நாட்டின் மேன்மையான கலாச்சார உறவுகளை பிற நாடுகளிடையே பரப்புவதற்கான முயற்சிகளை மத்திய கலாச்சார அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலால் மேம்பட்டு வருகிறது. பல்வேறு கலாச்சார பரிமாற்றங்கள் மூலம் பல ஆண்டுகளாக வலுப்பெற்றுள்ள இந்த நல்லுறவுகள் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவுகிறது. இருதரப்பு கலாசார உடன்படிக்கைகள்/கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு …
Read More »தாஜ்மஹாலுக்கு கசிவு, விரிசல் மற்றும் சேதம்
ஆக்ரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த ஆண்டு செப்டம்பர் 10 முதல் 12 வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பெய்த கனமழை காரணமாக, தாஜ்மஹாலின் பிரதான கல்லறையின் கூரை வழியாக நீர்க்கசிவு காணப்பட்டது. இருப்பினும், பருவமழைக் காலங்களில் கடுமையான கசிவு, விரிசல் மற்றும் சேதங்கள் எதுவும் காணப்படவில்லை. பெரிய அளவில் சேதம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் சிறிய இடைவெளிகள் வழியாக நீர்க்கசிவு ஏற்பட்டது. லிடார் மற்றும் தெர்மல் ஸ்கேனிங் ஆகியவற்றைப் …
Read More »பிரயாக்ராஜ்: பாரம்பரியத்தை நவீனத்துடன் இணைத்தல்
கும்பமேளா என்பது மக்கள் அதிகமாகக் கூடும் உலகின் மிகப்பெரிய அமைதியான திருவிழாவாகும். இது புனித நதிகளில் நீராடுவதற்காக கோடிக்கணக்கான யாத்ரீகர்களை ஈர்க்கிறது. இந்தக் குளியல் ஆன்மீக சுத்திகரிப்பு மற்றும் புதுப்பித்தலைக் குறிக்கிறது. இது ஒவ்வொரு 12 வருடங்களுக்கும் நான்கு முறை நடைபெறுகிறது, கங்கையில் ஹரித்வார், ஷிப்ராவில் உஜ்ஜைன், கோதாவரியில் நாசிக், கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி சந்திக்கும் பிரயாக்ராஜ் ஆகிய இடங்களில் இது நடைபெறும். அர்த்த கும்பமேளா ஹரித்வார் மற்றும் பிரயாக்ராஜில் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது, அதே நேரத்தில் மகா கும்பமேளா, ஒரு அரிய மற்றும் பிரமாண்டமான நிகழ்வாகும். இது ஒவ்வொரு 144 ஆண்டுகளுக்கு ஒரு …
Read More »பிரதமருடன் மகாராஷ்டிர முதல்வர் சந்திப்பு
மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னாவிஸ் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது: “மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னாவிஸ், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்”.
Read More »டிசம்பர் 13 அன்று பிரதமர் உத்தரப்பிரதேசம் பயணம்
பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 13 அன்று உத்தரப்பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். பிரயாக்ராஜ் செல்லும் அவர், நண்பகல் 12.15 மணியளவில் திரிவேணி சங்கமத்தில் பூஜை மற்றும் தரிசனம் செய்கிறார். அதன்பிறகு, நண்பகல் 12.40 மணியளவில், அங்குள்ள தல விருட்சத்தில் பிரதமர் பூஜை செய்கிறார். அதைத் தொடர்ந்து ஹனுமான் மற்றும் சரஸ்வதி கோவில்களில் தரிசனம் செய்கிறார். பிற்பகல் 1.30 மணியளவில், மகா கும்பமேளா நடைபெறும் இடத்தைப் பார்வையிடுகிறார். பிற்பகல் 2 மணியளவில், பிரயாக்ராஜில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் ரூ.5500 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார். பிரயாக்ராஜில் …
Read More »கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் சென்னையில் 17.12.2024 அன்று நடைபெறுகிறது
கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் 17.12.2024 அன்று மாலை 04.00 மணிக்கு, அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை நகர தெற்கு கோட்டம், தி.நகர் அஞ்சல் அலுவலக வளாகம் (முதல்மாடி), வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர் சென்னை 600017 என்ற முகவரியில் நேர்முகமாக நடைபெறும். அஞ்சல் துறை சார்ந்த சேவைகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் குறைகளை கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு பிரிவின் தலைவர் நேரடியாக விசாரிப்பார். வாடிக்கையாளர்கள் தங்களின் புகார்களை அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர், சென்னை நகர தெற்கு கோட்டத்திற்கு 16.12.2024 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ அனுப்பவேண்டும். தபால்/ மணியார்டர், பதிவு அஞ்சல் அல்லது விரைவு …
Read More »சுப்பிரமணிய பாரதிக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
கவிஞரும், எழுத்தாளருமான சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார். 7, லோக் கல்யாண் மார்க்கில் பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பாரதியார் எழுதிய படைப்புகளின் தொகுப்பை வெளியிட இருப்பதாகவும் திரு மோடி அறிவித்தார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது: “மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தொலைநோக்குப் பார்வை கொண்ட …
Read More »அசாம் இயக்கத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு “ஸ்வாஹித் தினத்தன்று மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் அஞ்சலி
வரலாற்றுச் சிறப்புமிக்க அசாம் இயக்கத்தின் போது உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் ஸ்வாகித் தினத்தில் அஞ்சலி செலுத்தினார். புதுதில்லியில் அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு ராமேஸ்வர் தெலி, திரு பிரதான் பருவா ஆகியோர் கலந்து கொண்டனர். தியாகிகளின் உயரிய தியாகங்களை கௌரவிக்கும் வகையிலும் அசாம் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் …
Read More »சாகர்மாலா திட்டங்கள்
நாட்டில் துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் முன்னோடித் திட்டமாக சாகர்மாலா அமைந்துள்ளது. இத்திட்டம் துறைமுக உள்கட்டமைப்பு, கடலோரக் கப்பல் நிறுத்தம், சாலை, ரயில் போக்குவரத்து, மீன்பிடி துறைமுகங்கள், திறன் மேம்பாடு, கடலோர சமூக மேம்பாடு, சர்வதேச தரத்திலான கப்பல் முனையம், ரோ-பாக்ஸ் படகு சேவைகள் போன்ற தனித்துவமான, புதுமையான திட்டங்களுக்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு நிதி …
Read More »மத்திய பிரதேச முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்
மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது: “மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு மோகன் யாதவ்@DrMohanYadav51, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் @narendramodi- சந்தித்தார்.
Read More »