Thursday, December 19 2024 | 06:00:34 AM
Breaking News

National

வேளாண் நிலங்களில் இயற்கை கார்பன்

வேளாண் நிலங்களில் இயற்கை கார்பன் இருப்பது குறித்து  மண் வள அட்டை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மண்ணில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மண்வள அட்டையை மாநிலங்கள் புதுப்பிக்க வேண்டும். இதுவரை 24.60 கோடி சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மண்ணில் இயற்கை கார்பன் அளவு  குறைவதற்கான முக்கிய காரணிகள் (i) இரசாயன உரங்களின் முறையற்ற அல்லது அதிகப்படியான பயன்பாடு, அடிக்கடி மண்ணை உழவு, செய்தல், பயிர்க்கழிவுகளை எரித்தல், அதிகப்படியான மேய்ச்சல், மண் அரிப்பு போன்ற குறைபாடுள்ள நடைமுறைகள். (ii) நீண்ட கால  தாவர வகைகளுக்குப் பதிலாக ஒரே மாதிரியான பயிர்கள், மேய்ச்சல் நிலங்களைப் பயன்படுத்துதல், (iii) மண்ணின் மொத்த அடர்த்தி, அதிக சரளை உள்ளடக்கம், மண் அரிப்பு, குறைந்த நிலத்தடி நீர், குறைந்த ஈரப்பதம் போன்ற மண்ணின் இயற்பியல் வேதியியல் பண்புகள். இது போன்ற பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், விவசாயிகளுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலம்  மண்வளத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மண்ணில் உள்ள இயற்கை கார்பனின் அளவு தொடர்பான விவரங்களை மாநில சுய உதவிக் குழுவிற்கு அளித்து, இரண்டாம் நிலை மற்றும் நுண்ணூட்ட உரங்களுடன் இரசாயன உரங்களையும், இயற்கை உரங்கள், உயிர் உரங்களையும் சரியான முறையில் பயன்படுத்தி, மண்ணின் அங்கக இயற்கை கார்பன் மற்றும் வளத்தை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம் நாத் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

Read More »

திருமதி துளசி கௌடா மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

கர்நாடகாவைச் சேர்ந்த மதிப்பிற்குரிய சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்ம விருது பெற்றவருமான திருமதி துளசி கவுடா மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர்  பதிவிட்டிருப்பதாவது: “கர்நாடகாவைச் சேர்ந்த மதிப்பிற்குரிய சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்ம விருது பெற்றவருமான திருமதி துளசி கவுடாவின்  மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இயற்கையை பேணி வளர்ப்பதற்கும், ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நடுவதற்கும், நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். …

Read More »

புள்ளியியல் நடைமுறைகளை வலுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவி – தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்கள் பணிகளை நிறைவு செய்துள்ளன

நம்பகமான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை சேகரித்தல், தொகுத்தல், வெளியிடுதல் ஆகியவற்றில் மாநிலங்களின் திறன்களையும் செயல்பாடுகளையும் வலுப்படுத்த ‘புள்ளியியல் வலுப்படுத்துதலுக்கான ஆதரவு நடைமுறை’ என்ற மத்திய அரசின் துணைத் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு புள்ளியியல் – திட்ட அமலாக்க அமைச்சகம் மானிய உதவி வழங்குகிறது. இந்த துணைத் திட்டத்தின் கீழ், உள்ளூர் அளவிலான புள்ளிவிவரங்களைத் தொகுத்தல், ஒருங்கிணைந்த மாநில தரவுத்தளங்களை உருவாக்குதல், தரவு இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கான ஆய்வுகள் …

Read More »

பாரம்பரிய அறிவை அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இணைக்க வேண்டும் என்றும் இது மற்றவர்களை இந்தியாவை முன்னேற்ற முடியும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

பாரம்பரிய அறிவை அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இணைக்க வேண்டும் என்றும் இது மற்றவர்களை இந்தியாவை முன்னேற்ற முடியும் என்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் துறை  இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர்நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு  மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  கூறியுள்ளார் அறிவியல் மற்றும் பாரம்பரிய ஆராய்ச்சி முன்முயற்சியின் ஐந்தாண்டு கொண்டாட்டத்தில் பேசிய அமைச்சர், இந்தியாவின் பண்டைய ஞானத்தை சமகால அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் …

Read More »

உயிரி எரிபொருட்களை ஊக்குவிப்பதற்கான அரசின் முன்முயற்சிகள்

2014-ம் ஆண்டு முதல், பெட்ரோலில் எத்தனால் கலப்பதை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் உற்பத்தியை அதிகரித்தல், நிர்வகிக்கப்பட்ட விலை வழிமுறை, எத்தனால் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 5 சதவீதமாக குறைத்தது,  எத்தனால் ஆலைகளுடன் நீண்டகால கொள்முதல் ஒப்பந்தங்கள், பயோடீசல் விற்பனைக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது, பயோடீசல் கொள்முதலுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைத்தல்,  டீசலில் பயோடீசலை  5 சதவீதம்  கலப்பதை கட்டாயமாக்குவது தொடர்பாக உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கையில் திருத்தம் போன்ற பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. அழுத்தப்பட்ட உயிரி …

Read More »

நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 97 புதிய இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம், நாடு முழுவதும் உள்ள 165 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள், 1590 மருந்தகங்கள் மூலம் காப்பீட்டு நபர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு சிகிச்சை, மருந்துகள் மற்றும் காயத்திற்கு கட்டு போடுதல், சிறப்பு ஆலோசனை மற்றும் மருத்துவமனையில் சேர்த்தல் போன்ற விரிவான மருத்துவ சேவையை அளித்து வருகிறது. நாடு முழுவதும் புதிய இஎஸ்ஐ மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களை இஎஸ்ஐசி அமைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் …

Read More »

வெற்றி தினத்தையொட்டி, 1971-ம் ஆண்டு போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான போரில், இந்தியாவின் வரலாற்று வெற்றியை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 16-ஆம் நாள் வெற்றி தினமாக கொண்டாடப்படுவதையொட்டி, 1971-ம் ஆண்டு போரில் உயிர்தியாகம் செய்த துணிச்சல்மிக்க வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும் கதைகளைக் கொண்ட துணிச்சலான வீரர்களின் தியாகத்தை நாடு நன்றியுடன் நினைவில் கொள்கிறது என்றும், அவர்களுடைய தியாகம் நாட்டின் பெருமிதத்தின் ஆதாரமாக திகழ்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் வெளியிட்டுள்ள பதிவில், …

Read More »

தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு அருங்காட்சியகங்களுக்கான மானியத் திட்டத்தின் கீழ் அதிக நிதி ஒதுக்கீடு

மண்டல, மாநில, மாவட்ட அளவில் மத்திய அரசு, மாநில அரசுகள், சங்கங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளைகள் ஆகியவற்றால் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்க இத்திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்படுகிறது.  தற்போதுள்ள அருங்காட்சியகங்களை வலுப்படுத்துதல், நவீனப்படுத்துதல் ஆகியவற்றுக்கும் உதவி வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ள கலைப் பொருட்களை டிஜிட்டல் மயமாக்கி, அவை தொடர்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல், அருங்காட்சியக வல்லுநர்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கும் இந்த உதவி வழங்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அதாவது 2019-2024 ஆம் ஆண்டு …

Read More »

வெற்றி தினத்தை முன்னிட்டு துணிச்சல்மிக்க வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

விஜய் திவஸ் என்றழைக்கப்படும் வெற்றி தினத்தை  முன்னிட்டு, துணிச்சல்மிக்க வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது: “வெற்றி தினமான இன்று, 1971-ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியில் பங்களித்த துணிச்சலான வீரர்களின் தைரியம், தியாகங்களை நாம் போற்றுவோம். அவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் அசைக்க முடியாத உறுதி ஆகியவை நமது தேசத்தைப் பாதுகாத்து, நமக்குப் …

Read More »

“இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகால மகத்துவமிக்க பயணம்” என்ற விவாதத்தில் மாநிலங்களவைத் தலைவர் ஆற்றிய தொடக்க உரை

மாண்புமிகு உறுப்பினர்களே, 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் நாளன்று நமது அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 75-வது ஆண்டு நிறைவையொட்டி, இரண்டு நாள் கொண்டாட்டத்தை நாம் இன்று தொடங்குகிறோம். இது கொண்டாட்டத்திற்கான அழைப்பு மட்டுமல்ல, நமது பயணத்தை ஆழமாக பிரதிபலிப்பதும், நமது முன்னோக்கி செல்லும் பாதையை தீர்மானிக்கக் கூடியதுமாகும். இந்த அரசியலமைப்பு உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் அடித்தளமாக உள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் இந்த அவையில் நடைபெறும் நமது விவாதங்கள், இந்த நிகழ்வின் தீவிரத்தை பிரதிபலிக்கட்டும். 1.4 பில்லியன் மக்களுக்கு சேவை …

Read More »