Friday, December 05 2025 | 07:00:07 PM
Breaking News

Regional

ஜம்மு காஷ்மீரின் ராம்பனில் பொது மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்- மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார்

மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ராம்பனில் நடந்த பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றார். மக்கள் குறைகளை டாக்டர் ஜிதேந்திர சிங் பொறுமையாகக் கேட்டு, ஒவ்வொரு விஷயத்திற்கும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தல்களை வழங்கினார். ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்கட்டமைப்பு வளர்ச்சியை அதிகரிக்க கடந்த பத்தாண்டுகளில் அரசு பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று டாக்டர் …

Read More »

மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி அகர்தலாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம், புதிய – புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி 2024 டிசம்பர் 28 முதல் 29 வரை அகர்தலாவில் பயணம் மேற்கொண்டார். அகர்தலாவுக்கு அவரது பயணம் பயனுள்ள ஒன்றாகும். டிசம்பர் 28 அன்று இந்திய உணவுக் கழக அலுவலக கிடங்கை பார்வையிட்டார், அங்கு தற்போதைய நிலைமை, குறிப்பாக உணவு தானிய சேமிப்பு, விநியோகம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், …

Read More »

மகா கும்பமேளா 2025: பக்தர்களுக்கு வளமான, சிறந்த ஆன்மீகப் பயணம் காத்திருக்கிறது

“பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை 45 நாட்களுக்கு மகா கும்பமேளா நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இந்திய புலம்பெயர்ந்தோர் இந்தியா வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம், பின்னர் மகா கும்பமேளா, அதன் பிறகு குடியரசு தினம். இது ஒரு வகையான திரிவேணி, இந்தியாவின் வளர்ச்சியுடனும் பாரம்பரியத்துடனும் இணைவதற்கான சிறந்த வாய்ப்பு.” —நரேந்திர மோடி, பிரதமர் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளா 2025, ஒரு …

Read More »

“நாடு முழுவதும் வலுவாக ஒன்றுபடட்டும்” என்பதே மகா கும்பமேளாவின் செய்தி: பிரதமர் திரு நரேந்திர மோடி

இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி, மகா கும்பமேளாவின் சிறப்பு அதன் மகிமையில் மட்டுமல்ல, அதன் பன்முகத்தன்மையிலும் உள்ளது என்று கூறினார். இந்த நிகழ்ச்சியைக் காண கோடிக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார். லட்சக்கணக்கான துறவிகள், ஆயிரக்கணக்கான பாரம்பரியங்கள், நூற்றுக்கணக்கான பிரிவுகள், பல அகாராக்கள், அனைவரும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள் என அவர் தெரிவித்தார். எங்கும் பாகுபாடு இல்லை, யாரும் பெரியவர், …

Read More »

கடல்சார் பாரம்பரியத்திற்கான உலகளாவிய மையமாக லோத்தல் மாறும்: மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால்

மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் ஆகியோர் லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் (NMHC) முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து ஆய்வு செய்தனர். சாகர்மாலா திட்டத்தின் கீழ், துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் அமைச்சகம், தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை உருவாக்கி வருகிறது. இது இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்தை பழைய காலம் முதல் …

Read More »

சேவை பெறும் உரிமை ஆணையத்தின் தானியங்கி மேல்முறையீட்டு முறை ஹரியானா மக்களுக்கு சேவை வழங்கலில் புதிய முன்னுதாரணத்தை அமைத்துள்ளது: பொது மக்கள் குறைதீர்ப்புத் துறை செயலாளர்

ஹரியானா மாநில அரசுப் பணியாளர் உரிமை ஆணையத்தின் தலைமை ஆணையர் அழைப்பின் பேரில், நிர்வாக சீர்திருத்தங்கள், பொது மக்கள் குறை தீர்ப்புத் துறையின் செயலாளர் திரு வி.சீனிவாஸ் தலைமையிலான மத்திய அரசின் தூதுக்குழு அந்த ஆணையத்தை பார்வையிட்டது. இந்த குழு தடையற்ற சேவை வழங்கல் செயல்முறைகளை ஆய்வு செய்தது.  அத்துடன் காணொலி மூலம் மக்கள் கலந்துரையாடல் அமர்வில் கலந்து கொண்டது. ஹரியானாவில் சேவை பெறும் உரிமை ஆணையம், மாநிலத்தில் வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை மாற்றியுள்ளது. அறிவிக்கப்பட்ட 422 சேவைகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் வழங்கப்பட்டு வருகின்றன. …

Read More »

பருத்தியால் செய்யப்பட்ட தீ தடுப்பு துணி பற்றிய விவாத நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் மதுரை கிளை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் – இந்திய தரநிலை ஐ எஸ் 18931:2024 – பருத்தியால் செய்யப்பட்ட தீ தடுப்பு துணி மனிதனால் உருவாக்கப்பட்ட இழைகள் மற்றும் அவற்றின் கலவைகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை 26 டிசம்பர் 2024 அன்று நடத்தியது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், தொழில்துறையினர், பருத்தி ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர்கள், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் …

Read More »

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேரிட்ட சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட …

Read More »

குடியரசுத் துணைத் தலைவர் ஜம்மு பயணம்

குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், 2024-ம் ஆண்டு டிசம்பர் 27 அன்று ஒரு நாள் பயணமாக ஜம்மு (ஜம்மு & காஷ்மீர்) செல்கிறார். இந்தப் பயணத்தின்போது, மாத்ரிகா அரங்கத்தில் எஸ்.எம்.வி.டி.யு வளாகத்தில் நடைபெறும் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர்  பங்கேற்கிறார். மாதா வைஷ்ணோ தேவி கோயில் மற்றும் பைரோன் பாபா மந்திர் ஆகியவற்றிற்கும் குடியரசுத் துணைத் தலைவர் …

Read More »

ஜாரக்கண்ட் மாநிலத்தில் மத்திய அரசுத் திட்டங்கள் – மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆய்வு செய்தார்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வுப் பயணம் மேற்கொண்ட மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை, தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், இந்தியாவின் முன்மாதிரி மாவட்டமாக கட்டமைக்கப்பட்டு வரும் பலமு மாவட்டத்தில் இன்று மத்திய அரசுத் திட்டங்களை ஆய்வு செய்தார். இன்று (25.12.2024) அங்கு, மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அவருக்குத் திரு எல். முருகன் மரியாதை செலுத்தினார். பின்னர், பலமு மாவட்டத்தில் …

Read More »