மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், சென்னையில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனங்கள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய நிறுவனத்தை இன்று பார்வையிட்டார். அமைச்சரின் இந்தப் பயணத்தின் போது, என்.ஐ.இ.பி.எம்.டி.க்கு வழங்கப்பட்ட தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுமத்தின் (என்ஏஏசி) சான்றிதழை வெளியிட்டார். இது ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள் கொண்ட நபர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் சிறந்து விளங்கும் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க செயல்பாடுகளைக் குறிக்கிறது. ஆட்டிசம் மேலாண்மை குறித்த இ- புத்தகத்தையும் வெளியிட்டார். டாக்டர் வீரேந்திர குமார் என்.ஐ.இ.பி.எம்.டி வளாகத்தில் தேசிய திறந்தநிலை பள்ளியின் (என்.ஐ.ஓ.எஸ்) மையத்தை திறந்து வைத்தார். இந்த மையம் குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு கல்வியை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர்களின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப தரமான கல்வி, திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை பெறுவதை உறுதி செய்கிறது. இந்த ஆண்டு பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பயிற்சி பெற்று பதக்கங்களை வென்ற பல்வேறு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர்களின் விடாமுயற்சியைப் பாராட்டிய அவர், திறமையை வளர்த்து கொள்வதிலும், விளையாட்டில் உள்ளடக்கிய தன்மையை ஊக்குவிப்பதிலும் நிறுவனத்தின் முயற்சிகளைப் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியின் போது, என்ஏஏசி சான்றிதழ், பயிற்சி, ஆராய்ச்சி, மறுவாழ்வு சேவைகளில் உயர் தரத்தை பராமரிப்பதற்கான என்.ஐ.இ.பி.எம்.டி.-ன் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று அமைச்சர் கூறினார். என்.ஐ.ஓ.எஸ் மையத்தை தொடங்குவதன் மூலம், கல்வி கற்பதில் உள்ள இடைவெளியை குறைப்பதிலும், வாழ்நாள் முழுவதும் கற்றலை ஊக்குவிப்பதிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதிலும் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார். உள்ளடக்கிய, நெகிழ்வு தன்மையுடன் கூடிய கற்றல் முறைகளை வழங்குவதன் மூலம், ஒரு சமமான, உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கும் அரசின் பார்வையுடன் ஒத்துப்போகிறது. பல்வேறு குறைபாடுகள் கொண்ட திறமையான நபர்களை ஊக்குவிக்கும் வகையில் என்.ஐ.இ.பி.எம்.டி மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
Read More »புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை 2025 ஜனவரி 4 அன்று நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது
1985 ஜனவரி 4 அன்று நிறுவப்பட்ட அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை தனது 40-வது நிறுவன தினத்தை 2025 ஜனவரி 4 அன்று புதுதில்லி ஜன்பத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் கொண்டாட உள்ளது. மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்குவார். …
Read More »ஐஐடி மெட்ராஸ் மத்திய வேளாண் அமைச்சகத்தின் விஸ்தார் (VISTAAR) திட்டத்தில் இணைந்து செயல்படவிருக்கிறது
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), இந்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துடன் இணைந்து, டிஜிட்டல்மயமாக்கல் மூலம் வேளாண் விரிவாக்க முறையின் செயல்திறனையும் வலிமையையும் மேம்படுத்தும் விஸ்தார் திட்டத்தில் இணைந்து செயல்பட உள்ளது. விவசாய விரிவாக்க முறையை மேலும் வலுப்படுத்துவதற்கான முன்னோடித் திட்டம்தான் விஸ்தார். புதிய தயாரிப்புகளையும் சேவைகளையும் சந்தைக்குக் கொண்டு வருவதற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில், புதிய கண்டுபிடிப்புகளையும் திறன்களையும் ஸ்டார்ட்-அப்கள் வழங்குகின்றன. விவசாயத் துறையில் உள்ள சூழல் காரணமாக, விநியோகம்- தேவை ஆகிய …
Read More »திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் கூட்டம் 2025, ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறும்
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் கூட்டம் 2025, ஜனவரி 4, 2025 அன்று சென்னையில் நடைபெறும் என்று தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் திருமதி ஜி.அகிலா அறிவித்தார். தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் (பிராந்திய பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம்) முன்முயற்சியின் காரணமாக இந்த முக்கிய நிகழ்வு நடத்தப்பட உள்ளது. திருச்சியின் பிராந்திய பொறியியல் கல்லூரி/ தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வளமான மாண்பைக் கொண்டாடுவதற்காக, உலகெங்கிலும் உள்ள திருச்சி தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் மாணவர்களை இந்த நிகழ்வு ஒன்றிணைக்கும். முந்தைய உலகளாவிய முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்றது. 930 க்கும் மேற்பட்ட தலைமை …
Read More »சென்னை ஐஐடி-ன் சாஸ்த்ரா வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழா 2025 ஜனவரி 3-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடைபெறுகிறது
(சென்னை ஐஐடி), நாட்டிலேயே மிகப் பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் சாஸ்த்ரா திருவிழாவின் 26-வது ஆண்டு நிகழ்வை 2025-ம் ஆண்டு ஜனவரி 3-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் நடத்த உள்ளது. முற்றிலும் மாணவர்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் இந்த மாபெரும் நிகழ்வில் சென்னை ஐஐடி-ன் 750-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். ஐஎஸ்ஓ 9001:2015 சான்றளிக்கப்பட்ட இந்த விழாவில் 130 அரங்குகள் இடம்பெறுகின்றன. தொடர்ச்சியாக 80 நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், ஐந்து நாட்களில் 70,000 பேர் வரை இந்நிகழ்ச்சியை பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிகள், மாநாடுகள், விரிவுரைகள், கண்காட்சிகள், பயிலரங்கங்கள் வாயிலாக இந்த அறிவியல்- தொழில்நுட்ப நிகழ்வை சாஸ்த்ரா கொண்டாடவிருக்கிறது. இக்கல்வி நிறுவன வளாகத்தில் இன்று (30 டிசம்பர் 2024) சாஸ்த்ரா 2025 நிகழ்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “சாஸ்த்ரா போன்ற மாபெரும் நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம், மாணவர்களிடையே நிர்வாகத் திறன், அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு, பொது நோக்கத்திற்காக பெரிய குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் திறன் போன்ற உயர் பண்புகளை வளர்க்கச் செய்கிறது. சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவர்கள் இதுபோன்ற தேசிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் தங்களது திறன்களை வெளிக்கொண்டு வர உதவுகிறது. பல்வேறு அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோர் மட்டுமின்றி, தலைசிறந்த முக்கிய பிரமுகர்களையும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படும் என்று அவர் கூறினார். சாஸ்த்ரா 2025-ன் விழாவின் பங்கேற்பாளர்களில் ஒருவரான தேசிய கடல்சார் தொழில்நுட்ப பல்கலைக் கழக இயக்குநர் டாக்டர் பாலாஜி ராமகிருஷ்ணன் கூறும்போது, “சென்னை ஐஐடி-ன் சாஸ்த்ரா 2025 நிகழ்ச்சியில் பங்கேற்பதில் தேசிய கடல்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பெருமிதம் கொள்கிறது. தொழில்நுட்பம், கடல்சார் அறிவியல் போன்றவற்றில் அன்றாட சவால்களுக்குத் தீர்வுகாண இளைஞர்களை ஊக்குவிப்பதிலும், கண்டுபிடிப்புகளை ஆதரிப்பதிலும் இந்த இரு கல்வி நிறுவனங்களின் இலக்கும் ஒரே மாதிரியாக உள்ளது என்று கூறினார். செயற்கை நுண்ணறிவு, ரோபாடிக்ஸ், நீடித்த கடல்சார் தொழில்நுட்பங்கள் போன்ற அதிநவீன துறைகளில் கூட்டு ஆராய்ச்சி, திறன் மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், கல்வி, தேசிய கடல்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் நிபுணத்துவம் ஆகியவற்றுக்கு இடையேயான அறிவு பரிமாற்றத்திற்கான தனித்துவமிக்க தளத்தை இந்த நிகழ்ச்சி வழங்குகிறது” எனத் தெரிவித்தார்.
Read More »திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் கூட்டம் 2025, ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறும்
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் கூட்டம் 2025, ஜனவரி 4, 2025 அன்று சென்னையில் நடைபெறும் என்று தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் திருமதி ஜி.அகிலா அறிவித்தார். தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் (பிராந்திய பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம்) முன்முயற்சியின் காரணமாக இந்த முக்கிய நிகழ்வு நடத்தப்பட உள்ளது. திருச்சியின் பிராந்திய பொறியியல் கல்லூரி/ தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வளமான மாண்பைக் கொண்டாடுவதற்காக, உலகெங்கிலும் உள்ள திருச்சி தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் மாணவர்களை இந்த நிகழ்வு ஒன்றிணைக்கும். முந்தைய உலகளாவிய முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்றது. 930 க்கும் மேற்பட்ட தலைமை …
Read More »2025-ம் ஆண்டு குடியரசு தின முகாமில் 917 மாணவிகள் உட்பட 2,361 தேசிய மாணவர் படையினர் பங்கேற்பு
தேசிய மாணவர் படையினருக்கான குடியரசு தின முகாம்-2025 தில்லி கண்டோன்மெண்டில் உள்ள கரியப்பா மைதானத்தில் 2024-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி “சர்வ தர்ம பூஜையுடன்” தொடங்கியது. இந்த முகாமில் 917 மாணவிகள் பங்கேற்பதன் மூலம், இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான பெண் மாணவர் படையினர் இடம்பெற்றுள்ளார்கள். நாட்டில் உள்ள 28 மாநிலங்கள், 08 யூனியன் பிரதேசங்களிலிருந்து மொத்தம் 2,361 தேசிய மாணவர் படையினர் இந்த ஒரு மாத கால …
Read More »ரெனால்ட் நிசான் டெக்னாலஜி- பிசினஸ் சென்டர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து திறமை மேம்பாடு- கண்டுபிடிப்புகளில் சென்னை ஐஐடி இணைந்து செயல்பட உள்ளது
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), திறமை மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு ரெனால்ட் நிசான் டெக்னாலஜி- பிசினஸ் சென்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. இந்தக் கூட்டாண்மையின் மூலம் பிஎஸ் பட்டப்படிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ள 35,000 மாணவ-மாணவிகளுக்கு உள்ளகப் பயிற்சி, பணிநியமன வாய்ப்புகளை சென்னை ஐஐடி வழங்கும். திறன் மேம்பாடு, அறிவுப் பரிமாற்றத்தை வளர்ப்பதற்கு இது வலுமான கட்டமைப்பை ஏற்படுத்தும். இந்தக்கூட்டு முயற்சியின் …
Read More »மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப்பணிகள் தேர்வு 2022 மற்றும் 2023 முடிவுகள் பற்றி தவறான கூற்றுகளை விளம்பரப்படுத்தியதற்காக வஜிராவ் & ரெட்டி இன்ஸ்டிடியூட், ஸ்டடி ஐக்யூ ஐஏஎஸ் ஆகியவற்றுக்கு தலா ரூ. 7 லட்சமும், எட்ஜ் ஐஏஎஸ்-க்கு ரூ .1 லட்சமும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அபராதம் விதித்துள்ளது
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய குடிமைப்பணிகள் தேர்வு (யுபிஎஸ்சி சிஎஸ்இ) 2022 மற்றும் 2023 முடிவுகள் பற்றி தவறான கூற்றுகளை விளம்பரப்படுத்தியதற்காக வாஜிராவ் & ரெட்டி இன்ஸ்டிடியூட், ஸ்டடிஐக்யூ ஐஏஎஸ் ஆகியவற்றுக்கு தலா ரூ. 7 லட்சமும், எட்ஜ் ஐஏஎஸ் க்கு ரூ .1 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆணையர் திருமதி நிதி கரே, ஆணையர் திரு அனுபம் மிஸ்ரா ஆகியோர் தலைமையிலான மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ), நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் விதிமீறல்களுக்கு உத்தரவுகளையும் அபராதங்களையும் விதித்தது. வஜிராவ் & ரெட்டி இன்ஸ்டிடியூட் தனது விளம்பரத்தில் …
Read More »நாடு முழுவதும் சுமார் 830 பள்ளி மாணவர்கள் 33 சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களில் டிஎன்ஏ பிரித்தெடுத்தலை மேற்கொண்டனர்
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) நாடு முழுவதும் உள்ள அதன் ஆய்வகங்களில் ஓர் அறிவியல் செயல்பாட்டை மேற்கொண்டது. சி.எஸ்.ஐ.ஆர்.-இன்கீழ் செயல்படும் தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜெனோமிக்ஸ் அண்ட் இன்டகிரேடிவ் பயாலஜி (ஐ.ஜி.ஐ.பி) ஆய்வகம் ஆன்லைன் முறையில் அனைத்து ஆய்வகங்களுடனும் ஒரே நேரத்தில் இந்த செயல்பாட்டை ஒருங்கிணைத்தது. இந்த நிகழ்ச்சியை சிஎஸ்ஐஆர்-ஐஜிஐபி இயக்குநர் டாக்டர் சௌவிக் மைத்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், சிஎஸ்ஐஆர் தலைவர் டாக்டர் கீதா …
Read More »
Matribhumi Samachar Tamil