Thursday, December 19 2024 | 08:51:28 AM
Breaking News

National

அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

புதுதில்லி பாரத மண்டபத்தில் அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது சிறப்பு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர மோடி, இன்று பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மஹாபரி நிர்வாண் தினம் என்பதைக் குறிப்பிட்டார். பாபாசாஹேப் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் பெரும் உத்வேகத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறினார். ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது உட்பட கடந்த 2 ஆண்டுகளில் பல தேசிய, சர்வதேச நிகழ்வுகளுக்கு பாரத மண்டபம் சாட்சியாக திகழ்ந்துள்ளது …

Read More »

அஷ்டலட்சுமி மகா திருவிழா 2024

வடகிழக்கு இந்தியாவின் கலாச்சார வளமை மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டாடுதல் வடகிழக்கு இந்தியாவின் கலாச்சாரம் என்பது பல நூற்றாண்டுகளின் மரபுகள், மாறுபட்ட மொழிகள், வளமான நாட்டுப்புறக் கதைகள்  போன்ற துடிப்புமிக்க அம்சங்களைக் கொண்டுள்ளது. அனைத்து சமூகமும்,  அனைத்து மாநிலமும் தனக்கே உரிய தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ள பழங்கால பழக்கவழக்கங்கள் மற்றும் நவீன வளர்ச்சியின் அசாதாரண கலவையை தன்னகத்தே கொண்டுள்ள பிராந்தியமாக இது உள்ளது. அசாமின் பசுமையான தேயிலைத் தோட்டங்கள் முதல் மிசோரமின் மலைகள் வரை, மணிப்பூரின் …

Read More »

செம்மொழிகளைப் பாதுகாத்தலும் மேம்படுத்துதலும் தமிழுக்கு 2024-25- ல் ரூ.14 கோடி ஒதுக்கீடு

கீழ்க்கண்ட 11 மொழிகளை செம்மொழிகளாக அரசு அங்கீகரித்துள்ளது. தமிழ் 2004,  சமஸ்கிருதம் 2005, தெலுங்கு 2008, கன்னடம், மலையாளம் 2013, ஒடியா 2014, மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி, பெங்காலி 2024. செம்மொழிகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும்  மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் மூலம் நிதி வழங்குகிறது. ஆண்டு வாரியாக செம்மொழி தமிழுக்கு வழங்கப்பட்ட  நிதி (ரூ. லட்சத்தில்) 2020-21 – ரூ.1200.00, 2021-22 – ரூ. 1200.00, 2022-23 – ரூ. 1200.00,  …

Read More »

தேசிய பண்பாட்டு வரைபடமும் இலக்குத் திட்டமும்

இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும், கலாச்சார அமைச்சகம் கலாச்சார வரைபடத்திற்கான தேசிய இயக்கத்தை நிறுவியுள்ளது. இந்திரா காந்தி தேசிய கலை மையத்தால்  செயல்படுத்தப்படும் இந்த இயக்கம், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தையும் கிராமப்புற பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான அதன் திறனையும் ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவின்  ஒரு பகுதியாக, கலாச்சார வரைபடத்திற்கான தேசிய இயக்கம் ஜூன் 2023 (httpsmgmd.gov.in) -ல் மேரா காவ்ன் மேரி தரோஹர் …

Read More »

நினைவுச் சின்னங்களின் பாரம்பரியத்தைப் பாதுகாத்தலும் பராமரித்தலும்

பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள்  மற்றும் எச்சங்கள்  சட்டம், 1958, பிரிவு 4 எந்தவொரு பண்டைய நினைவுச்சின்னம் அல்லது தொல்பொருள் இடத்தையும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்க வழிவகை செய்கிறது. தொல்லியல், வரலாற்று அல்லது கட்டடக்கலை முக்கியத்துவத்தைப் பொறுத்து, எந்தவொரு பண்டைய நினைவுச்சின்னம் அல்லது தொல்பொருள் இடம்  மற்றும் எச்சங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அரசு அறிவிக்க இந்தச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது. இந்திய அரசிதழில் பொதுமக்களிடமிருந்து ஆட்சேபனைகளை வரவேற்கும் இரண்டு மாத அறிவிப்பு …

Read More »

‘இந்தியாவைக் கொண்டாடுதல்’ தலைப்பிலான அகில இந்திய சுவரொட்டி தயாரிக்கும் போட்டி

கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை (இன்டாக்) 7 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ‘இந்தியாவைக் கொண்டாடுதல்’ என்ற தலைப்பில் அகில இந்திய சுவரொட்டி தயாரிக்கும் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. நாட்டின் இளைஞர்களுக்கான பாரம்பரிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை  நடத்தும் இன்டாக் நிறுவனத்தின் பாரம்பரிய கல்வி மற்றும் தொடர்பு பிரிவு இதனை நடத்தி வருகிறது. 100 இன்டாக் பிரிவுகள் அந்தந்த நகரங்கள் / பிராந்தியத்தில் இந்த போட்டியை நடத்துகின்றன, இது மார்ச் 2025-ல் முடிவடையும். இப்போட்டி புதுதில்லியில் 71, இன்டாக், லோடி எஸ்டேட்டில் 2024  …

Read More »

இந்தியாவின் அணுமின் நிலையப் பாதுகாப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது: டாக்டர் ஜிதேந்திர சிங்

கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் சர்வதேச மேற்பார்வையுடன் இந்தியாவின் அணுமின் நிலையங்கள் உலகிலேயே மிகவும் பாதுகாப்பானவையாக உள்ளன என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் துறை  இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர்நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு  மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  மாநிலங்களவையில் இன்று உறுதியளித்தார். கேள்வி நேரத்தின் போது அணுசக்தி பாதுகாப்பு …

Read More »

நாடாளுமன்ற கேள்வி: சந்திரயான்

திரு இரண்ணா கடாடி இன்று கேட்ட “சந்திரயான்” தொடர்பான கேள்வி எண் 120 க்கு பதிலளித்த அறிக்கை மாநிலங்களவையில் வைக்கப்பட்டது. இஸ்ரோ மூன்று சந்திரயான் பயணங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது மற்றும் சந்திரயான் -3 மிஷன் சந்திரனில் வெற்றிகரமாக பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கத்தை விளைவித்தது. 2040 ஆம் ஆண்டுக்குள் நிலவில் இந்தியா தரையிறங்கும் இலக்கை அடைவதற்கான திறனை உருவாக்க தொடர்ச்சியான சந்திரயான் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக, சந்திரயான்-4 திட்டத்திற்கு மத்திய …

Read More »

நாடாளுமன்ற கேள்வி: ககன்யான் திட்டத்தின் நிலை

ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் விவரம் வருமாறு: மனித ரேட்டட் ஏவு வாகனம்: ஏவு வாகனத்தின் மனித மதிப்பீட்டை நோக்கிய திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் இயந்திரம் உள்ளிட்ட உந்துவிசை அமைப்புகளின் நிலைகளின் தரை சோதனை நிறைவடைந்துள்ளது. பயணிகள் மாட்யூல் எஸ்கேப் சிஸ்டம்: ஐந்து வகையான பயணிகள் எஸ்கேப் சிஸ்டம் சாலிட் மோட்டார்களின் வடிவமைப்பு மற்றும் உணர்தல் முடிந்தது. அனைத்து ஐந்து வகையான திட மோட்டார்களின் நிலையான சோதனை முடிந்தது. பயணிகள் …

Read More »

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தின் கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்

தேசிய நாளிதழ் ஒன்றில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுதிய கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். இந்தக் கருத்துக் கட்டுரை அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது; இந்தியாவின் மாறுபட்ட கலாச்சார, ஆன்மீக, வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டாடுகிறது என்று திரு மோடி கூறியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “இந்திய அரசியலமைப்பு ஒரு சட்ட ஆவணத்தை விட மேலானது என்பதை மத்திய அமைச்சர் திரு …

Read More »