காசநோய் இல்லா இந்தியாவை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் தமிழ்நாட்டின் பங்களிப்பு குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா இன்று கலந்துரையாடினார். காசநோய் ஒழிப்பில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், 2015-ம் ஆண்டு காசநோயால் ஒரு லட்சம் பேரில் 237 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 2024-ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 21 சதவீதம் குறைந்து …
Read More »கர்நாடக மாநிலம் பெலகாவி அருகே சத்ரபதி சிவாஜி மகாராஜின் 25 அடி உயர சிலையை மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா திறந்து வைத்தார்
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் அதானியில் மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜி மகாராஜின் 25 அடி உயர சிலையை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா இன்று (14.12.2025) திறந்து வைத்தார். இந்த நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்கது என அவர் கூறினார். இது வெறும் சிலை திறப்பு விழா மட்டுமல்ல என்றும் இந்தியாவின் சுயமரியாதை, துணிச்சல் ஆகிய உணர்வுகளை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதற்கான ஒரு விழா என்றும் கூறினார். “ஜெய் பவானி, ஜெய் சிவாஜி” என்ற முழக்கம் இன்றும் கூட ஒவ்வொரு இந்தியரிடமும் அச்சமின்மை, தேசிய கடமை உணர்வைத் தூண்டி வருவதாக அவர் குறிப்பிட்டார். சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கையையும் போராட்டங்களையும் அவர் நினைவு கூர்ந்தார். சிவாஜி மகாராஜின் வீரத்திற்கு பெலகாவி பகுதியும் அதானி நிலமும் ஒரு சாட்சியாக இருந்துள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். பெலகாவி மண்ணில், வீரம், சுயமரியாதை ஆகியவற்றின் அழியாத சரித்திரம் நிலைப்பெற்றுள்ளது என்று அவர் கூறினார். சிவாஜி மகாராஜால் ஈர்க்கப்பட்டு நவீன இந்தியா முன்னேறுகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த சிலை வருங்கால சந்ததியினரை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று திரு ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.
Read More »தில்லியில் டிடிஏ-வால் பராமரிக்கப்படும் சாலைப் பகுதிகளில் காற்று தர மேலாண்மை அதிகாரிகள் ஆய்வு – குறைபாடுகளை சரி செய்ய வலியுறுத்தல்
தில்லி தேசிய தலைநகரப் பகுதியிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் காற்று தர மேலாண்மை ஆணையத்தின் 19 குழுவினர் 12.12.2025 அன்று சாலைகளை ஆய்வு செய்தனர். தில்லி முழுவதும் தில்லி மேம்பாட்டு ஆணையம் எனப்படும் டிடிஏ-வின் அதிகார வரம்பிற்குள் வரும் 136 சாலைப் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை, ஆணையத்தின் தொடர்ச்சியான கண்காணிப்பு, அமலாக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது குளிர் காலத்தில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், கட்டுப்பாடுகள் அமலில் உள்ள சூழலில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு, சாலைகளில் உருவாகும் தூசி, மாநகராட்சி திடக்கழிவுகள், கட்டுமான கழிவுகள் போன்றவற்றை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இதில், 15 சாலைப் பகுதிகளில் அதிக அளவில் தெரியும் தூசி ஏற்படுவதும், 38 இடங்களில் மிதமான தூசி ஏற்படுவதும், 61 இடங்களில் குறைந்த தூசி ஏற்படுவதும், 22 இடங்களில் எந்தத் தூசியும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது. சில சாலைப் பகுதிகளின் பராமரிப்பில் குறைபாடு இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்தது. சாலைகளை முறையாக பராமரித்து தூசி குறைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை காற்றுத் தர மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
Read More »தில்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் – காற்றுத் தர மேலாண்மை ஆணையம் நடத்தியது
காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் துணைக் குழுக் கூட்டம் நேற்று (12.12.2025) புதுதில்லியில் நடைபெற்றது. தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் (ஜிஆர்ஏபி) கீழ் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையும் செயல்திறனையும் இக்கூட்டம் ஆய்வு செய்தது. குறிப்பாக தில்லியில் காற்று மாசுபாடு அதிகம் ஏற்படும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. இந்த 23-வது துணைக் குழுக்கூட்டத்தில், தில்லி தேசிய தலைநகர் பகுதிக்குள் வரும், தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா நிர்வாகங்கள் …
Read More »குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Read More »தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மண்டல சுற்றுச்சூழல் மாநாடு 2025 நிறைவடைந்தது
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள்/ குழுக்கள் ஏற்பாடு செய்திருந்த சுற்றுச்சூழல் குறித்த மண்டல மாநாடு 2025, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நிறைவடைந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டின் நிறைவு விழாவில், நிறுவன ஒருமைப்பாடு, கொள்கை முதல் செயல் வரையிலான அமலாக்கம் மற்றும் எதிர்வினையிலிருந்து தடுப்பு சுற்றுச்சூழல் நிர்வாகத்திற்கு மாறுதல் முதலியவற்றின் வலிமையான முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய உச்சநீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தொழில்நுட்ப நிர்பந்தம் மட்டுமல்ல, இது ஒரு அரசியலமைப்பு உத்தரவாதம் என்று கூறினார். ஒழுங்குமுறை கட்டமைப்புகள் அவ்வப்போது தோல்வியடைவதற்கு போதுமான சட்டங்கள் இல்லாதது காரணம் அல்ல, மாறாக நிறுவனங்கள் சட்டங்களை செயல்படுத்த தயங்குவது தான் காரணம் என்று அவர் வலியுறுத்தினார். நிறுவன வலிமைப்படுத்தல், ஒருங்கிணைந்த நிர்வாக கட்டமைப்பு, ஆதாரங்களின் அடிப்படையிலான அமலாக்கம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் குடிமக்களின் பங்கேற்பு/ நடத்தை மாற்றம் ஆகிய ஐந்து தூண்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் நம்பகமான முன்னோக்கிய பாதையை நீதிபதி மகாதேவன் சுட்டிக்காட்டினார். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திரு ஏ.ஆர்.எல். சுந்தரேசன் தனது உரையில், சுற்றுச்சூழல் நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் எந்த ஒத்திவைப்பும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தி, இணக்கத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, மாநாட்டில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அடிமட்ட அளவில் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே நேர்மறையான விளைவுகள் கிடைக்கும் என்று கூறினார். நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹூ, கொள்கையையும் செயலையும் ஒன்றாக இணைப்பதே இன்றைய பிரதான சவாலாக உள்ளது என்று கூறினார்.
Read More »குஜராத்தின் ஏக்தா நகரில் தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (6.12.2025) குஜராத்தின் ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமை சிலையில் சர்தார் @150 ஒற்றுமை அணிவகுப்பு – தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், இந்த வரலாற்று சிறப்புமிக்க தேசிய பாதயாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகுந்த கவுரமானது என்று கூறினார். நவம்பர் 26-ம் தேதி அரசியல் சாசன தினத்தன்று தொடங்கிய பாதயாத்திரையின் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார். 1,300- க்கும் மேற்பட்ட பாதயாத்திரைகளில் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பது சர்தார் வல்லபாய் படேல் ஏற்றிய நீடித்த ஒற்றுமையின் சுடரை நிரூபித்தது என்று அவர் குறிப்பிட்டார். 560-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பதில் சர்தார் படேலின் வரலாற்று சாதனையை அவர் நினைவுகூர்ந்தார். “அகண்ட பாரதத்தின் வலுவான அடித்தளத்தை ஒன்றிணைத்து அமைத்ததற்காக இந்தியாவின் இரும்பு …
Read More »மண்டல சுற்றுச்சூழல் மாநாடு – டிசம்பர் 6, 7 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது
சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வின் சார்பில் 2025 டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் மண்டல சுற்றுச்சூழல் மாநாடு – 2025 நடைபெறவுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி திரு பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் நீதிபதி திருமதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த இரண்டு நாள் மாநாட்டை உச்சநீதிமன்ற நீதிபதி திரு …
Read More »காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்
தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையே உள்ள பழமையான கலாச்சார இணைப்பைக் கொண்டாடும் வகையில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நான்காவது ஆண்டு நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் காணொலிக் காட்சி வாயிலாக சிறப்பு செய்தியை வெளியிட்டார். கடந்த 2022- ம் ஆண்டு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் போது தொடங்கப்பட்ட காசி தமிழ் சங்கமம் முன்முயற்சி, கங்கை மற்றும் காவேரியின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை ஒன்றிணைக்கும் முக்கியமான தேசிய தளமாக …
Read More »அசாம் தினத்தையொட்டி அசாம் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
அசாம் தினத்தையொட்டி அசாம் மாநில சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஸ்வர்கதேயோ சாவோலுங் சுகபா-வின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் நாள் இது என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அசாம் மாநில வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், மத்திய மற்றும் அசாம் மாநில தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள் அயராது பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். …
Read More »
Matribhumi Samachar Tamil