பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 9 அன்று ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். ஜெய்ப்பூர் செல்லும் அவர், காலை 10:30 மணியளவில், ஜெய்ப்பூர் கண்காட்சி – மாநாட்டு மையத்தில் (ஜேஇசிசி) ரைசிங் ராஜஸ்தான் உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு 2024-ஐ தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, பானிபட் செல்லும் பிரதமர், பிற்பகல் 2 மணியளவில் எல்ஐசி-யின் பீமா சகி யோஜனா திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். மஹாராணா பிரதாப் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். …
Read More »தில்லியில் நடைபெறும் அஷ்டலட்சுமி மகோத்சவம் வடகிழக்குப் பகுதியின் துடிப்பான ஜவுளித் துறை, சுற்றுலா வாய்ப்புகள், பாரம்பரிய கைவினைத்திறன் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது: பிரதமர்
மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா எழுதிய கட்டுரையை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தில்லியில் நடைபெறும் அஷ்டலட்சுமி மகோத்சவம் வடகிழக்குப் பகுதியின் துடிப்பான ஜவுளித் துறை, சுற்றுலா வாய்ப்புகள், பாரம்பரிய கைவினைத்திறன் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து இணைப்பு, டிஜிட்டல் உள்ளடக்கம், உள்கட்டமைப்பில் முதலீடு ஆகியவற்றின் மூலம் வடகிழக்கு இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது …
Read More »அகமதாபாத்தில் குஜராத் லோக் சேவா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ‘லோக் சேவா உத்சவ்’ நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்
அகமதாபாத்தில் குஜராத் லோக் சேவா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ‘லோக் சேவா உத்சவ்’ நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். திரு அமித் ஷா தமது உரையில், குஜராத் லோக் சேவா அறக்கட்டளை 34 ஆண்டுகளை நிறைவு செய்து 35-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்றார். 35 ஆண்டுகளாக நல்ல நோக்கத்திற்காக தொடர்ந்து உறுதியுடன் பணியாற்றும் எந்தவொரு நிறுவனமும் பாராட்டுக்குரியது என்று அவர் கூறினார். அறிவு என்பது ஒரு சில …
Read More »ராய்ரங்கபூரில் வளர்ச்சித் திட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் அடிக்கல் நாட்டினார்
குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு ஒடிசாவில் பாங்கிரிபோசி-கொருமாஹிசானி, புராமரா-சாக்குலியா, பதம்பஹர்-கெந்துஜர்கர் ஆகிய மூன்று ரயில் பாதைத் திட்டங்களுக்கு இன்று (07.12.2024) அடிக்கல் நாட்டினார். அத்துடன் பழங்குடியினர் ஆராய்ச்சி – மேம்பாட்டு மையம், டான்ட்போஸ் விமான நிலையம், ஒடிசாவின் ராய்ரங்பூரில் உள்ள துணைப்பிரிவு மருத்துவமனையின் புதிய கட்டடம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இந்த மண்ணின் மகள் என்பதில் தான் எப்போதும் பெருமை கொள்வதாகக் கூறினார். பொறுப்புகள், வேலை பளுமிக்க சூழல் போன்றவை தம்மை …
Read More »பிரதமரின் கிசான் மான் தன் திட்டத்தின் பயனாளிகள் தமிழ்நாட்டில் 1,10,582 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்
பிரதமரின் கிசான் மான் தன் திட்டம் (பி.எம்.கே.எம்.ஒய்), ஒரு மத்திய துறை திட்டமாகும், இது 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கான தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும், இது 60 வயதை எட்டும்போது குறைந்தபட்சம் மாதந்தோறும் ரூ .3000- உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஓய்வூதியத்தை வழங்குகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வயதான காலத்தில் சமூகப் பாதுகாப்பு வளையத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தில் சேரும் வயதைப் பொறுத்து மாதந்தோறும் ரூ.55 …
Read More »வடகிழக்கு பிராந்தியத்தில் கிராமிய வாழ்வாதாரத் திட்டம்
உலக வங்கி நிதியுதவியுடன் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் வடகிழக்கு ஊரக வாழ்வாதாரத் திட்டம் 30.09.2019 அன்று நிறைவடைந்தது. மிசோரம், நாகாலாந்து, சிக்கிம்,திரிபுரா ஆகிய 4 மாநிலங்களின் 11 மாவட்டங்களில் 58 வளர்ச்சி வட்டாரங்களின் கீழ் உள்ள 1,645 கிராமங்களில் வேலைவாய்ப்பு, சுய வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்காக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பிரிவில் 10462 மாணவ மாணவியருக்கு பல்வேறு வேலைவாய்ப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 28,154 சுய உதவிக் குழுக்கள் மற்றும் 1,212 கிராம கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டதன் மூலமும், 1599 சமூக வளர்ச்சிக் குழுக்கள் உருவாக்கப்பட்டதன் …
Read More »செம்மொழிகளைப் பாதுகாத்தலும் மேம்படுத்துதலும் தமிழுக்கு 2024-25- ல் ரூ.14 கோடி ஒதுக்கீடு
கீழ்க்கண்ட 11 மொழிகளை செம்மொழிகளாக அரசு அங்கீகரித்துள்ளது. தமிழ் 2004, சமஸ்கிருதம் 2005, தெலுங்கு 2008, கன்னடம், மலையாளம் 2013, ஒடியா 2014, மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி, பெங்காலி 2024. செம்மொழிகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் மூலம் நிதி வழங்குகிறது. ஆண்டு வாரியாக செம்மொழி தமிழுக்கு வழங்கப்பட்ட நிதி (ரூ. லட்சத்தில்) 2020-21 – ரூ.1200.00, 2021-22 – ரூ. 1200.00, 2022-23 – ரூ. 1200.00, …
Read More »ஹார்ன்பில் திருவிழா தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாகாலாந்து மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
ஹார்ன்பில் திருவிழா தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாகாலாந்து மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கழிவு மேலாண்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் திருவிழா கவனம் செலுத்துவது குறித்து அவர் மகிழ்ச்சியையும், தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த விழாவிற்கு வருகை தந்தபோது ஏற்பட்ட இனிய நினைவுகளை நினைவுகூர்ந்த திரு மோடி, மற்றவர்களும் இங்கு வந்து நாகா கலாச்சாரத்தின் துடிப்பை அனுபவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நாகாலாந்து முதலமைச்சர் …
Read More »ஒடிசா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஒடிசா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 5, 2024) கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், பட்டம் பெறும் நாளானது மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கான பாதைக்கு வழிவகுக்கிறது என்று கூறினார். உலக சூழலில் தங்கள் அறிவு மற்றும் திறன்களின் கடுமையான சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் மாணவர்களிடம் கூறினார். அவர்கள் பெற்ற அறிவு …
Read More »புவனேஸ்வரில் புதிய நீதிமன்ற வளாகத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் புதிய நீதிமன்ற வளாகத்தை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 5, 2024) திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், உரிய நேரத்தில் நீதி வழங்கப்படாவிட்டால், அது நீதி கிடைக்காமல் இருப்பதற்கு சமம் என்று கூறினார். வழக்கை ஒத்திவைக்கும் கலாச்சாரத்தால் நலிவடைந்த பிரிவினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அடிக்கடி நீதிமன்றத்திற்கு வருவதற்கு அவர்களிடம் போதிய நிதியோ, ஆள் பலமோ கிடையாது என்று …
Read More »