சுரங்க அமைச்சகம், ஒடிசா அரசாங்கத்துடன் இணைந்து, மாவட்ட கனிம அறக்கட்டளை டிஎம்எப் கண்காட்சியை கோனார்க்கில் உள்ள சூரிய கோவிலில் அமைத்துள்ளது. 2025 ஜனவரி 18 முதல் 21 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி, நிலையான வளர்ச்சியின் மூலம் சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. சுரங்க அமைச்சகம், நால்கோ மற்றும் ஓஎம்சி அதிகாரிகள் முன்னிலையில், சுரங்க அமைச்சகத்தின் இணைச் செயலர் திருமதி ஃபரிதா எம்.நாயக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். “நிலையான வளர்ச்சியின் மூலம் சமூகங்களை மேம்படுத்துதல்” என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த கண்காட்சியில், டிஎம்எப்-ஆதரவு சுயஉதவி குழுக்கள் , இந்திய புவியியல் ஆய்வு , இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் , நால்கோ ஆகியவற்றின் பணிகளை வெளிப்படுத்தும் 18 துடிப்பான அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இந்த அரங்குகள் , உள்ளூர் கைவினைப்பொருட்கள், புதுமையான வாழ்வாதாரத் திட்டங்கள் மற்றும் சமூகம் சார்ந்த முன்முயற்சிகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துகின்றன, சமூகங்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதிலும், நிலையான நடைமுறைகள் மூலம் தன்னம்பிக்கையை வளர்ப்பதிலும் டிஎம்எப் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதில் அமைச்சகத்தின் வலுவான உறுதிப்பாட்டை திருமதி நாயக் எடுத்துரைத்தார். டிஎம்எப்-ன் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை இயக்குவதில் தீவிரமாக பங்கேற்ற ஒடிசா அரசு, பெருநிறுவன பங்குதாரர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் பங்களிப்புகளை அவர் பாராட்டினார். வரலாற்று மகத்துவம் கொண்ட சூரியன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி, நவீன நிலையான வளர்ச்சியைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், இப்பகுதியின் வளமான கலாச்சார பாரம்பரியத்துடன் இணைக்கிறது. இக்கண்காட்சி உள்ளூர் சமூகங்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பங்கேற்பை ஈர்த்துள்ளது, சுய உதவிக் குழுக்களுக்கு அவர்களின் வெற்றிக் கதைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் எதிர்கால ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒரு மாறும் தளத்தை வழங்குகிறது. நிலையான நடைமுறைகளைச் செயல்படுத்துதல், முழுமையான சமூக வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் நீண்டகால நேர்மறையான மாற்றத்தை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலம் சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்துவதற்கு சுரங்க அமைச்சகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை இந்தக் கண்காட்சி முன்னெடுக்கிறது.
Read More »புதிய சஞ்சார் சாத்தி மொபைல் செயலி உட்பட குடிமக்களை மையமாகக் கொண்ட தொலைத்தொடர்பு வசதிகளை மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்
நாடு முழுவதும் தொலைத் தொடர்பு அணுகல், பாதுகாப்பு, அதிகாரமளித்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா எம். சிந்தியா இன்று (17.01.2025) குடிமக்களை மையமாகக் கொண்ட முன்முயற்சிகளின் தொகுப்பை அறிமுகப்படுத்தினார். சஞ்சார் சாத்தி மொபைல் செயலி, தேசிய அகண்ட அலைவரிசை இயக்கம் 2.0, டிபிஎன் நிதியுதவி பெறும் 4ஜி மொபைல் தளங்களில் இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் வசதியின் தொடக்கம் ஆகியவை இந்த நிகழ்வின் சிறப்பம்சங்களாகும். சஞ்சார் சாத்தி மொபைல் செயலி என்பது …
Read More »“மூன்றாவது ஏவுதளம்” அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மூன்றாவது ஏவுதளத் திட்டமானது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அடுத்த தலைமுறை செலுத்து வாகனங்களுக்கான ஏவுதள கட்டமைப்பை உருவாக்குவதோடு ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டாவது ஏவுதளத்திற்கான ஆயத்த ஆதரவு ஏவுதளமாக செயல்படவும் செய்யும். இது எதிர்கால …
Read More »செழுமை மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை நோக்கிய நமது பயணத்தில் க்யூஎஸ் உலக எதிர்காலத் திறன்கள் குறியீட்டின் நுண்ணறிவுகள் மதிப்புமிக்கவை: பிரதமர்
கியூஎஸ் உலக எதிர்காலத் திறன்கள் குறியீட்டின் தரவரிசையில், டிஜிட்டல் திறன்களில் கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளைத் தாண்டி இந்தியா 2-வது இடத்தைப் பிடித்திருப்பது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக, நமது இளைஞர்களைச் சுயசார்புடையவர்களாக மாற்றவும், செல்வ வளத்தை உருவாக்குவத்றகும் திறன்களை மேம்படுத்தவும் எங்களது அரசு பணியாற்றி வருகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். செழுமை மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை …
Read More »ராணுவ தினத்தை முன்னிட்டு இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
ராணுவ தினமான இன்று இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். இந்திய ராணுவம் உறுதிப்பாடு, தொழில்நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உருவகமாக திகழ்கிறது என்று பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டார். “ஆயுதப்படைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனுக்காக எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. பல ஆண்டுகளாக, நாங்கள் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம் மற்றும் நவீனமயமாக்கலில் கவனம் செலுத்தியுள்ளோம்” என்று திரு மோடி கூறினார். …
Read More »பிரதமரின் கிராமப் புற வீட்டுவசதித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
2016 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்படும் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் மூலம் “அனைவருக்கும் வீடு” என்ற இலக்கை அடைய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. மார்ச் 2029-க்குள் 4.95 கோடி வீடுகளைக் கட்டுவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. முக்கிய சிறப்பம்சங்கள்: *பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் புதிய கட்டத்தின் கீழ் 2 கோடி கூடுதல் வீடுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது 2024-25ம் நிதியாண்டு முதல் 2028-29ம் நிதியாண்டு வரை ரூ. …
Read More »150 ஆண்டுகள் உயர் தனிச் சிறப்பைக் கொண்டாடும் இந்திய வானிலை ஆய்வு மையம்
புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி),தேசத்திற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 150 ஆண்டுகளைக் கொண்டாடி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. 1875-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த ஐஎம்டி, முக்கியமான வானிலை, பருவநிலை சேவைகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. பேரிடர் மேலாண்மை, விவசாயம், விமானப் போக்குவரத்து, பொது பாதுகாப்பு ஆகியவற்றில் இத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் தேசிய வானிலை சேவை என்ற வகையில், வானிலை ஆய்வு, நில அதிர்வு அதனுடன் தொடர்புடைய …
Read More »மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தேசிய மஞ்சள் வாரியத்தை தொடங்கி வைத்தார் – நிஜாமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரியம் நிறுவப்பட்டுள்ளது
தேசிய மஞ்சள் வாரியத்தை மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் இன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார். திரு பியூஷ் கோயல் அதன் முதல் தலைவராக திரு பல்லே கங்கா ரெட்டி நியமிக்கப்படுவதாக அறிவித்தார். வாரியத்தின் தலைமையகம் நிஜாமாபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய மஞ்சள் வாரியத்தின் தொடக்கம் நாடு முழுவதும் பல்வேறு பண்டிகைக் கொண்டாட்டங்களின் புனித நாளில் அமைந்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார். பல்வேறு அமைச்சகங்களின் பிரதிநிதிகளும் தேசிய மஞ்சள் வாரியத்தின் …
Read More »இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று (14.01.2024) நடைபெற்ற இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150 ஆண்டுகள் ஆனது இத்துறையின் பயணத்தை மட்டுமல்ல என்றும் இந்தியாவின் நவீன அறிவியல், தொழில்நுட்பத்தின் பெருமைமிக்க பயணத்தையும் பிரதிபலிக்கிறது என்றும் கூறினார். இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஒன்றரை நூற்றாண்டுகளாக …
Read More »சிதம்பரம் நடராஜரின் உருவப்படம் பொறித்த நிரந்தர முத்திரை அறிமுகம்
ஆருத்ரா தேரோட்டத்தையொட்டி ஆன்மீக, கலாச்சார முக்கியத்துவத்திற்கு பெயர் பெற்ற சிதம்பரத்திற்கு நிரந்தர முத்திரையை அறிமுகப்படுத்தியுள்ளது. அஞ்சல் துறை கலை, பக்தி மற்றும் பாரம்பரியத்தின் பெருமை ஆகிய காலத்தால் அழியாத அடையாளமான சிதம்பரம் நடராஜர் கோயிலின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் நடராஜரின் கம்பீரமான உருவம் இடம்பெறுகிறது. வருடாந்திர கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இந்த முயற்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், ஆருத்ரா தேரோட்டத்தின் போது கோயில் தேருடன் கூடிய சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் திருமதி டி.நிர்மலா தேவி சிறப்பு உறையை வெளியிட்டார். நடராஜரின் நிரந்தர முத்திரை சிதம்பரம் தலைமை …
Read More »
Matribhumi Samachar Tamil