Monday, September 21 2026 | 07:28:06 PM
Breaking News

Education

சென்னை ஐஐடி-ன் சாஸ்த்ரா வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழா 2025 ஜனவரி 3-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடைபெறுகிறது

(சென்னை ஐஐடி), நாட்டிலேயே மிகப் பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் சாஸ்த்ரா திருவிழாவின் 26-வது ஆண்டு நிகழ்வை 2025-ம் ஆண்டு ஜனவரி 3-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் நடத்த உள்ளது. முற்றிலும் மாணவர்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் இந்த மாபெரும் நிகழ்வில் சென்னை ஐஐடி-ன் 750-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். ஐஎஸ்ஓ 9001:2015 சான்றளிக்கப்பட்ட இந்த விழாவில் 130 அரங்குகள் இடம்பெறுகின்றன. தொடர்ச்சியாக 80 நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், ஐந்து நாட்களில் 70,000 பேர் வரை இந்நிகழ்ச்சியை பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிகள், மாநாடுகள், விரிவுரைகள், கண்காட்சிகள், பயிலரங்கங்கள் வாயிலாக இந்த அறிவியல்- தொழில்நுட்ப நிகழ்வை சாஸ்த்ரா கொண்டாடவிருக்கிறது. இக்கல்வி நிறுவன வளாகத்தில் இன்று (30 டிசம்பர் 2024) சாஸ்த்ரா 2025 நிகழ்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “சாஸ்த்ரா போன்ற மாபெரும் நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம், மாணவர்களிடையே நிர்வாகத் திறன், அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு, பொது நோக்கத்திற்காக பெரிய குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் திறன் போன்ற உயர் பண்புகளை வளர்க்கச் செய்கிறது. சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவர்கள் இதுபோன்ற தேசிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் தங்களது திறன்களை வெளிக்கொண்டு வர உதவுகிறது. பல்வேறு அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோர் மட்டுமின்றி, தலைசிறந்த முக்கிய பிரமுகர்களையும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படும் என்று அவர் கூறினார். சாஸ்த்ரா 2025-ன் விழாவின் பங்கேற்பாளர்களில் ஒருவரான தேசிய கடல்சார் தொழில்நுட்ப பல்கலைக் கழக இயக்குநர் டாக்டர் பாலாஜி ராமகிருஷ்ணன் கூறும்போது, “சென்னை ஐஐடி-ன் சாஸ்த்ரா 2025 நிகழ்ச்சியில் பங்கேற்பதில் தேசிய கடல்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பெருமிதம் கொள்கிறது. தொழில்நுட்பம், கடல்சார் அறிவியல் போன்றவற்றில் அன்றாட சவால்களுக்குத் தீர்வுகாண இளைஞர்களை ஊக்குவிப்பதிலும், கண்டுபிடிப்புகளை ஆதரிப்பதிலும் இந்த இரு கல்வி நிறுவனங்களின் இலக்கும் ஒரே மாதிரியாக உள்ளது என்று கூறினார். செயற்கை நுண்ணறிவு, ரோபாடிக்ஸ், நீடித்த கடல்சார் தொழில்நுட்பங்கள் போன்ற அதிநவீன துறைகளில் கூட்டு ஆராய்ச்சி, திறன் மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், கல்வி, தேசிய கடல்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் நிபுணத்துவம் ஆகியவற்றுக்கு இடையேயான அறிவு பரிமாற்றத்திற்கான தனித்துவமிக்க தளத்தை இந்த நிகழ்ச்சி வழங்குகிறது” எனத் தெரிவித்தார்.

Read More »

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் கூட்டம் 2025, ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறும்

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் கூட்டம் 2025,  ஜனவரி 4, 2025 அன்று   சென்னையில் நடைபெறும்  என்று  தொழில்நுட்பக் கழகத்தின்  இயக்குநர் திருமதி ஜி.அகிலா அறிவித்தார். தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான முன்னாள் மாணவர்கள்  சங்கத்தின் (பிராந்திய பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம்) முன்முயற்சியின் காரணமாக இந்த முக்கிய நிகழ்வு நடத்தப்பட உள்ளது. திருச்சியின் பிராந்திய பொறியியல் கல்லூரி/  தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வளமான மாண்பைக் கொண்டாடுவதற்காக, உலகெங்கிலும் உள்ள திருச்சி தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் மாணவர்களை  இந்த நிகழ்வு  ஒன்றிணைக்கும்.  முந்தைய உலகளாவிய முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்றது.  930 க்கும் மேற்பட்ட தலைமை …

Read More »

2025-ம் ஆண்டு குடியரசு தின முகாமில் 917 மாணவிகள் உட்பட 2,361 தேசிய மாணவர் படையினர் பங்கேற்பு

தேசிய மாணவர் படையினருக்கான குடியரசு தின முகாம்-2025 தில்லி கண்டோன்மெண்டில் உள்ள கரியப்பா மைதானத்தில் 2024-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி “சர்வ தர்ம பூஜையுடன்” தொடங்கியது. இந்த முகாமில் 917 மாணவிகள் பங்கேற்பதன் மூலம், இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான பெண் மாணவர் படையினர் இடம்பெற்றுள்ளார்கள். நாட்டில் உள்ள 28 மாநிலங்கள், 08 யூனியன் பிரதேசங்களிலிருந்து மொத்தம் 2,361 தேசிய மாணவர் படையினர் இந்த ஒரு மாத கால …

Read More »

ரெனால்ட் நிசான் டெக்னாலஜி- பிசினஸ் சென்டர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து திறமை மேம்பாடு- கண்டுபிடிப்புகளில் சென்னை ஐஐடி இணைந்து செயல்பட உள்ளது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), திறமை மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு ரெனால்ட் நிசான் டெக்னாலஜி- பிசினஸ் சென்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. இந்தக் கூட்டாண்மையின் மூலம் பிஎஸ் பட்டப்படிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ள 35,000 மாணவ-மாணவிகளுக்கு உள்ளகப் பயிற்சி, பணிநியமன வாய்ப்புகளை சென்னை ஐஐடி வழங்கும். திறன் மேம்பாடு, அறிவுப் பரிமாற்றத்தை வளர்ப்பதற்கு இது வலுமான கட்டமைப்பை ஏற்படுத்தும். இந்தக்கூட்டு முயற்சியின் …

Read More »

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப்பணிகள் தேர்வு 2022 மற்றும் 2023 முடிவுகள் பற்றி தவறான கூற்றுகளை விளம்பரப்படுத்தியதற்காக வஜிராவ் & ரெட்டி இன்ஸ்டிடியூட், ஸ்டடி ஐக்யூ ஐஏஎஸ் ஆகியவற்றுக்கு தலா ரூ. 7 லட்சமும், எட்ஜ் ஐஏஎஸ்-க்கு ரூ .1 லட்சமும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அபராதம் விதித்துள்ளது

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய குடிமைப்பணிகள் தேர்வு (யுபிஎஸ்சி சிஎஸ்இ) 2022 மற்றும் 2023 முடிவுகள் பற்றி தவறான கூற்றுகளை  விளம்பரப்படுத்தியதற்காக வாஜிராவ் & ரெட்டி இன்ஸ்டிடியூட், ஸ்டடிஐக்யூ ஐஏஎஸ் ஆகியவற்றுக்கு  தலா ரூ. 7 லட்சமும், எட்ஜ் ஐஏஎஸ் க்கு ரூ .1 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆணையர் திருமதி நிதி கரே, ஆணையர் திரு அனுபம் மிஸ்ரா ஆகியோர் தலைமையிலான மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ), நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் விதிமீறல்களுக்கு உத்தரவுகளையும் அபராதங்களையும் விதித்தது. வஜிராவ் & ரெட்டி இன்ஸ்டிடியூட் தனது விளம்பரத்தில் …

Read More »

நாடு முழுவதும் சுமார் 830 பள்ளி மாணவர்கள் 33 சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களில் டிஎன்ஏ பிரித்தெடுத்தலை மேற்கொண்டனர்

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) நாடு முழுவதும் உள்ள அதன் ஆய்வகங்களில் ஓர் அறிவியல் செயல்பாட்டை மேற்கொண்டது. சி.எஸ்.ஐ.ஆர்.-இன்கீழ் செயல்படும் தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜெனோமிக்ஸ் அண்ட் இன்டகிரேடிவ் பயாலஜி (ஐ.ஜி.ஐ.பி) ஆய்வகம் ஆன்லைன் முறையில் அனைத்து ஆய்வகங்களுடனும் ஒரே நேரத்தில் இந்த செயல்பாட்டை ஒருங்கிணைத்தது. இந்த நிகழ்ச்சியை சிஎஸ்ஐஆர்-ஐஜிஐபி இயக்குநர் டாக்டர் சௌவிக் மைத்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், சிஎஸ்ஐஆர் தலைவர் டாக்டர் கீதா …

Read More »

வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

புதுதில்லியில் உள்ள வர்த்மான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனையின் பட்டமளிப்பு விழாவில் இன்று (டிசம்பர் 23, 2024) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மருத்துவத் தொழில் என்பது வாழ்வாதாரம் மட்டுமின்றி, மக்களின் துன்பங்களைக் குறைப்பது, நோயுற்றவர்களுக்கு சிகிச்சையளிப்பது, சமூகத்தின் நல்வாழ்வுக்கு பங்களிப்பது ஆகிய புனிதமான கடமைகளையும் கொண்டுள்ள தொழிலாகும் என்று கூறினார். மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்களாக, மக்களின் ஆரோக்கியத்தையும் …

Read More »

இந்திய வனங்களின் நிலை அறிக்கை 2023-ஐ, டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் நாளை வெளியிடுவார்

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், துறையின் செயலாளர் திருமதி லீனா நந்தன் முன்னிலையில் இந்திய வனங்களின் நிலை அறிக்கை  2023-ஐ நாளை வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ஐசிஎஃப்ஆர்இ, எஃப்ஆர்ஐ, ஐஆர்ஓ, பிஎஸ்ஐ போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். 1987 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய வனநில அளவை நிறுவனத்தால் “இந்திய வனங்களின் நிலை அறிக்கை”  வெளியிடப்படுகிறது. வன அடர்த்தி வரைபடம், வனநில அளவை நிறுவனத்தின் தேசிய வனப்பட்டியல் ஆகிய இரண்டு முக்கிய செயல்பாடுகளின் அடிப்படையில் நாட்டின் வனம் மற்றும் மர வளங்கள் குறித்த முக்கிய தகவல்களை இந்த அறிக்கை வழங்குகிறது.  இந்த அறிக்கைத் தொடரில் இது 18-வது அறிக்கையாகும்.

Read More »

செகந்திராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரிக்கு கௌரவம் மிக்க கொடியை குடியரசுத் தலைவர் வழங்கினார்

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு (டிசம்பர் 20, 2024) செகந்திராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரிக்கு கௌரவம் மிக்க கொடிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நாட்டின் மேம்பட்ட பாதுகாப்பு மேலாண்மைத் திறனானது  தூதரக ரீதியில் ராணுவ கூட்டாண்மையை வலுப்படுத்தவும், பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவிடும் என்று கூறினார். உலகளவிலான பாதுகாப்பு மன்றங்களில் ஆக்கப்பூர்வமான நிலைப்பாட்டை பராமரிக்கவும் இது இந்தியாவுக்கு உதவிடும். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தேசிய …

Read More »

தரமான கல்வியை வழங்கும் வகையில் உயர்கல்வி நிறுவனம் மேம்படுத்தப்பட்டு வருகிறது- திரு தர்மேந்திர பிரதான்

நாட்டில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக  எளிதான  அணுகுமுறை,  சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உயர்கல்வி நிறுவனங்களின் முன்னேற்றம் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார். 1.கல்வி நிலையங்கள் அதிகரிப்பு உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 2014-15-ல் 51534 ஆக இருந்தது 2022-23-ல் 58643-ஆக அதிகரித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை 760-ல் இருந்து 1213-ஆக அதிகரித்துள்ளது. கல்லூரிகள் எண்ணிக்கை 38498-ல் இருந்து 46624 ஆக அதிகரித்துள்ளது. அதாவது உயர்கல்வி நிறுவனங்கள்13.8%, பல்கலைக்கழகங்கள் 59.6% மற்றும் கல்லூரிகள் 21.1% அதிகரித்து உள்ளன. 2.மாணவர் சேர்க்கை அதிகரிப்பு 2014-15-ம் ஆண்டில் 3.42 கோடியாக இருந்த மொத்த சேர்க்கை 2022-23-ம் ஆண்டில் 4.46 கோடியாக 30.5% அதிகரித்துள்ளது.

Read More »