லண்டனில் இன்று நடைபெற்ற இந்திய உலகளாவிய மன்றம் 2025 இல், இந்தியாவின் உத்தி ரீதியான உலகளாவிய கண்ணோட்டத்தையும் பொருளாதாரத் தலைமையையும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் காட்சிப்படுத்தினார். மே 2025 இல் இந்திய-இங்கிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து அவரது வருகை ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. “ஒப்பந்தம் முதல் செயல் வரை: இங்கிலாந்து-இந்தியா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்” என்ற தலைப்பில் இந்திய …
Read More »தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தனியார் டிஜிட்டல் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் புத்தொழில் நிறுவனங்களுக்கான சூழல் அமைப்பை வலுப்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகள், தொழில்முனைவு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தவும் ஏதுவாக மத்திய வர்த்தக அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, தனியார் டிஜிட்டல் தளமான யுவர்ஸ்டோரி மீடியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. நாடு முழுவதும் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும் அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் இந்த ஒப்பந்தம் …
Read More »சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நிலக்கரி உற்பத்தி நிறுவனம் நடத்தும் யோகா விழிப்புணர்வு இயக்கத்தில் 25000 பேர் பங்கேற்பு
நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள சிங்க்ரௌலியை தளமாகக் கொண்ட மினிரத்னா நிறுவனமான நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம், சமூகத்தில் யோகா மற்றும் அதன் சுகாதார நன்மைகளை ஊக்குவிக்கும் வகையில் 2025 ஜூன் 15 முதல் ஜூன் 20, வரை ஒரு பெரிய விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. 2025 ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்த பிரச்சாரம் நடைபெறுகிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், சர்வதேச …
Read More »மானேசரில் இந்தியாவின் மிகப் பெரிய பன்னோக்கு சரக்கு முனையம் திறப்பு
ரயில்வே, தகவல் ஒலிபரப்பு, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளுக்கான அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று (17.06.2025) ஹரியானாவின் மானேசரில் உள்ள மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நாட்டின் மிகப்பெரிய வாகன பன்னோக்கு சரக்குப் போக்குவரத்து முனையத்தை திறந்து வைத்தார். மானேசரில் உள்ள மாருதி சுசுகியின் ஆலையில் உள்ள இந்த முனையம், வாகனப் போக்குவரத்தில் சரக்குப் போக்குவரத்துத் திறனை கணிசமாக மேம்படுத்தும். இந்த முனையம் மானேசரிலிருந்து 10 …
Read More »வீட்டுக் கழிவு சேகரிப்பில் மின்சார வாகனங்கள் மூலம் நகர்ப்புறங்களில் 24,959 டன் கார்பன் வெளியேற்றம் குறைப்பு
தூய்மையான மற்றும் பசுமையான இந்தியாவை உருவாக்கும் முயற்சியாக நகர்ப்புறங்களில் வீட்டுக்கழிவு சேகரிப்பில் மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை கார்பன் உமிழ்வு, காற்று மற்றும் ஒலி மாசுபாடைக் குறைத்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற எதிர்காலத்திற்கு வழி வகுத்துள்ளது. ஆந்திரப் பிரதேசம் மாநிலம் குண்டூரில் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிப்பதற்காக 200-க்கும் மேற்பட்ட மின்சார ஆட்டோக்கள் …
Read More »ஏஐ 171 விமான விபத்து குறித்து சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு செய்தியாளர் சந்திப்பு – விரிவான பல்நோக்கு விசாரணை நடத்தப்படும் என அறிவிப்பு
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு, இணை அமைச்சர் திரு முரளிதர் மொஹோல், மூத்த அதிகாரிகள் ஆகியோர் இன்று புதுதில்லியில் உள்ள உதான் பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினார். ஏர் இந்தியா விமானம் ஏஐ 171-ன் துயர விபத்து குறித்தும், அரசின் உடனடி நடவடிக்கைகள், நடந்து வரும் விசாரணைகளின் நிலை, விமானப் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எதிர்கால சீர்திருத்தங்கள் ஆகியவை குறித்தும் அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு விளக்கினார். உயிர் இழந்தவர்களின் நினைவாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது. இதில் அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு பேசியது: “ஜூன் 12, 2025 அன்று, அகமதாபாத் – லண்டன் இடையே இயக்கப்படும் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானமான ஏர் இந்தியா விமானம் ஏஐ 171, புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள் விபத்துக்குள்ளானது. அகமதாபாத்தின் மக்கள் தொகை மிகுந்த மேகனி நகர் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விமானத்தில் 230 பயணிகள், 2 விமானிகள், 10 பணியாளர்கள் என 242 பேர் பயணம் செய்தனர். இறந்தவர்களில் பயணிகள், இளம் மருத்துவ மாணவர்கள் அடங்குவர். உடனடியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி விபத்து நடந்த இடத்துக்கும் மருத்துவமனைக்கும் சென்று பார்வையிட்டார். அங்கு காயமடைந்தவர்களுடன் கலந்துரையாடினார். மீட்பு, நிவாரண முயற்சிகளை ஆய்வு செய்தார். விமான நிலையத்தில் ஒரு உயர்மட்டக் கூட்டத்திற்கும் அவர் தலைமை தாங்கினார். சம்பவம் நடந்த உடனேயே உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா சம்பவ இடத்திற்கு சென்று, கள நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குமாறு மத்திய அமைப்புகள், நிறுவனங்களுக்கு அவர் அறிவுறுத்தினார். சம்பவம் நடந்த உடனேயே சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு, இணையமைச்சர் திரு முரளிதர் மொஹோல் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும், அவசர சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவ ஊழியர்களையும் சந்தித்தனர். விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB- ஏஏஐபி), அதே நாளில் விபத்து குறித்து முறையான விசாரணையைத் தொடங்கியது. ஏஏஐபி-யின் தலைமை இயக்குநர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு உடனடியாக அனுப்பப்பட்டது. ஜூன் 13 அன்று மாலை 5 மணியளவில் விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டதன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. டிகோடிங் செயல்முறை விமானத்தின் இறுதி தருணங்கள் குறித்த முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்பரிமாண மறுஆய்வுக்கான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணையை நடத்துவதற்காக மத்திய உள்துறைச் செயலாளரின் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் பின்வருவனவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளனர்: * சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் * உள்துறை அமைச்சகம் * குஜராத் அரசு * டிஜிசிஏ, பிசிஏஎஸ், இந்திய விமானப்படை, புலனாய்வுப் பணியகம் * மாநில பேரிடர் மீட்பு ஆணையம் * தேசிய, மாநில அளவிலான தடயவியல் நிபுணர்கள் இந்தக் குழு ஜூன் 16 திங்கள்கிழமை தனது பணகளைத் தொடங்க உள்ளது. சரிபார்க்கப்படாத தகவல்களைத் தவிர்க்குமாறு விமானப் போக்குவரத்து அமைச்சகம் பொதுமக்களையும் ஊடகங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. விசாரணைகள் முன்னேறும்போது அனைத்து அதிகாரப்பூர்வ தகவல்களும் சரியான நேரத்தில், வெளிப்படையான முறையில் பகிரப்படும். உண்மையை வெளிக்கொணர்வதிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்குவதிலும் அரசு தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.”
Read More »தில்லி-டேராடூன் வழித்தடத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மரக்கன்றுகளை நடும் இயக்கத்தை நடத்தியது
உள்கட்டமைப்பு மேம்பாட்டுடன் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் வகையில், உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் தில்லி-டேராடூன் பொருளாதார வழித்தடத்தில் இன்று மரம் நடும் இயக்கத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஏற்பாடு செய்தது. அன்னையின் பெயரில் மரக் கன்று நடும் இரண்டாம் கட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக, தில்லி-டேராடூன் வழித்தடத்தில் சுமார் 40,000 மரக்கன்றுகளை நடுவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. சாலைப் போக்குவரத்து – நெடுஞ்சாலை அமைச்சகத்தின் செயலாளர் திரு வி. உமாசங்கர், மரக்கன்றுகளை நடும் இயக்கத்தில் முதல் மரக்கன்றை நட்டார். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர் திரு சந்தோஷ் குமார் யாதவ், தேசிய நெடுஞ்சாலை ஆணைய மூத்த அதிகாரிகள் இந்த இயக்கத்தில் பங்கேற்று மரக் கன்றுகளை நட்டனர். பாக்பத் மாவட்ட ஆட்சியர் திருமதி அஸ்மிதா லால், காவல் கண்காணிப்பாளர் திரு சூரஜ் குமார் உள்ளிட்ட உள்ளூர் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளும் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர். பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று மரக் கன்றுகளை நட்டனர். தில்லி-டேராடூன் வழித்தடம் தில்லிக்கும் உத்தரகண்டிற்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்துகிறது. இந்த வழித்தடத்தில் சுமார் 40,000 மரக் கன்றுகளை நடுவது, காற்றின் தரத்தை மேம்படுத்தி, மண் அரிப்பைக் குறைத்து பல சுற்றுச்சூழல் நன்மைகளை இந்தப் பகுதிக்கு வழங்கும். அன்னையின் பெயரில் மரக்கன்று இடம் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இதுவரை 5,12,000-க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நட்டுள்ளது.
Read More »மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் விரிவான அரசு மற்றும் தொழில்துறையினர் உடனான பேச்சுவார்த்தை மூலம் இந்தியா-ஸ்வீடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறார்
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் இரண்டு நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். முதல் நாளில் ஸ்வீடன் அரசின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளில் அவர் ஈடுபட்டார். அவரது இந்தப் பயணம் இருதரப்பு பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்துதல், வர்த்தகம், முதலீட்டு திட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பின் புதிய வழிகளை கண்டறிவதை நோக்கமாகக் கொண்டதாகும். அமைச்சர் …
Read More »மின்சார வழித்தோன்றல்களை அறிமுகப்படுத்த எம்.சி.எக்ஸ். நிறுவனத்திற்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது
இந்தியாவின் எரிசக்தி சந்தையின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல் மும்பை: இந்தியாவின் முன்னணி பண்டக வழித்தோன்றல் பரிமாற்றமான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட் (எம்.சி.எக்ஸ்.), மின்சார வழித்தோன்றல்களை தொடங்க இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடமிருந்து (செபி) ஒப்புதல் பெற்றுள்ளது, இது இந்தியாவின் எரிசக்தி வர்த்தகத் துறையின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த வளர்ச்சி, ஒரு மாறும் மற்றும் நிலையான மின்சார …
Read More »ஒன்பது அமைப்புகளின் தொழில்நுட்பங்களை 10 தொழில் நிறுவனங்களுக்கு டிஆர்டிஓ மாற்றம்
பொது மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்புடன் ஒரு வலுவான பாதுகாப்பு தொழில்துறை சூழல் அமைப்பை நிறுவுவதற்கான அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, மகாராஷ்டிராவின் அஹில்யாநகரில் அமைந்துள்ள டிஆர்டிஓ ஆய்வகமான வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ஒன்பது அமைப்புகளின் தொழில்நுட்பங்களை 10 தொழில் நிறுவனங்களுக்கு மாற்றுவதன் மூலம் மிகப் பெரும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. நேற்று (ஜூன் 07, 2025 ) நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஒரு நிகழ்வின் போது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் …
Read More »
Matribhumi Samachar Tamil