பயிர்க் கழிவுகளை எரிக்கும் பிரச்சினைக்கு முறையான தீர்வு காண வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார். புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தேசிய எரிசக்தி சேமிப்பு தின விழா 2024-ல் பேசிய திரு ஜக்தீப் தன்கர், பயிர்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் அபாயகரமான சுற்றுச்சூழல் சூழ்நிலைகளால் தேசிய தலைநகரமான தில்லி ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படுகிறது என்றார். நாம் புதுமை அணுகுமுறையில் இறங்க வேண்டும் …
Read More »டிசம்பர் 14, தேசிய எரிசக்தி சேமிப்பு தினம்
நீடித்த வளர்ச்சியின் அடித்தளமாக எரிசக்தி திறன் உள்ளது. முன்னேற்றம், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் இழைகளை ஒன்றாக இணைக்கிறது. இந்தியாவில், நிலைத்தன்மைக்கான இந்த ஆழ்ந்த அர்ப்பணிப்பு டிசம்பர் 14 அன்று தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வருடாந்தர நிகழ்வு நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட பொறுப்பின் ஒளியாகப் பிரகாசிக்கிறது. இது நீடித்த எரிசக்தி நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு முக்கியமான தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு சடங்கு நிகழ்வாக இல்லாமல், தனிநபர்கள், தொழில்கள் மற்றும் …
Read More »உணவு பதனப்படுத்தும் தொழில்களில் சுய உதவிக் குழுக்களுக்கு அரசு மானியம்
உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் தனது திட்டங்கள் மூலம் உணவு பதனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுய உதவிக் குழுக்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய, பிரதமரின் உணவு பதனப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழு உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ரூ.40,000/- வரை ஆரம்ப மூலதனத்திற்கு அமைச்சகம் மானியம் வழங்குகிறது. தனிநபர் சுய உதவிக் குழு உறுப்பினர் திட்ட மதிப்பீட்டில் 35% கடன் இணைக்கப்பட்ட மானியத்தை அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை உணவு பதனப்படுத்தும் நிறுவனத்தின் ஒரு அலகாகப் பெறலாம். …
Read More »மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி மீனவர்களுக்கான உரிமைகள்
நாட்டில் உள்ள மீனவர்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் மீன்வளத் துறையுடன் கலந்தாலோசித்து தொகுக்கப்பட்டுள்ளன. நாட்டில் மொத்தம் 2,80,63,538 மீனவர்கள் உள்ளதாகவும் தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களின் எண்ணிக்கை 12,83,751-ஆக உள்ளதாக இந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன. அனைத்து கடலோர மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், கடற்கரையிலிருந்து 12 கடல் மைல்களுக்குள் மீன்பிடிப்பதை உறுதி செய்யும் வகையில் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டங்கள் ஏற்கனவே இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளன. கடலோர …
Read More »ரூ.20,050 கோடி மதிப்பீட்டில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம்
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை, பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் என்ற முன்னோடித் திட்டத்தை 2020-21-ம் நிதியாண்டு முதல் 2024-25-ம் நிதியாண்டு வரை 5 ஆண்டு காலத்திற்கு மொத்தம் ரூ.20,050 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தி வருகிறது. மத்திய மீன்வளத்துறை பல்வேறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், இதர செயலாக்க முகமைகளின் ரூ.20864.29 கோடி மதிப்பீட்டிலான மீன்வள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் …
Read More »2024 டிசம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்
பிரதமர் திரு நரேந்திர மோடி வரும் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார். இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் அதிகரிப்பதற்கான மற்றொரு முக்கியப் படியாக இருக்கும். ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி முறையை வலுப்படுத்தவும், விரைவான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை அடைய மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் தலைமைச் செயலாளர்கள் மாநாடு உந்தப்படுகிறது. …
Read More »காணாமல் போன இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள்
இந்தியத் தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் (2013 ஆம் ஆண்டின் 18) 92 பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்திய தொல்லியல் துறை தனது கள அலுவலகங்கள் மூலம் மேற்கொண்ட ஆய்வில், 18 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் சிறந்த முறையில் பாதுகாக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் போது, இந்திய தொல்லியல் துறையின் கள அலுவலகங்கள், விரைவான நகரமயமாக்கல் காரணமாக ஏற்படும் அழுத்தங்கள் நினைவுச்சின்னங்களைப் பாதிக்கும் காரணியாக …
Read More »தேசிய சமஸ்கிருத திருவிழா
நாட்டின் இளைஞர்களிடையே தொன்மையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மண்டல கலாச்சார மையங்கள் வாயிலாக தேசிய சமஸ்கிருத திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர். இதுவரை, 14 தேசிய சமஸ்கிருத திருவிழாவும், 04 மண்டல அளவிலான விழாக்களும் மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தால் நடத்தப்பட்டன. 1890 ஆம் ஆண்டு …
Read More »கலாச்சார அமைச்சகம் மற்றும் அதன் 43 அமைப்புகள் சிறப்பு பிரச்சாரம் 4.0 இல் பங்கேற்றன
மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் அதன் 43 அமைப்புகள், சிறப்பு பிரச்சாரம் 4.0-ல் பங்கேற்று, அரசு அலுவலகங்களில் தூய்மையைப் பராமரிப்பதற்கும் பொது மக்களின் பணி சார்ந்த அனுபவங்களை மேம்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் / புதுமையான கழிவு மேலாண்மை, பொது விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டன. இதில் பதிவேடுகள் மேலாண்மை குறித்த பயிற்சி, துறை ஆவண அறை ஆய்வு, கண்காட்சிகள், தெருக்கூத்து, தாயின் பெயரில் ஒரு மரக்கன்று வளர்ப்போம் இயக்கம், பயிலரங்குகள், பயன்பாட்டில் இல்லாத இடங்களை …
Read More »புராதனத் தலங்களை பாதுகாப்பதில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பு
பாரம்பரிய தலங்களைப் பாதுகாப்பதற்கும், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை ஒட்டுமொத்தமாக மேம்படுத்துவதற்கும் அரசு மற்றும் தனியார் துறை இணைந்து கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்டுவதன் மூலம், 1890-ம் ஆண்டு அறக்கட்டளை சட்டத்தின் கீழ் தேசிய கலாச்சார நிதியம் 1996-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிதியத்தின் அனைத்து செயல் திட்டங்களும் திட்ட அமலாக்க குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேசிய கலாச்சார நிதியத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகள் நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பு அல்லது அங்குள்ள வசதிகளை மேம்படுத்துவதற்காக …
Read More »