இந்தியா தனது கல்வி முறையை மாணவர் சேர்க்கைக்கு அப்பால் என மறுவரையறை செய்து உண்மையான கற்றலில் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். கட்டுரை ஒன்றைப் பகிர்ந்துள்ள திரு மோடி, மாணவர் முன்னேற்றம் குறித்து அறிவியல் பார்வையை வழங்குகின்ற, அனைவரையும் உள்ளடக்கிய, திறனுடன் இணைக்கப்பட்ட கல்விச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு சான்றாதார அடிப்படையில், மாவட்ட அளவிலான நடவடிக்கைக்குரிய திட்டத்தை வழங்கும் பிஆர்எஸ் (தேசிய மதிப்பீட்டு ஆய்வு) …
Read More »பசுமைப் புரட்சியின் தந்தையான எம்எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு விழா
இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தையும், பாரத ரத்னா விருது பெற்றவருமான மறைந்த பேராசிரியர் எம் எஸ் சுவாமிநாதனின் 100-வது பிறந்த தின விழா ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை புதுதில்லியில் நடைபெறவுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைக்கவுள்ள இந்த நிகழ்ச்சி குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகத்தில் நாளை (31 ஜூலை 2025) பிற்பகல் 3 மணி முதல் 5 …
Read More »கடந்த 11 ஆண்டுகளில் 12 புதிய புலிகள் காப்பகங்கள்: உலகப் புலிகள் தின விழாவில் மத்திய அமைச்சர் பேச்சு
புதுதில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் இன்று (28.07.2025) நடைபெற்ற ஆம் ஆண்டு உலகப் புலிகள் தினம் 2025 கொண்டாட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், சுற்றுச்சூழல் சமநிலை, குழந்தைகளிடையே வனவிலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு, இயற்கைக்கு நன்றி செலுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து இளம் …
Read More »கரிம பருத்தி சான்றிதழ் வழங்குவது தொடர்பான குற்றச்சாட்டுகள் – அபேடா மறுப்பு
தேசிய இயற்கை வேளாண் உற்பத்தித் திட்டம் (NPOP – என்பிஓபி திட்டம்), மத்திய அரசின் வர்த்தக, தொழில்துறை அமைச்சகத்தின் வணிகத் துறையால் இயற்கைப் பொருட்களின் ஏற்றுமதிக்காக 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும், தேசிய இயற்கை வேளாண் உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அமைப்பாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா (APEDA) செயல்படுகிறது. சிறு, குறு விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சான்றிதழ் முறை அவசியம் …
Read More »எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணா்வுக்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் ஒரு பிாிவான தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பானது எச்.ஐ.வி/ எய்ட்ஸ்-க்கு எதிரான விழிப்புணா்வு முகாம்களை வலுப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. மக்கள் தொடா்பு சாதனங்கள் மூலமான விழிப்புணா்வு உள்ளிட்ட மல்டிமீடியா பிரச்சார முகாம்களை இந்த அமைப்பு நடத்தி வருகின்றது. மேலும், விளம்பரப் பலகைகள், பேருந்தில் விளம்பரங்கள், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஐஇசி வேன்கள் ஆகியவற்றின் மூலம் வெளிப்புற ஊடக பிரச்சாரங்களையும் இந்த அமைப்பு …
Read More »வரவிருக்கும் தேசிய விண்வெளி தின கொண்டாட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர்கள் டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டினர்
அமைச்சகங்களுக்கு இடையேயான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய கலாச்சார அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் ஒரு கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி, ஆகஸ்ட் 23, 2025 அன்று நடைபெறவிருக்கும் தேசிய விண்வெளி தின கொண்டாட்டங்களுக்கான விரிவான செயல்திட்டத்தை வகுக்க ஏற்பாடு செய்தார். இந்தியாவின் குறிப்பிடத்தக்க விண்வெளிப் பயணத்தைக் கொண்டாடுவதில் மாணவர்கள், அறிவியல் சமூகங்கள் மற்றும் பொதுமக்களை …
Read More »வாரணாசியில் இளைஞர் ஆன்மீக உச்சி மாநாட்டை மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ‘வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கு போதைப் பொருள் இல்லாத இந்தியா’ என்ற கருப்பொருளில் ‘இளைஞர் ஆன்மீக உச்சி மாநாட்டை’ மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா இன்று (19.07.2025) தொடங்கி வைத்தார். உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வின் போது, பிரதமர் திரு. நரேந்திர மோடியின் சிறப்பு செய்தி பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இது இளைஞர்கள் தலைமையிலான இயக்கத்திற்கு உத்வேகத்தையும் வழிகாட்டுதலையும் வழங்குவதாக அமைந்தது. பிரதமர் தமது செய்தியில், “இளைஞர் ஆன்மீக உச்சி மாநாடு 2025 என்பது வலுவான, விழிப்புணர்வுடன் கூடிய, ஒழுக்கமான இளம் இந்திய தலைமுறையை உருவாக்க முயலும் ஒரு பாராட்டத்தக்க முயற்சியாகும். போதைப்பொருள் தனிப்பட்ட திறனைத் தடம் புரளச் செய்வது மட்டுமல்லாமல், சமூகத்தின் அடித்தளத்தையும் பலவீனப்படுத்துகிறது. போதைப்பொருள்களுக்கு எதிரான இந்த கூட்டுப் போராட்டத்தில், சுய விழிப்புணர்வு, சமூக பங்கேற்பு ஆகியவை நமது வழிகாட்டும் கொள்கைகளாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். நாடு முழுவதும் 120-க்கும் மேற்பட்ட ஆன்மீக அமைப்புகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட இளைஞர் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து நடத்தப்படும் இந்த உச்சிமாநாடு, போதைப் பழக்க அச்சுறுத்தலுக்கு எதிராக இந்தியாவின் இளைஞர் சக்திக்கு ஒரு தெளிவான அழைப்பாகும். அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தமது தொடக்க உரையில், வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை எட்ட இளைஞர்கள் போதைப் பழக்கத்தின் பிடியிலிருந்து விடுபடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் பேசிய மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இந்த உச்சிமாநாடு ஒரு கூட்டு சங்கல்பம் என்று கூறினார். இந்த சங்கல்பத்தை ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு சமூகத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றார். மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தமது உரையில், இந்தியா தற்போது ஆழமான மாற்றத்திற்கான சகாப்தத்தை கடந்து வருவதாகவும், இதுபோன்ற திருப்புமுனைகளின் போது இளைஞர்கள் எப்போதும் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்பதை வரலாறு காட்டுகிறது என்றும் எடுத்துரைத்தார். கூட்டுக் குடும்ப அமைப்புகளின் சிதைவு காரணமாக, இன்று பல இளைஞர்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சி ரீதியான தனிமை குறித்தும் திரு ஷெகாவத் கவலை தெரிவித்தார். கலாச்சார அம்சங்களை மீட்டெடுப்பது நமது கூட்டுப் பொறுப்பாகும் என்று அவர் கூறினார். மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே, போதைப் பொருள்களுக்கு எதிராக அரசின் சமரசமற்ற நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.
Read More »வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய இந்திய இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல் தேவை: மக்களவைத் தலைவர்
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்தில் இந்திய இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல், தொழில்நுட்ப ஆதரவு மற்றும் கொள்கை உருவாக்கம் தேவை என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று வலியுறுத்தினார். இதற்கான சமூகம் மற்றும் தேசத்தின் முழுமையான வளர்ச்சியில் சமூக அமைப்புகளின் பங்கு மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார். குருகிராமில் இன்று ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த “ஜிடெம் இளைஞர் மாநாடு 2025”-ல் …
Read More »அன்வேஷா 2.0 – தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் 75-வது ஆண்டு கொண்டாட்டம்; விநாடி வினா போட்டி
அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் குறித்த தேசிய அளவிலான அன்வேஷா 2.0 விநாடி வினா போட்டி சென்னையில் 2025 ஜூலை 18 அன்று நடைபெற்றது. தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் 75-வது ஆண்டு விழாவாக சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மத்திய விரிவுரை அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேசிய புள்ளி விவர ஆணையத்தின் தலைவர் டாக்டர் ராஜீவ லக்ஷ்மன் கரன்டிகார் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். சென்னை நகரில் உள்ள கல்லூரிகள், …
Read More »குடியரசுத் தலைவர் 2024–25 – ம் ஆண்டின் தூய்மைப் பணி கணக்கெடுப்பிற்கான விருதுகளை வழங்கினார்
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் சார்பில் புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், 2024-25-ம் ஆண்டிற்கான தூய்மை பணி கணக்கெடுப்பிற்கான விருதுகளை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார். இந்த விழாவில், மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், அத்துறைக்கான இணையமைச்சர் திரு டோகன் சாஹு முன்னிலையில், நாட்டில் தூய்மைப் பணிகளைத் திறம்பட மேற்கொண்ட 23 நகரங்கள் பாராட்டுதல்களைப் பெற்றன. …
Read More »
Matribhumi Samachar Tamil