2025–26 கோடைக்கால பயிர் பருவத்திற்காக ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கொள்முதல் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் மொத்தம் 54,166 மெட்ரிக் டன் பாசிப்பயறு கொள்முதல் செய்வதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2025–26 கோடை பயிர் பருவத்திற்காக உத்தரப் பிரதேசத்தில் 50,750 மெட்ரிக் டன் நிலக்கடலை கொள்முதல் செய்வதற்கும் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தின் போது, மாநில விவசாயிகளின் நலனைக் கருத்தில் …
Read More »15 நாட்கள் வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் நிறைவு
மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் இன்று குஜராத் மாநிலம் பர்தோலியில் நடைபெற்ற வேளாண் சம்மேளனத்தில் வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். 15 நாட்களாக நடைபெற்ற இந்த பிரச்சார இயக்கத்தின் நிகழ்ச்சிகளில் வேளாண் மேம்பாடு, விதைப்பு, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. 1928-ம் ஆண்டு ஜூன் 12 அன்று, சர்தார் …
Read More »கடந்த 11 ஆண்டுகளில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மறுவரையறை செய்துள்ளது: பிரதமர்
வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் பெண்கள் ஆற்றிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான பங்களிப்பை பிரதமர் திரு. நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்துவதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் ஒவ்வொரு கட்டத்திலும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று பிரதமர் கூறினார். ஆனால் இன்று அவர்கள் வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்தில் தீவிரமாகப் பங்கேற்பது மட்டுமல்லாமல், கல்வி முதல் …
Read More »உடல் பருமனைத் தடுக்க எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பை அனைவரும் ஏற்று பின்பற்ற வேண்டும் : திரு ஜே.பி. நட்டா
உலக உணவுப் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, பெங்களூருவில் உள்ள தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனமான நிம்ஹான்ஸில் (NIMHANS) இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். “பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் உணவு உட்கொள்வதன் மூலம் உடல் பருமனைத் தடுத்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அவர் முதன்மை உரை நிகழ்த்தினார். மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல …
Read More »விவசாய நலனுக்கான எங்கள் முயற்சிகள் வரும் காலங்களில் அதிக வீரியத்துடன் தொடரும்: பிரதமர்
கடந்த 11 ஆண்டுகளில் விவசாயிகளுக்கான அரசின் ஆதரவு முயற்சிகளின் நீண்டகாலத் தாக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி சுட்டிக் காட்டியுள்ளார். இது விவசாய சமூகத்திற்கு கண்ணியம் மற்றும் முன்னேற்றத்துக்கான குறிப்பிடத்தக்க வளர்ச்சி கட்டத்தைக் குறிக்கிறது. பிரதமர் கிசான் சம்மான் நிதி மற்றும் விவசாயிகள் பயிர்க் காப்பீடு போன்ற முக்கிய முயற்சிகளை அவர் எடுத்துரைத்துள்ளார். அவை விவசாயிகளின் நலனுக்காக அரசு எடுத்த முக்கியமான நடவடிக்கைகள் என்று அவர் விவரித்தார். குறைந்தபட்ச ஆதரவு …
Read More »29 நாடுகளுக்கு பயனளிக்கும் வகையில் சுனாமி முன்னெச்சரிக்கை அமைப்பை இந்தியா நிறுவியுள்ளது: பிரதமர்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.06.2025) காணொலிக் காட்சி மூலம் 2025-ம் ஆண்டுக்கான சர்வதேச பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த மாநாட்டில் உரையாற்றினார். ஐரோப்பாவில் முதன்முறையாக நடத்தப்படும் 2025-ம் ஆண்டுக்கான பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த சர்வதேச மாநாட்டிற்கு வந்த பங்கேற்பாளர்களை பிரதமர் வரவேற்றார். பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மக்ரோனுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு ஆதரவளித்த பிரான்ஸ் அரசுக்கு …
Read More »ஜெனீவாவில் நடைபெற்ற பேரிடர் அபாயக் குறைப்பு நிதியுதவி குறித்த அமைச்சர்கள் அளவிலான வட்டமேசை கூட்டத்தில் உறுதியான, காலக்கெடுவுடன் கூடிய விளைவுகளை இந்தியா கோரியது
ஜெனீவாவில் ஜூன் 04, 2025 அன்று நடைபெற்ற பேரிடர் அபாயக் குறைப்பு நிதியுதவி குறித்த அமைச்சர்கள் அளவிலான வட்டமேசை கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா உரையாற்றினார். இந்த முக்கியமான விவாதத்தை நடத்துவதற்காக ஏற்பாட்டாளர்களை அவர் பாராட்டினார். ஜி20 தலைமைத்துவங்கள் மூலம் உலகளாவிய உரையாடலைத் தொடர்வதில் பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவின் பங்களிப்புகளையும் இந்தியா அங்கீகரித்தது. பேரிடர் அபாயக் குறைப்பு (டி.ஆர்.ஆர்) நிதியுதவி என்பது ஒரு புறப் பிரச்சினை …
Read More »இந்திய இளைஞர்கள் உலகளவில் முத்திரை பதித்துள்ளனர். நாட்டின் இளையோர் சக்தி சுறுசுறுப்பு, புத்தாக்கம், மனஉறுதி கொண்டதாகும்: பிரதமர்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இந்திய இளைஞர்கள் படைத்துள்ள சர்வதேச சாதனைகள் குறித்து எடுத்துரைத்தார். நாட்டில் உள்ள இளைஞர்கள் உலக அளவில் ஒரு முத்திரையைப் பதித்துள்ளனர் என்றும் அவர் கூறினார். அவை சுறுசுறுப்பு, புத்தாக்கம், மனஉறுதியின் சின்னங்களாக உள்ளன என்று விவரித்த பிரதமர், கடந்த 11 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியானது நாட்டின் இளையோர் சக்தியின் ஈடு இணையற்ற ஆற்றல் மற்றும் நம்பிக்கையால் தூண்டப்பட்டுள்ளது என்று கூறினார். புத்தொழில் நிறுவனங்கள், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளைஞர்களின் …
Read More »ஏழைகள் நலனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கருணையுள்ள அரசு: பிரதமர்
கடந்த 11 ஆண்டுக்கால ஆட்சியில் நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்துடன் ஏழைகள் நலனுக்கான திட்டத்தை செயல்படுத்துவதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் தெரிவித்துள்ளார். அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருவதால் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பிரதமரின் வீட்டு …
Read More »தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக, தில்லியில் உள்ள பகவான் மகாவீர் வனஸ்தலி பூங்காவில் பிரதமர் மரக்கன்று நட்டார்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் முன்முயற்சியை வலுப்படுத்தும் வகையில், தில்லியில் உள்ள பகவான் மகாவீர் வனஸ்தலி பூங்காவில் மரம் நடும் இயக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ஒரு மரக்கன்று நட்டார். ஆரவல்லி பசுமைச் சுவர் திட்டத்தின் கீழ் ஆரவல்லி மலைத்தொடரில் காடுகளை மறுசீரமைத்து வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார். உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடர் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, தில்லி ஆகிய பகுதிகளில் பரவியுள்ளதைப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பகுதிகள் பல சுற்றுச்சூழல் …
Read More »
Matribhumi Samachar Tamil