மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான், புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் இன்று பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், விவசாயிகள், வேளாண் தொழில்முனைவோர், வேளாண் தொடர்பான பல்வேறு அமைப்புகள், விவசாய உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்டோர் பல்வேறு முக்கிய ஆலோசனைகளை எடுத்துரைத்தனர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சவுகான், அனைத்து பரிந்துரைகளையும் தாங்கள் உரிய மதிப்பாய்வு செய்து நிதியமைச்சருக்கு தெரிவிப்பதாக கூறினார். மேலும், வேளாண் துறை தொடர்பான அனைவருடனும் தொடர்ந்து பேச்சு நடத்தவுள்ளதாக திரு சவுகான் கூறினார். வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகமும் உள்நாட்டில் ஒரு ஆய்வை …
Read More »உள்நாட்டு நீர்வழிப் பாதைகளை ஊக்குவிக்க ‘ஜல்வாஹக்’ திட்டத்தை அரசு தொடங்கி வைத்தது
தேசிய நீர்வழிகள் 1 (கங்கை நதி), தேசிய நீர்வழிகள் 2 (பிரம்மபுத்திரா நதி), தேசிய நீர்வழிகள் 16 (பராக் நதி) வழியாக நீண்ட தூர சரக்குகளின் போக்குவரத்தை ஊக்குவிக்கும் சரக்கு மேம்பாட்டுக்கான ‘ஜல்வஹக்’ என்ற முக்கிய கொள்கையை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இன்று வெளியிட்டார். மத்திய அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால், எம்வி ஏஏஐ, எம்வி ஹோமி பாபா மற்றும் எம்வி திரிசூல் ஆகிய சரக்குக் கப்பல்களையும் அஜய் மற்றும் திகு ஆகிய இரண்டு தளவாடப் படகுகளையும் புதுதில்லி அரசு படகுத்துறையிலிருந்து இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். கொல்கத்தா – பாட்னா – வாரணாசி – பாட்னா – கொல்கத்தா இடையே ஒரு வழியாகவும், கொல்கத்தா மற்றும் குவஹாத்தியில் உள்ள பாண்டு இடையேயும் இந்தோ-வங்கதேச நெறிமுறை பாதை (ஐபிபிஆர்) வழியாகவும் குறிப்பிட்ட நாள் திட்டமிடப்பட்ட பாய்மரப் படகோட்ட சேவை இயக்கப்படும். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு சோனோவால், பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், நமது வளமான உள்நாட்டு நீர்வழிப் பாதைகளின் மிகப்பெரிய திறனை உணர அரசு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. சிக்கனமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, திறமையான போக்குவரத்து முறை என்ற அனுகூலத்தைக் கொண்டு, ரயில்வே மற்றும் சாலைப் போக்குவரத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, நீர்வழிகள் வழியாக சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்க நாங்கள் விரும்புகிறோம். ஜல்வாஹக் திட்டம் ஆகியவற்றில் நீண்ட தூர சரக்குகளை ஊக்குவிப்பதுடன், நேர்மறையான பொருளாதார மதிப்பு முன்மொழிவுடன் நீர்வழிகள் வழியாக சரக்குகளின் இயக்கத்தை ஆராய வர்த்தக நலன்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. மேலும், கொல்கத்தாவிலிருந்து தொடங்கும் வழக்கமான அட்டவணைப்படுத்தப்பட்ட சரக்கு சேவை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரக்குகளை கொண்டு சென்று வழங்குவதை உறுதி செய்யும். இது ஒரு திறமையான, சிக்கனமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான போக்குவரத்து முறையில் சரக்குகளை வழக்கமான இயக்கத்திற்கு தேசிய நீர்வழிகள் தயாராக உள்ளது என்ற நம்பிக்கையை நமது பயனர்களிடையே உருவாக்கும். இந்த ஊக்கத் திட்டத்துடன் நமது கப்பல் ஆபரேட்டர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமும், குறைந்த செலவில் பாதுகாப்பான மற்றும் சரியான நேரத்தில் சரக்குகளை வழங்குவதன் மூலம் நமது வணிக நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலமும், இந்தியா வளர்ச்சியடைந்த பாரதமாக மாறுவதை நோக்கி பயணிக்கும்போது போக்குவரத்து வழியாக மாற்றத்திற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் பார்வைக்கு இது அர்த்தம் சேர்க்கிறது என்று கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், வளமான நீர்வழிகள் 2014 முதல் புத்துயிர் பெற்று வருகின்றன. நீர்வழிகளை புனரமைப்பதில் தொடர்ச்சியான முதலீட்டுடன், இந்தத் திட்டங்கள் 2027 ஆம் ஆண்டுக்குள் ரூ .95.4 கோடி முதலீட்டில் எயல்படுத்தப்படும். 2014 வரை நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட நீல பொருளாதாரத்தின் மதிப்பை திறக்கவும் இது ஒரு தீவிர முயற்சியாகும். புத்துயிர் பெற்ற தேசிய நீர்வழிகள் அதன் செயல்திறனை கணிசமாக நகர்த்தியுள்ளன, ஏனெனில் 2013-14 ஆம் ஆண்டில் 18.07 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த சரக்குகளின் மொத்த அளவு 2023-24 ஆம் ஆண்டில் 132.89 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது, இது 700% க்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் நீர்வழிகள் மூலம் 200 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கொண்டு செல்ல இலக்கு நிர்ணயித்துள்ளோம். 2047-ம் ஆண்டில், சரக்கு போக்குவரத்துக்கு சாத்தியமான மாற்றாக உள்நாட்டு நீர்வழிகளின் வளர்ச்சியில் நம்பிக்கையுடன், 500 மில்லியன் மெட்ரிக் டன் இலக்கை நிர்ணயித்துள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்தார். மத்திய இணையமைச்சர் திரு சாந்தனு தாக்கூர், “நீர்வழிப் போக்குவரத்தை, குறிப்பாக வங்காளத்தைப் பொறுத்தவரை, இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம். பிரதமர் திரு. நரேந்திர மோடி யின் எழுச்சியூட்டும் தலைமையின் கீழ், நீர்வழிப் போக்குவரத்தில் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம், நீர்வழித் துறை, குறிப்பாக கிழக்கு இந்தியாவில், சரக்கு போக்குவரத்து இயக்கத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பத்தை ஏற்படுத்தும். சிக்கனமான, பயனுள்ள, திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறை சரக்கு மற்றும் பயணிகள் இயக்கத்தில் ஒரு புதிய காட்சியை உறுதியளிக்கிறது என்று தெரிவித்தார்.
Read More »பொதுத்துறை வங்கிகள்: ஒரு எழுச்சி சக்தி
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் 2023-24-ம் நிதியாண்டில் ரூ.1.41 லட்சம் கோடி நிகர லாபத்தை பதிவு செய்து குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளன. இந்த மைல்கல் சாதனை துறையின் வலுவான திருப்பத்தை பிரதிபலிக்கிறது. இது சொத்து தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தால் ஆதரிக்கப்படுகிறது. மொத்த வாராக் கடன் விகிதம் , செப்டம்பர் 2024-ல் 3.12% ஆகக் குறைந்தது. தொடர்ச்சியான வேகத்தை வெளிப்படுத்தும் வகையில், 2024-25-ம் ஆண்டின் முதல் பாதியில் ரூ.85,5206,000 கோடி நிகர லாபம் பதிவு செய்துள்ளது. அவர்களின் நட்சத்திர செயல்திறனுக்கு கூடுதலாக, பொதுத்துறை வங்கிகள் பங்குதாரர்களின் வருமானத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன, கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் ரூ.61,964 கோடி ஈவுத்தொகையை செலுத்தியுள்ளன. நிதி சாதனைகளுக்கு அப்பால், நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதில் இந்த வங்கிகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. அடல் ஓய்வூதிய திட்டம் மற்றும் பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா திட்டம் போன்ற முக்கியமான அரசின் திட்டங்களை அவர்கள் செயல்படுத்தியுள்ளனர். இந்த முயற்சிகள் முக்கிய பயன்கள் சமூகத்தின் பின்தங்கிய பிரிவினரை சென்றடைவதை உறுதி செய்துள்ளன. சீர்திருத்தங்கள், நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் வலுவான கொள்கைகளுடன் இந்திய அரசு இந்தத் துறைக்கு தீவிரமாக ஆதரவளித்துள்ளது. இது வங்கி அமைப்பை வலுப்படுத்தியுள்ளது, அதிக வெளிப்படைத்தன்மை, ஸ்திரத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை வளர்த்துள்ளது. பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் விகிதம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது, மார்ச் 2018-ல் 14.58% ஆக இருந்த உச்சத்திலிருந்து 2024 செப்டம்பரில் 3.12% ஆக குறைந்துள்ளது. இந்தக் குறிப்பிடத்தக்க குறைப்பு வங்கி அமைப்பில் உள்ள மன அழுத்தத்தை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட இலக்கு தலையீடுகளின் வெற்றியை பிரதிபலிக்கிறது. 2015 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி சொத்து தர மதிப்பாய்வை தொடங்கியபோது ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. வாராக்கடன்களின் வெளிப்படையான அங்கீகாரத்தை கட்டாயமாக்குவதன் மூலம் வங்கிகளில் மறைக்கப்பட்ட அழுத்தத்தை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்வதை இந்த பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இது முன்னர் மறுசீரமைக்கப்பட்ட கடன்களை வாராக் கடன்கள் என்று மறுவகைப்படுத்தியது, இதன் விளைவாக அறிவிக்கப்பட்ட வாராக்கடன்களில் கூர்மையான அதிகரிப்பு ஏற்பட்டது. பொதுத்துறை வங்கிகளின் மேம்பட்ட வலிமையின் மற்றொரு குறிகாட்டி அவற்றின் மூலதன சொத்து விகிதம் ஆகும். இது செப்டம்பர் 2024-ல், 15.43% ஆக உயர்ந்தது. இது மார்ச் 2015-ல் 11.45% ஆக இருந்தது. இந்த கணிசமான முன்னேற்றம் இந்தியாவின் வங்கித் துறையின் புதுப்பிக்கப்பட்ட ஸ்திரத்தன்மை மற்றும் வலிமையை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த ஆதரவளிக்க பொதுத்துறை வங்கிகளை நிலைநிறுத்துகிறது. பொதுத்துறை வங்கிகள் நாடு முழுவதும் தங்கள் வரம்பை விரிவுபடுத்தி, நிதி உள்ளடக்கத்தை ஆழப்படுத்துகின்றன. அவர்களின் வலுவான மூலதன அடித்தளம் மற்றும் மேம்பட்ட சொத்து தரம் ஆகியவை சந்தைகளை சுதந்திரமாக அணுக உதவியது. 54 கோடி ஜன் தன் கணக்குகள் மற்றும் பல்வேறு முதன்மை நிதி உள்ளடக்கத் திட்டங்களின் (பிரதமரின் முத்ரா, ஸ்டாண்ட்-அப் இந்தியா, பிரதமரின் ஸ்வநிதி , பிரதமரின் விஸ்வகர்மா) 54 கோடிக்கும் அதிகமான பிணையற்ற கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. வங்கி கிளைகளின் எண்ணிக்கை மார்ச் 2014-ல் 1,17,990 ஆக இருந்து செப்டம்பர் 2024 இல் 1,60,501 ஆக அதிகரித்துள்ளது; இதில் 1,00,686 கிளைகள் கிராமப்புற, சிறு நகர்ப்புற பகுதிகளில் உள்ளன. கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விவசாயிகளுக்கு குறுகிய கால பயிர் கடன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. செப்டம்பர் 2024 நிலவரப்படி மொத்த செயல்பாட்டு கேசிசி கணக்குகள் 7.71 கோடியாக இருந்தன, மொத்தம் ரூ .9.88 லட்சம் கோடி நிலுவையில் உள்ளது. 2004-2014 காலகட்டத்தில் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் மொத்த முன்பணம் ரூ.8.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.61 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது, இது மார்ச் 2024-ல் ரூ.175 லட்சம் கோடியாக கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளன, முன்னோடியில்லாத நிதி மைல்கற்களை அடைந்துள்ளன. நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. வலுவான நிதி அடித்தளம் மற்றும் மேம்பட்ட சொத்து தரத்துடன், பொதுத்துறை வங்கிகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளன. உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை இயக்குவதற்கும் அவை நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
Read More »3 வது சிஐஎல் சிஎஸ்ஆர் மாநாடு கொல்கத்தாவில் தொடங்கியது
இந்தியாவின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு சட்டம் மற்றும் கோல் இந்தியா நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிறுவனமயமாக்கலின் பத்தாண்டுகளைக் கொண்டாடும் வகையில், 3-வது சிஐஎல் சிஎஸ்ஆர் மாநாடு கொல்கத்தாவில் இன்று தொடங்கியது. மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய மேற்கு வங்க ஆளுநரும், நிகழ்ச்சியின் தலைமை விருந்தினருமான டாக்டர் சி.வி.ஆனந்த போஸ், கோல் இந்தியா நிறுவனத்தின் சிஎஸ்ஆர் முன்முயற்சிகளைப் பாராட்டினார். சி.ஐ.எல்-ன் சமூக அர்ப்பணிப்பு பற்றி குறிப்பிட்ட போஸ், “நாம் ஒரு உருமாறும் சகாப்தத்தில் வாழ்கிறோம், உறவுகளை உருவாக்குவதற்கு அவசியமான எல்லைகளுக்கு அப்பால் நாம் பார்க்க வேண்டும்” என்று கூறினார். கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) குடையின் கீழ், சி.ஐ.எல் நிறுவனம் நிறுவனமயமாக்கப்பட்டதிலிருந்து பத்தாண்டுகளில் ரூ.5,579 கோடியை செலவிட்டுள்ளது, இது சட்டப்பூர்வ தேவையை விட 31 சதவீதம் அதிகமாகும். சி.எஸ்.ஆர் செலவினத்தில் நாட்டின் முதல் மூன்று கார்ப்பரேட் நிறுவனங்களில் சிஐஎல் உள்ளது. சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கப்பட்ட சிஎஸ்ஆர்-ன் முதல் ஆண்டான நிதியாண்டு 2015 தொடங்கி, நிதியாண்டு 2024 வரையிலான பத்து ஆண்டு காலத்தில், சிஐஎல் ரூ.4,265 கோடியை செலவிட கட்டாயப்படுத்தப்பட்டது, ஆனால் நிறுவனம் அதை விட ரூ. 1,314 கோடி அதிகமாக இருந்தது. இக்காலகட்டத்தில் ஆண்டு சராசரி சமூக பொறுப்பு செலவு ரூ.558 கோடியாக இருந்தது. நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளரும், கௌரவ விருந்தினருமான திரு விக்ரம் தேவ் தத் பேசுகையில், சி.எஸ்.ஆர் என்பது கோல் இந்தியா நிறுவனம், அதன் துணை நிறுவனங்களுக்கு நம்பிக்கைக்குரிய விஷயம் என்றும், ஜனவரி முதல் ஒவ்வொரு மாதமும் கருப்பொருள் அடிப்படையிலான பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு இருக்கும் என்றும் கூறினார். நிகழ்ச்சியில் பேசிய கோல் இந்தியா நிறுவனத்தின் தலைவர் திரு பி.எம்.பிரசாத், சிஐஎல் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது என்றும், கடந்த பத்தாண்டுகளில் நாடு தழுவிய அளவில் ரூ.5,570 கோடியை பெருநிறுவன சமூக பொறுப்புணர்வுக்காக செலவிட்டுள்ளது என்றும் அதில் பெரும்பகுதி சுகாதாரம் மற்றும் கல்வியில் கவனம் செலுத்துகிறது என்றும் கூறினார். சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றில் கோல் இந்தியா நிறுவனம் கவனம் செலுத்தியிருப்பது, பத்தாண்டின் மொத்த சமூக பொறுப்பு செலவினமான ரூ.5,579 கோடியில், இந்த மூன்று அத்தியாவசியத் துறைகளுக்கும் 71% ரூ.3,978 கோடியாக ஒதுக்கப்பட்டது. மொத்த ஒதுக்கீட்டில் 50 சதவீதத்திற்கு அருகில் ரூ.2,770 கோடியுடன் சுகாதாரத் துறை முதலிடத்தில் உள்ளது. கல்வி மற்றும் வாழ்வாதாரம் 1,208 கோடி ரூபாய், இது மொத்தத்தில் ஐந்தில் ஒரு பங்காகும். மீதமுள்ள தொகை கிராமப்புற மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, விளையாட்டு ஊக்குவிப்பு, பேரிடர் மேலாண்மை போன்ற பிற துறைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவை மையமாகக் கொண்டு, செயல்பாட்டில் உள்ள எட்டு மாநிலங்களில் 95 சதவீத சிஎஸ்ஆர் நிதி பயன்படுத்தப்பட்டது.
Read More »தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் ஆர்என்ஐஎல் நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது
விசாகப்பட்டினம் எஃகு ஆலையின் கற்றல், மேம்பாட்டு மையத்தின் டாக்டர் தென்னெட்டி விஸ்வநாதம் ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஆர்ஐஎன்எல் நிறுவன இயக்குநரும் (திட்டங்கள்), கூடுதல் பொறுப்பு இயக்குநருமான (செயல்பாடுகள்) ஸ்ரீ ஏ.கே.பாக்சி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமை திரு ஏ.கே.பாக்சி, ஆர்ஐஎன்எல் ஊழியர்களும் குடும்பத்தினரும் அன்றாட வாழ்க்கையில் ஆற்றல் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று …
Read More »தேசிய நுகர்வோர் தினத்தன்று முக்கிய இ-காமர்ஸ் தளங்கள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்க உள்ளன
அஜியோ, ஜியோ மார்ட், நெட்மெட், பிக்பாஸ்கெட், டாடா க்ளிக், டாடா ஒனர எம்ஜி, ஸொமேட்டா, ஓலா (Ajio, JioMart, Netmed, BigBasket, Tata Cliq, Tata 1mg, Zomato) Ola போன்ற முக்கிய இ-காமர்ஸ் தளங்கள் 2024 டிசம்பர் 24 அன்று கொண்டாடப்படவுள்ள தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொள்கின்றன. பாதுகாப்பு உறுதிமொழி என்பது பாதுகாப்பற்ற, போலியான, இணக்கமற்ற தயாரிப்புகளைக் கண்டறிந்து அவற்றைத் தடுப்பதற்கும், பாதுகாப்பிற்கு பொறுப்பான சட்டரீதியான …
Read More »பிணையில்லா விவசாயக் கடன் உச்சவரம்பை ரூ 1.60 -லட்சத்தில் இருந்து ரூ 2 லட்சமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது
விவசாயத் துறைக்கு ஆதரவளிப்பதற்கும், அதிகரித்து வரும் இடுபொருள் செலவுகளைச் சமாளிப்பதற்குமான ஒரு நடவடிக்கையாக, இந்திய ரிசர்வ் வங்கி, பிணையில்லாத விவசாயக் கடன்களுக்கான உச்சவரம்பை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. கடன் வாங்குபவருக்கு தற்போதுள்ள ரூ 1.60 லட்சம் கடன் வரம்பு ரூ 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவு பணவீக்கத்தின் தாக்கம் மற்றும் விவசாயிகளுக்கு விவசாய இடுபொருட்களின் விலை அதிகரித்து வருவதை ஏற்றுக்கொண்டுள்ளது.. இது விவசாயிகளுக்கு மேம்பட்ட நிதி அணுகலை வழங்குவதை நோக்கமாகக் …
Read More »இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனத்திற்கு எதிரான உத்தரவை சிசிஐ நிறுத்தி வைத்துள்ளது
இந்திய டேபிள் டென்னிஸ் சங்கம், மகாராஷ்டிரா மாநில டேபிள் டென்னிஸ் சங்கம், குஜராத் மாநில டேபிள் டென்னிஸ் சங்கம் மற்றும் இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு எதிரான உத்தரவை நிறுத்தி வைக்கும் ஆணையை இந்திய போட்டி ஆணையம் சிசிஐ 12.12.2024 அன்று பிறப்பித்துள்ளது. கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், இந்தியாவில் டேபிள் டென்னிஸ் லீக் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கும், டேபிள் டென்னிஸ் போட்டிகளுக்கு சேவைகளை வழங்குவதற்கும் தொடர்புடைய சந்தைகளில் இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு, அதன் துணை அமைப்புகள் மேலாதிக்க நிலையை கொண்டுள்ளன என்று ஆணையம் தீர்மானித்தது. விசாரணையின் …
Read More »மொபைல் வேனிட்டி எண்களை மின்-ஏலம் மூலம் விற்பனை செய்கிறது பி.எஸ்.என்.எல்
பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டம் 10.12.2024 முதல் 19.12.2024 வரை வேனிட்டி மொபைல் எண்களை மின்-ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்களாக ஃபேன்சி எண்களைப் பெற www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். ஃபேன்சி எண்களின் ஆன்லைன் ஏலத்திற்கு. ஏலம் எடுப்பதற்கான கடைசி தேதி 19.12.2024 ஆகும். மொபைல் எண் என்பது ஒருவரது எளிதான அடையாளம், இதன் மூலம் நாம் மற்றவர்களையும், மற்றவர்கள் நம்மையும் தொடர்பு கொள்ளலாம். ஒரு தொழிலதிபருக்கு மொபைல் எண் என்பது அவரது வாடிக்கையாளர்களுக்கு எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய ஃபேன்ஸி எண்ணாக இருக்க வேண்டும். சில …
Read More »பசுமை எஃகு உற்பத்தி
கரியமில் வாயு நீக்கம் குறித்து வளர்ந்த பொருளாதார நாடுகள் எஃகு இறக்குமதிக்கு கார்பன் வரி விதிப்பது உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளின் சவால்களை அடுத்து மத்திய அரசு அது சார்ந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறது. எஃகு உற்பத்தித் துறையின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கரியமில வாயு உமிழ்வை எட்டும் நோக்கில், நாட்டில் பசுமை எஃகு உற்பத்தியை ஊக்குவிக்கும் செயல்திட்டத்தை மத்திய அரசு …
Read More »
Matribhumi Samachar Tamil