பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேரிட்ட சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட …
Read More »குடியரசுத் துணைத் தலைவர் ஜம்மு பயணம்
குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், 2024-ம் ஆண்டு டிசம்பர் 27 அன்று ஒரு நாள் பயணமாக ஜம்மு (ஜம்மு & காஷ்மீர்) செல்கிறார். இந்தப் பயணத்தின்போது, மாத்ரிகா அரங்கத்தில் எஸ்.எம்.வி.டி.யு வளாகத்தில் நடைபெறும் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்கிறார். மாதா வைஷ்ணோ தேவி கோயில் மற்றும் பைரோன் பாபா மந்திர் ஆகியவற்றிற்கும் குடியரசுத் துணைத் தலைவர் …
Read More »ஜாரக்கண்ட் மாநிலத்தில் மத்திய அரசுத் திட்டங்கள் – மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆய்வு செய்தார்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வுப் பயணம் மேற்கொண்ட மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை, தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், இந்தியாவின் முன்மாதிரி மாவட்டமாக கட்டமைக்கப்பட்டு வரும் பலமு மாவட்டத்தில் இன்று மத்திய அரசுத் திட்டங்களை ஆய்வு செய்தார். இன்று (25.12.2024) அங்கு, மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அவருக்குத் திரு எல். முருகன் மரியாதை செலுத்தினார். பின்னர், பலமு மாவட்டத்தில் …
Read More »15-வது நிதிக்குழு பரிந்துரை: ராஜஸ்தானுக்கு ரூ.614 கோடி, ஒடிசாவுக்கு ரூ.455 கோடி விடுவிப்பு
ராஜஸ்தான், ஒடிசாவில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25 நிதியாண்டில் பதினைந்தாவது நிதிக்குழு (XV FC) பரிந்துரை ஒதுக்கீடுகளை மத்திய அரசு விடுவித்துள்ளது. ராஜஸ்தானைப் பொறுத்தவரை, 2024-25 நிதியாண்டின் இரண்டாவது தவணையான நிபந்தனையற்ற மானியங்களின் இரண்டாவது தவணை ரூ.560.63 கோடியும், 2024-25 நிதியாண்டிற்கான நிபந்தனையற்ற நிதியின் முதல் தவணையின் நிறுத்தி வைக்கப்பட்ட தொகையான ரூ.53.4123 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாநிலத்தின் 10,105 தகுதியான கிராம ஊராட்சிகள், 315 தகுதியான வட்டார ஊராட்சிகள், 20 மாவட்ட ஊராட்சிகளுக்கு வழங்கப்படும். ஒடிசாவில் உள்ள ஊரக உள்ளாட்சி …
Read More »மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் கென்-பெட்வா நதிகள் இணைப்புத் தேசியத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இந்திய, உலக கிறிஸ்தவ சமூகத்தினருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் தலைமையிலான அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, இதற்காக …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடியின் சொந்த ஊரான வாட்நகரில் ‘நல் ஆளுகை’ நடைப்பயணம்’
முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளைக் குறிக்கும்வ கையில், மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமையில் குஜராத்தின் வாட்நகரில் 2024 டிசம்பர் 24, அன்று 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ‘நல் ஆளுகை நடைபயணத்திற்கு’ ஏற்பாடு செய்யப்பட்டது. குஜராத் மாநில அமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும், மைபாரத் தன்னார்வலர்களும் இந்த நடைப்பயணத்தில் பங்கேற்றனர். பிரதமர் திரு நரேந்திர மோடியின் சொந்த ஊரான வாட்நகர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். அங்கு நடைபெற்ற இந்த நடைப்பயணத்தில் உள்ளூர் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தன்னார்வ …
Read More »மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திப்ரூகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
அசாமின் திப்ரூகரில் சபுவா டாக்கா தேவி ரசிவாசியா கல்லூரியின் பொன்விழா கொண்டாட்டங்களில் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கலந்து கொண்டு பொன்விழா நினைவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய திரு சோனோவால், தொலைதூரமாக உள்ள சபுவாவின் புவியியல் சூழல், ஒப்பீட்டளவில் பின்தங்கிய நிலைமை ஆகியவற்றின் பின்னணியில் பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு கல்லூரி ஆற்றிவரும் சேவைகளின் களின் முக்கியத்துவத்தைப் பாராட்டினார். பின்னர், சாபுவா எல்ஏசி-யின் கீழ் பிந்தகோட்டா, பலிஜான், கர்ஜன், பனிடோலா பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பயனளிக்கும் …
Read More »உத்தரப்பிரதேசம், ஆந்திராவுக்கு ஊரக வளர்ச்சிக்கான 15-வது நிதிக்குழு மானியம் ஒதுக்கீடு
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் 15-வது நிதிக்குழு மானியத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 2-வது தவணையாக ரூ.1598.80 கோடி மதிப்பிலான நிபந்தனையற்ற மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாநிலத்தின் தகுதியுள்ள அனைத்து 75 மாவட்ட ஊராட்சிகள், தகுதியுள்ள 826 வட்டார பஞ்சாயத்துகள், தகுதியுள்ள அனைத்து 57691 கிராம பஞ்சாயத்துக்களுக்கும் சேர்த்து ஒதுக்கப்பட்டு உள்ளது. 2024-25-ம் நிதியாண்டில் 15-வது நிதிக்குழு மானியமாக, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிராமப்புற …
Read More »தமிழகத்தின் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி ஏலம் தொடர்பான விளக்கம்
மதுரை மாவட்டம், மேலூர் – தெற்குத்தெரு – முத்துவேல்பட்டி பகுதிகளில் டங்ஸ்டனுக்கான புவியியல் குறிப்பாணையை (ஜி.எஸ்.ஐ) 2021 செப்டம்பர் 14 அன்று தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்தது. அந்த நேரத்தில் டங்ஸ்டன் போன்ற முக்கியமான கனிமங்கள் உட்பட அனைத்து முக்கிய கனிமங்களையும் ஏலம் விட மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. பின்னர், சுரங்கங்கள், கனிமங்கள் (மேம்பாடு – ஒழுங்குமுறை) சட்டம், 1957 என்பது 17.08.2023 முதல் சுரங்கங்கள் – கனிமங்கள் (மேம்பாடு, ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2023 என்பதன் மூலம் திருத்தப்பட்டது. திருத்தச் சட்டமானது மற்ற அம்சங்களோடு சட்டத்தில் …
Read More »உத்தராகண்டில் புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் – மத்திய உள்ளதுறை அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்பு
உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி முன்னிலையில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் புதுதில்லியில் இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தப்படுவது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உத்தராகண்ட் மாநிலத்தில் காவல்துறை, சிறைச்சாலைகள், நீதிமன்றங்கள், தடயவியல் தொடர்பான பல்வேறு புதிய விதிகளின் அமலாக்கம் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மத்திய உள்துறைச் செயலாளர், உத்தராகண்ட் தலைமைச் செயலாளர், உத்தரகண்ட் காவல்துறை தலைவர் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். …
Read More »
Matribhumi Samachar Tamil