Friday, December 05 2025 | 07:05:14 PM
Breaking News

National

கார்கில் வெற்றி தினத்தின் 26வது ஆண்டு நிறைவை இந்திய ராணுவம் கொண்டாடியது

நாடு முழுவதும் கார்கில் வெற்றி தினத்தின் 26வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், 1999 கார்கில் போரின் போது வீரர்களின் வீரத்தையும் உயர்ந்த தியாகத்தையும் போற்றும் வகையில், இந்திய ராணுவம் அதை மரியாதையுடனும், பெருமையுடனும், நாடு தழுவிய பங்கேற்புடனும் கொண்டாடியது. இந்த மைய நிகழ்வு டிராஸில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது, இதில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை …

Read More »

இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கியில் மொபைல் வங்கி சேவை அறிமுகம்

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கியில் 2018-ம் ஆண்டு முதல் இன்று வரை 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் புதுமைப் பெண் / தமிழ் புதல்வன் உள்ளிட்ட மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை கணக்குகள், விவசாயிகளுக்கான பிரதமரின் விவசாயிகள் நிதி ஆதரவு கணக்குகள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான கணக்குகள், கர்ப்பிணி பெண்களுக்கான பிரதமரின் மாத்ரு வந்தனா திட்ட கணக்குகள், முதியோர் …

Read More »

பன்னோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்கள்

நாட்டில் பன்னோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் நீண்டகாலம் நிலைத்து செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் கூட்டுறவு அமைச்சகம் பல்வேறு முக்கியமான முன்னெடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. சிறிய மற்றும் விளிம்பு நிலையில் உள்ள விவசாயிகள் குறைந்த வட்டியில் கடன் பெறுவதிலும் தரமான வேளாண் உள்ளீடுகளைப் பெறுவதிலும் உள்ள சவால்களை தீர்ப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய நடவடிக்கைகளில் கீழ்வருவனவும் உள்ளடங்கும்: 1.நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும் அதன் …

Read More »

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 2025-ன் தொடக்கத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அறிக்கை

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 2025 தொடங்குவதற்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஊடகவியலாளர்களிடையே உரையாற்றினார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு அனைவரையும் வரவேற்ற பிரதமர், இந்தக் கூட்டத்தொடர் புதிய கண்டுபிடிப்பு மற்றும் புதுப்பித்தலின் அடையாளமாக உள்ளது என்றார். நாடு முழுவதற்குமான தற்போதைய வானிலை பற்றி எடுத்துரைத்த அவர், இது முன்னேற்றத்திற்கு சாதகமானது என்றும்  விவசாயத்திற்கு பயனளிக்கும் முன்னறிவிப்பைக் கொண்டுவந்துள்ளது என்றும் கூறினார். மழைப் பொழிவானது ஊரகப்  …

Read More »

சாலை கட்டமைப்பில் உலகின் இரண்டாவது நாடாக இந்தியா திகழ்கிறது; மத்திய இணையமைச்சர் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா

உலகத்தரம் வாய்ந்த சாலை மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றும், உலகிலேயே சாலை கட்டமைப்பில் இரண்டாவது பெரிய நாடாக  இந்தியா திகழ்கிறது என்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சர் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.  தில்லியில் இன்று நடந்த சாலை மற்றும் நெடுஞ்சாலைகள் உச்சி மாநாட்டில் அவர் உரையாற்றினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், திரு நிதின் …

Read More »

கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவன விஞ்ஞானிகளுக்கு தேசிய வேளாண் அறிவியல் விருது – மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் வழங்கினார்

கோயம்புத்தூரில்  இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்  திரு கே ஹரி, திரு புத்ரபிரதாப், திரு பி முரளி, திரு ரமேஷ் சுந்தர், திரு வி சிங்காரவேலு ஆகிய 5 பேருக்கு தேசிய வேளாண் அறிவியல் விருது வழங்கப்பட்டுள்ளது. புதுதில்லியில், நேற்று (16.07.2025) நடைபெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் 97-வது நிறுவன தின விழாவின் போது இந்த விருதுகளை அவர்களுக்கு மத்திய வேளாண் …

Read More »

தன தானிய வேளாண் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறித்து மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் அறிக்கை வெளியிட்டார்

‘பிரதமரின் தன தானிய வேளாண்’ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த அமைச்சரவையின் முக்கிய முடிவு குறித்து மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் இன்று செய்தியாளர்களிடம் உரையாற்றினார். உணவு தானிய உற்பத்தி 40% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்றும், பழங்கள், பால் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியும் வரலாற்று வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றும் அவர் கூறினார். இருப்பினும், மாநிலங்களுக்கு இடையே, ஒரே மாநிலத்திற்குள் உள்ள மாவட்டங்களுக்கு …

Read More »

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய வளர்ச்சியடைந்த கிராமங்களை கட்டமைக்க வேண்டும்: மத்திய இணையமைச்சர் திரு பெம்மசானி சந்திரசேகர்

2047-ம் ஆண்டுக்குள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்கை அடைய வளர்ச்சியடைந்த கிராமங்களை கட்டமைக்க வேண்டும் என்று மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு பெம்மசானி சந்திரசேகர் அழைப்பு விடுத்துள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் செயல்திறன் குறித்த ஆய்வுக்குழுவின் முதலாவது கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், உறுதியான வீடு, தரமான சாலைகளால் இணைக்கப்பட்ட  கிராமம், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள், அதிகாரம் பெற்ற மற்றும் நிதி ரீதியாக சுதந்திரமான பெண்களைக்  கொண்ட ‘வளர்ச்சியடைந்த கிராமம்’ என்பது தொலைதூரக் கனவு அல்ல என்றும், அதை …

Read More »

வாரணாசியில் 2025, ஜூலை 18 முதல் 20 வரை இளையோர் ஆன்மீக உச்சி மாநாடு நடைபெறும்: மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா அறிவிப்பு

இந்தியாவின் இளையோர் சக்திக்கு அதிகாரம் அளித்து போதைப்பொருள் இல்லாத சமூகத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு மாற்றத்தக்க முயற்சியான ‘வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான போதைப்பொருள் இல்லாத இளையோர்’ என்ற கருப்பொருளில் ‘இளையோர் ஆன்மீக உச்சிமாநாடு’ நடைபெற உள்ளதாக மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா இன்று புது தில்லியில் அறிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், ” வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கான அமிர்தகாலப் பாதையில்  இளைஞர்கள் வழிநடத்துபவர்களாக  …

Read More »

பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரயில்வே முடிவு

பயணிகள் ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை சோதனை முறையில் நிறுவியதன் அடிப்படையில், அதில் கிடைத்த நேர்மறையான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவ ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை பயணிகளின் பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்தும். குற்றவாளிகள், திட்டமிட்ட குற்றங்களைச் செய்யும் கும்பல்களின் மோசடிச் சம்பவங்கள் கணிசமாகக் குறையும். பயணிகளின் தனியுரிமையைப் பாதுகாக்க, கதவுகளுக்கு அருகிலுள்ள பொதுவான இயக்கப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும். ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியின் முன்னேற்றத்தை மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் ஆய்வு செய்தனர். 2015 ஜூலை 12 சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ரயில்வே வாரியத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். விரிவான பாதுகாப்பு: இது தொடர்பாக வடக்கு ரயில்வேயின் ரயில் இன்ஜின்கள், ரயில் பெட்டிகளில் வெற்றிகரமான சோதனை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 74,000 ரயில் பெட்டிகளிலும் 15,000 லோகோமோடிவ்களிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவ மத்திய ரயில்வே அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 4 டோம் வகை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். ஒவ்வொரு நுழைவு வழியிலும் 2 கேமராவும் ஒவ்வொரு ரயில் இன்ஜினிலும் 6 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்படும். இதில் ரயில் இன்ஜினின் முன்புறம், பின்புறம் என இருபுறமும் தலா 1 கேமரா பொருத்தப்படும். ரயில் இன்ஜினின் ஒவ்வொரு பெட்டியிலும் (முன் மற்றும் பின்புறம்) 1 டோம் சிசிடிவி கேமரா மற்றும் 2 மேசையில் பொருத்தப்பட்ட மைக்ரோஃபோன்கள் பொருத்தப்பட்டிருக்கும். நவீன முறை கண்காணிப்பு: சிசிடிவி கேமராக்கள் நவீனமானவையாக இருக்கும் என்றும், எஸ்டிக்யூசி சான்றிதழ் பெற்றவை என்றும் அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர். மத்திய ரயில்வே அமைச்சர், சிறந்த உபகரணங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார். மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் ரயில்களிலும், குறைந்த வெளிச்ச நிலைகளிலும் கூட உயர்தர காட்சிப் பதிவுகள் கிடைக்கும் வகையில் கேமராக்களை பொருத்துமாறு ரயில்வே அதிகாரிகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.  சிசிடிவி கேமராக்களில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை ஆராயுமாறு மத்திய ரயில்வே அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தரவு தனியுரிமைக்கு முக்கியத்துவம்: பயணிகள் பகுதிகளில் கேமராக்களை பொருத்துவதன் நோக்கம் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதாகும். தனியுரிமையைப் பாதுகாக்கும் அதே வேளையில், இந்த கேமராக்கள் குற்றவாளிகளை அடையாளம் காண உதவும். இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கல் முயற்சிகள், பாதுகாப்பான பயணத்தையும் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தையும் வழங்குவதற்கான உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும்.

Read More »