சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், இந்திய ஆராய்ச்சி மற்றும் தொழில்துறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடத்தைத் தொடங்கியுள்ளது. மேம்பட்ட வசதிகளுடன் கூடிய இந்த ஆராய்ச்சிக் கூடம், சென்னை ஐஐடி மற்றும் நாட்டின் ஆராய்ச்சி– தொழில்நுட்பத் திறன்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சென்னை ஐஐடி -ல் இருந்து 36 கி.மீ. தொலைவில், தையூரில் அமைக்கப்பட்டுள்ள ‘டிஸ்கவரி’ செயற்கைக்கோள் வளாகத்தில் இந்த அதிநவீன ஆராய்ச்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியத் துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள், கடல்சார் பொறியியல் போன்றவற்றில் உள்ள சவாலான பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் சிறப்பு வசதிகள் …
Read More »இந்திய தர நிர்ணய அமைவனம் 78-ம் ஆண்டு நிறுவன தினத்தை கொண்டாடியது
புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய தர நிர்ணய அமைவனத்தின் 78-ம் ஆண்டு நிறுவன தின விழாவில் மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், ‘அனைவருடன், அனைவரின் நலனுக்காக, அனைவரின் நம்பிக்கை மற்றும் அனைவரின் முயற்சியுடன்’ என்ற வழிகாட்டுதல் கொள்கைக்கு ஏற்ப மக்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான …
Read More »மத்திய ஜவுளித் துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், மேற்கு வங்க மாநிலம் ஃபுலியாவில் இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தைத் திறந்து வைத்தார்
ஃபுலியா இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகத்தின் புதிய நிரந்தர வளாகத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் திறந்து வைத்தார். இந்நிறுவனத்தின் புதிய வளாகம் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 5.38 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்த வளாகத்தில் ரூ. 75.95 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தில் ஸ்மார்ட் வகுப்புகள், டிஜிட்டல் நூலகம், நவீன சோதனைக் கூடங்கள் அடங்கிய நவீன உள்கட்டமைப்பு உள்ளது. புதிய வளாகம் ஒரு முன்மாதிரியான …
Read More »என்ஐடிடி குளோபல் நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
இன்று நடைபெற்ற என்ஐடிடி குளோபல் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 2025- ல் உலகம் முழுவதிலுமிருந்து 1,500 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் டாடா குழுமத்தின் தலைவர் டாக்டர். என்.சந்திரசேகரன், தமிழக அரசின் ஐடி மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இந்நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில், தற்போதைய மாணவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், நிறுவனத்தின் தாக்கத்தை மேம்படுத்துவதற்குமான முன்முயற்சிகள் …
Read More »என்டிஎம்சி-யின் ‘தேர்வு வீரர்கள்’ முன்முயற்சி- மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் மாணவர்களுடன் கலந்துரையாடினார்
பிரதமர் திரு நரேந்திர மோடியின் பரீட்சைக்கு பயமேன் என்ற புத்தகத்தால் ஈர்க்கப்பட்டு, புதுதில்லி முனிசிபல் கவுன்சில் (NDMC- என்எம்டிசி) நடத்திய தேர்வு வீரர்கள் நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்றார். இந்த முயற்சி மாணவர்களிடையே நேர்மறையான நம்பிக்கையையும், படைப்பாற்றலையும் உருவாக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டது. இதனால் அவர்கள் அமைதியான, சீரான மனநிலையுடன் தேர்வுகளை அணுக முடியும். சுமார் 4,000 மாணவர்கள் பிரதமரின் புத்தகத்தின் செய்திகளால் ஈர்க்கப்பட்டு …
Read More »சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கான நடவடிக்கையாக புதுவை பல்கலைக்கழகத்தில் மரக்கன்று நடும் நிகழ்வு
புதுவை பல்கலைக்கழகம் அதன் வெள்ளி விழா வளாகத்தில் நடைபெற்ற மரம் நடும் நிகழ்வின் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது. 104 மரங்களை வேரோடு சாய்த்த ஃபெங்கல் சூறாவளி காரணமாக இழந்த பசுமையை மீட்டெடுப்பதும், வளாகத்தில் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதும் இந்த முயற்சியின் நோக்கமாகும். இதன் ஒரு பகுதியாக 1,040 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியை, தலைமை விருந்தினரான புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் மற்றும் புதுவை பல்கலைக்கழகத்தின் முதன்மை …
Read More »மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் சென்னையில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனங்கள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கல்வி நிறுவனத்திற்கு (NIEPMD) வருகை
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், சென்னையில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனங்கள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய நிறுவனத்தை இன்று பார்வையிட்டார். அமைச்சரின் இந்தப் பயணத்தின் போது, என்.ஐ.இ.பி.எம்.டி.க்கு வழங்கப்பட்ட தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுமத்தின் (என்ஏஏசி) சான்றிதழை வெளியிட்டார். இது ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள் கொண்ட நபர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் சிறந்து விளங்கும் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க செயல்பாடுகளைக் குறிக்கிறது. ஆட்டிசம் மேலாண்மை குறித்த இ- புத்தகத்தையும் வெளியிட்டார். டாக்டர் வீரேந்திர குமார் என்.ஐ.இ.பி.எம்.டி வளாகத்தில் தேசிய திறந்தநிலை பள்ளியின் (என்.ஐ.ஓ.எஸ்) மையத்தை திறந்து வைத்தார். இந்த மையம் குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு கல்வியை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர்களின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப தரமான கல்வி, திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை பெறுவதை உறுதி செய்கிறது. இந்த ஆண்டு பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பயிற்சி பெற்று பதக்கங்களை வென்ற பல்வேறு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர்களின் விடாமுயற்சியைப் பாராட்டிய அவர், திறமையை வளர்த்து கொள்வதிலும், விளையாட்டில் உள்ளடக்கிய தன்மையை ஊக்குவிப்பதிலும் நிறுவனத்தின் முயற்சிகளைப் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியின் போது, என்ஏஏசி சான்றிதழ், பயிற்சி, ஆராய்ச்சி, மறுவாழ்வு சேவைகளில் உயர் தரத்தை பராமரிப்பதற்கான என்.ஐ.இ.பி.எம்.டி.-ன் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று அமைச்சர் கூறினார். என்.ஐ.ஓ.எஸ் மையத்தை தொடங்குவதன் மூலம், கல்வி கற்பதில் உள்ள இடைவெளியை குறைப்பதிலும், வாழ்நாள் முழுவதும் கற்றலை ஊக்குவிப்பதிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதிலும் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார். உள்ளடக்கிய, நெகிழ்வு தன்மையுடன் கூடிய கற்றல் முறைகளை வழங்குவதன் மூலம், ஒரு சமமான, உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கும் அரசின் பார்வையுடன் ஒத்துப்போகிறது. பல்வேறு குறைபாடுகள் கொண்ட திறமையான நபர்களை ஊக்குவிக்கும் வகையில் என்.ஐ.இ.பி.எம்.டி மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
Read More »புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை 2025 ஜனவரி 4 அன்று நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது
1985 ஜனவரி 4 அன்று நிறுவப்பட்ட அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை தனது 40-வது நிறுவன தினத்தை 2025 ஜனவரி 4 அன்று புதுதில்லி ஜன்பத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் கொண்டாட உள்ளது. மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்குவார். …
Read More »ஐஐடி மெட்ராஸ் மத்திய வேளாண் அமைச்சகத்தின் விஸ்தார் (VISTAAR) திட்டத்தில் இணைந்து செயல்படவிருக்கிறது
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), இந்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துடன் இணைந்து, டிஜிட்டல்மயமாக்கல் மூலம் வேளாண் விரிவாக்க முறையின் செயல்திறனையும் வலிமையையும் மேம்படுத்தும் விஸ்தார் திட்டத்தில் இணைந்து செயல்பட உள்ளது. விவசாய விரிவாக்க முறையை மேலும் வலுப்படுத்துவதற்கான முன்னோடித் திட்டம்தான் விஸ்தார். புதிய தயாரிப்புகளையும் சேவைகளையும் சந்தைக்குக் கொண்டு வருவதற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில், புதிய கண்டுபிடிப்புகளையும் திறன்களையும் ஸ்டார்ட்-அப்கள் வழங்குகின்றன. விவசாயத் துறையில் உள்ள சூழல் காரணமாக, விநியோகம்- தேவை ஆகிய …
Read More »திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் கூட்டம் 2025, ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறும்
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் கூட்டம் 2025, ஜனவரி 4, 2025 அன்று சென்னையில் நடைபெறும் என்று தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் திருமதி ஜி.அகிலா அறிவித்தார். தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் (பிராந்திய பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம்) முன்முயற்சியின் காரணமாக இந்த முக்கிய நிகழ்வு நடத்தப்பட உள்ளது. திருச்சியின் பிராந்திய பொறியியல் கல்லூரி/ தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வளமான மாண்பைக் கொண்டாடுவதற்காக, உலகெங்கிலும் உள்ள திருச்சி தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் மாணவர்களை இந்த நிகழ்வு ஒன்றிணைக்கும். முந்தைய உலகளாவிய முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்றது. 930 க்கும் மேற்பட்ட தலைமை …
Read More »
Matribhumi Samachar Tamil