கூட்டுறவு அமைச்சகம், 2021 ஜூலை 6 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து, கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகாரம் அளிக்கவும், நாடு முழுவதும் உள்ள கூட்டுறவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்துவதில் அவற்றின் திறனை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. நாடு முழுவதும் கூட்டுறவுத் துறைக்கு புத்துயிரூட்டவும், வலுப்படுத்தவும் பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தீவிர பங்கேற்புடன் கூட்டுறவு அமைச்சகம் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கணினிமயமாக்கல் மூலம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தை வலுப்படுத்துவதற்காக, மொத்த நிதி ஒதுக்கீட்டில் ரூ.2,516 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களையும் ஒரு பொதுவான அமைப்பின் கீழ் நபார்டு வங்கியுடன் இணைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 30 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மொத்தம் 67,930 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 40,727 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் இஆர்பி மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளன. வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்குதல்: நீண்டகாலக் கூட்டுறவுக் கடன் அமைப்பை வலுப்படுத்தும் வகையில், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 1,851 வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்கும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்தும் நிறுவனமாக நபார்டு வங்கி செயல்பட்டு வருகிறது. இதுவரை, 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து முன்மொழிவுகள் பெறப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
Read More »கூட்டுறவு சங்கங்களின் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.
2021 ஜூலை 6-ம் தேதி முதல், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் & கூட்டுறவு சங்கங்கள் மற்ற வர்த்தக நிறுவனங்களுக்கு இணையாக வரி தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க ஊக்குவிப்பதே கூட்டுறவு அமைச்சகத்தின் கடமையாகும். கூட்டுறவு சங்கங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு கோரி 25.11.2024 தேதியிட்ட குறிப்பாணை தமிழக கூட்டுறவு அமைச்சரிடமிருந்து பெறப்பட்டது. ஜிஎஸ்டி வரி தொடர்பான முன்மொழிவை ஜிஎஸ்டி கவுன்சில் ஆய்வு செய்கிறது. அண்மையில் கருப்பஞ்சாற்றுக் கசண்டு மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இது கூட்டுறவு …
Read More »கூட்டுறவுத் துறையில் செயல் திறன் விருதுகள்
தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு அளித்துள்ள தகவலின்படி, தொழில்நுட்ப செயல்திறனை மேம்படுத்தவும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கிடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தும் வகையிலும் தொழில்நுட்ப செயல்திறன் விருதுகள் அதன் வெள்ளி விழா ஆண்டில் (1985) அறிமுகம் செய்யப்பட்டது . செயல்திறன் விருதுகள் காரணமாக துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் பின்னூட்டங்கள் குறித்து தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. வெப்பமண்டல மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் ஆகியவற்றில் சராசரி கரும்பு மகசூல் 128-144 டன்/எக்டர் …
Read More »சி-டாட் – சிசிலியம் சர்க்கியூட்ஸ் நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம்
அதிநவீன அடுத்த தலைமுறைக்கான உள்நாட்டு தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் உள்ள தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையமும் ஐஐடி ஹைதராபாத் கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் புத்தொழில் நிறுவனமான சிலிசியம் சர்க்யூட்ஸ் தனியார் நிறுவனமும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இதன்படி “லியோ செயற்கைக்கோளுக்குத் தேவையான உதிரி பாகங்கள் வடிவமைப்பு, மேம்பாட்டு நடவடிக்கைகளை இந்த …
Read More »ஆயுர்வேத பொருட்களின் சந்தை வளர்ச்சிக்கு அரசு ஆதரவளிக்கிறது
ஆயுர்வேத பொருட்களின் சந்தை வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு வகைகளில் ஆதரவளிக்கிறது. ஆயுஷ் அமைச்சகம் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக ஆயுஷ் பொருட்களுக்கான சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது. மத்திய அரசின் திட்டத்தை பல்வேறு அம்சங்களின் கீழ் செயல்படுத்தி வருகிறது. ஆயுஷ் பிரச்சாரத்திற்காக சர்வதேச கண்காட்சிகள், வர்த்தக கண்காட்சிகள், சாலை கண்காட்சிகள் போன்றவற்றில் பங்கேற்பதற்காக ஆயுஷ் மருந்து உற்பத்தியாளர்கள், தொழில்முனைவோர், ஆயுஷ் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. சர்வதேச ஆயுஷ் சந்தை மேம்பாடு மற்றும் ஆயுஷ் மேம்பாடு தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்தல். மேலும், ஆயுஷ் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கு ஆயுஷ் அமைச்சகமானது ஆயுஷ் தயாரிப்புகளுக்கு சான்றிதழ்களை வழங்க ஊக்குவித்தல். மூலிகைப் பொருட்களை உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல்களின்படி மருந்து தயாரிப்புகளுக்கு பயன்படுத்துவதற்கு சான்றிதழ் வழங்குதல். ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி தயாரிப்புகளுக்கு சர்வதேச தரக்கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப இணங்குவதற்கான மூன்றாம் தரப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் ஆயுஷ் பிரீமியம் வழங்குதல். இந்திய தர கவுன்சிலால் செயல்படுத்தப்பட்ட தர சான்றிதழ் திட்டம். இவ்வாறான பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
Read More »இ-ஷ்ரம் தளத்துடன் பிரதமரின் விரைவு சக்திப் பெருந்திட்ட இணையதளத்தை ஒருங்கிணைத்தல்
தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகம், ஆதாருடன் சரிபார்க்கப்பட்டு இணைக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் தொடர்பான விரிவான தேசிய தரவுத்தளத்தை (NDUW) உருவாக்குவதற்காக 2021 ஆகஸ்ட் 26 அன்று நாடு தழுவிய அளவிலான இ-ஷ்ரம் (eshram.gov.in) தளத்தை அறிமுகப்படுத்தியது. இந்த இ-ஷ்ரம் தளத்தின் நோக்கம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கணக்கு எண்ணை வழங்கி நலத் திட்டங்கள் தொடர்பாக அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாகும். பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்ட தளம், பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் தொடர்பான உள்கட்டமைப்பு திட்டங்களின் பொதுவான தரவுத் தளமாக அமைந்துள்ளது. உள்கட்டமைப்புத் திட்டங்களை …
Read More »முன்னேற விரும்பும் மாவட்டங்களில் பெருநிறுவனங்கள் சமூக பொறுப்பு நிதி செலவினம் அதிகரித்துள்ளது
கடந்த மூன்று நிதியாண்டுகளில், அதாவது 2020-21 முதல் 2022-23-ம் ஆண்டு வரை முன்னேற விரும்பும் மாவட்டங்களில் பெருநிறுவனங்கள் சமூக பொறுப்பு நிதி செலவினம் அதிகரித்துள்ளதாக பெருநிறுவனங்கள் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2020-21-ம் நிதியாண்டில் ரூ.651.43 கோடியும், 2021-22 -ம் நிதியாண்டில் ரூ.1046.43 கோடியும், 2022-23-ம் நிதியாண்டில் ரூ.1402.89 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சருமான திரு. ஹர்ஷ் மல்ஹோத்ரா இதனைத் தெரிவித்தார்.
Read More »நிலக்கரி சுரங்கங்களைச் சுற்றி பசுமை சூழலை உருவாக்கும் நடவடிக்கைகள்
நிலக்கரி சுரங்கங்கள், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பசுமைப் பரப்பை அதிகரிக்க, நிலக்கரித்துறை நிறுவனங்களான கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்), என்எல்சி இந்தியா லிமிடெட் (என்எல்சிஐஎல்), சிங்கரேணி நிலக்கரி கம்பெனி லிமிடெட் (எஸ்சிசிஎல்) ஆகியவை பாரம்பரிய நடைமுறைகளுடன் புதுமையான தொழில்நுட்பங்களையும் பின்பற்றுகின்றன. மூன்று அடுக்கு தோட்டம், விதைப் பந்து தோட்டம், மியாவாக்கி முறை, உயர் தொழில்நுட்ப நடவு முறைகள், மூங்கில் தோட்டம், சொட்டு நீர் பாசனத்தைப் பயன்படுத்துதல் போன்றவை இதில் அடங்கும். …
Read More »மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையில் ஈடுபட்டார்
மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான், புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் இன்று பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், விவசாயிகள், வேளாண் தொழில்முனைவோர், வேளாண் தொடர்பான பல்வேறு அமைப்புகள், விவசாய உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்டோர் பல்வேறு முக்கிய ஆலோசனைகளை எடுத்துரைத்தனர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சவுகான், அனைத்து பரிந்துரைகளையும் தாங்கள் உரிய மதிப்பாய்வு செய்து நிதியமைச்சருக்கு தெரிவிப்பதாக கூறினார். மேலும், வேளாண் துறை தொடர்பான அனைவருடனும் தொடர்ந்து பேச்சு நடத்தவுள்ளதாக திரு சவுகான் கூறினார். வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகமும் உள்நாட்டில் ஒரு ஆய்வை …
Read More »உள்நாட்டு நீர்வழிப் பாதைகளை ஊக்குவிக்க ‘ஜல்வாஹக்’ திட்டத்தை அரசு தொடங்கி வைத்தது
தேசிய நீர்வழிகள் 1 (கங்கை நதி), தேசிய நீர்வழிகள் 2 (பிரம்மபுத்திரா நதி), தேசிய நீர்வழிகள் 16 (பராக் நதி) வழியாக நீண்ட தூர சரக்குகளின் போக்குவரத்தை ஊக்குவிக்கும் சரக்கு மேம்பாட்டுக்கான ‘ஜல்வஹக்’ என்ற முக்கிய கொள்கையை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இன்று வெளியிட்டார். மத்திய அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால், எம்வி ஏஏஐ, எம்வி ஹோமி பாபா மற்றும் எம்வி திரிசூல் ஆகிய சரக்குக் கப்பல்களையும் அஜய் மற்றும் திகு ஆகிய இரண்டு தளவாடப் படகுகளையும் புதுதில்லி அரசு படகுத்துறையிலிருந்து இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். கொல்கத்தா – பாட்னா – வாரணாசி – பாட்னா – கொல்கத்தா இடையே ஒரு வழியாகவும், கொல்கத்தா மற்றும் குவஹாத்தியில் உள்ள பாண்டு இடையேயும் இந்தோ-வங்கதேச நெறிமுறை பாதை (ஐபிபிஆர்) வழியாகவும் குறிப்பிட்ட நாள் திட்டமிடப்பட்ட பாய்மரப் படகோட்ட சேவை இயக்கப்படும். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு சோனோவால், பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், நமது வளமான உள்நாட்டு நீர்வழிப் பாதைகளின் மிகப்பெரிய திறனை உணர அரசு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. சிக்கனமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, திறமையான போக்குவரத்து முறை என்ற அனுகூலத்தைக் கொண்டு, ரயில்வே மற்றும் சாலைப் போக்குவரத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, நீர்வழிகள் வழியாக சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்க நாங்கள் விரும்புகிறோம். ஜல்வாஹக் திட்டம் ஆகியவற்றில் நீண்ட தூர சரக்குகளை ஊக்குவிப்பதுடன், நேர்மறையான பொருளாதார மதிப்பு முன்மொழிவுடன் நீர்வழிகள் வழியாக சரக்குகளின் இயக்கத்தை ஆராய வர்த்தக நலன்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. மேலும், கொல்கத்தாவிலிருந்து தொடங்கும் வழக்கமான அட்டவணைப்படுத்தப்பட்ட சரக்கு சேவை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரக்குகளை கொண்டு சென்று வழங்குவதை உறுதி செய்யும். இது ஒரு திறமையான, சிக்கனமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான போக்குவரத்து முறையில் சரக்குகளை வழக்கமான இயக்கத்திற்கு தேசிய நீர்வழிகள் தயாராக உள்ளது என்ற நம்பிக்கையை நமது பயனர்களிடையே உருவாக்கும். இந்த ஊக்கத் திட்டத்துடன் நமது கப்பல் ஆபரேட்டர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமும், குறைந்த செலவில் பாதுகாப்பான மற்றும் சரியான நேரத்தில் சரக்குகளை வழங்குவதன் மூலம் நமது வணிக நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலமும், இந்தியா வளர்ச்சியடைந்த பாரதமாக மாறுவதை நோக்கி பயணிக்கும்போது போக்குவரத்து வழியாக மாற்றத்திற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் பார்வைக்கு இது அர்த்தம் சேர்க்கிறது என்று கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், வளமான நீர்வழிகள் 2014 முதல் புத்துயிர் பெற்று வருகின்றன. நீர்வழிகளை புனரமைப்பதில் தொடர்ச்சியான முதலீட்டுடன், இந்தத் திட்டங்கள் 2027 ஆம் ஆண்டுக்குள் ரூ .95.4 கோடி முதலீட்டில் எயல்படுத்தப்படும். 2014 வரை நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட நீல பொருளாதாரத்தின் மதிப்பை திறக்கவும் இது ஒரு தீவிர முயற்சியாகும். புத்துயிர் பெற்ற தேசிய நீர்வழிகள் அதன் செயல்திறனை கணிசமாக நகர்த்தியுள்ளன, ஏனெனில் 2013-14 ஆம் ஆண்டில் 18.07 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த சரக்குகளின் மொத்த அளவு 2023-24 ஆம் ஆண்டில் 132.89 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது, இது 700% க்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் நீர்வழிகள் மூலம் 200 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கொண்டு செல்ல இலக்கு நிர்ணயித்துள்ளோம். 2047-ம் ஆண்டில், சரக்கு போக்குவரத்துக்கு சாத்தியமான மாற்றாக உள்நாட்டு நீர்வழிகளின் வளர்ச்சியில் நம்பிக்கையுடன், 500 மில்லியன் மெட்ரிக் டன் இலக்கை நிர்ணயித்துள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்தார். மத்திய இணையமைச்சர் திரு சாந்தனு தாக்கூர், “நீர்வழிப் போக்குவரத்தை, குறிப்பாக வங்காளத்தைப் பொறுத்தவரை, இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம். பிரதமர் திரு. நரேந்திர மோடி யின் எழுச்சியூட்டும் தலைமையின் கீழ், நீர்வழிப் போக்குவரத்தில் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம், நீர்வழித் துறை, குறிப்பாக கிழக்கு இந்தியாவில், சரக்கு போக்குவரத்து இயக்கத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பத்தை ஏற்படுத்தும். சிக்கனமான, பயனுள்ள, திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறை சரக்கு மற்றும் பயணிகள் இயக்கத்தில் ஒரு புதிய காட்சியை உறுதியளிக்கிறது என்று தெரிவித்தார்.
Read More »
Matribhumi Samachar Tamil