குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்திக் கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (ஜனவரி 24, 2025) லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்லத்தில் கலந்துரையாடினார். இந்த உரையாடலின் போது, பிரதமரை நேரில் சந்தித்ததில் பல பங்கேற்பாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். “இது இந்திய ஜனநாயகத்தின் வலிமையை நிரூபிக்கிறது” என்று பிரதமர் அதற்கு பதிலளித்தார். …
Read More »15வது தேசிய வாக்காளர் தின கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்
இன்று (ஜனவரி 25, 2025) புது தில்லியில் நடைபெற்ற 15-வது தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். தேர்தலை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதில் முன்னுதாரணமாக செயல்பட்ட மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு சிறந்த தேர்தல் நடைமுறைகள் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார். “இந்திய வாக்குகள் 2024: ஜனநாயகத்தின் சகாப்தம்’’ புத்தகத்தின் முதல் பிரதியையும் தலைமைத் தேர்தல் ஆணையர் …
Read More »2025-குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரை
எனதருமை குடிமக்களே, வணக்கம்! வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தருணத்தில் உங்களிடையே உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். குடியரசு தின விழாவையொட்டி உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 75 ஆண்டுகளுக்கு முன், ஜனவரி 26 அன்று, நமது அடிப்படை ஆவணமான இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஏறத்தாழ மூன்று ஆண்டு விவாதங்களுக்குப் பின், 1949 நவம்பர் 26ஆம் தேதி அரசியலமைப்புச் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது. அந்த நாள், …
Read More »தில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினர்களாக 600-க்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்
2025 ஜனவரி 26, அன்று புதுதில்லி, கடமைப் பாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பைக் காண 600-க்கும் அதிகமான ஊராட்சி மன்றத் (பஞ்சாயத்து) தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அழைத்துள்ளது. இந்த சிறப்பு விருந்தினர்கள் அந்தந்த ஊராட்சிகளில் முதன்மைத் திட்டங்களின் கீழ் சிறப்பாக பங்களிப்பு செய்ததற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம், பிரதமரின் ஊரக வீட்டுவசதி திட்டம், இந்திரதனுஷ் தடுப்பூசி இயக்கம், பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் (ஆயுஷ்மான் பாரத்), பிரதமரின் இலவச …
Read More »“சஞ்சய் – போர்க்கள கண்காணிப்பு அமைப்பு”- பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (2025 ஜனவரி 24) புதுதில்லியின் சௌத் பிளாக்கில் ‘சஞ்சய் – போர்க்கள கண்காணிப்பு அமைப்பு (BSS)’-ஐ கொடியசைத்து தொடங்கி வைத்தார். சஞ்சய் என்பது ஒரு தானியங்கி அமைப்பாகும். இது அனைத்து தரை, வான்வழி போர்க்கள சென்சார்களிலிருந்து உள்ளீடுகளை பெற்று ஒருங்கிணைக்கிறது. அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த அவற்றை செயலாக்குகிறது. பாதுகாப்பான ராணுவ தரவு கட்டமைப்பு, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் …
Read More »பராக்ரம தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை
பராக்ரம தினமாகக் கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாற்றினார். இந்தத் தினத்தை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளான இன்று நாடு முழுவதும் அவரை மரியாதையுடன் நினைவு கூர்கிறது என்றார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு மரியாதை செலுத்திய திரு நரேந்திர மோடி, இந்த ஆண்டு பராக்ரம தினக் கொண்டாட்டங்கள் அவரது …
Read More »பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் 10-வது ஆண்டு விழாவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கொண்டாடியது
பாலின ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்து பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் முன்னோடி திட்டமான பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் 10-வது ஆண்டு நிறைவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இன்று கொண்டாடியது. புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. அன்னபூர்ணா தேவி, பெண்கள் மற்றும் …
Read More »தேசிய சுகாதார இயக்கத்தின் (2021-24) சாதனைகள்: இந்தியாவின் பொது சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் ஒரு மைல்கல்
மனித வளங்களை விரிவுபடுத்துதல், முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், சுகாதார அவசரநிலைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வை கண்டறிதல் போன்ற தொடர் முயற்சிகள் வாயிலாக நாட்டின் பொது சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் தேசிய சுகாதார இயக்கம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், தாய்-சேய் நலம், நோய் ஒழிப்பு, சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேசிய சுகாதார இயக்கம் கணிசமான அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த …
Read More »தேசிய சுகாதார இயக்கம் (2021-24) கீழ் படைக்கப்பட்டுள்ள சாதனைகளை மத்திய அமைச்சரவை மதிப்பீடு செய்தது: இது நாட்டின் பொது சுகாதார மேம்பாட்டில் ஏற்பட்டுள்ள தாக்கத்தின் மைல்கல் ஆகும்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் தேசிய சுகாதார இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பச்சிளங்குழந்தை இறப்பு விகிதம், கர்ப்பிணிகள் இறப்பு விகிதம், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் மற்றும் மொத்த கருவுறுதல் விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில், காலரா, டெங்கு, காசநோய், தொழுநோய், வைரஸ், மஞ்சள்காமாலை போன்ற பல்வேறு நோய்களுக்கான தடுப்பு திட்டங்கள், தேசிய சிக்கல் செல் இரத்த சோகை நோய் ஒழிப்பு இயக்கம் போன்ற புதிய முயற்சிகள் தொடர்பான திட்டங்களின் …
Read More »பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தின் 10-ம் ஆண்டு விழா: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கொண்டாட உள்ளது
பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தின் 10-ம் ஆண்டு நிறைவு விழாவை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கொண்டாட உள்ளது. இது நாட்டில் பெண் குழந்தைகளைப் பாதுகாத்தல், கல்வி கற்பித்தல் மற்றும் அதிகாரம் அளித்தல் ஆகியவற்றிற்கான ஒரு பத்தாண்டுக்கால இடைவிடாத முயற்சிகளைக் குறிக்கிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி புதுதில்லி விஞ்ஞான் பவனில் நாளை (2025 ஜனவரி 22) நடைபெற உள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஜே.பி.நட்டா, மத்திய மகளிர் மற்றும் …
Read More »
Matribhumi Samachar Tamil