ஆந்திரப்பிரதேசம், ஒடிசா மாநிலங்க ளில் 2025 ஜனவரி 8, 9 ஆகிய இரண்டு நாட்கள் பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். நீடித்த வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், ஜனவரி 8-ம் தேதி மாலை 5.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். ஜனவரி 9 அன்று காலை …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் ரூ. 12,200 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
ரூ 12,200 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் தொடக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். திட்டங்களின் முக்கிய கவனம் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதும் பயணத்தை எளிதாக்குவதும் ஆகும். சாஹிபாபாத் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்திலிருந்து புதிய அசோக் நகர் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்துக்கு நமோ பாரத் ரயிலிலும் பிரதமர் பயணம் மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இன்று தில்லி-என்சிஆர் இந்திய அரசிடமிருந்து குறிப்பிடத்தக்க பரிசைப் பெற்றுள்ளது என்றும், இந்தியாவின் நகர்ப்புற இயக்கம் மேலும் விரிவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். நமோ பாரத் ரயிலில் சாஹிபாபாத்தில் இருந்து நியூ அசோக் நகர் வரை பகலில் பயணம் செய்ததை நினைவு கூர்ந்த திரு மோடி, வளர்ச்சியடைந்த இந்திய நகரங்களில் பொதுப் போக்குவரத்தின் எதிர்காலத்தை வெளிப்படுத்தும் வகையில், மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையுடன் பல இளைஞர்களுடன் உரையாடியதாக கூறினார். நமோ பாரத் திட்டம் நிறைவேறியதும், தில்லி-மீரட் பாதையில் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என்று பிரதமர் வலியுறுத்தினார். தில்லி-என்சிஆர் மக்களுக்கு அவர் தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். “இந்தியாவின் நவீன உள்கட்டமைப்பு பயணத்தில் இன்று மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது” என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்தியாவின் மெட்ரோ கட்டமைப்பு தற்போது 1,000 கிலோமீட்டர்களை எட்டியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பாராட்டினார். 2014-ம் ஆண்டில், நாடு தங்களுக்கு வாய்ப்பு வழங்கியபோது, மெட்ரோ இணைப்பின் அடிப்படையில் இந்தியா உலகளவில் முதல் பத்து இடங்களுக்குள் கூட இல்லை என்றும், கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா மெட்ரோ கட்டமைப்பில், உலகின் மூன்றாவது பெரிய நாடாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய தனது அரசின் ஆட்சிக் காலத்தில், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மெட்ரோ கட்டமைப்பைக் கொண்டிருக்கும் என்று பிரதமர் கூறினார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவின் மெட்ரோ கட்டமைப்பு 248 கிலோமீட்டர்கள் மட்டுமே என்றும், அது வெறும் ஐந்து நகரங்களில் மட்டுமே இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியாவில் 752 கிலோமீட்டருக்கும் அதிகமான புதிய மெட்ரோ பாதைகள் திறக்கப்பட்டுள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார். இன்று, நாடு முழுவதும் 21 நகரங்களில் மெட்ரோ சேவைகள் செயல்படுகின்றன, தற்போது 1,000 கிலோமீட்டர் மெட்ரோ வழித்தடங்கள் விரைவான வளர்ச்சியில் உள்ளன. தில்லி மெட்ரோ விரிவாக்கம், இரண்டு புதிய வழித்தடங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டல் ஆகியவற்றைக் குறிப்பிட்ட திரு மோடி, குர்கானுக்குப் பிறகு, ஹரியானாவின் மற்றொரு பகுதி தற்போது மெட்ரோ கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது என்று வலியுறுத்தினார். ரிதாலா-நரேலா-குண்ட்லி வழித்தடம் தில்லி மெட்ரோ கட்டமைப்பின் மிகப்பெரிய பிரிவுகளில் ஒன்றாக இருக்கும், தில்லி மற்றும் ஹரியானாவில் உள்ள முக்கிய தொழில்துறை மையங்களுக்கு இடையிலான இணைப்பை வலுப்படுத்தி, மக்களுக்கு பயணத்தை இது எளிதாக்குகிறது. மத்திய அரசின் தொடர் முயற்சிகள் காரணமாக, தில்லியில் மெட்ரோ வழித்தடங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், 2014-ல் தில்லி-என்சிஆர் பகுதியில் மொத்த மெட்ரோ கட்டமைப்பு 200 கிலோமீட்டருக்கும் குறைவாக இருந்தது என்றும், இன்று அது இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். “கடந்த பத்தாண்டுகளாக, உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அரசு முதன்மையான கவனம் செலுத்தி வருகிறது” என்று திரு மோடி கூறினார். பத்தாண்டுகளுக்கு முன்பு, உள்கட்டமைப்புக்கான பட்ஜெட் சுமார் ரூ 2 லட்சம் கோடியாக இருந்தது, அது இப்போது ரூ 11 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். நவீன இணைப்புக்கு, குறிப்பாக நகரங்களுக்குள் மற்றும் ஒரு நகரத்தை மற்றொரு நகரத்துடன் இணைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தில்லியில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விரைவுச் சாலைகள் உருவாகி வருவதாகவும், தில்லி தொழில் வழித்தடங்களுடன் இணைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தேசிய தலைநகரப் பகுதியில் பெரிய பன்னோக்கு சரக்கு போக்குவரத்து மையம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், தில்லி-தேசிய தலைநகர் பகுதியில் இரண்டு சரக்கு வழித்தடங்கள் குவிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதாகவும் திரு மோடி எடுத்துரைத்தார். “ஏழை மற்றும் நடுத்தர வர்க்கம் உட்பட அனைவருக்கும் கண்ணியமான மற்றும் தரமான வாழ்க்கையை உறுதி செய்ய நவீன உள்கட்டமைப்பு உதவுகிறது” என்று அவர் மேலும் கூறினார். பரம ஏழைகளுக்கும் மருத்துவ வசதி சென்றடைய வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்ட பிரதமர், ஆயுஷ், ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளையும் அரசு ஊக்குவித்து வருவதாக குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகளில் ஆயுஷ் முறை 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விரிவடைந்துள்ளது என்றும் அவர் கூறினார். பாரம்பரிய மருத்துவம் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் முதலாவது நிறுவனம் இந்தியாவில் நிறுவப்பட்டிருப்பதை திரு மோடி எடுத்துரைத்தார். சில வாரங்களுக்கு முன்பு, அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் இரண்டாம் கட்டத்தை தாம் தொடங்கி வைத்ததாகவும் அவர் கூறினார். இன்று, மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதாகக் குறிப்பிட்ட திரு மோடி, இந்த சாதனைக்காக தில்லி மக்களுக்கு தனது சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். “உலகின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய தலைநகராக மாறுவதற்கு இந்தியாவுக்கு மகத்தான ஆற்றல் உள்ளது” என்று பிரதமர் கூறினார். “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” என்பதுடன், “இந்தியாவில் குணப்படுத்துவோம்” என்பதை மந்திரமாக உலகம் ஏற்றுக்கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். வெளிநாட்டு மக்கள் இந்தியாவில் ஆயுஷ் சிகிச்சைகளைப் பெறுவதற்கு வசதியாக சிறப்பு ஆயுஷ் விசா வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறுகிய காலத்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் இந்த வசதியின் மூலம் பயனடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். மத்திய அரசின் இந்த முயற்சிகள் தில்லியை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்து பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. மனோகர் லால், தில்லி துணைநிலை ஆளுநர் திரு. வினய் குமார் சக்சேனா, தில்லி முதலமைச்சர் திருமதி. அதிஷி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னணி பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், சாஹிபாபாத் மற்றும் நியூ அசோக் நகர் இடையேயான சுமார் 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான 13 கிலோமீட்டர் நீளமுள்ள தில்லி-காஸியாபாத்-மீரட் நமோ பாரத் வழித்தடத்தை பிரதமர் திறந்து வைத்தார். இந்த தொடக்க விழாவின் மூலம், தில்லி தனது முதல் நமோ பாரத் இணைப்பைப் பெறுகிறது. இது தில்லி மற்றும் மீரட் இடையேயான பயணத்தை கணிசமாக எளிதாக்கும், மேலும் இணையற்ற பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையுடன் அதிவேக மற்றும் வசதியான பயணம் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும். தில்லி மெட்ரோவின் ஜனக்புரி முதல் கிருஷ்ணா பூங்கா வரையிலான நான்காம் கட்டம் வரையிலான 2.8 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். தில்லி மெட்ரோவின் நான்காம் கட்டத் திட்டத்தின் முதல் பகுதி இதுவாகும். மேற்கு தில்லியின் கிருஷ்ணா பூங்கா, விகாஸ்புரியின் சில பகுதிகள், ஜனக்புரி போன்ற பகுதிகள் பயனடையும். தில்லி மெட்ரோ நான்காம் கட்டத்தின் 26.5 கிலோமீட்டர் தொலைவுக்கான ரிதாலா – குண்ட்லி பிரிவுக்கு ரூ.6,230 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த வழித்தடம் தில்லியில் உள்ள ரிதாலாவை ஹரியானாவில் உள்ள நாதுப்பூருடன் (குண்ட்லி) இணைக்கும், டெல்லி மற்றும் ஹரியானாவின் வடமேற்கு பகுதிகளில் இணைப்பை கணிசமாக மேம்படுத்தும். பயனடைய வேண்டிய முக்கிய பகுதிகள் ரோஹினி, பவானா, நரேலா மற்றும் குண்ட்லி ஆகியவை அடங்கும், குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை மண்டலங்களுக்கான அணுகலை மேம்படுத்துதல் இதன் முக்கிய நோக்கமாகும். இது செயல்பாட்டுக்கு வந்தவுடன், நீட்டிக்கப்பட்ட சிவப்பு கோடு வழியாக தில்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் முழுவதும் பயணிக்க உதவும். புதுதில்லி ரோகிணியில் சுமார் 185 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான புதிய அதிநவீன கட்டிடத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த வளாகம் அதிநவீன சுகாதார மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பை வழங்கும். புதிய கட்டிடத்தில் நிர்வாகத் தொகுதி, வெளிநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு மற்றும் ஒரு பிரத்யேக சிகிச்சை பிரிவு ஆகியவை இருக்கும். இது நோயாளிகளுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒருங்கிணைந்த மற்றும் தடையற்ற சுகாதார அனுபவத்தை உறுதி செய்யும்.
Read More »மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வு துறை பிரதிநிதிகள், பீகாரில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து ஆய்வு
மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையின் செயலாளர் திரு வி. ஸ்ரீனிவாஸ் தலைமையிலான மூத்த அதிகாரிகள் குழு, பீகார் பொது மக்கள் குறைகளைத் தீர்ப்பதற்கான பீகார் உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவதைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக அந்த மாநிலத்துக்கு ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டது. குழுவில் கூடுதல் செயலாளர் திரு புனித் யாதவ், இணைச் செயலாளர் திருமதி. சரிதா சவுகான் உள்ளிட்டோர் இடம் …
Read More »அஜ்மீரில் உள்ள க்வாஜா மொய்னுதீன் சிஷ்டியில் பிரதமர் சார்பாக மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு புனித சால்வை வழங்கினார்
சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, இன்று அஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஷ்டி புனித ஸ்தலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சார்பாக புனித சால்வையை வழங்கினார். நல்லிணக்கம், ஆன்மிகம் மற்றும் பக்தி ஆகியவற்றைக் குறிக்கும் நிகழ்வான சிறந்த சூஃபி துறவியை நினைவுகூரும் ஆண்டு உர்ஸ் என வழங்கப்படுகிறது. இந்தப் புனிதமான விளக்கக்காட்சியுடன் இணைந்து, தர்காவிற்கு வருகை தரும் யாத்ரீகர்களின் அனுபவத்தையும் வசதியையும் …
Read More »தில்லியில் புதிதாக கட்டப்பட்ட பணிபுரியும் பெண்கள் விடுதியைத் திறந்து வைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி) உருவாக்கிய புதிதாக கட்டப்பட்ட பணிபுரியும் பெண்கள் விடுதித் தொகுதியான சுஷ்மா பவனை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார். புதுதில்லி மோதி பாக்கில் அதிநவீன கால்நடை மருத்துவமனையையும் காசொலி மூலம் அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தில்லி துணைநிலை ஆளுநர் திரு. வி.கே. சக்சேனா, புதுதில்லி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. பன்சூரி ஸ்வராஜ் உட்பட பலர் கலந்து …
Read More »தில்லியில் நாளை ரூ. 12,200 கோடிக்கு அதிக மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
தில்லியில் உள்ள ரோகினியில் அதிநவீன மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான அடிக்கல்லை நாட்டுகிறார் பிரதமர் 12,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி ஜனவரி 5 ஆம் தேதி மதியம் சுமார் 12:15 மணிக்கு தில்லியில் தொடக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். சாஹிபாபாத் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்திலிருந்து புதிய அசோக் நகர் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்திற்கு காலை 11 மணிக்கு நமோ பாரத் …
Read More »மேற்கு வங்க மாநிலம் நாடியாவின் ஃபுலியாவில் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய வளாகத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் 04.01.2025 அன்று திறந்து வைக்கிறார்
மேற்கு வங்க மாநிலம் நாடியாவின் ஃபுலியாவில் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய வளாகத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் 04.01.2025 அன்று திறந்து வைக்கிறார். கைத்தறியின் தனித்துவமான அடையாளத்தைப் பாதுகாக்கவும், கைத்தறித் தொழிலுக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப மனிதவளத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மத்திய அரசு “இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம்” என்ற பெயரில் 06 தொழில்நுட்ப நிறுவனங்களை கைத்தறி தொழில் அதிகம் உள்ள சேலம், வாரணாசி, …
Read More »பெங்களூருவில் நடைபெற்ற தேசிய மனநலம், நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் (நிம்ஹான்ஸ்) பொன்விழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர்
தேசிய மனநலம், நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் மனநலம் என்ற உன்னத நோக்கத்திற்காக ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க பணிகள் சமூகத்தில் முன்மாதிரியான பங்களிப்பை அளிக்க உதவியது என்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார். புதுமையான ஆராய்ச்சிகள், அர்ப்பணிப்புடன் கூடிய நோயாளிகளுக்கான சேவை, மேம்பட்ட கல்வி திட்டங்கள் ஆகியவை மனநலம் , நரம்பியல் அறிவியலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. டெலி-மனஸ் தளம், நாடு முழுவதும் அதன் 53 மையங்களுடன், கடந்த இரண்டு ஆண்டுகளில் 70 லட்சம் மக்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த மொழிகளில் சேவை வழங்கியுள்ளது. நவீன உடல்நல பராமரிப்பு அமைப்புகளை யோகா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய முறைகளுடன் ஒருங்கிணைத்து மனம், உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறது. மனநலம், நரம்பியல் அறிவியலில் அதிநவீன சிகிச்சைக்கான மனநல சிறப்புப் பிரிவு, மத்திய ஆய்வக வளாகம், பீமா விடுதி, அடுத்த தலைமுறை 3டி எம் ஆர் ஐ ஸ்கேனர், மேம்பட்ட டிஎஸ்ஏ அமைப்பு உள்ளிட்ட புதிய வசதிகளை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார். தேசிய மனநலம், நரம்பியல் அறிவியல் நிறுவனத்திற்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. 1970-ம் ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் குறைவாக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் 50 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்திற்கு வரும் ஏராளமான நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கும் அளவிற்கு வசதிகள் இங்குள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக தனது பத்தாண்டு கால பயணத்தில், தேசிய மனநலம், நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் மருத்துவ கவனிப்பு, ஆராய்ச்சி, கல்வி ஆகியவற்றில் உலகளவில் முன்னணியில் உள்ளது, மனநலக் கொள்கைகளுக்கு ஊக்கமளிக்கும் நடைமுறைகளையும் இந்நிறுவனம் வடிவமைத்துள்ளது என்று கர்நாடக மாநில முதலமைச்சர் திரு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Read More »தில்லியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தில்லியில் பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்ததோடு, மேலும் பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், திரளாகக் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய திரு மோடி, அவர்களுக்கு தமது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். 2025-ம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான வாய்ப்புகளைக் கொண்ட ஆண்டாக இருக்கும் என்றும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான இலக்கை நோக்கி நாட்டை முன்னெடுத்துச் செல்லும் …
Read More »பெங்களூருவில் நடைபெற்ற தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின்(நிம்ஹான்ஸ்) பொன்விழா கொண்டாட்டங்களில் குடியரசுத்தலைவர் பங்கேற்றார்
பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் இன்று (ஜனவரி 3, 2025) நடைபெற்ற பொன்விழா கொண்டாட்டங்களில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார் . நிகழ்ச்சியில் பேசிய அவர் , புதுமையான ஆராய்ச்சிகள், தனித்தன்மை வாய்ந்த நோயாளிகளை கவனிப்பதை உள்ளடக்கிய கடுமையான கல்வித் திட்டங்கள் ஆகியவை தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தை முதன்மை நிறுவனமாக மாற்றியுள்ளன என்றார். சமூக அடிப்படையிலான மனநல சுகாதாரத்தில் …
Read More »
Matribhumi Samachar Tamil