Wednesday, January 14 2026 | 10:26:49 AM
Breaking News

National

சிந்தி சமூகத்தினரின் அர்ப்பணிப்பு அவர்களை நாட்டின் சமூக, பொருளாதார வலிமையின் தூணாக மாற்றியுள்ளது: மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா

தொழில்முனைவு, கலாச்சாரம், சேவை உள்ளிட்டவற்றில் சிந்தி சமூகத்தினரின் அர்ப்பணிப்பு அவர்களை நாட்டின் சமூக, பொருளாதார வலிமையின் தூணாக மாற்றியுள்ளது என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா கூறியுள்ளார். புதுதில்லி விஞ்ஞான் பவனில் விஸ்வ சிந்தி இந்து சங்கங்களின் அறக்கட்டளை இன்று (23.11.2025) ஏற்பாடு செய்திருந்த  ” வலுவான சமூகம் – வளமான இந்தியா” (சஷக்த் சமாஜ் – சம்ரித் பாரத்) என்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுப் பேசினார். சிந்தி சமூகத்தினரின் சேவைக்கான உறுதியான அர்ப்பணிப்பையும், ஆழமான கலாச்சார பாரம்பரியத்தையும் அவர் எடுத்துரைத்தார். இந்த குணங்கள் இந்தியாவின் சமூக, பொருளாதார, கலாச்சார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த சமூகத்தின் வலிமையையும், மீட்சித் தன்மையையும் பாராட்டிய திரு ஓம் பிர்லா, வலுவான இந்தியாவின் அடித்தளத்தை உருவாக்கும் கொள்கைகளை இந்த சமூகம் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். வணிகம், தொழில், வங்கி, சேவைகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் இந்த சமூகம் தொடர்ந்து சிறந்து விளங்கி வருவதாகவும், இதன் மூலம் பல லட்சக் கணக்கானவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கி வருவதாகவும் அவர் கூறினார். இந்த சமூகத்தினரின் வெற்றி பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், நம்பிக்கை, ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஆழமான மதிப்புகளிலும் வேரூன்றியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த மதிப்புகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பங்களிக்கின்றன என அவர் கூறினார். தேசப் பிரிவினையின் போது சிந்தி சமூகத்தினர் சந்தித்த சோதனைகள், இந்த சமூகத்தை மேலும் வலுப்படுத்தியதாக மக்களவைத் தலைவர் தெரிவித்தார். பொருள் இழப்பு உள்ளிட்ட பல இழப்புகள் இருந்தபோதிலும், சிந்தி சமூகத்தினர் தங்கள் மதம், மரபுகள், பழக்கவழக்கங்கள், கலாச்சார அடையாளத்தை கடுமையாக பின்பற்றுவதாக அவர் கூறினார். அசாதாரண உறுதியுடன் அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பியதாகவும் துன்பங்களை வாய்ப்பாக மாற்றியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சமூகத்தினரின் மீட்சித் தன்மைக்கும் கலாச்சார பெருமைக்கும் ஒரு ஆழமான எடுத்துக்காட்டாக உள்ளது என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read More »

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா சிறப்பு அமர்வில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்

ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் இன்று (நவம்பர் 22, 2025) நடைபெற்ற ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் சிறப்பு அமர்வில் குடியரசுத் தலைவர்  திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இதில் குடியரசுத் தலைவர்  பேசியதாவது: பண்டைக் காலங்களிலிருந்து, நமது துறவிகளும் முனிவர்களும் தங்கள் செயல்கள் மற்றும் வார்த்தைகள் மூலம் சமூகத்தை வழிநடத்தி வருகின்றனர். இந்த மாமனிதர்கள் சமூகத்தின் நலனுக்காக ஏராளமான பணிகளைச் செய்துள்ளனர். அத்தகைய சிறந்த …

Read More »

ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படையின் தலைமையகம் கூட்டு மின்காந்த வாரியக் கூட்டத்தை நடத்தியது

படைத் தளபதிகளின், துணைக் குழுவான கூட்டு மின்காந்த வாரியத்தின்  வருடாந்திரக் கூட்டம் நவம்பர் 20 அன்று புதுதில்லியில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைகளின் (செயல்பாடுகள்) துணைத் தலைவர் ஏர் மார்ஷல் ராகேஷ் சின்ஹா தலைமையில் நடைபெற்றது. முப்படைகளின்  கூட்டு நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்பு எட்டப்படுவதை ஒரே நோக்கமாகக் கொண்டு, இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.  வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், அலைக்கற்றை மேலாண்மை ஆகிய துறைகளில் கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல …

Read More »

நீரை திறம்பட பயன்படுத்த வேண்டும் – குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு

6-வது தேசிய நீர் விருதுகள், நீர் பாதுகாப்பு – மக்கள் பங்களிப்பு விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். அப்போது பேசிய அவர், மனித நாகரிகத்தின் கதை என்பது ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும், கடற்கரைகளிலும், பல்வேறு நீர் நிலைகளையொட்டி அமையும் குழுக்களின் கதையாகும் என்று தெரிவித்தார். நமது பாரம்பரியத்தில், ஆறுகள், ஏரிகள் மற்றும் பிற நீர் ஆதாரங்கள் போற்றப்படுகின்றன என்று அவர் கூறினார். நமது தேசியப் பாடலில், பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய முதல் வார்த்தை சுஜலாம் என்பதாகும். எண்ணற்ற நீர் …

Read More »

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் நவம்பர் 18 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது. 2025 அக்டோபர் 27-ன் படி, இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50,97,44,423 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 50,25,13,094 கணக்கெடுப்பு படிவங்கள் …

Read More »

நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு முன்னுரிமை- மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான்

ஆசிய விதை மாநாடு 2025-ஐ மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் மும்பையில் இன்று தொடங்கி வைத்தார். அப்போது ஆசிய விதை மாநாடு 2025-க்கான இலட்சினையும் வெளியிடப்பட்டது. தரமான விதைகள் மூலம் செழுமைக்கான விதைகளை விதைத்தல் என்பது இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளாகும், இந்நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், …

Read More »

எஸ்விசிசி, கோனயூர் அமைப்புகள் இணைந்து நடத்திய சர்வதேச ஆயுர்வேத மாநாடு சாவ் பாலோவில் நடைபெற்றது பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியா – பிரேசில் இடையேயான ஒத்துழைப்பை எடுத்துக்காட்டியது

மூன்றாவது சர்வதேச ஆயுர்வேத மாநாடு பிரேசிலின் சாவ் பாலோ நகரில் நடைபெற்றது. அங்குள்ள சுவாமி விவேகானந்தா கலாச்சார மையமும் (எஸ்விசிசி), பிரேசிலில் உள்ள ஆயுர்வேத அமைப்பான கோனயூர் அமைப்பும் இணைந்து 2025 நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் இந்த மாநாட்டை நடத்தின. இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த இரண்டு நாள் நிகழ்வு, பிரேசிலில் ஆயுர்வேத மருத்துவம் பின்பற்றப்படுவதன் 40 ஆண்டுகள் நிறைவை நினைவுகூர்வதாக அமைந்தது. …

Read More »

பொதுமக்களுக்கு மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சையை அணுகக்கூடிய வகையில் மலிவுக் கட்டணத்திலும் வழங்க மத்திய அரசு திட்டம்

அணுசக்தித் துறையின் கீழ் உள்ள டாடா நினைவு மருத்துவமனை (டிஎம்சி), விரிவான சான்றுகள் அடிப்படையிலான புற்றுநோய் சிகிச்சையை வழங்கி வருகிறது. மும்பை, வாரணாசி, விசாகப்பட்டினம், சங்ரூர், முல்லன்பூர், குவஹாத்தி மற்றும் புவனேஷ்வர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள இந்தியாவின் 7 மாநிலங்களில் டிஎம்சி 11 மருத்துவமனைகளை நிறுவியுள்ளது. 11 மருத்துவமனைகளில், 8 செயல்பாட்டுக்கு வந்துள்ளன, 3 மருத்துவமனைகள் கட்டுமானத்தில் உள்ளன. டாடா நினைவு மையம் (டிஎம்சி) நாட்டின் முதன்மையான புற்றுநோய் மையமாக …

Read More »

குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுவினருக்கான மத்திய அரசின் நலத்திட்டங்கள்

மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை இணை அமைச்சர் திரு துர்காதாஸ் உய்கி இன்று மாநிலங்களவையில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சந்தீப் குமார் பதக்கின் நட்சத்திரக் குறியிடப்படாத கேள்விக்கு பதிலளித்தார். 18 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் 75 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் சமூகங்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக பிரதமர் ஜன்ஜாதி ஆதிவாசி நியாய பெருந்திட்டத்தை நவம்பர் 15, 2023 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பாதுகாப்பான …

Read More »

பழங்குடியின கிராமங்களில் முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள திட்டத்தின் வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பு மாதிரி மற்றும் பலதுறை செயல்பாடுகள்

திருமதி ரமிலாபென் பெச்சர்பாய் பாராவின் நட்சத்திரக் குறியிடப்படாத கேள்விக்கு பதிலளித்த மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கி இன்று மாநிலங்களவையில், பழங்குடியின கிராமங்களில் முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள தர்தி ஆபா ஜன்சாதிய கிராம் உத்கர்ஷ் திட்டம் (DAJGUA) பழங்குடியினர் பகுதிகளில் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியை இயக்குவதற்கான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும் என்று தெரிவித்தார். இந்த அபியான் 17 துறை அமைச்சகங்களால் செயல்படுத்தப்படும் 25 …

Read More »