Friday, July 24 2026 | 07:00:15 AM
Breaking News

Regional

காசி தமிழ்ச் சங்கம் மாணவர்கள் குழு கோயில்களுக்குச் சென்று வழிபாடு

மூன்றாவது காசி தமிழ்ச் சங்கமத்தின் இரண்டாவது நாளான இன்று, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர் வாரணாசியில் உள்ள புனித ஹனுமான் படித்துறைக்குச் சென்று வழிபாடு செய்தனர். ஆன்மீக உணர்வுடன் அவர்கள் கங்கையில் புனித நீராடி, மகிழ்ச்சியும் செழிப்பும் வேண்டிப் பிரார்த்தனை செய்தனர். மரியாதைக்குரிய ஆச்சார்யர்களின் வழிகாட்டுதலைப் பெறும் அதிர்ஷ்டமும் மாணவர்களுக்கு கிடைத்தது. அவர்கள் தங்கள் ஞானத்தைப் பகிர்ந்து கொண்டதுடன், வாரணாசியில் உள்ள பல்வேறு படித்துறைகளின் வளமான வரலாற்று முக்கியத்துவத்தைப் பற்றி …

Read More »

மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை திரிபுரா முதலமைச்சர் சந்தித்தார்

திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா இன்று (16.02.2025) மத்திய அறிவியல், தொழில்நுட்பம் புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்துப் பேசினார். மேம்பட்ட வானிலை முன்னறிவிப்பு, நிர்வாக விஷயங்கள், மூங்கில் தொழிலை ஊக்குவித்தல் உள்ளிட்ட மாநிலம் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் விவாதித்தார். சமீபத்தில் தொடங்கப்பட்ட அகர்தலா-அகௌரா ரயில் இணைப்பு மூலம், இந்தியாவின் வடகிழக்குப் பகுதி – பங்களாதேஷ் இடையேயான இணைப்பை வலுப்படுத்துவது குறித்தும் …

Read More »

மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் 3-வது காசி தமிழ்ச் சங்கமத்தைத் தொடங்கி வைத்தனர்

மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் காசித் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாவது பதிப்பை உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில்  இன்று தொடங்கி வைத்தனர். 3-வது காசி தமிழ்ச் சங்கம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவுக்கு மத்தியில் நடைபெறும் இந்த நிகழ்வு …

Read More »

குஜராத் மற்றும் ராஜஸ்தானின் மெகா உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான ஆய்வு

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் மெகா உள்கட்டமைப்பு திட்டங்களை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளை மறுஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்கு தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு அமர்தீப் பாட்டியா தலைமை தாங்கினார். மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் திட்ட ஆதரவாளர்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், திட்டக் கண்காணிப்புக் குழு,  மேம்பட்ட அமைச்சகங்கள் மற்றும் மாநில ஒருங்கிணைப்பு மூலம் பிரச்சினை தீர்வை …

Read More »

போடோ சமூகத்தினருக்கு அதிகாரம் அளிக்கவும், போடோ மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் மத்தியிலும் அசாமிலும் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள் அயராது உழைத்து வருகின்றன – இந்தப் பணிகள் மேலும் வீரியத்துடன் தொடரும்: பிரதமர்

கோக்ராஜரில் 2025 பிப்ரவரி 17 அன்று நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருநாள் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். போடோ சமூகத்தினருக்கு அதிகாரம் அளிக்கவும், போடோ மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் மத்தியிலும் அசாமிலும் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள் அயராது உழைத்து வருவதாக திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தப் பணிகள் இன்னும் வீரியத்துடன் தொடரும் இன்று பிரதமர் உறுதி அளித்துள்ளார். கோக்ரஜாரில் …

Read More »

புதிய காஷ்மீரில் ரூ. 65,000 கோடி முதலீட்டு திட்டங்கள் வளர்ச்சியின் புதிய சகாப்தத்தைக் குறிக்கிறது: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்

ஜம்மு காஷ்மீரில் 2024 மக்களவைத் தேர்தலில் 35 ஆண்டுகளில் இல்லாத அதிக வாக்குப்பதிவு நடந்துள்ளதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் வலுவடைந்துள்ளது  குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். இப்பகுதி இனி மோதலின் இடமாக இல்லாமல் நம்பிக்கையின் இடமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய திரு ஜக்தீப் …

Read More »

மஹாகும்பமேளாவில் பக்தர்களுக்கு தடையற்ற வங்கிச் சேவைகளை வழங்கும் இந்திய அஞ்சல் வங்கி

மத்திய அரசு நிறுவனமான இந்தியா அஞ்சல் வங்கி, பிரயாகராஜில் நடைபெறும் மஹாகும்பமேளா-2025-ல் கோடிக்கணக்கான பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு தடையற்ற டிஜிட்டல் வங்கிச் சேவைகளை வழங்குவதில்  பெரும் பங்காற்றி வருகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மீக ஒன்று கூடலான, மஹாகும்பமேளாவானது அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துக்கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன், இந்திய அஞ்சல் வங்கி, அனைவருக்கும் விரிவான வங்கிச் சேவைகள் கிடைக்க உதவுகிறது. நிதி பரிவர்த்தனைகளின் வசதி மற்றும் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. மஹாகும்பமேளா முழுவதும் 5 முக்கிய இடங்களில் …

Read More »

ஹரியானாவின் 15வது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை மக்களவைத் தலைவர் தொடங்கி வைக்கிறார்

சண்டிகரில் உள்ள மாநில சட்டமன்ற வளாகத்தில், ஹரியானாவின் 15-வது சட்டமன்றத்திற்குப் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா நாளை (2025 பிப்ரவரி 14) தொடங்கி வைக்கிறார். ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி; ஹரியானா சட்டப் பேரவைத் தலைவர் திரு ஹர்விந்தர் கல்யாண்; சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு பூபிந்தர் சிங் ஹூடா; மாநில அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற …

Read More »

குடியரசுத்தலைவர் பிப்ரவரி 14 மற்றும் 15 இரு நாட்கள் கர்நாடகா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு பயணம்

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பிப்ரவரி 14 மற்றும் 15 இரு நாட்கள் கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 14-ம் தேதி, பெங்களூரில், வாழும் கலை அமைப்பு ஏற்பாடு செய்துள்ள 10-வது சர்வதேச மகளிர் மாநாட்டின் தொடக்க அமர்வில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். பிப்ரவரி 15-ம் தேதி ராஞ்சியில் உள்ள பிர்லா தொழில்நுட்ப நிறுவனம் – மேஸ்ராவின் பிளாட்டின விழா கொண்டாட்டத்தில் குடியரசுத்தலைவர் உரையாற்றுகிறார்.

Read More »

ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை அர்ச்சகர் திரு மஹந்த் சத்யேந்திர தாஸ் அவர்களின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை அர்ச்சகர் திரு மஹந்த் சத்யேந்திர தாஸ் அவர்களின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். மதச் சடங்குகள் மற்றும் வேதங்களில் வல்லுநராக மஹந்த் திகழ்ந்தார் என்றும், அவர் தனது முழு வாழ்க்கையையும் பகவான் ஸ்ரீ ராமரின் சேவைக்காக அர்ப்பணித்தார் என்றும் திரு மோடி பாராட்டியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது: “ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை …

Read More »