மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தோங்ஜாவோ கிராமம் ‘மட்பாண்டங்களின் நிலம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கே, உயரிய விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்ற தலைசிறந்த கைவினைக் கலைஞரான நீலமணி தேவியின் மரபு, இந்த பண்டைய கலையைப் பாதுகாக்க தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. நீலமணியின் திறமைகள் அவருக்கு தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததுடன், கிராமத்தின் மண்பாண்ட தொழிலுக்கான பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் முக்கியப் பங்கும் ஆற்றியுள்ளது. கிராமப்புறங்களில் வீடுகளில் உபயோகிக்கும் பானைகள் முதல், கலைநயம் மிக்க படைப்புகள் வரை அனைத்தையும் தயாரிப்பதில் அவர்கள் …
Read More »திரு எஸ்.எம். கிருஷ்ணா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் திரு எஸ். எம். கிருஷ்ணா மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கவனம் செலுத்தியதற்காக அறியப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க தலைவர் என்று திரு மோடி அவரைப் பாராட்டியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது: “திரு எஸ்.எம்.கிருஷ்ணா அவர்கள் ஒரு குறிப்பிடத்தக்க தலைவர். அனைத்துத் தரப்பு மக்களாலும் போற்றப்பட்டவர். மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அவர் எப்போதும் அயராது உழைத்தார். கர்நாடகாவின் முதல்வராக இருந்த காலத்தில், குறிப்பாக உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கவனம் செலுத்தியதற்காக அவர் அன்புடன் நினைவுகூரப்படுகிறார். திரு எஸ்.எம்.கிருஷ்ணா அவர்கள் ஒரு சிறந்த வாசகராகவும் சிந்தனையாளராகவும் இருந்தார். “திரு எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களுடன் கலந்துரையாட பல ஆண்டுகளில் எனக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தன. அந்த உரையாடல்களை நான் எப்போதும் போற்றுவேன். அவரது மறைவு எனக்கு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.”
Read More »சி.ராஜகோபாலாச்சாரியாரின் பிறந்த நாளில் பிரதமர் அவருக்கு நினைவஞ்சலி
திரு சி. ராஜகோபாலாச்சாரியாரின் பிறந்த நாளில், அவரை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரது பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை, இலக்கியம், சமூகத்துக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது : சி. ராஜகோபாலாச்சாரியாரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, இந்தியாவின் …
Read More »தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைகள் தின விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்
புதுதில்லியில் இன்று (டிசம்பர் 10, 2024) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைகள் தின நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், 5,000 ஆண்டுகளுக்கும் மேலான நாகரிக பாரம்பரியத்தைக் கொண்ட இந்தியா, அனுதாபம், இரக்கம் மற்றும் இணக்கமான சமூகத்தில் உள்ள தனிநபர்களின் பரஸ்பர பிணைப்பு ஆகிய மதிப்புகளை நீண்டகாலமாக கடைப்பிடித்து வருகிறது என்று கூறினார். இந்த அம்சங்களின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் …
Read More »நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான குறியீடுகள் தொடர்பான தரவுகளில் உள்ள இடைவெளியைக் களைய மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் முயற்சி
நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான நாட்டின் உறுதியான நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் வகையில், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தேசிய அளவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு வசதியாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள், ஐநா சபையின் முகமைகள் உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து தேசிய அளவிலான குறியீடுகளை வழங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் – தேசிய குறியீடுகளுக்கான கட்டமைப்பு அடிப்படையில், ஆண்டு தோறும் புள்ளிவிவர தினத்தன்று (அதாவது ஜூன் 29-ம் தேதியன்று) …
Read More »திட நிலையில் “முறுக்கு அடுக்குகள்”: உதிரி வெப்பத்தை மின்சாரமாக மாற்றுவதில் ஒரு திருப்புமுனை
பெரிகிரிஸ்டல்களில் முறுக்கப்பட்ட அடுக்குகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் உதிரி வெப்பத்தை எரிசக்தியாக மாற்றும் திறனைக் கொண்ட ஒரு புதிய பொருளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது வெப்பமின் ஆற்றல் மாற்றத்திற்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களைக் கொண்டுள்ளது. ரசாயனம், வெப்பம், எஃகு ஆலைகள், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற தொழில்துறை செயல்முறைகளின் மூலங்களிலிருந்து உதிரி வெப்பத்தைக் கைப்பற்றி மின்சாரமாக மாற்றும் ஒரு செயல்முறையாகும். பேராசிரியர் கனிஷ்கா பிஸ்வாசும் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் ஒரு தன்னாட்சி …
Read More »இயற்கை எரிவாயு உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை
இந்தியாவின் எரிசக்தித் துறை குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்தித்து வருகிறது, தூய்மையான எரிசக்தி ஆதாரங்களில் வளர்ந்து வரும் கவனம் குறித்த இந்த தொலைநோக்கு பார்வையை நனவாக்க, 2030 ஆம் ஆண்டில் எரிசக்தி கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை 15% ஆக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தேசிய எரிவாயு குழாய் விரிவாக்கம், நகர எரிவாயு விநியோக கட்டமைப்பை விரிவுபடுத்துதல், திரவ இயற்கை எரிவாயு முனையங்களை அமைத்தல், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (போக்குவரத்து) …
Read More »தகுதியான பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்குதல்
பிரதமரின் உஜ்வாலா திட்டம் 2016 மே மாதம் தொடங்கப்பட்டது. குடும்பத்தில் உள்ள குடும்ப உறுப்பினர் பெயரில் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத பட்சத்தில், மற்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில், நாடு முழுவதும் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த வயது வந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பு (எஸ்.இ.சி.சி) பட்டியலைச் சேர்ந்த குடும்பங்கள் அல்லது பட்டியல் சாதி (எஸ்.சி) குடும்பங்கள், பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி) குடும்பங்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் …
Read More »தேசிய பஞ்சாயத்து விருதுகளை குடியரசுத் தலைவர் 2024 டிசம்பர் 11 அன்று வழங்குகிறார்
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய பஞ்சாயத்து விருதுகள் வழங்கும் விழா 2024, டிசம்பர் 11 அன்று புதுதில்லி, விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில், மத்திய பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் முன்னிலையில், நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கருப்பொருள்களில் அவர்களின் முன்மாதிரியான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், பல்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 விருதாளர்களுக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு …
Read More »மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் சேர்க்கை அடையாள அட்டைகள் 25 லட்சத்தை எட்டியது
பிரதமரால் மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் திட்டம் தொடங்கப்பட்டு 2 மாதகாலத்தில் அதில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சம் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ரூ.40 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் 70 வயது நிறைவடைந்த அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள மூத்த குடிமக்கள் 22000 பேருக்கு பயனளிக்கிறது. இருதய பரிசோதனை, இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை, பித்தப்பை அகற்றுதல், கண்புரை அறுவை சிகிச்சை, புரோஸ்டேட் அறுவை சிகிச்சை, பக்கவாதம், ஹீமோடையாலிசிஸ், குடல் காய்ச்சல் மற்றும் பிற காய்ச்சல் போன்ற பல்வேறு உபாதைகளுக்கு மூத்த …
Read More »