முன்னாள் குடியரசுத்தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார். அவரை ஒரு சிறந்த ராஜதந்திரி என்று அழைத்த திரு மோடி, ஒரு சிறந்த நிர்வாகி என்றும் அவரைப் புகழ்ந்து, நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளைப் பாராட்டினார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளதாவது: “பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். பிரணாப் அவர்கள், ஒரு …
Read More »பிரணாப் முகர்ஜி பிறந்த தினத்தையொட்டி, அன்னாரது உருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறந்த தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையின், அசோகா மண்டபத்தில் அன்னாரது உருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 11, 2024) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Read More »நாடாளுமன்ற கேள்வி: மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள்
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், மூத்த குடிமக்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பிரதமரின் மூத்த குடிமக்கள் ஓய்வூதிய காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துகிறது. ஒருங்கிணைந்த மூத்த குடிமக்கள் திட்டமானது முதியோர் இல்லங்கள், தொடர் பராமரிப்பு இல்லங்கள் போன்றவற்றை நடத்துவதற்கும் பராமரிப்பதற்கும் அரசு சாரா / தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மானிய உதவி வழங்குகிறது. ஏழ்மை நிலையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உறைவிடம், ஊட்டச்சத்து, மருத்துவ சேவை மற்றும் பொழுதுபோக்கு …
Read More »249 மாவட்டங்கள் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் பணியாளர் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன
சாக்கடை சுத்தம் செய்யும்போது ஏற்படும் இறப்புகளுக்கான இழப்பீடு அதிகரிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு நீதிமன்றம் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு அறிவுறுத்துகிறது. (முந்தைய நிர்ணயிக்கப்பட்ட தொகை, அதாவது ரூ.10 லட்சம்) 1993-ம் ஆண்டு முதல் இது பொருந்தும். அந்தத் தொகைக்கு தற்போதைய தொகை ரூ.30 லட்சமாகும். இது சம்பந்தப்பட்ட முகமையால் செலுத்தப்பட வேண்டிய தொகையாக இருக்கும். அதாவது, ஒன்றியம், யூனியன் பிரதேசம் அல்லது மாநிலம் இத்தொகையை செலுத்த வேண்டும்.அதாவது, சாக்கடை உயிரிழப்புகளுக்கு இப்போது ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இறந்தவரைச் சார்ந்து வாழந்தவருக்கு அத்தகைய …
Read More »மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான தேசிய மொபைல் கண்காணிப்பு மென்பொருள்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் கூடுதல் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில், அனைத்து பணிகளிலும் (தனிப்பட்ட பயனாளிகள் பணிகள் தவிர) இத்திட்டத்தின தொழிலாளர்களின் வருகைப்பதிவை உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் தேசிய மொபைல் கண்காணிப்பு முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பயனாளிகள் தங்களது குறைகளை அதற்கான இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வகையும் செய்யப்பட்டுள்ளது. இவை …
Read More »பிரதமரின் கிராமப்புறச் சாலைகள் திட்டத்தின் கீழ் கிராமங்கள் இணைப்பு
வறுமை நிலையை குறைப்பதற்கான உத்திசார் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மத்திய அரசு, பிரதமரின் கிராமப்புறச் சாலைகள் திட்டத்தை 2000 டிசம்பர் 25 அன்று மத்திய நிதியுதவியுடன் கூடிய திட்டமாக அறிவித்தது. இத்திட்டம் மக்கள் தொகை அடிப்படையில் (சமவெளிப் பகுதிகளில் 500+ மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 250+) சாலை வசதிகள் இல்லாத கிராமப்புறங்களுக்கு அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற வகையில் சாலைகளை அமைப்பதன் மூலம் ஊரகப் பகுதிகளில் போக்குவரத்துக்கான இணைப்பை வழங்க வகை செய்கிறது. இமய மலையை ஒட்டிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் (2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சில சிறப்பு பகுதிகள்) கிராமப்புற மக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 100 நபர்கள் அல்லது அதற்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 50,000 கி.மீ நீளத்திலான கிராமப்புற சாலைகளை மேம்படுத்தும் இலக்குடன் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டம் குறித்து நிதி ஆயோக், இந்திய மேலாண்மைக் கழகம், அகமதாபாத், உலக வங்கி மற்றும் சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் ஆகியவை நடத்திய பல்வேறு மதிப்பீட்டு ஆய்வுகள், கல்வி, சுகாதார வசதிகளுக்கான அணுகலை மேம்படுத்தியுள்ளது. மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு. கமலேஷ் பாஸ்வான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
Read More »ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள்
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வங்கிகளால் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் உள்ளூர் தேவைகள் மற்றும் இளைஞர்கள் நலன்களின் அடிப்படையில் ஆண்டு செயல் திட்டத்தை உருவாக்குகின்றன. தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றால் 64 அங்கீகரிக்கப்பட்ட பயிற்சித் திட்டங்கள் உள்ளன, மேலும் பயிற்சி பெற விரும்புவோர் தங்களுக்கு விருப்பமான திட்டத்தை தேர்வு செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் பிரிவு வாரியாக …
Read More »பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் சுய ஆய்வுகள்
கிராமப்புறப் பகுதிகளில் “அனைவருக்கும் வீடு” என்ற நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில், அடிப்படை வசதிகளுடன் கூடிய உறுதியான வீடுகளைக் கட்டுவதற்கு தகுதி வாய்ந்த கிராமப்புற குடும்பங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக, 2016 ஏப்ரல் 1 முதல் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தை ஊரக மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஆரம்ப இலக்கு என்பது 2016-17 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் 2.95 கோடி வீடுகளைக் கட்டுவதாகும். 2024-25 முதல் 2028-29 நிதியாண்டு வரை மேலும் 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதலின்படி, இத்திட்டத்தின் கீழ் கூடுதல் …
Read More »நமது கழிப்பறை – நமது கெளரவம் இயக்கம் மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 அன்று நிறைவடைந்தது
உலகக் கழிப்பறை தினத்தன்று (நவம்பர் 19) தொடங்கப்பட்ட “நமது கழிப்பறை – நமது கெளரவம் ” இயக்கம், கண்ணியம் மற்றும் மனித உரிமைகளுடன் சுகாதாரத்தை சீரமைக்கும் மனித உரிமைகள் தினத்தன்று (டிசம்பர் 10) முடிவடைந்தது. ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவு துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மூன்று வார கால இயக்கத்தில் நாடு முழுவதும் உள்ள சமூகங்கள் பெருமளவில் பங்கேற்றன. இந்த இயக்கம் கெளரவம் மற்றும் பொறுப்பின் அம்சமாக சுகாதாரத்தை கவனத்திற்குக் கொண்டு வந்தது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50,500-க்கும் அதிகமான நிகழ்வுகள் நடத்தப்பட்டு, 38 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றதன் மூலம், நமது கழிப்பறை – நமது கெளரவம் இயக்கம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது. தற்போதுள்ள சமூக சுகாதார வளாகங்களில் 70% க்கும் அதிகமானவற்றை உள்ளடக்கிய 1.54 லட்சத்துக்கும் அதிகமான சமூக சுகாதார வளாகங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு செயல்பாட்டிற்காக மேம்படுத்தப்பட்டன. 3.35 லட்சத்துக்கும் அதிகமான புதிய தனிநபர் இல்லக் கழிப்பறைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, முக்கியமான சுகாதார இடைவெளி நிரப்பப்பட்டது. 600க்கும் அதிகமான கூட்டங்கள் நடத்தப்பட்டன. இயக்கத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல், “கழிப்பறை என்பது ஒரு வசதி மட்டுமல்ல; கண்ணியம், தூய்மை மற்றும் ஆரோக்கியத்தின் சின்னமாகவும் உள்ளது. உடல் சுகாதாரத்தை மட்டுமின்றி, மனம் மற்றும் சமூக மரியாதையையும் பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொரு தனிநபருக்கும் கழிப்பறை உரிமை இருப்பதை உறுதி செய்வது நமது கூட்டு முயற்சியாகும். கழிப்பறைகளைப் பயன்படுத்துவது நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பதுடன், நமது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்கிறது” என்றார். இந்த இயக்கம் இந்தியாவின் துப்புரவு பயணத்தின் பன்முகத்தன்மையையும் புதுமையையும் நிரூபித்தது. ஏறத்தாழ அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களும் ஆர்வத்துடன் பங்கேற்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாற்றத்தின் கதைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. கர்நாடகா மற்றும் தமிழ்நாடு முழுவதும், பொது சேவை மையங்கள் மற்றும் தனிநபர் இல்லக் கழிப்பறைகளை அழகுபடுத்தியது சுகாதார உள்கட்டமைப்பை சமூக அடையாளங்களாக மாற்றியது. இந்த இயக்கத்தில் ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இது கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மாநில, மாவட்ட மற்றும் கிராம பஞ்சாயத்து நிலைகளில் நீர் மற்றும் துப்புரவு குழுக்கள் செயல்படுத்தப்பட்டன. இது நீண்டகால பொறுப்புணர்வு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்தது. மனித உரிமைகள் தினத்தன்று நிறைவடைந்ததன் மூலம், நமது கழிப்பறை – நமது கெளரவம் இயக்கம் துப்புரவுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் இடையிலான உள்ளார்ந்த தொடர்பை எடுத்துக்காட்டுகிறது. செயல்பாட்டில் உள்ள, சுத்தமான கழிப்பறைகளுக்கான அணுகல் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதற்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் விளிம்பு நிலை சமூகங்களுக்கு முக்கியமானது. இயக்கம் இன்று முடிவடைந்த நிலையில், நம் முன்னால் உள்ள பணிக்கு இது ஓர் உறுதியான அடித்தளத்தை விட்டுச் செல்கிறது. முழுமையான சுகாதாரத்தை நோக்கிய நமது பயணம் நிறைவு பெறுவது வெகு தூரத்தில் இல்லை என்பதை இந்த இயக்கத்தின் சாதனைகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
Read More »சர்வதேச எல்லையில் வேலியிடுதல்
மேகாலயாவில் உள்ள இந்திய-பங்களாதேஷ் எல்லையின் மொத்த நீளம் 443 கி.மீ ஆகும். இதில் 367.155 கி.மீ நீளமானது சர்வதேச எல்லை வேலியால் அடைக்கப்பட்டுள்ளது. 19.759 கி.மீ தூரத்திற்கு வேலி அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. நிலம் கையகப்படுத்துதல், பங்களாதேஷ் எல்லை காவல்படை ஆட்சேபனைகள், வரையறுக்கப்பட்ட பணிக்காலம் மற்றும் மாநிலத்தில் நிலச்சரிவு / சதுப்பு நிலம் ஆகியவற்றுடன் வேலி அமைக்கும் திட்டங்களின் சாத்தியமான பகுதிகளில் வேலி அமைத்து முடிப்பதில் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளன. கையடக்க தெர்மல் இமேஜர், இரவு பார்வை சாதனம், இரட்டை தொலைநோக்கி போன்ற தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்துதல், நுண்ணறிவு அமைப்பு பயன்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் மாநில அரசுகள் / சம்பந்தப்பட்ட புலனாய்வு முகமைகளுடன் மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு, கூடுதல் பணியாளர்களை பணியமர்த்துதல் ஆகியவற்றின் மூலம் சாத்தியமில்லாத பாதையிலும் எல்லைப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. எல்லை பாதுகாப்பு மேலாண்மை மற்றும் எல்லை தாண்டிய பிரச்சினைகளைத் தணிப்பதற்கான ஒத்துழைப்பு தொடர்பான பிரச்சினைகள் எல்லை பாதுகாப்புப் படை மற்றும் பங்களாதேஷ் எல்லைக் காவலர் இடையே இயக்குநர் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் பாதுகாப்பு மற்றும் எல்லை உள்கட்டமைப்புக்கான கூட்டு பணிக்குழு போன்ற இருதரப்பு நிறுவன வழிமுறைகள் மூலம் பங்களாதேஷுடன் விவாதிக்கப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில் (நிதியாண்டு 2024-25), இந்தியா-பங்களாதேஷ் வேலி பணிகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.299.58 கோடி ஆகும் . இதில் ரூ .19.54 கோடி மேகாலயாவுக்கான நிர்வாக முகமைகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்
Read More »