Friday, October 02 2026 | 09:42:15 AM
Breaking News

Business

தில்லி-டேராடூன் வழித்தடத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மரக்கன்றுகளை நடும் இயக்கத்தை நடத்தியது

உள்கட்டமைப்பு மேம்பாட்டுடன் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் வகையில், உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் தில்லி-டேராடூன் பொருளாதார வழித்தடத்தில் இன்று மரம் நடும் இயக்கத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஏற்பாடு செய்தது. அன்னையின் பெயரில் மரக் கன்று நடும் இரண்டாம் கட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக, தில்லி-டேராடூன் வழித்தடத்தில் சுமார் 40,000 மரக்கன்றுகளை நடுவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. சாலைப் போக்குவரத்து – நெடுஞ்சாலை அமைச்சகத்தின் செயலாளர் திரு வி. உமாசங்கர், மரக்கன்றுகளை நடும் இயக்கத்தில் முதல் மரக்கன்றை நட்டார். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர் திரு சந்தோஷ் குமார் யாதவ்,  தேசிய நெடுஞ்சாலை ஆணைய மூத்த அதிகாரிகள் இந்த இயக்கத்தில் பங்கேற்று மரக் கன்றுகளை நட்டனர். பாக்பத் மாவட்ட ஆட்சியர் திருமதி அஸ்மிதா லால், காவல் கண்காணிப்பாளர் திரு சூரஜ் குமார் உள்ளிட்ட உள்ளூர் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளும் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர். பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று மரக் கன்றுகளை நட்டனர். தில்லி-டேராடூன் வழித்தடம் தில்லிக்கும் உத்தரகண்டிற்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்துகிறது. இந்த வழித்தடத்தில் சுமார் 40,000 மரக் கன்றுகளை நடுவது, காற்றின் தரத்தை மேம்படுத்தி, மண் அரிப்பைக் குறைத்து பல சுற்றுச்சூழல் நன்மைகளை இந்தப் பகுதிக்கு வழங்கும். அன்னையின் பெயரில் மரக்கன்று இடம் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இதுவரை 5,12,000-க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நட்டுள்ளது.

Read More »

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் விரிவான அரசு மற்றும் தொழில்துறையினர் உடனான பேச்சுவார்த்தை மூலம் இந்தியா-ஸ்வீடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறார்

ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் இரண்டு நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். முதல் நாளில் ஸ்வீடன் அரசின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளில் அவர் ஈடுபட்டார். அவரது இந்தப் பயணம் இருதரப்பு பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்துதல், வர்த்தகம், முதலீட்டு திட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பின் புதிய வழிகளை கண்டறிவதை நோக்கமாகக் கொண்டதாகும். அமைச்சர் …

Read More »

மின்சார வழித்தோன்றல்களை அறிமுகப்படுத்த எம்.சி.எக்ஸ். நிறுவனத்திற்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது

இந்தியாவின் எரிசக்தி சந்தையின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல் மும்பை: இந்தியாவின் முன்னணி பண்டக வழித்தோன்றல் பரிமாற்றமான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட் (எம்.சி.எக்ஸ்.), மின்சார வழித்தோன்றல்களை தொடங்க இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடமிருந்து (செபி) ஒப்புதல் பெற்றுள்ளது, இது இந்தியாவின் எரிசக்தி வர்த்தகத் துறையின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த வளர்ச்சி, ஒரு மாறும் மற்றும் நிலையான மின்சார …

Read More »

ஒன்பது அமைப்புகளின் தொழில்நுட்பங்களை 10 தொழில் நிறுவனங்களுக்கு டிஆர்டிஓ மாற்றம்

பொது மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்புடன் ஒரு வலுவான பாதுகாப்பு தொழில்துறை சூழல் அமைப்பை நிறுவுவதற்கான அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, மகாராஷ்டிராவின் அஹில்யாநகரில் அமைந்துள்ள டிஆர்டிஓ ஆய்வகமான வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ஒன்பது அமைப்புகளின் தொழில்நுட்பங்களை 10 தொழில் நிறுவனங்களுக்கு மாற்றுவதன் மூலம் மிகப் பெரும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. நேற்று (ஜூன் 07, 2025 ) நிறுவனத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஒரு நிகழ்வின் போது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் …

Read More »

நிஃப்டெம்-கே யில் உலக உணவுப் பாதுகாப்பு தினக் கொண்டாட்டம், உணவுப் பாதுகாப்பு மற்றும் அடிமட்ட அளவில் புதுமைகளுக்கான அழைப்போடு நிறைவடைந்தது

உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின்  கீழ் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமான குண்ட்லியில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM-K), உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்துதல் மற்றும் அறிவியல் ஈடுபாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுடன் 2025 ஆம் ஆண்டுக்கான உலக உணவுப் பாதுகாப்பு தினத்தின் அர்த்தமுள்ள இரண்டு நாள்  கொண்டாட்டத்தை  நிறைவு செய்தது. “உணவுப் பாதுகாப்பு: செயல்பாட்டில் …

Read More »

இந்தியாவின் வளர்ந்து வரும் அந்நிய நேரடி முதலீடு குறித்த முதலீட்டாளர்களின் வட்டமேசை கருத்தரங்கம்

2025 ஜூன் 5-ம் தேதி புதுதில்லியில் உள்ள வர்த்தக வளாகத்தில் நடைபெற்ற முதலீட்டாளர் வட்டமேசை கருத்தரங்கில் முதலீட்டாளர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு இந்தியாவின் வளர்ந்து வரும் முதலீட்டுக்கு உகந்த சூழல் அமைப்பு, எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள், வருவாய் மறு முதலீட்டை ஊக்குவிப்பதற்கான உத்திகள் குறித்து விரிவாக விவாதித்தனர். இந்த நிகழ்வில் முக்கிய தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட   90-க்கும்  அதிகமானோர் பங்கேற்றனர். ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தில்லி, குஜராத், உத்தரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட …

Read More »

பிரெசியாவில் இத்தாலி துணைப் பிரதமர் அன்டோனியோ தஜானியுடன் மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் உயர்மட்ட அளவிலான சந்திப்பை நடத்தினார்

இத்தாலியின் தொழில் உற்பத்தி மையமான பிரெசியாவில் இத்தாலி துணைப் பிரதமரும் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத் துறை அமைச்சருமான அன்டோனியோ தஜானியுடன், மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் உயர்நிலை சந்திப்புக் கூட்டத்தை நடத்தினார்.  2025 ஜூன் 5 அன்று நிறைவடைந்த இத்தாலி பயணத்தின் போது பொருளாதார ஒத்துழைப்புக்கான  இந்தியா – இத்தாலி கூட்டு ஆணையத்தின் 22-வது அமர்வுக்கு இருதலைவர்களும் கூட்டாகத் தலைமை தாங்கினர். ஆக்கப்பூர்வமான …

Read More »

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டத்தின் கீழ் 8794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி கடன் மானியத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் வழங்கியுள்ளது

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல்  திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 8794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி கடன் மானியத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் இணையவழியாக நடைபெற்ற நிகழ்வில் வழங்கியது. ரூ.884 கோடி கடன் அனுமதிக்காக இந்த மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள இந்த ஆணையத்தின் மத்திய அலுவலகத்தில் ஆணையத் தலைவர் திரு மனோஜ் குமார் மானியத் தொகையை பயனாளிகளுக்கு விடுவித்தார். ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி …

Read More »

இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான அரசு முறை இத்தாலி பயணத்தை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் தொடங்கியுள்ளார்

இத்தாலிக்கான அரசுமுறை பயணத்தை மத்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தொடங்கினார். 2025 ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் அவர் இத்தாலியில் பயணம் மேற்கொள்வார். இந்தியா-பிரான்ஸ் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் பிரான்சில் பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து அவர் தற்போது இத்தாலி சென்றுள்ளார். இந்தப் பயணம் முக்கியமான ஐரோப்பிய பங்குதாரர்களுடன் உத்திசார் கூட்டாண்மையை விரிவுபடுத்துவதிலும், பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதிலும் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மேலும் இத்தாலியுடன் …

Read More »

தங்கம் எதிர்கால விலை 3,573 ரூபாயும், வெள்ளி எதிர்கால விலை 3,928 ரூபாயும் சரிவு: கச்சா எண்ணெய் எதிர்கால விலை 408 ரூபாய் குறைவு

நேச்சுரல் கேஸ் எதிர்கால விலையில் 27.10 ரூபாய் உயர்வு: பருத்தி-கேண்டி எதிர்கால விலையில் 1,760 ரூபாய் சரிவு: மெந்தா எண்ணெயில் 6.50 ரூபாய் மந்தம்: உலோகங்களின் எதிர்கால விலைகளில் எல்லாம் சரிவு: பொருட்கள் எதிர்காலத்தில் 188,600 கோடி ரூபாய் மற்றும் பொருட்கள் ஆப்ஷன்களில் 1,402,398 கோடி ரூபாய் புழக்கம் பதிவு: தங்கம்-வெள்ளி எதிர்காலங்களில் 147,636 கோடி ரூபாய் வர்த்தகம்: புல்லியன் இன்டெக்ஸ் புல்டெக்ஸ் எதிர்காலம் 21,323 புள்ளிகள் நிலையில் மும்பை: …

Read More »