சுரங்க அமைச்சகத்தின் துணை அலுவலகமான இந்திய சுரங்கப் பணியகம், 2023-24-ம் ஆண்டிற்கான நாடு தழுவிய 7 நட்சத்திர, 5 நட்சத்திர மதிப்பீடு பெற்ற சுரங்கங்களின் செயல்திறனை அங்கீகரிக்கும் ஒரு பிரமாண்டமான நிகழ்வை நடத்துகிறது. நாளை (07.07.2025 – திங்கள்கிழமை) ஜெய்ப்பூரில் நடைபெற உள்ள இந்த விழாவில், இத்துறை பிரமுகர்களும், சம்பந்தப்பட்ட தரப்பினரும் சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொள்வார்கள். மத்திய நிலக்கரி, சுரங்க அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி தலைமை …
Read More »உலக சுரங்க பேரமைப்பு கூட்டத்தில் இந்தியாவின் நிலையான சுரங்க தொலைநோக்குத் திட்டத்தை மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி எடுத்துரைத்தார்
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி ஹைதராபாத்தில் இன்று உலக சுரங்க பேரமைப்பின் இந்திய தேசிய குழு கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தேசிய மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்களை அவர் வரவேற்றார். பொறுப்பான, வெளிப்படையான, நிலையான சுரங்க நடைமுறைகளுக்கான இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் உறுதிப்படுத்தினார். 1958-ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல், உலக சுரங்க பேரமைப்பு, சுரங்கத் துறையில் ஒத்துழைப்பு, புதுமைகளை ஊக்குவிப்பதற்கான ஒரு அத்தியாவசிய உலகளாவிய தளமாக செயல்பட்டு வருவதாக …
Read More »இந்தியாவிலிருந்து 153 நாடுகள் பொம்மைகளை இறக்குமதி செய்கின்றன: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
ஒரு காலத்தில் இறக்குமதியையே பெரிதும் நம்பியிருந்த இந்தியாவின் பொம்மைத் தொழில், தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்து 153 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இன்று புதுதில்லியில் நடைபெற்ற 16வது பொம்மை வர்த்தக சர்வதேச பி2பி கண்காட்சி 2025-இல் உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இந்தக் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எடுத்துரைத்தார். நிலையான கொள்கை ஆதரவு, தரங்களை அமல்படுத்துதல் மற்றும் உள்ளூர் உற்பத்தித் தொகுப்புகளை வலுப்படுத்துதல் மூலம் இந்த மாற்றம் …
Read More »ரயில்ஒன் செயலி தொடக்கம்: அனைத்து பயணிகள் சேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு
ரயில்வே தகவல் அமைப்புகள் மையத்தின் 40-வது நிறுவன தினத்தையொட்டி புதுதில்லியில் இன்று ரயில் ஒன் என்ற புதிய செயலியை ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அறிமுகம் செய்தார். எளிதில் பயன்படுத்தக் கூடிய இந்த செயலியை ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது அனைத்து பயணிகள் சேவைகளையும் ஒருங்கிணைக்கிறது. முன்பதிவு செய்யப்படாத மற்றும் நடைமேடை டிக்கெட்டுகள் 3% தள்ளுபடியுடன் பெற்றுக்கொள்வது, …
Read More »மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2025 ஜூன் 30 முதல் ஜூலை 5 வரை ஸ்பெயின், போர்ச்சுகல், பிரேசில் நாடுகளுக்கு பயணம்
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2025 ஜூன் 30 முதல் ஜூலை 5 வரை ஸ்பெயின், போர்ச்சுகல், பிரேசில் நாடுகளுக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொள்கிறார். அவரது தலைமையில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையைச் சேர்ந்த இந்தியக் குழுவும் பயணம் மேற்கொள்கிறது. தனது பயணத்தின் ஒரு பகுதியாக, ஸ்பெயினில் உள்ள செவில்லி நகரில், ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4-வது சர்வதேச மேம்பாட்டு நிதி மாநாட்டில் கலந்து கொள்ளும் மத்திய நிதியமைச்சர், இந்தியா சார்பில் அறிக்கையை சமர்ப்பிக்கிறார் …
Read More »19-வது புள்ளியியல் தினத்தை முன்னிட்டு (ஜூன் 29, 2025) நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த பிரசுரங்கள் வெளியீடு
19-வது புள்ளியியல் தினத்தை முன்னிட்டு, இன்று (ஜூன் 29, 2025) புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) குறித்த தகவல்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது. தேசிய முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில், நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) செயல்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், தொடர்புடைய அமைச்சகங்கள்/துறைகள், ஐநா நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினருடன் கலந்தாலோசித்து, நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான தேசிய குறியீட்டுக் கட்டமைப்பை (NIF) உருவாக்கியுள்ளது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் புள்ளியியல் தினத்தன்று (அதாவது, ஜூன் 29 அன்று), புள்ளியியல் அமைச்சகம் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த முன்னேற்ற அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இதில் இந்த 2025-ம் ஆண்டு புள்ளியியல் தினத்தை முன்னிட்டு, இன்று (ஜூன் 29, 2025) புள்ளியியல் அமைச்சகம் அது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. நிலையான வளர்ச்சி இலக்குகள் தேசிய குறியீட்டுக் கட்டமைப்பு முன்னேற்ற அறிக்கை -2025 என்ற இது 17 நிலையான வளர்ச்சி இலக்குகளில் தேசிய அளவிலான முன்னேற்றத்தைக் கண்காணிப்பதில் ஒரு முக்கிய கருவியாக இருக்கும். நிலையான வளர்ச்சி இலக்குகள் பற்றிய இந்த அறிக்கைகள் பொதுமக்கள் எளிதாக அணுகக்கூடியவை. www.mospi.gov.in என்ற புள்ளியியல் அமைச்சகத்தின் இணையதளத்தில் இவை இடம்பெற்றுள்ளன.
Read More »இந்திய மின் துறைக்கான வலுவான டிஜிட்டல் அமைப்பை உருவாக்க ‘இந்திய எரிசக்தித் தொகுப்பு’ என்ற கட்டமைப்பை மின்துறை அமைச்சகம் உருவாக்குகிறது
இந்திய எரிசக்தித் துறைக்கு ஒருங்கிணைந்த, பாதுகாப்பான, டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோடி முயற்சியாக இந்தியா எரிசக்தி தொகுப்பு (IES) என்ற கட்டமைப்பை உருவாக்க ஒரு பணிக்குழுவை அமைப்பதாக மின்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் செல்கிறது. நிகர பூஜ்ஜிய உமிழ்வு உறுதிமொழிகளை நோக்கி இந்தியா முன்னேறும்போது, மின் துறை பெரிய வாய்ப்புகளையும் சிக்கலான சவால்களையும் எதிர்கொள்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகனங்கள், எரிசக்தி சந்தைகளில் நுகர்வோர் பங்கேற்பு ஆகியவற்றில் விரைவான வளர்ச்சி இந்தத் துறையை மாற்றி வருகிறது. ஆனால் துண்டு துண்டான அமைப்புகள் இருப்பதும், தடையற்ற டிஜிட்டல் ஒருங்கிணைப்பு இல்லாததும் முக்கிய தடைகளாகவே உள்ளன. இவற்றை நிவர்த்தி செய்வதற்காக, மின்சார அமைச்சகம், மின் மதிப்புச் சங்கிலி முழுவதையும் நிர்வகிக்க, ஒரு தரப்படுத்தப்பட்ட, பாதுகாப்பான தளமாக, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) எனப்படும் இந்தியா எனர்ஜி ஸ்டேக் (IES -ஐஇஎஸ்) என்ற இந்திய எரிசக்தித் தொகுப்பு மூலம் இத்துறையின் டிஜிட்டல் அடித்தளத்தை வலுப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஐஇஎஸ் மூலமான நன்மைகள்: *நுகர்வோர், சொத்துக்கள் மற்றும் பரிவர்த்தனைகளுக்குத் தனித்துவமான அடையாளங்கள் * உடனடி, ஒப்புதல் அடிப்படையிலான தரவு பகிர்வு * தடையற்ற ஒருங்கிணைப்புக்கான திறந்த நடைமுறை * நுகர்வோர் அதிகாரமளித்தல், சந்தை அணுகல் மற்றும் புதுமைக்கான அம்சங்கள் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மத்திய மின்துறை அமைச்சர் திரு மனோகர் லால், நாட்டில் அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும், மின்துறையில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கவும் மின் துறையில் வலுவான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அவசரத் தேவை உள்ளது என்றார். இந்தியா எனர்ஜி ஸ்டேக் (IES – ஐஇஎஸ்) எனப்படும் இந்திய எரிசக்தித் தொகுப்பு போன்ற டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஒருங்கிணைப்பதிலும், விநியோகச் செயல்திறனை மேம்படுத்துவதிலும், வெளிப்படையான, நம்பகமான மின் சேவைகளை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார். ஐஇஎஸ் தொடர்பான முயற்சிகளை வழிநடத்த, மின்துறை அமைச்சகம் தொழில்நுட்பம், மின் துறை மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட ஒரு பிரத்யேக பணிக்குழுவை அமைத்துள்ளது.
Read More »பயோமாஸ் (உயிரிப் பொருள் திரள்) திட்ட வழிகாட்டுதல்களில் முக்கிய திருத்தங்களை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், தேசிய பயோமாஸ் திட்டத்தின் கட்டம்-I-ன் கீழ் பயோமாஸ் எனப்படும் உயிரி எரிபொருள் திட்டத்திற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது, இது 2021–22 முதல் 2025–26 வரையிலான நிதியாண்டிற்குப் பொருந்தும். இந்தத் திருத்தங்கள் தூய்மையான எரிசக்தி தீர்வுகளை ஊக்குவித்தல், வணிகம் செய்வதை எளிதாக்குதல், இந்தியா முழுவதும் பயோமாஸ் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன. புதிய கட்டமைப்பின் கீழ், காகித கோப்புகள் மூலமான பணிகளைக் குறைத்தல், ஒப்புதல் நடைமுறைகளை எளிதாக்குதல் போன்ற பல செயல்முறைகளை அமைச்சகம் எளிமைப்படுத்தியுள்ளது. இது இந்த தொழில்துறையில் குறிப்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள தங்கள் உற்பத்தியை மேம்படுத்த உதவும். இந்த மாற்றங்கள், 2070-ம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் பரந்த இலக்கை அடையவும், பயிர்க் கழிவு மேலாண்மை தொடர்பான முன்னேற்றத்தை அடையவும் பங்களிக்கும். இந்த திருத்தத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, எஸ்சிஏடிஏ போன்ற உயர் தொழில்நுட்ப அமைப்புகளுக்குப் பதிலாக ஐஓடி அடிப்படையிலான கண்காணிப்பு தீர்வுகள் அல்லது காலாண்டு தரவு சமர்ப்பிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு செய்வதாகும். இந்த செலவு குறைந்த நடவடிக்கை, குறிப்பாக சிறு வணிக நிறுவனங்களை ஊக்குவிக்கிறது. மேலும், மத்திய நிதி உதவி (CFA) அம்சங்களின் கீழ் மானிய விநியோக வழிமுறை செயல்திறன் அடிப்படையிலானதாகவும் வெளிப்படையானதாகவும் மாற்றப்பட்டுள்ளது. முழு அளவில் திறன் வாய்ந்த முறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முழு நிதி உதவியைப் பெறும். அதே நேரத்தில் குறைந்த செயல்திறனுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு விகிதாசார அடிப்படையில் நிதி கிடைக்கும். இந்தத் திருத்தங்கள் பயோமாஸ் திட்டத்தை சீராக செயல்படுத்துவதற்கும், செயல்பாட்டுக்கு வந்த ஆலைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட நிதி உதவியை சரியான நேரத்தில் வழங்குவதற்கும் மட்டுமல்லாமல், இந்த துறை முழுவதையும் ஊக்குவிக்கும்.
Read More »மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலமும் – சி-டாக் நிறுவனமும் இணைந்து டிஜிட்டல் திறன் இடைவெளியைக் குறைப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொள்கின்றன
மேம்பட்ட டிஜிட்டல் திறன்களுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கும், கல்வி, தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப அதற்கான தொழில்நுட்பத் திறன் அடிப்படையிலான இடைவெளியைக் குறைப்பதற்கும் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மெட்ராஸ் ஏற்றுமதி மேம்பாட்டு மண்டலம் – சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் சி-டாக் இணைந்து டிஜிட்டல் திறனை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. சி-டாக் நிறுவனத்தின் வலுவான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் …
Read More »பதான்கோட்டிலிருந்து கத்தாருக்கு ரோஜா வாசனையுடன் கூடிய லிச்சிப் பழங்கள் ஏற்றுமதி
நாட்டின் தோட்டக்கலை விளைபொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசின் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், பஞ்சாப் மாநில வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து, ஜூன் 23-ம் தேதி பஞ்சாபில் உள்ள பதான்கோட்டிலிருந்து கத்தார் நாட்டின் தோஹா நகருக்கு ஒரு மெட்ரிக் டன் ரோஜா வாசனையுடன் கூடிய லிச்சிப் பழங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. …
Read More »
Matribhumi Samachar Tamil