேவ் தத் தலைமை விருந்தினராக் கலந்து கொண்டார். நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி ரூபிந்தர் பிரார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பங்குதாரர்களுக்கு ஆதரவளிப்பதில் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். முற்போக்கான சீர்திருத்தங்கள் மற்றும் வெளிப்படையான கொள்கைகள் …
Read More »பிஎஸ்என்எல்-ன் ஒருங்கிணைந்த நிதிசார் நடவடிக்கைகள் குறித்த புள்ளிவிவரம்
செயல் நடவடிக்கை மூலமான வருவாய்: 31.12.2024 இல் நிறைவடைந்த காலாண்டில் வருவாய் ரூ.4,969 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் (31.12.2023) ரூ.4546 கோடியுடன் ஒப்பிடும்போது அதிகரிப்பைக் காணமுடிகிறது. 31.12.2024 அன்று முடிவடைந்த 9 மாதங்கள்: வருவாய் ரூ.14,197 கோடியாகும். இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் (31.12.2023) ரூ.12,905 கோடியாக இருந்தது. 2024-25-ம் ஆண்டின் இறுதி காலாண்டில், இதே நிலை தொடரும். மற்ற வருவாய்: 31.12.2024 …
Read More »இந்திய – ஐக்கிய அரபு அமீரிம் இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி 3 ஆண்டுகள் நிறைவடைகிறது
இந்திய-ஐக்கிய அரபு அமீரகம் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (சி.இ.பி.ஏ) கையொப்பமிடப்பட்டு 2025 பிப்ரவரி 18 ஆம் தேதி மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. சி.இ.பி.ஏ என்பது ஒரு முழுமையான மற்றும் ஆழமான ஒப்பந்தமாகும், இது 18 பிப்ரவரி 2022 அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும் ஐக்கிய அரபு அமீரக அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளருமான திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்இடையே ஒரு மெய்நிகர் உச்சிமாநாட்டில் கையெழுத்தானது. …
Read More »வர்த்தக நிலக்கரிச் சுரங்க ஏலங்கள், வாய்ப்புகள்’ குறித்தக் கண்காட்சியை நிலக்கரி அமைச்சகம் கொல்கத்தாவில் நாளை நடத்துகிறது
நிலக்கரித் துறையில் வர்த்தக நிலக்கரிச் சுரங்க ஏலங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த சாலை கண்காட்சியை கொல்கத்தாவில் 2025 பிப்ரவரி 19, அன்று நிலக்கரி அமைச்சகம் நடத்த உள்ளது. இதில் முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள், சுரங்க நிபுணர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். நாட்டின் நிலக்கரித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளை ஆராய்வதற்கான தளமாக இக் கண்காட்சி அமைக்கப்பட்டது. செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் சமமான …
Read More »தொலைத்தொடர்பு சட்டம் 2023-ன் கீழ் அனுமதிக்கப்படும் நெட்வொர்க் அங்கீகாரத்திற்கான விதிகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த பரிந்துரைகளை ட்ராய் வெளியிட்டுள்ளது
தொலைத்தொடர்பு சட்டம் 2023-ன் கீழ் அனுமதிக்கப்படும் நெட்வொர்க் அங்கீகாரத்திற்கான விதிகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த பரிந்துரைகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது. இதன்படி, வணிக அமைப்புடன் நேரடி ஒப்பந்தம் செய்துகொள்வதற்குப் பதிலாக தொலைத்தொடர்பு சட்டம் 2023, பிரிவு -3 (1)(b)-ன் கீழ், நெட்வொர்க் அங்கீகார அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு நெட்வொர்க் அங்கீகாரத்திற்கான விரிவான விதிமுறைகளை தொலைத்தொடர்பு சட்டம் 2023, பிரிவு -3 (1)(b)-ன் …
Read More »ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி 7.21% அதிகரிப்பு
ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி (பொருட்கள் மற்றும் சேவைகள்) 682.59 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஏப்ரல்-ஜனவரி 2023-24-ல் 636.69 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது 7.21% வளர்ச்சியாகும். இந்தக் காலகட்டத்தில் பொருட்கள் ஏற்றுமதியின் ஒட்டுமொத்த மதிப்பு 358.91 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது ஏப்ரல்-ஜனவரி 2023-24 காலகட்டத்தில் 353.97 …
Read More »பாரத் டெக்ஸ் 2025-ல் ஆடை அலங்கார கண்காட்சி
மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கைத்தறி மேம்பாட்டு ஆணைய அலுவலகம், கைவினைத்திறனின் துடிப்பை உணரவும், பாரம்பரியத்தை கௌரவிக்கவும் “பிரீத்திங் த்ரெட்ஸ்” என்ற தலைப்பில் ஒரு ஆடை அலங்கார அணிவகுப்பு (பேஷன்) கண்காட்சி நிகழ்வை ஏற்பாடு செய்தது. மும்பை வைஷாலி எஸ் கோச்சர், வைஷாலி எஸ் த்ரெட்ஸ்டோரீஸ் பிரைவேட் லிமிடெட், கைத்தறி ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பாரத் டெக்ஸ் 2025-ன் ஒரு பகுதியாக பாரத் மண்டபத்தில் உள்ள ஆம்பிதியேட்டரில் …
Read More »
Matribhumi Samachar Tamil