Saturday, December 06 2025 | 02:01:47 AM
Breaking News

National

சனாதன தர்மத்தின் இதயத்தை நோக்கிய பயணம்: மகா கும்பமேளா 2025

ஆன்மீக உற்சாகத்திற்கு இடையே,மகா கும்ப நகரில் உள்ள மத்திய மருத்துவமனை நம்பிக்கை மற்றும் உயிர்ச்சக்தியின் புதிய அத்தியாயத்தை எழுதுகிறது. மகா கும்பமேளா திருவிழா தொடங்குவதற்கு சற்று முன்பு ‘கங்கா’ என்று பெயரிடப்பட்ட பெண் குழந்தை பிறப்பது, புனித நதிகளின் தூய்மை மற்றும் சாரத்தை  நினைவூட்டுவதாக உள்ளது.. ‘கும்பமேளா’ என்று பெயரிடப்பட்ட மற்றொரு ஆண் குழந்தையும் பிறந்தது. , இந்தப் பிறப்புகள் வாழ்க்கை வட்டத்தையும் மகா கும்பமேளா பண்டிகையின் ஆசீர்வாதங்களையும் வெளிப்படுத்தும் அம்சங்களாக உள்ளன.. மகா கும்பமேளா அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கு முன்பே …

Read More »

மின்சார அமைச்சகம்: 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்

மின் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் ஆகியவற்றில் வரலாற்று முன்னேற்றங்களுடன் 2024-ம் ஆண்டு இந்தியாவின் மின் துறைக்கு ஒரு மைல்கல் சாதனை ஆண்டாகும். 250 ஜிகாவாட்  மின் தேவையை பூர்த்தி செய்ததில் இருந்து 2024-25 நிதியாண்டில் தேசிய அளவில்  எரிசக்தி பற்றாக்குறையை வெறும் 0.1% ஆகக் குறைத்தது  வரை, அமைச்சகம் நிலையான வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை நிரூபித்தது. எரிசக்தி பாதுகாப்பு, நுகர்வோருக்கு அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றம், அனைவருக்கும் நம்பகமான, மலிவான மின்சாரத்தை உறுதி செய்வதற்கான அரசின் முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. •    இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தி …

Read More »

நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம்: 2024-ம் ஆண்டில் செயல்பாடுகள்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் பல்வேறு விதமான பணிகளை கையாளும்  அலுவல்கள் அனைத்தும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த அமைச்சகமானது நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது. அவ்வப்போது சில கூடுதல் பொறுப்புகள், செயல்பாடுகள் இந்த அமைச்சகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. 2024-ம் ஆண்டில் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் முக்கிய முன்முயற்சிகள்/ நிகழ்வுகள்/ சாதனைகள் பின்வருமாறு: நாடாளுமன்ற அவைகளின் அலுவல்கள் மக்களவை மாநிலங்களவை தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களின் …

Read More »

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்தி முகமை யின் 2025-ம் ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வை: சந்தைப்படுத்துதலில் புத்தாக்கங்கள், சில்லறை விற்பனைக்கான ஊக்கம், உலகளாவிய விரிவாக்கம்

2025-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தையொட்டி, இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு பிரதீப் குமார் தாஸ், அனைத்து தொழிலாளர்களிடமும் காணொளி காட்சி மூலம் உரையாற்றினார். அந்நிறுவனத்தின் நிதித்துறை இயக்குநர்  டாக்டர் பிஜய் குமார் மொஹந்தி, தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி திரு அஜய் குமார் சஹானி மற்றும் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான நிதியுதவி குறித்த நடவடிக்கைகளில் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை  நம்பிக்கை கொண்டுள்ளதாக திரு தாஸ்  தெரிவித்துள்ளார். பசுமை அமோனியா, நீர்மின் திட்டங்கள், சூரிய சக்தி உற்பத்திக்கான  தகடுகள்   பிரதமரின் வேளாண் எரிசக்தி பாதுகாப்பு, மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  மேற்கொள்ளப்பட்டு வரும் உற்பத்தி திட்டங்களுக்கு சந்தை ஆதரவை வழங்குவதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை  ஊக்குவிப்பதில் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் செயல்பாட்டை அவர் எடுத்துரைத்தார். இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்க நடவடிக்ககள் குறித்து எடுத்துரைத்த திரு தாஸ், அந்நிய செலாவணி நிதியுதவி மூலம் பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான உபகரணங்கள் தயாரிப்பதை ஊக்குவிக்கிறது என்று கூறினார்.   வீடுகளின் மேற்கூரைகளில் சூரிசக்தி தகடுகள் அமைக்கும் பிரதமரின் திட்டம், பிரதமரின் வேளாண் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுத்  திட்டங்களின் கீழ் சில்லறை வர்த்தகத்தை மேம்படுத்துவதிலும்  மின்சார வாகனங்கள்,  எரிசக்தி சேமிப்பு, பசுமை தொழில்நுட்பங்கள், திறன் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க  எரிசக்தி துறையில் வளர்ந்து வரும் பிரிவுகளிலும் கவனம் செலுத்தும்.

Read More »

ஜல் சக்தி அமைச்சகம் ஜல்சக்தி மற்றும் துப்புரவு துறை 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்

தூய்மை இந்தியா இயக்கம் – ஊரக வளர்ச்சி தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினமான  2019-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதிக்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தருவதன் மூலம், கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கம் மத்திய அரசின் நிதியுதவியுடன் 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. இதன் விளைவாக, 2019-ம் ஆண்டு …

Read More »

ஒரே நாடு ஒரே சந்தா

பண்டைய அறிவு மற்றும் வளமான பாரம்பரியம் கொண்ட நாடான இந்தியா, எப்போதும் புதுமை மற்றும் கண்டுபிடிப்பின் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. கணிதம் மற்றும் வானியலில் முன்னோடியாக இருப்பது முதல் அறிவியலின் பல்வேறு துறைகளில் அற்புதமான பங்களிப்புகள் வரை, நாட்டின் அறிவுசார் சாதனைகளின் மரபு வரலாறு என்பது ஒப்பிடமுடியாதது. ஆகஸ்ட் 15, 2022 அன்று, பிரதமர் நரேந்திர மோடி, செங்கோட்டையின் கொத்தளங்களில் இருந்து, இந்த பெருமைமிக்க பாரம்பரியத்தையும், இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் …

Read More »

2025-ம் ஆண்டை சீர்திருத்த ஆண்டாக அறிவித்தது பாதுகாப்பு அமைச்சகம்

புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் அனைத்து செயலாளர்களுடன் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் பல்வேறு திட்டங்கள், சீர்திருத்தங்கள் மற்றும் முன்னோக்கி செல்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது. தற்போது நடைமுறையில் உள்ள மற்றும் எதிர்கால சீர்திருத்தங்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், 2025-ம் ஆண்டை பாதுகாப்பு அமைச்சகத்தில் ‘சீர்திருத்த ஆண்டாக’ கடைபிடிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இது ஆயுதப்படைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போருக்குத் தயாராக …

Read More »

குடியரசு தின அணிவகுப்பு, பாசறைத் திரும்பும் நிகழ்வு ஆகியவற்றைக் காண்பதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை நாளை (ஜனவரி 02, 2025 ) தொடங்குகிறது

குடியரசு தின அணிவகுப்பு – 2025, பாசறைத் திரும்பும் நிகழ்வு ஆகியவற்றை  காண்பதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஜனவரி 02-ம் தேதி தொடங்குகிறது. கட்டணச்சீட்டு  விவரம் பின்வருமாறு: வ. எண் நிகழ்ச்சி கட்டணச்சீட்டு மதிப்பு அட்டவணை 1. குடியரசு தின அணிவகுப்பு (26.01.2025) ரூ.100/- & ரூ.20/- 2025-ம் ஆண்டு ஜனவரி 02 முதல் 11 வரை –காலை 9.00 மணி முதல் அன்றைய இருக்கைகள் தீரும் வரை. 2. பாசறை திரும்பும் நிகழ்வு (முழு ஒத்திகை 28.01.2025) ரூ.20/- 3. பாசறை திரும்பும் நிகழ்வு (29.01.2025) ரூ.100/- கட்டணச் …

Read More »

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம் (RWBCIS) ஆகியவற்றில் சில அம்சங்களைத் திருத்தவும் புதிய அம்சங்களைச் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2021-22 முதல் 2025-26 வரை 69,515.71 கோடி ரூபாய் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மற்றும் வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை 2025-26 வரை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவு 2025-26 வரை நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு இயற்கைப் பேரழிவுகளிலிருந்து பயிர்களை பாதுகாக்க உதவும். இது தவிர, இத்திட்டத்தை …

Read More »

டை-அம்மோனியம் பாஸ்பேட்டுக்கான ஒரு முறை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை 01.01.2025 முதல் மறு உத்தரவு வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

விவசாயிகளுக்கு மலிவு விலையில் டை-அம்மோனியம் பாஸ்பேட் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, 01.01.2025 முதல் மறு உத்தரவு வரை என்.பி.எஸ் மானியத்தில்  ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.3,500 என்ற தொகைக்கும் அப்பால் டிஏபி மீதான ஒரு முறை சிறப்பு தொகுப்பை நீட்டிப்பதற்கான உரங்கள் துறையின் முன்மொழிவுக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. பி&கே உரங்களுக்கான மானியம் 01.04.2010 முதல் என்பிஎஸ் திட்டத்தின் கீழ் …

Read More »