சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மக்களிடையே தேசபக்தி உணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு முன்னெடுத்துள்ள இல்லந்தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்தின் ஒரு பகுதியாக, புதுவைப் பல்கலைக்கழகம் 2025 ஆகஸ்ட் 13 அன்று தேசப் பெருமிதத்துடன் மனிதச் சங்கிலி நிகழ்வை நடத்தியது. மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கையில் தேசியக் கொடி ஏந்தி, ஒற்றுமை, நேர்மை மற்றும் மக்களின் ஒட்டுமொத்த வலிமையை குறிக்கும் …
Read More »தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் மாபெரும் நிகழ்வு புதுவைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது
புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் நலன் அலுவலகம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை ஆகியவை இணைந்து, “வளர்ச்சியடைந்த பாரத இளைஞர்கள் இணைப்பு” மற்றும் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கம் 2.0-இன் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடும் மாபெரும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு முதலாவது மரக்கன்றை நட்டுத் தொடங்கிவைத்தார். மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம், கொய்யா, நெல்லிக்காய், நீலச்செடி போன்ற …
Read More »புதுச்சேரி ஜிப்மரில் திறன் மேம்பாட்டு பிரிவு
புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்வி நிறுவனம் திறன் மேம்பாட்டு பிரிவினை நிறுவியுள்ளதன் மூலம் மத்திய அரசின் கர்மயோகி இயக்கத்தில் இணைந்துள்ளது. இந்த முயற்சி மத்திய அரசின் திறன் மேம்பாட்டு ஆணையம், பணியாளர், பயிற்சித் துறை ஆகியவற்றின் நெறிமுறைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்மயோகி இயக்கம் அரசின் பொது சேவை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றுவதற்கான திறனை மேம்படுத்த வகை செய்கிறது. இதில் பயிற்சி பெறுவதன் மூலம் …
Read More »புதுவைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அரசின் திறன் மேம்பாட்டு ஆணையம் இனைந்து “கர்மயோகி திட்டம்” மூன்று நாள் முதன்மை பயிற்சியாளர் பயிலரங்கை வெற்றிகரமாக நடத்தியது
இந்திய அரசின் திறன் மேம்பாட்டு ஆணையம் மற்றும் புதுவைப் பல்கலைக்கழகம் இணைந்து, ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2, 2025 வரை, மூன்று நாள் முதன்மை பயிற்சியாளர் பயிலரங்கத்தை வெற்றிகரமாக நடத்தியது. இந்த பயிலரங்கு, “கர்மயோகி திட்டம்” என்ற தேசிய அளவிலான திறன் மேம்பாட்டு திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், இந்திய நெறிமுறைகளில் வேரூன்றிய, திறமையான மற்றும் பொறுப்பான பொது நிர்வாக சேவையை உருவாக்குதல் …
Read More »தேசிய கல்விக் கொள்கை 2020 இந்தியக் கல்வியை எவ்வாறு முழுமையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், எதிர்காலத்திற்குத் தயாரானதாகவும் மாற்றியுள்ளது என்பதை விளக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
தேசிய கல்விக் கொள்கை 2020 இந்தியக் கல்வியை எவ்வாறு முழுமையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், எதிர்காலத்திற்குத் தயாரானதாகவும் மாற்றியுள்ளது என்பதை விளக்கும் கட்டுரை ஒன்றைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கல்வி அமைச்சகப் பதிவுக்குப் பதிலளித்துப் பிரதமர் அலுவலக எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: “தேசிய கல்விக் கொள்கை 2020 இந்தியக் கல்வியை எவ்வாறு முழுமையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், எதிர்காலத்திற்குத் தயாரானதாகவும் மாற்றியுள்ளது என்பதை …
Read More »தேசிய கல்விக் கொள்கை 2020-ன் 5 ஆண்டுகள் நிறைவையொட்டி, அகில இந்திய கல்வி மாநாடு 2025-ஐ புதுதில்லியில் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் 5 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில், மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று புது தில்லியில் அகில இந்திய கல்வி மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்தார். கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், அரசு பிரதிநிதிகள் ஆகியோர் தேசிய கல்வி கொள்கை 2020-ன் கீழ் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கான தளமாக இம்மாநாடு நடத்தப்பட்டது. கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் …
Read More »தேசிய கல்விக் கொள்கை 2020 இன் 5வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாளை பாரத் மண்டபத்தில் அகில இந்திய கல்வி மாநாடு 2025 ஐ கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைக்கிறார்
கல்வி அமைச்சகம் ஜூலை 29, 2025 அன்று பாரத் மண்டபம் வளாகத்தில் தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020 இன் 5வது ஆண்டு நிறைவை ஒட்டி அகில இந்திய கல்வி மாநாடு, 2025 ஐ ஏற்பாடு செய்கிறது. நாள் முழுவதும் நடைபெறும் விவாதங்களை கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைப்பார். தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020 இன் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்த மாநாடு, …
Read More »புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறை சார்பில் இரண்டு ஆய்வு மையங்கள் – துணைவேந்தர் திறந்து வைத்தார்
புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் கீழ் இரண்டு முன்னோடி ஆராய்ச்சி மையங்களை பல்கலைக்கழக துணைவேந்தர் தொடங்கி வைத்தார். அகாமிக் ஆய்வுகள் மற்றும் பாறைக் கலை மற்றும் அறிவாற்றல் ஆய்வுகளில் கவனம் செலுத்தும் வகையில் இந்ந ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவில், துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு வரலாற்றுத் துறையின் கீழ் நிறுவப்பட்ட இரண்டு புதிய ஆராய்ச்சி மையங்களை திறந்து வைத்தார். இவை ஒன்றாண்டு முதுகலை டிப்ளோமா பாடத்திட்டத்துடன் செயல்பட உள்ளன. …
Read More »நாட்டிலேயே எடை குறைந்த சக்கர நாற்காலியை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி மெட்ராஸ்), ‘ஒய்டி ஒன்’ என்ற சக்கர நாற்காலியை உருவாக்கி அதை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவிலேயே மிகவும் எடை குறைந்த சக்கர நாற்காலி இது என ஐஐடி கூறியுள்ளது. இந்த ஒற்றை குழாய் திட அமைப்பு (‘மோனோ-டியூப் ரிஜிட் ஃபிரேம்’) சக்கர நாற்காலி உள்நாட்டிலேயே துல்லியமாகக் கட்டமைக்கப்பட்டதாகும். சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்ட ‘ஒய்டி ஒன்’, பயனாளிகளின் உடல் அமைப்புக்கும், அவர்களின் தினசரி செயல்பாட்டுத் தேவைகளுக்கும் ஏற்ப …
Read More »துணை மருத்துவ பணியாளர்கள் சுகாதார நடைமுறையின் முதுகெலும்பு ஆவர்: புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி பிரகாஷ் பாபு
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இணைப்புப் பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக இப்பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி பிரகாஷ் பாபு பங்கேற்றார். துணை மருத்துவப் படிப்பில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு பட்டங்களை வழங்கிய அவர், பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ஐ வடிவமைப்பதில் துணை மருத்துவப் பணியாளர்களின் முக்கியத்துவம் பற்றி அவர் எடுத்துரைத்தார். இந்த விழா இங்கு கூடியுள்ள இளைஞர்களுக்கு ஒரு மைல் கல்லாக …
Read More »
Matribhumi Samachar Tamil