மாநில காவல் படைகள் காவல் படைகளை நவீனமயமாக்குவது என்பது நடைபெற்று வருகின்ற மற்றும் தொடர்ச்சியான செயல்முறையாகும். அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி ‘காவல்படை’ மற்றும் ‘பொது ஒழுங்கு’ ஆகியவை மாநில விவகாரங்கள் ஆகும் .காவல்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பாகும். எனினும், மாநிலங்கள் தங்கள் காவல் படைகளை நவீனப்படுத்தவும், தளவாடங்களை மேம்படுத்தவும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மத்திய அரசு “காவல்துறை நவீனமயமாக்கலுக்கான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவி செய்தல்” என்ற திட்டத்தின் கீழ் உதவி புரிகிறது. தொடர்புடைய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் மாநில/யூனியன் பிரதேச காவல் படைகளை போதுமான அளவு ஆயத்தப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காவல் நிலையங்களை நிர்மாணிப்பதுடன், காவல் நிலையங்களுக்குத் தேவையான நவீன தொழில்நுட்பம், ஆயுதங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் போன்றவற்றை வழங்குவதன் மூலம் காவல்துறை உள்கட்டமைப்பை அதிநவீன அளவில் வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும், குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும், வீட்டுவசதி உள்ளிட்ட பிற காவல் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதும் இதில் அடங்கும். 2021-22-ம் ஆண்டு முதல் 2025-26-ம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் காவல்துறை நவீனமயமாக்கலுக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவி புரியும் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.4846 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய காவல் படைகள் மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கு (அசாம் ரைபிள்ஸ், எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை), மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை, தேசிய பாதுகாப்புப் படை மற்றும் சஷஸ்திர சீமா பால்) 01.01.2022 முதல் 31.03.2026 வரையிலான காலத்திற்கு ரூ.1523 கோடி மொத்த நிதி ஒதுக்கீட்டில் நவீனமயமாக்கல் திட்டம்-4 க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் , எல்லைகளைப் பாதுகாத்தல் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பைப் பராமரித்தல் போன்ற முக்கியமான பணிகளைச் செய்ய உதவும் வகையில் மத்திய ஆயுதக் காவல் படையினருக்கு நவீன ஆயுதங்கள், கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள், சிறப்பு வாகனங்கள், பாதுகாப்பு கவசங்கள் போன்றவை அளிக்கப்பட்டுள்ளன. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.
Read More »இடதுசாரி தீவிரவாத வன்முறை குறைந்தது
‘இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தை’ மத்திய, மாநில அரசுகள் உறுதியாக அமல்படுத்தியதன் விளைவாக இடதுசாரி தீவிரவாதம் புவியியல் பரவல் மற்றும் வன்முறை ஆகிய இரண்டிலும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறைகள் 2010-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ம் ஆண்டில் 73% குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் இதன் விளைவாக ஏற்படும் இறப்புகளும் (பொதுமக்கள் + பாதுகாப்புப் படையினர்) 86% குறைந்துள்ளன. நடப்பாண்டில் (15.11.2024 வரை), 2023-ம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இடதுசாரி தீவிரவாதத்தால் நிகழ்த்தப்பட்ட …
Read More »பேரிடர் தயார்நிலை மற்றும் பருவநிலை மீட்சி
பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005, பேரிடர்களை திறம்பட நிர்வகிப்பதற்கான சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பை வழங்குகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் 2016-ம் ஆண்டில் தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தை தயாரித்துள்ளது, அது 2019-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டு திருத்தப்பட்டது. பேரிடர் மேலாண்மை சுழற்சியின் அனைத்து கட்டங்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கு ஒரு கட்டமைப்பையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறது. இது நாட்டின் பேரிடர் நெகிழ்திறன் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு உத்திசார்ந்த கருவியாகும். 2015-க்குப் பிந்தைய மூன்று முக்கிய உலகளாவிய கட்டமைப்புகளான பேரிடர் அபாயக் குறைப்புக்கான …
Read More »இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்
தற்போது நாட்டில் 38 மாவட்டங்கள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இடதுசாரி தீவிரவாதத்தை முழுமையாக எதிர்கொள்ள, மத்திய அரசு 2015-ம் ஆண்டில் ‘இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்கொள்ள தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்துக்கு’ ஒப்புதல் அளித்தது. இந்தக் கொள்கை, பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள், மேம்பாட்டுத் தலையீடுகள், உள்ளூர் சமூகங்களின் உரிமைகள் மற்றும் உரிமைகளை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய பல்முனை உத்திகளுக்கு வழிவகுக்கிறது. · இக்கொள்கையின் உறுதியான அமலாக்கத்தின் விளைவாக தொடர்ந்து வன்முறை குறைந்துள்ளது. 2010-ல் இடதுசாரி தீவிரவாதம் வன்முறை சம்பவங்கள் அதிகமாக இருந்த நிலையில், தற்போது 73% குறைந்துள்ளது. இதன் …
Read More »புதிய குற்றவியல் சட்டங்கள்
பாரதிய நியாயச் சட்டம், 2023-ன் விதிகளில் பிரிவு 106 துணைப்பிரிவு (2), பாரதிய நகரிகா சுரக்ஷா சன்ஹிதா 2023 சட்டத்தின் முதல் அட்டவணை, பாரதிய சாட்சியங்கள் சட்டம் 2023 ஆகியவை 2023 டிசம்பர், 25 அன்று அறிவிக்கப்பட்டு, 2024 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளன, பாரதிய நியாயச் சட்டத்தில் முதல்முறையாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விதிகள் ஒரே பகுதியில் கொண்டுவரப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு …
Read More »இணையதள கைது மோசடி
இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி ‘காவல்துறை’ மற்றும் ‘பொது ஒழுங்கு’ ஆகியவை மாநில அரசின் வரம்பின் கீழ் வருகிறது. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் சட்ட அமலாக்க முகமைகள் மூலம் சைபர் குற்றம் மற்றும் டிஜிட்டல் கைது மோசடிகள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பது, கண்டுபிடிப்பது, புலனாய்வு செய்வது, வழக்குத் தொடர்வது போன்றவை முதன்மை பொறுப்பாகும். மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முன்முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆலோசனைகள் வழங்குவதுடன் பல்வேறு திட்டங்களின் கீழ் …
Read More »இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு இயக்கம் : ரூ.3431 கோடி மீட்பு
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தங்களின் சட்ட அமலாக்க முகமைகள் மூலம் இணையதள குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பது, கண்டுபிடிப்பது, புலனாய்வு செய்வது மற்றும் வழக்குத் தொடர்வது ஆகிய முதன்மையான பொறுப்புகளைக் கொண்டுள்ளன. இணையப் பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் சட்ட அமலாக்கத் திறன்களை விரிவாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் வலுப்படுத்துவதற்கான முன்முயற்சிகள் உள்ளிட்ட கணினி குற்றங்களைக் கையாள்வதற்கான நடைமுறையை வலுப்படுத்த, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளில் பின்வருவன அடங்கும்: நாட்டில் நடைபெறும் அனைத்து வகையான இணையதள குற்றங்களையும் …
Read More »தேசிய தரநிலை உத்தரவாத தகுதிநிலைகள் குறித்த அண்மைத் தகவல்
பொது சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தரத்தை உறுதி செய்யவும், மேம்படுத்தவும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் நிறுவப்பட்ட விரிவான கட்டமைப்பான தேசிய தரநிலை உத்தரவாத தகுதி நிலைகளை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. பொது சுகாதார வசதிகள் மூலம் வழங்கப்படும் சேவைகள் பாதுகாப்பானதாகவும், நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மையமாகக் கொண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய சுகாதாரச் சேவைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில் மாவட்ட மருத்துவமனைகளுக்கு தரநிலை நெறிமுறைகள் வரையறைக்கப்பட்டன. இதைத் …
Read More »இந்தியாவில் மக்கள் தொகைக் கட்டுப்பாடு திட்டங்களின் விவரங்கள்
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (2019-21)-ன் படி இந்தியாவில் மொத்த கருத்தரிப்பு விகிதமானது சாதனை அளவை எட்டியுள்ளது. இந்த இலக்கானது இந்திய மக்கள் தொகை கொள்கை-2000 மற்றும் தேசிய சுகாதார கொள்கை-2017 (டி.எஃப்.ஆர் 2.1) ஆகியவற்றுடன் ஒத்திசைவானதாக உள்ளது. குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: ஆணுறைகள், ஒருங்கிணைந்த வாய்வழி கருத்தடை மாத்திரைகள், அவசர கருத்தடை மாத்திரைகள், கருத்தடை சாதனங்கள் மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவாக்கப்பட்ட கருத்தடை …
Read More »நாட்டில் 25 மாநிலங்களில் மிகப்பெரும் உணவுப் பூங்கா திட்டத்தின் கீழ் 41 செயல்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
உணவு பதனப்படுத்துதல் துறையில் மொத்த அந்நிய நேரடி முதலீடு குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 2019-20-ம் ஆண்டில் 904.7 மில்லியன் டாலர் அளவிற்கும், 2020-21-ம் ஆண்டில் 393.41 மில்லியன் டாலர் அளவிற்கும், 2021-22 -ம் ஆண்டில் 709.72 மில்லியன் டாலர் அளவிற்கும், 2022-23-ம் ஆண்டில் 895.34 மில்லியன் டாலர் அளவிற்கும், 2023-24-ம் ஆண்டில் 608.31 மில்லியன் டாலர் அளவிற்கும் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவு பதனப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம் மிகப்பெரும் உணவுப் பூங்கா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது பிரதமரின் வேளாண் மேம்பாட்டு திட்டத்தின் …
Read More »