Thursday, December 11 2025 | 09:36:44 AM
Breaking News

National

ஏரோ இந்தியா 2025

அறிமுகம்: ஏரோ இந்தியா, ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சியாகும். பெங்களூருவில் நடைபெறும் இரு வருட விமான கண்காட்சியான இது பாதுகாப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஏரோ இந்தியா இந்தியாவின் முதன்மையான செயல்பாடு விண்வெளி, பாதுகாப்பு கண்காட்சியாகும். இதில் உலகளாவிய விமானத் துறை தொழில் துறையினரும் இந்திய விமானப்படையும் (ஐ. ஏ. எஃப்) பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும். இது உலகளாவிய தொழில்துறை தலைவர்கள், அரசு அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பாதுகாப்பு நிபுணர்களை …

Read More »

தற்சார்பு இந்தியா: இந்திய கடற்படைக்கு 28 இஓஎன்-51 அமைப்புகளுக்காக பிஇஎல் நிறுவனத்துடன் ரூ. 642 கோடி ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது

பாதுகாப்பு அமைச்சகம், இன்று (2025 பிப்ரவரி 08) புதுதில்லியில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) நிறுவனத்துடன் 11 புதிய தலைமுறை கடல் ரோந்து கப்பல்களுக்கான 28 இஓஎன்-51 அமைப்புகளுக்கும் இந்திய கடற்படைக்கு மூன்று கேடட் பயிற்சி கப்பல்களை வாங்குவதற்குமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இஓஎன்-51 என்பது எலக்ட்ரோ ஆப்டிகல் தீ கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும். இது எலக்ட்ரோ ஆப்டிகல், தெர்மல் இமேஜர்ஸ் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இலக்குகளைத் தேடுதல், கண்டறிதல், …

Read More »

15-வது ஏரோ-இந்தியா சர்வதேச கருத்தரங்கு பெங்களூரில் தொடங்கியது

இரு வருட ஏரோ-இந்தியா சர்வதேச கருத்தரங்கின் 15-வது பதிப்பு இன்று (2025 பிப்ரவரி 08) கர்நாடகாவின் பெங்களூருவில் தொடங்கியது. பாதுகாப்பு ஆராய்ச்சி – மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) இராணுவ விமான தகுதி சான்றிதழ் மையம் (செமிலாக்), ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா (ஏஎஸ்ஐ) உடன் இணைந்து ஏரோ இந்தியா 2025-க்கு முன்னோடியாக இரண்டு நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கருத்தரங்கு உலகளாவிய விண்வெளி அரங்கில் ஒரு முக்கிய நிகழ்வாகும். …

Read More »

பிப்ரவரி 22 முதல் புதிய வடிவத்தில் காவலர் பணி மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும்

காவலர் பணி மாற்றும் நிகழ்ச்சி, பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பிப்ரவரி 22, 2025 முதல் புதிய வடிவத்தில் நடைபெறும். குடியரசு தலைவர்  திருமதி திரௌபதி முர்மு பிப்ரவரி 16, 2025 அன்று தொடக்க நிகழ்ச்சியைப் பார்வையிடுவார். காவலர் பணி மாற்றும் நிகழ்ச்சியின் புதிய வடிவத்தில், குடியரசுத் தலைவர் மாளிகையின்  பின்னணியில் ஒரு துடிப்பான காட்சி மற்றும் இசை நிகழ்ச்சியை மக்கள் காணலாம். இந்த விழாவில் குடியரசு தலைவரின் மெய்க்காவலர்களின் குதிரைகள் …

Read More »

விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு

விவசாயிகளுக்கு உதவுவதற்காக விவசாயத் துறையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவு முறைகளை  அரசு பயன்படுத்தியுள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்க முன்முயற்சிகள்  பின்வருமாறு: * கிசான் இ-மித்ரா’: செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட சாட்போட் சேவை, பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம் குறித்த கேள்விகளுக்கு விவசாயிகளுக்கு பதில் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்வு பல மொழிகளை ஆதரிக்கிறது மற்றும் பிற அரசுத் திட்டங்களுக்கு உதவும் வகையில் உருவாகி வருகிறது. …

Read More »

துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய துப்புரவு தொழிலாளர்கள் ஆணையத்தின் (என்.சி.எஸ்.கே) பதவிக்காலத்தை 31.03.2025 க்குப் பிறகு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு (அதாவது 31.03.2028 வரை) நீட்டிக்க ஒப்புதல்  அளிக்கப்பட்டது. என்.சி.எஸ்.கே மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதற்கான மொத்த நிதி செலவு தோராயமாக ரூ.50.91 கோடியாக இருக்கும். துப்புரவுத் தொழிலாளர்களின் சமூக-பொருளாதார மேம்பாடு, துப்புரவு துறையில் பணி நிலைமைகளை மேம்படுத்துதல் மற்றும் அபாயகரமான துப்புரவு பணிகளை …

Read More »

செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தி, சேவைகளை விரிவுபடுத்த அஞ்சல் துறை நடவடிக்கை

அஞ்சல் துறையில் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், தொழில்நுட்பத்தை இணைக்கவும், சேவைகள் வழங்கப்படுவதை விரிவுபடுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வேகமான பார்சல் விநியோகங்களுக்கு 233 மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை தினசரி கையாளப்படும் பார்சல்களில்  30 சதவீதம் வரை விநியோகிக்கின்றன. பார்சல்களைப பாதுகாப்பாகக் கையாளுவதற்கு வசதியாக 190 பார்சல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  பார்சல்களை பேக்கேஜிங் செய்வதற்கு 1408  மையங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. ஏடிஎம்கள், இணைய வங்கி, மொபைல் வங்கி மற்றும் சுமூகமான டிஜிட்டல் …

Read More »

செயற்கைக்கோள் தகவல் தொடர்பின் முக்கியத்துவம் அதிகரிப்பு

தொலைத்தொடர்பு துறை (டிஓடி) 11.07.2024 அன்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான பரிந்துரைகளைக் கோரியுள்ளது, இதில் செயற்கைக்கோள் அடிப்படையிலான தகவல் தொடர்பு சேவைகளை வழங்க விரும்பும் நிறுவனங்களுக்கு விலை நிர்ணயம் உட்பட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து கோரப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் தகவல் தொடர்பு உட்பட தொலைத்தொடர்புக்கு தொழில்நுட்ப வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் வணிகமயமாக்கலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்காக தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. …

Read More »

அஞ்சல் சேமிப்பு கணக்கை அதன் பல்வேறு கணக்குகளுடன் இணைப்பதற்கு இந்தியா அஞ்சலக வங்கி, நடவடிக்கை

இந்தியா அஞ்சலக வங்கி (ஐபிபிபீ) நாடு முழுவதும் 650 கிளைகளையும் 1.63 லட்சத்திற்கும் மேற்பட்ட அணுகல் மையங்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக குஷிநகர் மாவட்டத்தில் ஒரு கிளையும் 224 அணுகல் மையங்களும் உள்ளன. சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகள், டெபிட் கார்டு, உள்நாட்டு பணப் பரிமாற்ற சேவைகள், காப்பீட்டுச் சேவைகள், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ், ஆதாரில் மொபைல் எண் புதுப்பித்தல் மற்றும் குழந்தை உள்பட பயனாளி இணைப்பு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த வங்கி வழங்குகிறது. டிஜிட்டல் …

Read More »

“சிறந்த ஆரோக்கியத்திற்காக சதாவரி” என்ற நாடு தழுவிய இனங்கள் சார்ந்த பிரச்சாரம் இன்று தொடங்கப்பட்டது

மருத்துவ தாவரங்களின் ஆரோக்கிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,”சிறந்த ஆரோக்கியத்திற்காக சதாவரி” என்ற இனங்கள் சார்ந்த பிரச்சாரத்தை, மத்திய ஆயுஷ் இணையமைச்சர் (தனிப் பொறுப்பு)  திரு பிரதாப்ராவ் ஜாதவ் இன்று  தொடங்கி வைத்தார். ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா, தேசிய மருத்துவ தாவர வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மகேஷ் குமார் தாதிச் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் …

Read More »