மார்ச் 2025 வரை நடைபெறும் ரான் உற்சவத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவரையும் அழைத்துள்ளார். இந்த விழா மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று பிரதமர் திரு மோடி கூறியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது; “கட்ச் உங்கள் அனைவருக்காகவும் காத்திருக்கிறது! தற்போது நடைபெற்று வரும் ரான் உற்சவத்தின் போது கட்ச் பகுதியின் அழகிய ஒயிட் ரானின் ( உப்பு சதுப்பு நிலம்) , கண்கவர் கலாச்சாரம் மற்றும் அன்பான விருந்தோம்பல் ஆகியவற்றைக் கண்டறிய வாருங்கள். மார்ச் 2025 வரை நடைபெறும் இந்தத் திருவிழா உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்’’.
Read More »இந்திய வனங்களின் நிலை அறிக்கை 2023-ஐ, டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் நாளை வெளியிடுவார்
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், துறையின் செயலாளர் திருமதி லீனா நந்தன் முன்னிலையில் இந்திய வனங்களின் நிலை அறிக்கை 2023-ஐ நாளை வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ஐசிஎஃப்ஆர்இ, எஃப்ஆர்ஐ, ஐஆர்ஓ, பிஎஸ்ஐ போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். 1987 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய வனநில அளவை நிறுவனத்தால் “இந்திய வனங்களின் நிலை அறிக்கை” வெளியிடப்படுகிறது. வன அடர்த்தி வரைபடம், வனநில அளவை நிறுவனத்தின் தேசிய வனப்பட்டியல் ஆகிய இரண்டு முக்கிய செயல்பாடுகளின் அடிப்படையில் நாட்டின் வனம் மற்றும் மர வளங்கள் குறித்த முக்கிய தகவல்களை இந்த அறிக்கை வழங்குகிறது. இந்த அறிக்கைத் தொடரில் இது 18-வது அறிக்கையாகும்.
Read More »ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேரிட்ட சாலை விபத்துக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி அறிவிப்பு
ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது: “ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் …
Read More »திரு ஓம் பிரகாஷ் சவுதாலா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
ஹரியானா முன்னாள் முதலமைச்சர் திரு ஓம் பிரகாஷ் சவுதாலா மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது: “ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் பல ஆண்டுகளாக மாநில அரசியலில் தீவிரமாக செயல்பட்டவர். சவுத்ரி தேவி லால் அவர்களின் பணிகளை முன்னெடுத்துச் செல்ல தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டார். இந்தத் துயரமான …
Read More »குடியரசுத் துணைத் தலைவர் சண்டிகர் பயணம்
குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், 2024-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி ஒருநாள் பயணமாக சண்டிகர் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் 5-வது சர்வதேச முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டத்தை அந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், குடியரசுத் துணைத் தலைவருமான திரு ஜக்தீப் தன்கர் தொடங்கி வைக்கிறார்.
Read More »செகந்திராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரிக்கு கௌரவம் மிக்க கொடியை குடியரசுத் தலைவர் வழங்கினார்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு (டிசம்பர் 20, 2024) செகந்திராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரிக்கு கௌரவம் மிக்க கொடிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நாட்டின் மேம்பட்ட பாதுகாப்பு மேலாண்மைத் திறனானது தூதரக ரீதியில் ராணுவ கூட்டாண்மையை வலுப்படுத்தவும், பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவிடும் என்று கூறினார். உலகளவிலான பாதுகாப்பு மன்றங்களில் ஆக்கப்பூர்வமான நிலைப்பாட்டை பராமரிக்கவும் இது இந்தியாவுக்கு உதவிடும். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தேசிய …
Read More »இந்திய கடலோரக் காவல் படைக்கான ரோந்துக் கப்பல்களைக் கட்டும் பணி மும்பையில் தொடக்கம்
இந்தியக் கடலோரக் காவல் படைக்கான ரோந்துக் கப்பல்களைக் கட்டும் பணி மும்பையில் உள்ள மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. கடலோரக் காவல் படைக்கு 14 விரைவு ரோந்து கப்பல்கள், ஆறு அடுத்த தலைமுறை கடலார ரோந்துக் கப்பல்களை கட்டும் பணி இந்தக் கப்பல் கட்டும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகைக் கப்பல்களில் முதலாவது கப்பல்கள் கட்டும் பணி 19-ந்தேதி தொடங்கப்பட்டது. இந்தக் கப்பல்களை உருவாக்குவதற்கு எம்டிஎல் நிறுவனத்திற்கு ரூ. 2,684 கோடி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. கண்காணிப்புக்கான …
Read More »ராய்காட் கோட்டையின் பாதுகாப்பு, மறுசீரமைப்பு, அகழ்வாராய்ச்சியின் முன்னேற்றங்களும் சவால்களும்
ராய்காட் கோட்டை 1909 முதல் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் அதிகார வரம்பின் கீழ் மத்திய அரசால் பாதுகாக்கப்படும் நினைவுச்சின்னமாக உள்ளது. இந்திய தொல்லியல் துறை மற்றும் ராய்காட் மேம்பாட்டு ஆணையம் இடையே 2017-ம் ஆண்டில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ராய்காட் கோட்டையின் சுற்றுப்பகுதியில் மேம்பாடு மற்றும் வசதிகளை வழங்குவது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறை 1980-ம் ஆண்டு முதல் ராய்காட் கோட்டையின் பல்வேறு பகுதிகளில் பல அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. ராய்காட் கோட்டைக்குள் மகா தர்வாசா, சிம்மாசனா, நாகர்கானா, ஜகதேஷ்வர் கோயில், பஜார்பேட்டை, ஹதி டேங்க் சுவர்கள், பால்கி தர்வாசா, மீனா தர்வாசா, சத்ரபதி சிவாஜி மகாராஜ் சமாதி பகுதி மற்றும் அஷ்டபிரதன்வாடா போன்ற பல்வேறு கட்டமைப்புகளின் பாதுகாப்பு இந்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நடைபாதை, கழிவறை பிரிவு, குடிநீர், இருக்கைகள், அறிவிப்பு பலகைகள் மற்றும் கலாச்சார அறிவிப்பு பலகைகள் போன்ற பல்வேறு வசதிகளும் இந்திய தொல்லியல் துறையால் செய்யப்பட்டுள்ளன. ராய்காட் கோட்டையைப் பாதுகாப்பது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், மேலும் இது கிடைக்கக்கூடிய வளங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது. மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
Read More »கோவா விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் துணிச்சல், மன உறுதி நினைவு கூரப்படும் :பிரதமர்
கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற பெண்கள் மற்றும் ஆண்களின் அசாத்திய துணிச்சல் மற்றும் மன உறுதியை நினைவு கூர்ந்துள்ளார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது: இன்று, கோவா விடுதலையான தினம். இத்தினத்தில், விடுதலைக்காக தங்களைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட பெண்கள் மற்றும் ஆண்களின் அசாத்திய துணிச்சலையும் மன உறுதியையும் நினைவு கூர்கிறோம். அவர்களின் வீரம் கோவாவின் முன்னேற்றத்திற்காகவும், மாநில மக்களின் வளமைக்காகவும் தொடர்ந்து பணியாற்ற எங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.
Read More »மாநிலங்களவை உறுப்பினர் திரு சரத் பவார் விவசாயிகள் குழுவினருடன் பிரதமரைச் சந்தித்தார்
மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு சரத் பவார், விவசாயிகள் குழுவினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது: “மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு சரத் பவார், விவசாயிகள் குழுவினருடன் இன்று பிரதமர் நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார் @PawarSpeaks”
Read More »
Matribhumi Samachar Tamil