குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 15, 2025) ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பிட் மெஸ்ராவின் வைர விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். இதில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நமது காலம் தொழில்நுட்ப யுகம் என்று கூறினார். தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய முன்னேற்றங்கள் நாம் வாழும் முறையை மாற்றியுள்ளன. நேற்று வரை நினைத்துப் பார்க்க முடியாதது இன்று நிஜமாகிவிட்டது. வரும் …
Read More »ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்
ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் திருமதி. நிதி கரே மற்றும் ஆணையர் திரு அனுபம் மிஸ்ரா ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர் நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி, எந்தவொரு பொருட்கள் அல்லது சேவைகள் குறித்தும் தவறான வகையில் விளம்பரம் …
Read More »நீங்கள் சரியாக சாப்பிட்டால், உங்களால் தேர்வுகளை சிறப்பாக எழுத முடியும்!: பிரதமர்
சரியான உணவை உட்கொள்வதும், நன்றாகத் தூங்குவதும் தேர்வுகளை சிறப்பாக எழுத உதவும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவுறுத்தி இருக்கிறார். தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நான்காவது அத்தியாயத்தை நாளை காணுமாறு அவர் கேட்டுக்கொண்டார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவிற்கு பதிலளித்து திரு மோடி கூறியதாவது: “நீங்கள் சரியாக சாப்பிட்டால், உங்களால் தேர்வுகளை சிறப்பாக எழுத முடியும்! தேர்வு குறித்த கலந்துரையாடல் …
Read More »தேர்வு தொடர்பான ஆலோசனை நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடல்
தேர்வு குறித்த ஆலோசனை நிகழ்ச்சியின் 8-வது பதிப்பில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் உள்ள சுந்தர் நர்சரி பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். நாடு முழுவதும் உள்ள மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், பல்வேறு தலைப்புகளில் அவர்களுடன் விவாதித்தார். குளிர்காலத்தில் உடலை சூடாகப் பராமரிக்க உதவிடும் வகையில் பாரம்பரிய உணவுகள் (எள்) உட்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். ஊட்டச்சத்து என்ற தலைப்பைச் சுட்டிக் காட்டி பேசியபோது பிரதமர் ஐ.நா. சபை 2023- ஆண்டை ‘சர்வதேச சிறுதானிய ஆண்டாக’ அறிவித்தது. …
Read More »புதுதில்லி உலக புத்தக கண்காட்சியில் 41 புத்தகங்களை திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்
புது தில்லி உலக புத்தகக் கண்காட்சி 2025-ல் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமரின் யுவா 2.0 திட்டத்தின் கீழ் 41 புதிய புத்தகங்களை மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். திரிபுரா ஆளுநர் திரு இந்திரசேன ரெட்டி நல்லு, இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் உரையாற்றிய திரு தர்மேந்திர பிரதான், புத்தகங்கள் வெளியிடப்பட்ட 41 இளம் எழுத்தாளர்களை வாழ்த்தினார். அவர்களின் திறனில் நம்பிக்கையை …
Read More »புதிய மற்றும் உயிரோட்டமான வடிவத்தில் ‘தேர்வு குறித்த கலந்துரையாடல்’ மீண்டும் வருகிறது: பிரதமர்
தேர்வு குறித்த கலந்துரையாடல் 2025-ஐப் பார்க்குமாறு அனைத்து தேர்வு வீரர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரைப் பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இது மன அழுத்தமில்லாத தேர்வுகளின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய 8 மிகவும் சுவாரஸ்யமான அத்தியாயங்களைக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளதாவது: “தேர்வு குறித்த கலந்துரையாடல் மீண்டும் வந்துவிட்டது, அதுவும் புதிய மற்றும் உயிரோட்டமான வடிவத்தில்!” ”அனைத்து தேர்வு வீரர்கள், அவர்களின் …
Read More »நொய்டாவில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனத்தில் சிப் வடிவமைப்பிற்கான சிறப்பு மையத்தை மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன் திறந்துவைத்தார்
மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன் நொய்டா வளாகத்தில் உள்ள தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் சிப் வடிவமைப்பு சிறப்பு மையத்தை திறந்து வைத்தார். தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு மையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான சாக்டீம்அப் செமிகண்டக்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சி, இந்தியாவின் குறைமின்கடத்தி வடிவமைப்பு, மேம்பாட்டு திறன்களை முன்னேற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கிறது. மத்திய அரசின் …
Read More »கார்பன் நீக்கத்திற்கான திறனை மேம்படுத்த ஐஐசிஏ மற்றும் சிஎம்ஏஐ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
இந்தியாவின் கார்பன் நீக்க முயற்சிகளை முன்னெடுப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக, இந்திய பெருநிறுவன விவகார நிறுவனம் (ஐஐசிஏ) மற்றும் இந்திய கார்பன் சந்தை சங்கம் (சிஎம்ஏஐ) ஆகியவை புதுதில்லியில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. பிப்ரவரி 4-ம் தேதி உலகளாவிய மற்றும் இந்திய கார்பன் சந்தைகள் குறித்த நிகழ்ச்சியின் தொடக்க நாளில் இந்த மைல்கல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் …
Read More »பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
செகந்திராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரி , தனது வருடாந்திர தேசிய கருத்தரங்கை ஜனவரி 30-31 ஆகிய தேதிகளில் நடத்தியது. மூத்த ராணுவ அதிகாரிகள், வியூக வல்லுநர்கள் மற்றும் முன்னணி கல்வியாளர்கள் இதில் கலந்து கொண்டு, நவீன போரில் உருவாகி வரும் தலைமைத்துவ கட்டமைப்பு குறித்து விவாதித்தனர். சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் சிக்கலான புவிசார் அரசியல் மாற்றங்களின் சகாப்தத்தில் தகவமைப்புத் தலைமையின் முக்கியமான தேவையை வலியுறுத்தி, பாதுகாப்புப் படைத் தளபதி …
Read More »தமிழ்நாட்டின் மத்திய பல்கலைக்கழகம் புவிசார் தகவல் குறித்த தேசிய பயிலரங்கை நடத்துகிறது
தமிழ்நாட்டின் மத்திய பல்கலைக்கழகம் புவிசார் தகவல் குறித்த தேசிய பயிலரங்கை நடத்துகிறது. நேற்று (27.01.2025) தொடங்கிய இந்தப் பயிலரங்கு வரும் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்க நிலை பயிற்சியாளர்களுக்கான இந்தப் பயிலரங்கு புவிப்பரப்பு தொழில்நுட்பங்களின் அடிப்படைகளை அறிமுகம் செய்தல், தொலை உணர்வு, புவிசார் வரைபட தகவல் முறை, உலகளாவிய நிலப்பகுதி வழிகாட்டுதல் செயற்கைக் கோள் நடைமுறைகள், ட்ரோன் மூலம் ஆய்வு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இந்தப் …
Read More »
Matribhumi Samachar Tamil