Wednesday, February 04 2026 | 06:46:12 AM
Breaking News

Regional

மஹா கும்பமேளா 2025: பிரயாக்ராஜில் அமைக்கப்பட்டுள்ள மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகத்தின் அரங்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வை உருவாக்குகிறது

பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளா – 2025-ல் பார்வையாளர்களிடையே சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகம் 2025 ஜனவரி 13 முதல் 15 வரை ஓர் அரங்கை அமைத்திருந்தது. நீடித்த வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான பல்வேறு தொழில்நுட்பங்களை இந்த அரங்கு காட்சிப்படுத்தியது. மெய்நிகர் காட்சி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சைக்கிள் ஓட்டுதல், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான செல்ஃபி போன்ற நவீன தொழில்நுட்பங்களை அனுபவிக்கும் வாய்ப்பு இந்த அரங்கிற்கு வருகை புரிந்தவர்களுக்கு கிடைத்தது. இந்த அரங்கிற்கு வருகைபுரிந்தவர்கள் …

Read More »

ஒடிசா, உத்தராகண்ட் மாநிலங்களுக்கு பிரதமர் நாளை(ஜனவரி 28) பயணம் மேற்கொள்கிறார்

பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (ஜனவரி 28) ஒடிசா, உத்தராகண்ட் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில், புவனேஸ்வரில் உள்ள ஜனதா மைதானத்தில் செழிப்பான ஒடிசா – ஒடிசாவில் உற்பத்தி செய்வோம் மாநாடு 2025-ஐ அவர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்குச் செல்லும் அவர், மாலை 6 மணியளவில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்கிறார். ஒடிசா அரசால் நடத்தப்படும் இந்த முதன்மையான …

Read More »

தேவபூமியான உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியிருப்பது நல்ல அறிகுறி ஆகும் – குடியரசு துணைத்தலைவர்

உத்தராகண்ட் மாநிலம் பொது சிவில் சட்டத்தை  அமல்படுத்தியிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், இன்றைய நாள் புனிதமானது என்று கூறினார். மாநிலங்களவை உள்ளகப் பயிற்சித் திட்டத்தின் ஐந்தாவது தொகுதி பங்கேற்பாளர்களுக்கான தொடக்க நிகழ்ச்சிக்கு குடியரசுத் துணைத் தலைவர் தலைமை தாங்கினார். குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற உள்ளகப் பயிற்சித் திட்டத்திற்கான இணைய தளத்தையும் குடியரசு துணைத்தலைவர் தொடங்கி வைத்தார். மாநிலங்களவை …

Read More »

“புதிய பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி” – இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்றது

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம், சென்னையில் இன்று (24.01.2025) “புதிதாக பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை” நடத்தியது. பிஐஎஸ் தென்மண்டல துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் மீனாட்சி கணேசன், உரிமைதாரர்களிடம் இந்த நிகழ்ச்சி குறித்தும் தரத்தைப் பேணுவது குறித்தும் விளக்கினார். இந்த நிகழ்ச்சியில், பிஐஎஸ் பற்றிய சுருக்கமான வழிகாட்டுதல் அமர்வும் அதைத் தொடர்ந்து அறிமுக தொகுப்பு (Welcome Kit) வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இந்தத் தொகுப்பில் உரிமைதாரர்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. உரிமம் பெற்றவர்கள் மற்ற புதிய உரிமம் பெற்றவர்களுடனும், பிஐஎஸ் அதிகாரிகளுடனும் தகவல் பரிமாற்ற வாய்ப்பையும் …

Read More »

மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கூட்டுறவு மாநாட்டில் உரையாற்றி, கூட்டுறவு தொடர்பான பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற கூட்டுறவு மாநாட்டில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். நிகழ்ச்சியின் போது, கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர் திரு முரளிதர் மோஹல், மகாராஷ்டிர துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய …

Read More »

ரசாயனப் பொருட்கள், பெட்ரோ ரசாயனப் பொருட்கள் தொழில்துறை பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் சென்னையில் தொடங்கியது

“ரசாயனம், பெட்ரோ ரசாயனப் பொருட்கள் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு” என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம்  இன்று (23.01.2025) சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தொடங்கியது. மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (சிப்பெட்) தலைமை இயக்குநர் பேராசிரியர் டாக்டர் சிஷிர் சின்ஹா இதனைத் தொடங்கி வைத்தார். ரசாயனம், பெட்ரோ ரசாயன துறையில் பாதுகாப்பு தரங்களை உறுதிப்படுத்த தேவையான பயிற்சியை வலுப்படுத்துவதற்கு இந்தப் பயிற்சி முகாம் முன்னுரிமை அளிக்கிறது. மத்திய அரசின் ரசாயனம், பெட்ரோலிய ரசாயனத் துறை நாடு முழுவதும் உள்ள 2393 தொழிற்சாலைகளுக்கும் ரசாயனப் பாதுகாப்பு குறித்த பயிற்சி அளிக்க …

Read More »

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, அகமதாபாத்தில் ‘இந்து ஆன்மிக மற்றும் சேவை விழா’வைத் தொடங்கி வைத்தார்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்து ஆன்மிக மற்றும் சேவை விழாவை (அத்யாத்மிக் அவுர் சேவா மேளா) மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று (23.01.2025) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு. பூபேந்திர படேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மத்திய உள்துறை அமைச்சர் தமது உரையில், ஒரே மேடையில் 200 க்கும் மேற்பட்ட சேவை அமைப்புகளை இந்த விழா ஒன்றிணைத்துள்ளது …

Read More »

குஜராத் மாநிலம் சூரத்தில் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் நெஞ்சக நோய் மருத்துவமனையை மத்திய அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார்

குஜராத் மாநிலம் சூரத்தில் ஸ்ரீ பாபுலால் ரூப்சந்த் ஷா மகாவீர் புற்றுநோய் மருத்துவமனை, ஸ்ரீ பூல்சந்த்பாய் ஜெய்கிஷண்டாஸ் வகாரியா நெஞ்சகநோய் மருத்துவமனை ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று திறந்து வைத்தார்.  நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, சூரத் ஒரு முக்கியமான நகரம் என்றும், கடந்த சில ஆண்டுகளில் நகரத்தில் பல தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன என்றும் திரு அமித் ஷா கூறினார். குஜராத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மேற்கு இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளின் மையமாகவும் சூரத் …

Read More »

சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள நிப்மெட் நிறுவனத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு

சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட நபர்களின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் (NIEPMD- நிப்மெட்) நாடாளுமன்ற உறுப்பினர் திரு பி சி மோகன் தலைமையிலான சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, 21.01.2025 அன்று ஆய்வு மேற்கொண்டது.       முட்டுக்காடு நிப்மெட் இயக்குநர் டாக்டர் நச்சிகேதா ரவுட், இந்நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் சேவை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு  வழங்கப்படும் பேருந்து சேவை நடைமுறைகள், ஹைட்ரோ தெரபி சிகிச்சை முறைகள் குறித்து …

Read More »

பழங்குடி சமூகங்களிடையே முழுமையான சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய பழங்குடியினர் சுகாதார மாநாடு 2025

பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகமானது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் இணைந்து, தேசிய பழங்குடியினர் சுகாதார மாநாடு 2025-ஐ புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜனவரி 20 அன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்த மைல்கல் நிகழ்வு இந்தியாவின் பழங்குடி சமூகங்கள் எதிர்கொள்ளும் முக்கியமான சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டதாக  இந்த மாநாடு அமைந்திருந்தது. இது தார்த்தி ஆபா பழங்குடி கிராம வளர்ச்சி இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட …

Read More »